முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஹாஜி. C.M .இப்ராஹீம் மரணம்


                                                                                

அதிராம்பட்டினம், மே 23: கடற்கரைத்தெருவைச்  சேர்ந்த மர்ஹூம் சின்னத்தம்பி மரைக்காயர் அவர்களின்  மகனும், மர்ஹூம் M. நவாஸ்கான், மற்றும் M. ரெஜிஸ்கான் ஆகியோரின் தகப்பனாரும், H. தீன் முஹம்மது, M. அயூப்கான், Y. அன்சாரி முஹம்மது ஆகியோரின் மாமனாரும், முன்னாள் கால்பந்தாட்ட வீரர் - தமிழக வேளாண் விற்பனைத்துறை  ஆய்வாளர் - அதிரை பைத்துல்மால் இணைச்செயலாளருமாகிய ஹாஜி. C.M. முஹம்மது இப்ராஹீம் அவர்கள் இன்று ( 23-05-2013 ) அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின்   நல்லடக்கம் இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஹாஜி C.M. முஹம்மது இப்ராஹீம் - நினைவலைகள்!


அதிராம்பட்டினம், மே 23: அதிரையர்களால் அன்போடு "சாச்சா" என்று அழைக்கப்படுபவர்களில் மர்ஹூம்.M.M.S.அப்துல் வஹ்ஹாப் ஹாஜியார் மற்றொருவர் இன்று வஃபாதான மர்ஹூம் ஹாஜி C.M. முஹம்மது இப்ராஹிம் காக்கா. முன்னாள் கால்பந்து வீரரான இவர் A.M.S. அகமதுதம்பி நினைவு கால்பந்து போட்டிகளிலும் ஏனைய ஊரளவிலான போட்டிகளிலும் நடுவராகச் செயல்பட்டதோடு அதிரை பைத்துல்மால் நிறுவன நிர்வாகிகளுள் ஒருவராகவும் மிகச்சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள்.

அதிரை பைத்துல்மாலுக்குச் சொந்தமான பல்லாவரம் கட்டிடம் குறுகிய காலத்துக்குள் கிரயம் செலுத்தப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எழுந்தபோது,வெளிநாடுகளிலுள்ள அதிரையர்களிடமிருந்து நிதிதிர
ட்டுவதற்காகச் சென்ற குழுவில் மர்ஹூம் C.முஹம்மது இப்ராஹிம் சாச்சா அவர்களும் இடம்பெற்றார்கள்.

பைத்துல்மால் நடத்திய குர்ஆன் மாநாடாகட்டும்,கூட்டுகுர்பானி திட்டமாகட்டும், இன்னும் பிற சேவைகளில், இவர் தன்னார்வலராக இணைந்து இவர்கள் செய்த களப்பணிகள் தற்கால இளைஞர்களே வெட்கப்படுமளவுக்கு பம்பரமாகச் சுழன்று சிறப்பாகச் செயல் பட்டதை அறிந்துள்ளேன்.

பைத்துல்மாலின் மாதாந்திர அமர்வுகளில் தவறாது கலந்துகொண்டு தகுந்த ஆலோசனை வழங்கவும் தவறியதில்லை. பைத்துல்மால் சார்பில் நடக்கும் இலவச திருமணங்களிலும் மணமக்களின் ஹக்கில் தன்பங்கு உதவிகளையும் வழங்கி பலரது துஆவிற்கு அருகதையாகியுள்ளார்கள்.

இவருடன் பழகியதில் இவரின் எளிமையையும்.. அமைதியையும் கண்டு வியந்துள்ளேன். ஹாஜி C.M.முஹம்மது இப்ராஹிம் சாச்சாவின் மவுத்து அவரது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி பைத்துல்மாலுக்கும் நிச்சயம் பெரும் இழப்பு என்றால் மிகையில்லை. எனினும், நிச்சயிக்கப்பட்ட மரணத்திலிருந்து விதிவிலக்கு யாருமில்லை என்ற இறைநியதியை ஏற்று அன்னாருக்காக துஆ செய்வோமாக.அல்லாஹ் அவர்களது நல்லறங்களைப் பொருந்திக்கொண்டு நற்கூலியை வழங்குவானாக. ஆமின்.

