முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மத ஊர்வலங்களை தடை செய்ய வேண்டும்! இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!

  • முத்துப்பேட்டை, செப்டம்பர் 02: முத்துப்பேட்டையில் எதிர்வரும் 17ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த திட்ட மிட்டுள்ளனர் பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர். வருடந்தோறும் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் விசாரணையின் போது, திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் விநாயகர் ஊர்வலப் பாதையை சிறிது மாற்றம் செய்து சில கட்டுப்பாடுகளையும் விதித்தது. 
  • இருப்பினும் தொடர்ந்து நடந்துவரும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போதும், ஊர்வலத்திற்கு முன்பு செய்யப்படும் வாகனப் பிரச்சாரங்களின்போதும் முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கக் கூடிய பகுதிகளுக்குள் வரும்போது மத, இன உணர்வுகளை தூண்டும் வகையில் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
  • இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்படுகிறது. ஆகவே மாவட்ட காவல்துறை மத மற்றும் இன உணர்வுகளை தூண்டக் கூடியவகையில் செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதியில் அமைதியை நிலைநாட்டி சட்டம் ஒழுங்கை பாதுகாக்கு மாறு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறது.
    மேலும், சாதி, மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அலஹாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பை பின்பற்றி உத்திரப் பிரதேச மாநிலத்தில் மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
    உத்திரப் பிரதேச மாநில அரசைப் பின்பற்றி அனைத்து மத ஊர்வலங்களை தமிழகத்திலும் தடை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழகத்தில் வகுப்புப் பதட்டங்கள் குறைந்து அமைதி தவழும் மாநிலமாக தமிழகம் மிளிர வாய்ப்பு ஏற்படும் என்றும் தமிழக அரசை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.

    இப்படிக்கு
    முஹம்மது ஷிப்லி,
    மாநிலச் செயலாளர்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)