முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


திருச்சியில் பாஜக வினரே பேனரை கிழிக்கின்றனர் -மகஇக சந்தேகம்

நேற்று மாலை நரேந்திர மோடியின் வரவைக் கண்டித்து எமது அமைப்புகளின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள், குறிப்பாக முசுலீம்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் இக்கூட்டத்திற்கு திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தனர். மோடி வருவதற்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்ற சூழலில் மோடிக்கு எதிராக பல்லாயிரம் பேர் திரண்ட இந்தப் பொதுக்கூட்டம் பாஜகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று பொதுக்கூட்டம் நடக்கும் போதே ஆத்திரமூட்டி மோதலைத் தூண்டும் வகையில் வேனில் குறுக்கும் நெடுக்குமாக கோஷமிட்டபடி சென்றனர். ஆங்காங்கே நின்று மோதலை உருவாக்க முயன்றனர். இவற்றை எல்லாம் முறியடித்து அமைதியான முறையில் நேற்றைய கூட்டத்தை நடத்தி முடித்தோம்.

இதனை சகிக்க முடியாமல், தமது வளமையான பொய்ப் பிரச்சாரத்தையும் கலவரத்தைத் தூண்டும் முயற்சியையும், இன்று காலை பாஜகவினர் தொடங்கி விட்டனர். இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள முசுலீம்கள் அதிகம் வாழும் பகுதியில் சாலை மறியல் நடத்தியுள்ளனர். நேற்று இரவு தங்களுடைய விளம்பரத் தட்டிகளை பாஜகவினரே கிழித்து விட்டு மகஇகவினரும் முசுலீம்களும் சேர்ந்து கிழித்து விட்டதாக பொய்க் குற்றம் சாட்டி ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளனர். முசுலீம்களுக்கு எதிரான

தாக்குதலை நடத்துவதன் மூலம், அமைதியான சூழல் நிலவும் திருச்சியில் ஒரு மதக் கலவரத்தை உருவாக்கி மோடியின் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க முயற்சிக்கின்றனர்.

ஒரு அரசியல் கட்சித் தலைவரை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்துவதும், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதும் மிகவும் சாதாரணமான ஒரு ஜனநாயக உரிமை. ஆனால், தங்களை எதிர்த்து யாருமே பேசக் கூடாது என்ற அடிப்படையில் இந்த வன்முறையைத் தூண்டும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இது எமது அமைப்புத் தோழர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையிலான மோதல் என்று யாரும் புரிந்து கொள்ளக் கூடாது. அமைதியான தமிழகத்தை குஜராத்தைப் போன்ற ஒரு கலவர பூமியாக மாற்றும் முயற்சி இது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த மத சார்பற்ற, ஜனநாயக சக்திகள் இதனை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

மதக்கலவரத்தை தூண்டும் குற்றத்துக்காக பாஜக தலைமையினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கோருகிறோம்.

மருதையன்,
மாநில பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

ஆர்எஸ் எஸ் -பாஜக வை வீழ்த்த இனி கடுமையாக உழைப்பேன் -மனுஷ்யபுத்திரன் ஆவேசம்

சங் பரிவாரின் கடை நிலை ஊழியர்கள் நேற்று புதிய தலைமுறையில் நேர்பட பேசு நிகழ்ச்சியிலும் என்மீதான தனிப்பட்ட வன்முறை தாக்குதலை தொடர்ந்தார்கள். விவாதம் சமூக வலை தளங்கள் வகுப்பு வாத சக்திகளால் பயன்படுத்தப்படுவது பற்றி. நவீன டிஜிட்டல் யுகத்தில் எவ்வாறு கருத்து சுதந்திரத்திற்கான இந்த ஊடகம் பெருமளவுக்கு அதிகார வர்க்கத்தாலும் சமூக விரோத இயக்கங்களாலும் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பற்றி விவாதித்தேன். வகுபுக் கலவர்ங்கள் வெறுமனே சமூக வலைத்தளங்களால் தூண்டப்படுவது அல்ல என்பதையும் முன் வைத்தேன். 