முத்துப்பேட்டையில் நடக்கும் விளையாட்டு போட்டிகளை ஊக்குவித்த C .M .இப்ராஹீம் :
அதிராம்பட்டினம், மே 23: முத்துப்பேட்டை சூப்பர் கிங்ஸ்கைப்பந்து கழகம் சார்பாக   இளைஞர்களால் வருடாவருடம்முத்துப்பேட்டை  கொத்பா பள்ளி திடலில்  மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருவது யாவரும் அறிந்த ஒன்று .பொதுவாகவே விளையாட்டு போட்டிகள் நடத்தவேண்டுமென்றால் பரிசுகள் கொடுப்பவர்களை (SPONSORSHIP )தேடி பிடிப்பது என்பது இயலாத ,மிகவும்  கடினமான காரியமாகும் .
கடந்த நான்கு ஆண்டிற்கு முன் 10 பேர் கொண்ட அணியின் நிர்வாகிகள் பரிசை பெறுவதற்காக ((SPONSORSHIP ) அதிரைக்கு சென்றிருந்தோம் .முதலில் அதிரையில் உள்ள முக்கியஸ்தர்கள் ,செல்வந்தர்கள் ,மற்றும் அரசியல் பிரபலங்களை சந்திப்பது என்று முடிவெடுத்தோம் .பின்னர் ஒருசில பிரபலங்களை சந்தித்தோம் .பலன் ஒன்றும் இல்லை .


பரிசு கிடைக்கவில்லை என்ற விரக்தியில் அனைவரும் கடற்கரை தெருவில் உள்ள ஒரு ஆள மரத்தடியில்  அமர்ந்தோம் .அப்போது அங்கே அதிரை சார்ந்த மாநில அளவிலான விளையாட்டு வீரர் சாகுல் வந்தார் ,பின்னர் இங்கே ஒரு ஆள் இருக்கிறார் வாருங்கள் போய் சந்திப்போம் என்று கூறி எங்களை கடற்கரை தெருவிற்கு உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றார் .


அந்த வீட்டிற்கு சென்ற மறுகணமே ஒரு வயதான தோற்றத்தில் ,இளைஞர் போன்ற சுருசுருபோடு நம்மை ஒருவர் வரவேற்று வீட்டின் உள்ளே அழைத்து சென்றார் .அனைவருக்கும் தேநீர் விருந்து கொடுத்து கவனித்த அவர் உங்களுக்கு என்ன உதவி  வேண்டும் என்று பணிவாக கேட்டார் .அப்போது நாங்கள் அனைவரும் ஒருமித்த குரலில் விளையாட்டு போட்டி நடத்துவதற்கு  பரிசு உதவி செய்ய வேண்டும் கடைசி பரிசான நான்காவது பரிசு வழங்கினால் போதும் என்று கூறினோம் .உடனே அந்த வயதானவர் குறிக்கிட்டு நான் நான்காவது பரிசெல்லாம் தரமுடியாது ...முதல் பரிசுதான் கொடுப்பேன் என்று தமாசாக பேசி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் .பின்னர்தான் அந்த நபர் மதிப்பிற்கும் ,மரியாதைக்கும் உரிய C .M .இப்ராஹீம் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம் .


முத்துபேட்டை சூப்பர் கிங்ஸ்வருடாவருடம்  நடத்தும் விளையாட்டு போட்டிகளுக்கு  முதல் பரிசை கொடுப்பது மட்டுமில்லாமல் ,போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வந்து வாழ்த்துரையும் வழங்கிவிட்டு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது .


மாறாத நினைவுகளுடன் :  ஜே. ஷேக் பரீத் 
                                                    


ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…!

Everyone is a kind of anxiety, sadness, anger is bound to.

 உலகம், மே 23: ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.

குறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது கவலையிலோ இருக்கும்போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவருக்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது.


அன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலும், பரிவாலும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மருந்து மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக ஒரு உயிர் இருக்கிறது, நம்மை தூக்கிச் சுமக்க ஒரு சுமை தாங்கி இருக்கிறது என்ற நினைப்பே பலருக்கு சோர்வையும், சோகத்தையும் தூக்கிப் போட்டு விட உதவுகிறது.

