முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

துபாய் அமீரக வாழ் முத்துப்பேட்டை சகோதரர்கள் பேரூராட்சி தேர்தலில் ம.ம.க வுக்கு ஆதரவு!!




துபாய், அக்டோபர் 04 : சார்ஜா மு.மு.க மர்கசில் முத்துப்பேட்டை பேரூராட்சி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற தலைப்பில் முத்துப்பேட்டை சகோதரர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் மேலே உள்ள தலைப்பின் கீழ் அனைத்து சகோதர்களிடமும் கருத்து கேட்கப் பட்டு விவாதம் நடைபெற்றது. இதில் சமீபகாலமாக அரசியலில் எழுச்சிபெற்று வரும் மனித நேய மக்கள் கட்சியின் சமுதாய பணிகளையும், கடந்த கால சமூக பனி மற்றும் சமுதாய சேவைகளையும் கருத்தில் கொண்டதோடும், அந்தந பேரூராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் மாஷா மைலிக் என்று அழைக்கப்படும் ஜனாப முஹம்மத் மாலிக் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிவரும் தன்னலமற்ற சமுதாய சேவைகளை பற்றியும் அலசி ஆராய்ந்து எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் நமது முத்துப்பேட்டை சகோதரர்கள் ம.ம.க வேட்பாளர் முஹம்மத் மாலிக் அவர்களை ஆதரிப்பது என்று ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதனை கருத்தில் கொண்டு முத்துப்பேட்டை சகோதரர்கள் அனைவரும் நமது வேட்பாளர் முஹம்மத் மாலிக் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெரவைப்போம். மேலும் இந்த கூட்டத்தில் அமீரகத்தில் வாழும் நமது ஊர் சகோதரர்களை தொடர்புகொண்டும், நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டாலும் மாலிக் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பது என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரின் வெற்றிக்கு அனைத்து முத்துப்பேட்டை மக்களும் துவா செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு.
அமீரக வாழ் முத்துப்பேட்டை சகோதரர்கள்...

நமது நிருபர்

இனிய இளவல்(துபாய்)

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு நியூ மெடிக்கல் சகாப்தீன் போட்டி!



முத்துப்பேட்டை, அக்டோபர் 04 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளாரான நியூ மெடிக்கல் சகாப்தீன் அவர்கள் போட்டியிட போவதாக அவர் தெருவித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நிருபர் கேட்ட கேள்விக்கு. பின்னர் பதிலளித்த அவர். முத்துப்பேட்டை மக்களுக்கு குடிநீர் இருவேளையும் கிடைக்க கடுமையாக முயர்த்சிப்பேன் என்றும், எரிவாய்வு எந்த தடங்களும் இல்லாமல் விநியோகம் செய்ய முழு ஏற்பாடு செய்வேன் என்று அவர் தெருவித்தார். முத்துப்பேட்டை மேன்கள் தற்போது வெளிவூரில் சென்று படித்து வருவதை மாற்றி உள்ளூரிலேயே அவர்கள் படிக்க பெண்களுக்கென ஒரு தனி கல்லூரி அமைக்க அரசோ, அல்லது தனியரிடமோ முயற்ச்சி செய்து அவற்றை நிறைவேற்ற பாடுபடுவேன், முத்துப்ப்ட்டைஈல் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டால் பல்வேறு வர்த்தகங்கள் பாதிக்கப் பட்டு வருவதால் இதனை ந்தானே தடை இன்றி கிடைக்க பாடுபடுவேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் தகுதிஉள்ள மாணவர்கள் பெற்படிப்பிற்காக வெளிநாடு சென்று படிக்க ஜாதி மத வேறுபாடின்றி அதற்கான வழிமுறைகளை செய்வேன். முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் தண்ணீர் வசதி, சாலைவசதி, மிசார வசதி. இல்லாமல் இருப்பதை ஆராய்ந்து அதற்க்கு தக்க நடவடிக்கை எடுத்து உடனே அமல் படுத்துவேன் என்றும், முத்துப்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் போக்கு வரத்து தடை செய்யப் பட்டுள்ளதை மீண்டும் அகல ரயில் பதாக தொடங்க அதற்குண்டான துறையை அணுகி அதனை நிறைவேற்ற பாடுபடுவேன் என்றும் அப்போது அவர் தெருவித்தார். விநாயகர் சதுர்த்தி அன்று வியாபாரிகள் கடைகளை அடைப்பதினால் மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு சிரமபடுகிரார்கள், அந்த நிலை மாற்றி சுமூகமான முறையில் ஊர்வலத்தை நடத்தி தர சம்மந்தப்பட்ட வர்களை அணுகி ஒத்துழைப்பு கோரி ஊர்வலம் செல்லும் பொது கூட கடைகளும் திறந்து இருக்க ஏற்பாடுகள் செய்வேன். அப்போது மைதீன் மாமா என்கிற முஹம்ம்மத் மைதீன் அவர்கள் உடனிருந்தார்.
குறிப்பு:
ஜாதி, மத வேறுபாடு அன்றி அனைத்து மக்களிடமும் ஓட்டு வாங்கக் கூடிய எந்த பிரச்சனையும் அல்லாத ஒரே வேட்பாளர் என்பதாலும், ரோட்டரி கிலபின் முன்னால் உறுப்பினர் என்ற காரணத்தினாலும், பல சமூக சேவை செய்திருப்பதாலும் காங்கிரஸ், ம.தி.மு.க அதரவு தந்து எல்லா தரப்பு மக்களின் வாக்குகளை சேகரிக்க பாடுபடுவார்கள். மேலும் இவர் கடந்த 43 ஆண்டுகள் தி.மு.க வில் நிலையாக இருந்து எந்த பதவியையும், பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தனது திறன்பட செய்து வந்த அவருக்கு முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு முனு செய்தும் மறுக்கப் பட்டதால், பல பேருடைய வேண்டுதலுக் கிணங்க சுயேட்சையாக இருபெறம் கட்சிகளின் ஒத்துளைப் போடு கைபம்பு சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
Source from muthupettai express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.

