முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


மல்லிப்பட்டினத்தில் கலவரத்தை தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டும் -தமிழக டிஜிபி யிடம் தடா ரஹீம் புகார் !!!


தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் கடந்த 28 ஆம் தேதி பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் சமூக விரோதிகள் கடைவீதியில் நின்று கொண்டிருந்த நான்கு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தினர் .


இதனால் நிலைகுலைந்து போன அந்த அப்பாவி இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து நடு ரோட்டிலேயே சாய்ந்தனர் .இதனை அறிந்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் சகோ .தடா ரஹீம் அவர்கள் மல்லிப்பட்டினத்திற்கு நேரில் சென்று விசாரித்தார் . 


மல்லிப்பட்டினம் கலவரத்தில் தொடர்புடைய பாஜக வை சேர்ந்த பத்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .இந்நிலையில் மல்லிப்பட்டினம் கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் தமிழக டிஜிபி ராமானுஜத்திடம் தடா ரஹீம் நேரில் சென்று மனு அளித்தார் .பின்னர் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் பேசிய அவர் ,மல்லிபட்டினம் கலவரத்தை பின்னணியில் இருந்து தூண்டியவர்கள் , காரணமானவர்கள் இன்னும் கைது செய்ய படவில்லை என குற்றம் சாட்டினார் . முத்துப்பேட்டையை சேர்ந்த பாஜக வினருக்கும் கலவரத்தில் தொடர்பு இருப்பதாகவும் ,முத்துப்பேட்டையிலிருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் மூன்று மூன்று பேராக மல்லிப்பட்டினத்திற்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார் .


இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின்  உருவப்படம் ஒட்டப்பட்ட  இருசக்கர வாகனங்களுடன் பாஜக வினர் வந்ததை அதிராம்பட்டினம் மற்றும் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த பொதுமக்கள்  நேரில் பார்த்துள்ளதாகவும் ,அதில் முத்துப்பேட்டையில் அமைதியையும் மதநல்லினக்கத்தையும் தொடர்ந்து சீர்குலைத்து வருபவனும் ,சிலை கடத்தல் கும்பலில் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவனும் ,பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளவனும் , முத்துப்பேட்டையில் மத கலவரத்தை தூண்டியதற்காக  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படவனுமான மகேஷ் என்பவனை அடையாளம் தெரிந்த அப்பகுதி பொதுமக்கள் கண்டுள்ளதாகவும் ,இதனை அப்பகுதி மக்களே தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார் .


இந்த கலவரமானது ஏதோ திடிரென தன்னிச்சையாக நடந்த கலவரம் அல்ல என்றும் ,இது முன்கூட்டியே பல்வேறு நபர்களால் நன்கு திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் அவர் தெரிவித்தார் .தமிழக முதலமைச்சர் மாண்புமிகுஅம்மாஅவர்களின்பொற்காலஆட்சியில்தமிழகம்வளமானதாகவும் ,
அமைதி பூங்காவாகவும்  திகழ்வதாகவும் ,ஒரு சில சமூக விரோதிகள் மத கலவரங்களை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சிக்கு களங்கம் கற்ப்பிக்க முயல்வதாகவும் ,எனவே  இவர்கள் போன்ற சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் தடா ரஹீம் கூறினார் .

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)