முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டை: அறிவியல் தேர்வுக்கு ரூபாய் நோட்டில் பிட் அடித்த மாணவர்..!!!முத்துப்பேட்டை, பிப்ரவரி 08 : ருபாய் நோட்டு என்பது நமது நாட்டின் சொத்தாகும், அப்பணத்தை சேதமாக்குவதும், அவமதிப்பதும் சட்ட பூர்வமான குற்றங்களில் ஒன்றாகும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.ஆனால் அதற்க்கு மாறாக பணத்தில் பெயர் எழுதுவது, முகவரி எழுதுவது, செல் நம்பர் எழுதுவது, கவிதை எழுதுவது, கையொப்பம் போடுவது என சில குசும்பு வேலைகளை நீண்ட காலமாக சில சமூக விசமிகள் செய்து வருகிறார்கள். அவற்றை நாமும் கண்டிருப்போம். இதனை பார்த்த நல்லவர்கள் கூட வழிதவறி நடக்க விசமிகள் செய்து வருகிறார்கள். ஆனால் இதை தடுக்க அரசு எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மேலும் இப்படி ரூபாய் நோட்டுகளை வைத்து தவறுக்கு மேல் தவறு செய்து வரும் சமூகவிரோத நபர்கள் தாம் படிக்கும் பள்ளி தேர்வுக்கு ரூபாய் நோட்டை பயன்படுத்துகிறார்கள் என்று கேட்கும் போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதுக்கு உதாரணம் இந்த பத்து ரூபாய் நோட்டு. முத்துப்பேட்டையில் உள்ள சேகர் என்பவரது கடைக்கு வந்த இந்த ரூபாய் நோட்டுதான். இந்த ரூபாயில் எழுத்தப்பட்டிருந்தது அறிவியல் படத்திற்கான பிட் ஆகும்.இதில் ஓர் பென்சிலால் மிக தெளிவாக எழுதப்பட்டிருந்தது. படித்து நல்ல பனி யில் சேர்ந்து இந்த நாட்டிற்காவது நமது மகன் ஏதாவது செய்வான் என்று தந்தைகள் நினைப்பார்கள். ஆனால் சிறிய தொகை கொண்ட இந்த ரூபாயை கூட மதிக்கத்தெரியாத இந்த விரோதிகள் எப்படி நாட்டை பாதுகாப்பார்கள்.? இதனைத் தடுக்க இந்திய அரசு திறந்தரமான தீர்வை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நற்குணம் உள்ள மாணவர்கள்.
source from: mttexpress.com, www.muthupettaixpress.com, www.muthupettaiepxress.com,
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

முத்துப்பேட்டை பேரூராட்சியில் நினைத்தால் மட்டும் ஊதும் சங்கு, ஓர் பார்வை...முத்துப்பேட்டை, பிப்ரவரி 08 : முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 35 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இஸ்லாமியர்கள் பெரும் அளவில் வசிக்கும் இப்பகுதியில் இருக்கும் பேரூராட்சிக்கு நல்ல வருமானமும் ஈட்டு வருகிறது. இதனால் முத்துப்பேட்டை பேரூராட்சியை, நகராட்சியாக மாற்றும் திட்டமும் தமிழக அரசுக்கு உள்ளது. தனி தாலுக்காவாக அறிவிக்கப்பட்டும் அது தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இப்படி தனி பெருமைப் பெற்ற பேரூராட்சி வளாகத்தில் 1989 ஆம் ஆண்டு பல லட்சம் செலவில் தனி கோபுரமாக அமைக்கப்பட்ட சங்கு பயன்பாட்டில் உள்ளது. அந்த சங்கு காலை 5 , 9 மணிக்கும் மதியம் 1 மணிக்கும் இரவு 9 மணிக்கும் ஊதப்பட்டு நடைமுறையில் இருந்தது. இஸ்லாமியர்களின் நோன்பு கால கட்டத்தில் அதிகாலை 4 .30 மணிக்கும் மாலை 6 .30 மணி்கும் சங்கு ஒழித்து வந்தன. ஆனால் தற்போது இந்த சங்கு நினைத்தால் ஊதுவதும், நினைக்காவிட்டால் ஊதாமல் இருப்பதும் நடைமுறையாகிவிட்டது.தினமும் சங்கை ஏன் பயன்படுத்துவது இல்லை.இப்படி நல்ல முறையில் இயங்கும் சங்கை பயன்படுத்த ஏன் பேரூராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது என்று பொது மக்கள் மத்தியில் கேள்வி எழும்பி உள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர்கள், இந்த வேலை எங்களுக்கு உரியது அல்ல என்றும், இதற்காக ஓர் தனி நபரை பனியில் அமர்த்திதான் அவற்றை இயக்க வேண்டும் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். சங்கு போடுவதற்கு ஒரு மணிநேரம் கூட ஆகாது அதற்க்கு ஏன் தனி நபர் என்றும், அவருக்கு தனி சம்பளம் அரசு பணத்தை ஏன் வீணடிக்கும் செயல் என்றும் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து பேரூராட்சி கவுன்சிலர் ஜனாப். ஜபருல்லாஹ் கூறுகையில், சங்கு பயன்படுத்துவது ஓர் சாதாரண விஷயம் என்றும், இது குறித்து பேரூராட்சி மன்றத்தில் பல முறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி மன்றம் தொடர்ந்து அலட்சியப்போக்கில் இருந்து வருகிறது என்றும், அவர் தெரிவித்தார். மேலும் பேட்டை பூங்கா பாதுகாப்புக்கு அருளப்பன் என்கிற நபர் அரசு பணியாளராக உள்ளார் என்றும் ஆனால் பேட்டையில் பூங்காவே இல்லை ஆனால் அவர் தற்போது பேரூராட்சியில் எடுபிடியாகத்தான் இருந்து வருகிறார் என்றும், இவரையே இந்த சங்கு வேலைக்கு சேர்த்து பணியில் அமர்த்தினால் மிக நன்றாக இருக்கும் என்றும் நிர்வாகத்திடம் கூறியதும் மேலும் மேலும் அலட்சியப்போக்கையே காட்டுகிறது என்றார். மக்களுக்கு சேவை செய்யவே உள்ள நிர்வாகம் மக்களுக்கு பயன்படக்கூடிய சங்கை இயக்க தயங்குவது ஏன்? அதிகாரிகளின் அலட்சியமா? அல்லது பொறுப்பற்று போன வேலையா? என்று மக்களுக்கு விடைகான முடியாத கேள்வியாக உள்ளது. பொறுத்திருந்து பாப்போம் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று....
source from: mttexpress.com, www.muthupettaixpress.com, www.muthupettaiepxress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)