உங்களது துணைக்கு உடல் நலம் சரியில்லையா, மன வருத்தத்தி்ல இருக்கிறாரா அல்லது ஏதாவது பயத்தில் இருக்கிறாரா.. கவலையேபடாதீர்கள், ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். அப்படிய பறந்து போய் விடும் அவரது கவலைகள்.

கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லலாம்…

இது ஒரு உபாயம்.சிலருக்கு கட்டி அணைத்து தோளோடு தோள் சேர்த்து, தலையை வருடிக் கொடுத்து, முதுகைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறும்போது அதை அவர்கள் விரும்புவார்கள். இது எல்லோருக்குமே பிடித்தமான விஷயமும் கூட. இது ஒருவகையான பாசம் பரிவு கலந்த அரவணைப்பு. எத்தகைய துன்பத்தில் இருந்தாலும் இந்த கட்டிப்பிடிக்கு முன்பு அது கால் தூசுதான். எனவே வருத்தமெல்லாம் அப்படியே கரைந்து போய் விடும்.

உனக்காக நான் இருக்கிறேன் கண்ணம்மா, கண்களில் ஏன் இந்தக் கவலை. எல்லாவற்றையும் மறந்து விடு, நிம்மதியாக இரு. உனக்கான தோள் நான். என் மீது உன் பாரத்தை ஏற்றிவிட்டு, நிம்மதியாக இரு என்று சொல்லும்போது அவர்களுக்கு்க கிடைக்கும் அந்த பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.

கவனத்தைத் திருப்புங்கள்

சிலருக்கு தேவையில்லாத பயம், கவலை வந்து மனதை வருத்தும். அதுபோன்ற சமயங்களில் அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து திசை திருப்ப முயற்சியுங்கள். ஜாலியாக ஏதாவது பேசுங்கள், வேறு டாப்பிக் குறித்து அவர்களது சிந்தனையை திருப்புங்கள். அதையே நினைத்துக் கொண்டு பயப்படாதே என்று தட்டிக்கொடுங்கள். அவர்களுக்கு ஊக்கமாக, பக்கபலமாக இருந்து, அவர்களின் பயத்தைப் போக்குங்கள். அவரது மனதுக்கு இதமாக ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்.

மனம் விட்டு பேசச் சொல்லுங்கள்

சிலருக்கு பிரச்சினையை யாரிடம் சொல்லி அழுவது என்ற குழப்பம் இருக்கும். அப்போது அவரிடம் உங்களைப் புரிய வையுங்கள். என்னிடம் கொட்டி விடு, எல்லாவற்றையும் வெளியில் போட்டு விடு, பிரச்சினையை சொல் நான் தீர்வு சொல்கிறேன் என்று நம்பிக்கை அளியுங்கள். அவர் சொல்லும்போது அக்கறையுடன் கேட்டு அவருக்குப் பொருத்தமான தீர்வை சொல்லுங்கள். நிச்சயம் அவருக்கு ஆறுதல் கிடைக்கும்..

உங்கள் துணையின் கண்களிலிருந்து நீர் வழியும்போது அதை வேடிக்கைப் பார்க்காமல், அதைப் பரிகாசம் செய்யாமல், உண்மையான பாசத்தோடும், நேசத்தோடும், காதலோடும், அன்போடும் நீங்கள் அணுகும்போது தானாகவே அந்தக் கண்ணீர் நின்று போகும். அன்பைக் கொட்டி நீங்கள் தரும் ஆதரவு அவருக்கு ஒரு தாயின் மடியைப் போலவே காட்சி தரும்.

எனவே உங்கள் துணை சோரந்திருக்கும்போது நீங்கள் தாயாக மாறி அவருக்கு இளைப்பாறுதலைக் கொடுங்கள்…!

மலட்டுத் தன்மையை குணமாக்க, ஆண்மையை அதிகரிக்க, மருத்துவர்கள் கூறும் தகவல்கள் :

And do not worry about anything at a young age not to have children after marriage will go round
 உலகம்,
மே 23:  
இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.


ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளிதில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
* காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் குல்கந்து இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

* பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.

* சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும்.

மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும்.

48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)