ஆனால் நம்பி நாராயணன் என்ற நபர் ஆரம்பித்தைலிருந்தே இதை பா.ஜ.க சம்பந்தமான விவாதமாக மாற்ற முயறசித்தார். இது வழக்கமான ஒரு தந்திரம். எதைப் பற்றி பேசினாலும் மோடியைப் பற்றிய பேச்சாக அதை மாற்ற வேண்டும் என திட்டமிட்டு செய்யப்படும் தந்திரம். இந்த பிரச்சார உத்திக்கு ஊடககங்கள் தெரிந்தோ தெரியாமலோ பலியாகிவருகின்றன. இதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று நானும் ஏ.எஸ்.பன்னீர் செல்வமும் ஜோதிமணியும் இந்தப் பிரச்சினையின் சிக்கல்களை பொதுத் தளத்தில் பேச மிகவும் முயற்சித்தோம். தங்களது வழக்கான பாச்சா பலிக்காததால் நம்பி நாரயணன் என்னை சம்பந்தமில்லாமல் தாக்க ஆரம்பித்தார். 

ராமரையும் ராவணணையும் சீதையும் பற்றி நான் கற்பனைகூட செய்யாத ஒரு விஷயத்தை நான் எழுதியதாக அருவருப்பான முறையில் ஒரு பொய்யை சொன்னார். நிரூபிக்கும்படி சவால் வைத்தேன். நிரூப்பிப்பதல்ல அவர் நோக்கம். நான் இந்து மத எதிர்ப்பாளன் என்று ஒரு பிம்பத்தை உருவக்குவதுதான் அவரது நோக்கம். அதற்காக எந்த அளவுக்கும் இறங்க அவர்கள் தயாராகி விட்டார்கள் என்பது தெரிந்தது.

வானதி ஸ்ரீனிவாசன், நம்பி நாராயணன் என்று வரிசையாக என்மீது வரிசையாக இந்த தனிபர் தாக்குதலில் இறங்குவதன் நோக்கம் வெளிப்படையானது. பா.ஜ.கவின் அரசியலை ஊடகங்களில் விடாப்பிடியாக கடுமையாக அம்பலப்படுத்துகிறேன் என்பதுதான். ஒரு காங்கிரஸ்காரர் அல்லது கம்யூஸ்னிடுகள் பா.ஜ.கவை எதிர்த்தால் பதிலுக்கு இரண்டு குற்றச் சாட்டுகளை கூறி சமாளித்துவிடலாம். 


ஆனால் பொது சமூகத்தின் பிரதிநிதியாக வந்து நிற்பவனை என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே என் மீது ஏதாவது ஒரு முத்திரை குத்தி தப்பிவிடலாம் என்று படாத பாடுபடுகிறார்கள். இவனை அழைக்காதீர்கள் என்று தொலைக் காட்சிகளை மிரட்டுகிறார்கள். நான் யார் என்பதற்கும் எனது அரசியல் சமூக நம்பிக்கைகள் என்ன என்பதற்கும் எனது முப்பதாண்டு எழுத்துக்களில் ஆயிரக் கணக்கான பக்கங்களில் பதிவுகள் இருக்கின்றன. எதையுமே படித்தறியாத மூடர்களின் அவதூறுப் பிரச்சாரங்களால் அவளவு சுலபமாக அழிக்க முடியாத ஆவணங்கள் அவை.

ஒரு ஊடகத்தில் நெஞ்சறிய பொய் சொல்லும் நம்பி நாராயணன் போன்ற கிரினினல்களோடு ஒரு எழுத்தாளன் வாதிட வேண்டும் என்பது ஒரு சாபக்கேடு. கொஞ்ச நாள் அமைதியாக இருக்கும்படி சொன்ன எனது டாக்டரின் அறிவுரையை கேட்கமுடியாததற்கு வருந்துகிறேன். இந்த கிரினினல்களுக்கு எதிராக முன்னைவிட கடுமையாக தொடர்ந்து போராட எனது ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தப் போகிறேன். இவ்வளவு ஆபாசமான ஒரு சூழலில் போராடும் ஒருவன் எப்படி உணர்ச்சிவசப்படாமல் இருப்பது? சொல்லுங்கள் நண்பர்களே...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)