முத்துப்பேட்டை பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரின் பட்டியல்!



முத்துப்பேட்டை, அக்டோபர் 04 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சியின் வார்டு எண்: 01 முதல் 18 வரைக்கான தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் கீழ் வருமாறு.

போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்:

1 ) அபூபக்கர் சித்திக். 8 , ஆசாத் நகர் முத்துப்பேட்டை. இவருக்கு (கை கடிகாரம்) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

2 ) அப்துல் சலீம், கோவிலன் தோப்பு, செம்படவன்காடு முத்துப்பேட்டை.இவருக்கு (பேட்டரி விளக்கு) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

3 ) அருணாச்சலம், செம்படவன்காடு முத்துப்பேட்டை. இவருக்கு (இரட்டை இல்லை) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

4 ) சகாபுதீன், குண்டாங்குலத் தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (கைபம்பு) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

5 ) சிவகுமார், எஸ்.வி. தெரு பேட்டை முத்துப்பேட்டை. இவருக்கு (தாமரை) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

6 ) தமீம், ரஹ்மத் நகர் முத்துப்பேட்டை. இவருக்கு (உதய சூரியன்) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

௭) பத்மநாதன், கொசாகுலத் தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (முரசு) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

8 ) முகைதீன் அடுமை, திருத்துறைப் பூண்டி ரோடு முத்துப்பேட்டை. இவருக்கு (சாய்வு மேசை) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

9 ) முஹம்மத் மாலிக், கோதப பள்ளி சந்து முத்துப்பேட்டை. இவருக்கு (பேருந்து) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

10 ) லெப்பை தம்பி.SMM காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (கணிப்பொறி) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

11 ) ஜெயச்சந்திரன், மருதன்காவலித் தொப்ப்பு முத்துப்பேட்டை. இவருக்கு (சட்டை) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

12 ) ஹாரூன், ஆசாத் நகர் முத்துப்பேட்டை. இவருக்கு (கோப்பையும் கப்பும்) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

13 ) ஹாஜ மைதீன், பகுருதீன் கலனை, காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை. இவருக்கு (டிஸ் ஆண்டன) சின்னம் ஒதுக்கப் பட்டுள்ளது.

குறிப்பு:
இந்த பேரூராட்சி தலைவர் பதவிக்கு மொத்தம் 21 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர், இதில் 8 வேட்பாளர் தனது மனுவை திரும்ப பெற்றனர். மேலும் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 9 முஸ்லிம் வேட்பாளர்களும், 4 இந்து வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்காக அறிவிக்கப் பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் 17.10.2011 ஆம் நாளன்று கலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவுகள் நடை பெரும் என தேர்தல் ஆணையம் தெருவித்துள்ளது.
Source From Muthupettai Express.
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், 

முத்துப்பேட்டையில் SDPI யின் நகர தேர்தல் அலுவலகம் நேற்று திறப்பு!





முத்துப்பேட்டை, அக்டோபர் 04 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் SDPI யின் நகர தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப் பட்டது. இதற்கு சிறப்பு விருந்தினராக துபாய் மண்டல பொறுப்பளார் ஜனாப் யூசுப் சுகைல் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய மனித உரிமை மக்கள் கனநிப்பின் மாநிலத் தலைவர். பசீர் அஹ்மத், பல தியாகங்களை செய்திருக்க கூடிய அபூபக்கர் சித்திக் அவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தந்து ஒருத்தியாக செயல் பட்டு வெற்றிக்கனியை பெற வைத்திட அனைவரும் பாடுபட வென்றும் என்று உரை நிகழ்த்தினர். அதற்கு பிறகு பேசிய ம.செ. பாவா பஹுருதீன் அவர்கள் இது சாதாரண விஷயம் அல்ல தேர்தல் என்றால் என்பது திருவிழா என்பார்கள் அனால் நம்மை பொருத்தவரையில் மிக கடினமாக உழைத்து முயற்ச்சி செய்யகூடிய ஒரு போராட்டக் களம் அதை நம்மளுடைய தியாகத்தின் அர்பணிப்பு பொறுத்துதான் வெற்றி என்பது தீர்மானிப்பது, நமக்கு வெற்றிக்கான வாய்ப்பு மிக எளிதாக இருக்கின்றது. ஆனால் அதற்கு கடின உழைப்பு அவசியம் என்று கூறினார். பின்னர் இன்னகழ்ச்சி முடிவின்போது சித்திக் மச்சன் என்கிற அபூபக்கர் சித்திக் அவர்கள் நன்றிவுரை கூறி நிறைவு செய்தார். இதில் தர்ஹா மேனேஜிங் டிரஸ்ட் தலைவர். ஜனாப் SS .பக்கர் அலை சாகிப் அவர்கள். SDPI மாநில தலைவர். தப்ரே ஆலம் பாதுஷா. SDPI ம.செ. பாவா பஹ்ருதீன், நகர தலைவர் ரஹ்மத்துல்லாஹ், து. த. பாசித், ந.இ.செ.நிஜாம், நகர பொறுப்பாளர், நிசார், தமீம் நியாஸ் ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Source from muthupettai Express
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EK . முனவ்வர் கான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)