முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


ஆப்கான் மக்களிடம் ஒபாமா மன்னிப்பு கோரினார்...


அமெரிக்க,பிப்ரவரி 27 : ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டதற்காக ஆப்கானிய மக்களிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார். அந்த எரிப்புச் சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது என்றும் அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார்.இதனிடையே ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் போராட்டங்களில் இன்று இரண்டு அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் நங்காஹர் மாகாணத்தில் உள்ள ஒரு அமெரிக்க-ஆப்கானிய இராணுவத் தளத்தை போராட்டக்காரர்கள் தாக்கிய போது, ஆப்கானிய இராணுவ உடையில் இருந்த ஒருவரால் இந்த இரண்டு அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அந்தப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்துமாறு உள்ளுர் பள்ளிவாசல் ஒன்று அழைப்பு விடுத்தது என்று பிபிசியின் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரும் இன்று கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏழு மாகாணங்களில் குரான் எரிப்பு தொடர்பில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதிகளில் இதுவரை குறைந்தது நான்கு பேர் பலியாகியுள்ளனர்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

அபு மர்வா

திருவாரூரில் SDPI நடத்திய மாபெரும் ரயில் மறியல் போராட்டம்..


திருவாரூர், பிப்ரவரி 27 : திருவாரூர் முதல் காரைக்குடி வரை உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதையை கடந்த 31 .12 .2012 அன்று அகல ரயில் பாதையாக மாற்றப்பட வேண்டி கம்பன் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது. ஆனால் கடந்த 6 வருடங்களாகியும் அகல ரயில் பாதைக்கான எந்த முயற்சியும் எடுக்கப்பட வில்லை. தஞ்சை மண்டலத்துக்கு உட்பட்ட 3 பகுதிகளில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டு 3 புதிய ரயில் தடம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மயிலாடுதுறை முதல் காரைக்குடி வரை அகல ரயில் பாதை அமைக்கப்படுவதற்காக 404 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும் இன்று வரை இந்த வேலைகளை செய்யாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். இவற்றை உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி SDPI சார்பில் நேற்று திருவாரூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த, இப்போராட்டத்திற்கு தலைமை வகித்த SDPI - யின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A .அபூபக்கர் சித்திக் அவர்கள், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் வழியாக உள்ள ரயில் பாதையை நிரந்தரமாக தடைசெய்யக்கூடிய ரீதியில், திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி, வடச்சேரி, பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடி வரை அகல ரயில் பாதை அமைக்க கூடிய முயற்சிகள் நடைபெற்று வருகிறது என்றும், ஒருகால் அப்படி நடந்தேறி விட்டால் இந்த பாதை நிரந்தரமாக விடப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் திருவாரூர் முதல் காரைக்குடி வரை உள்ள அகல ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்து தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த SDPI தயாராக உள்ளது என்று அப்போது அவர் தெரிவித்தார்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

O.M .சுபைத் கான் B.Tech. சாதிக் திருவாரூர்

முத்துப்பேட்டையில் அதிசயம்: ஒரு மட்டைக்குள் இருதேங்காய்.!!!தம்பிக்கோட்டை, பிப்ரவரி 27 : முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீலக்காட்டை சேர்ந்த திரு. மயில் நாதன் என்பவர் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தினந்தோறும் வெளி மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான தேங்காய்களை ஏற்றுமதி செய்து வருகிறார். அப்படி ஏற்றும் தேங்காய்களை ஆட்கள் மூலம் அவற்றை உரித்து சாக்கு பைகளில் கட்டுவது வழக்கம். அந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு தேங்காய் மற்றும் சற்று வித்தியாசத்துடன் காணப்பட்டது. அந்த தேங்காவை ஒரு தொழிலாளி மிக கனமாக உரித்தார் அதில் ஒரு மட்டைக்குள் இரு தேங்காய் இருப்பதை கண்ட அவர் வியந்து போனார். நாம் இரு தேங்காய் மட்டை உடன் ஒட்டி இருப்பதாய் பார்த்திருப்போம் அல்லது ஒரு தேங்காய்க்குள் இரு பருப்பு இருப்பதை பார்த்திருப்போம், ஆனால் ஒரு மட்டைக்குள் இரு தேங்காய் இருப்பதை இப்பொழுதுதான் நாம் பார்த்திருக்கிறோம். உண்மைலே இது ஒரு அதிசய தேங்காய் என்று கூறியுள்ளார் திரு. மயில் நாதன். இவற்றை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், முஹைதீன் பிச்சை, EKA . முனவ்வர் கான், ASNS .அப்துல் பாரி, அபு மர்வா

உலக வரை படத்திலிருந்து இஸ்ரேலை அழித்து விடுவோம், ஈரான் கடும் எச்சரிக்கை.!!!


ஈரான், பிப்ரவரி 27 : எங்கள் நாட்டின் மீது போர் தொடுத்தால், இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய்விடும்" என்று ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது கட்டுப்பாடு விதிக்க அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டதால் ஈரான், அமெரிக்கா இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது அறிந்ததே. இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலும் ஈரானைத் தாக்கப் போவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் ஈரான் மீது போர் தொடுக்கப்படுமானால் இஸ்ரேல் என்ற ஒரு நாடே இல்லாமல் போய்விடும் என்று ஈரானின் இராணுவத்துறை அமைச்சர் ஜெனரல் அஹம்மது வதீதி எச்சரித்துள்ளார்."எங்களைத் தாக்கி அழித்துவிடலாம் என்று இஸ்ரேல் கருதினால் அது தப்புக்கணக்கு. அப்படி ஒரு தாக்குதல் எங்கள் நாட்டின் மீது தொடுக்கப்பட்டால், இஸ்ரேலை முற்றிலுமாக அழித்துவிடுவோம்." என்ற அமைச்சர் வதீதி எவ்வகையான தாக்குதல் என்பதைத் தெரிவிக்கவில்லை. வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் அமைச்சரின் பேட்டியால் மேலும் பதற்றம் கூடியுள்ளது.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

முஹம்மது நாஜீம்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)