முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

திருமணச் செய்தி: "A. முஹம்மது முஸ்தாக், B. செய்து அலி பாத்திமா"








முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 31: ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 21, 29.08.2013 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை SKM தெரு ஜனாப். மர்ஹூம். கு.மு.அப்துல் ஹமீது  அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் A. முஹம்மது முஸ்தாக், தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம், மேலத் தெரு ஜனாப்.   B. பகுருதீன் அவர்களின் புதல்வி தீங்குலச் செல்வி  செய்து அலி பாத்திமா மணாளிக்கும் இரு வீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 4 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து சேதுபாவா சத்திரம் இமாம், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)
source from: www.muthupettaiexpress.com

நமது நிருபர்: 

அரபு சாகிப் பள்ளி இமாம் சேக் மீரான் அவர்கள்.


எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள்: "சாகுல் ஹமீது M.Com" அழைப்பு...


முத்துப்பேட்டை,ஆகஸ்ட்28: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 24, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 01-09-2013 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர் களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை அரபு சாஹிப் பள்ளிவாசலில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

இப்படிக்கு: 

சாகுல் ஹமீது M.Com. 

மேலும் தொடர்புக்கு:

A.M.M. ரபீக் அஹ்மது,
திமிலத்தெரு (O.M . தோப்பு),
0091 - 97 50 09 45 68

மெளத்து அறிவிப்பு: "செய்து அலி பாத்திமா"





முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 28: முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு, அச்சக்காரவாடி சந்து, தெற்குத் தெரு மர்ஹும் நாகூர் பிச்சை அவர்களின் மகளும், தண்டையா காதர் முஹைதீன் அவர்களின் மனைவியும், வெள்ளைத்துரை என்கிற ஹாஜா முஹைதீன் அவர்களின் தாயாரும், சாகுல் ஹமீது, அன்வர் இபுறாஹீம், ஆகியோரின் பெரிய தாயாரும், சர்புதீன் அவர்களின் அண்ணன் மனைவியும், ஹாபீப்கான் சகோதரர்களின் மாமியும், முஹம்மது யாசின், சாதிக் பாட்சா, முஜுபுர் ரஹ்மான், A. சாதிக் பாட்சா ஆகியோரின் மாமியாரும், ரியாசுதீன், அப்சல், தாஜுதீன், அப்ரீத், ஹமீத், ஆசீக் ஆகியோரின் பாட்டியாருமாகிய, "செய்து அலி பாத்திமா" அவர்கள் இன்று காலை 7:30 மணியளவில் மெளத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). 
அன்னாரின் ஜனாஸா அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை அறிவிக்கிறார்கள். 

அறிவிப்பவர்:
தண்டையா காதர் முஹைதீன் அவர்கள் .

மேலும் தொடர்புக்கு:
தண்டையா காதர் முஹைதீன் : 0091 - 78 45 44 00 63

நமது நிருபர்:

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றம் : வியாபாரிகள் உண்ணாவிரத முயற்சி...





முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 26: முத்துப்பேட்டையில் உள்ள பழைய பேருந்து நிலையம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிக்கபட்ட கடைகள் 100க்கும் மேற்பட்ட பேரூராட்சி அனுமதித்த ஆக்கிரமிப்பு கடைகள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள பேரூராட்சி அனுமதியுடன் செயல்படும் பத்து கடைக ளை அப்புறபடுத்த பேரூராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. வியாபாரிகள் மறுத்து பதில் நோட்டீஸ் அனுப்பினர். சென்ற வாரம் பேரூராட்சி நிர்வாகம் அந்த கடைகளுக்கு இறுதி நோட்டீஸ் அனுப்பியது. மீண்டும் வியாபாரிகள் பதில் மனு கொடுத்தனர்.
 இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் கடைகள் அரசு மருத்துவ மனைக்கு இடையூறாக இருப்பதாகவும் அதில் மருத்துவமனை நுழைவுவாசல் பகுதியில் உள்ள கடைகள் மட்டும் அப்புறப்படுத்தினால் போதும் என்று பேரூராட்சி நிர்வாகம் கூறியது. அதற்கு வியாபாரிகள் சம்மதம்  தெரிவித்து இருந்த நிலையில் நேற்று அதிரடியாகக் காவல் துறை உதவியுடன் அகற்றப்போவதாக நேற்று முன்தினம் வியாபாரிகளுக்கு தெரிந்தது. உடன் வியாபாரிகள் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ரசூல்பீவி தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்தனர்.
 இதற்கு முத்துப்பேட்டை காவல் துறை உண்ணா விரதத்திற்கு அனுமதி மறுத்து, மீறி செய்தால் கைது செய்வோம் என்று ரசூல்பீவி வீட்டில் காவல் துறை நோட்டீஸ் ஒட்டியது. இதனால் வியாபாரிகள் மத்தியில் பெறும் பரபரப்பானது. இந்த நிலையில் நேற்று காலை அதிரடியாக பத்து கடைகளை அகற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் ராஜகோபால் ,முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேலு தலைமையில் போலீசார் பேரூராட்சி செயல் அலுவலர் இப்ராகீம் வருவாய் ஆய்வாளர் ராம சந்திரன்  உட்பட அதிகாரிகள் வந்தனர்.
இதனை கண்ட பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மார்க்கிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி  செயலாளர் காளிமுத்து மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகம்மது மாலிக் ஆகியோரின்  தலைமையில் வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தனர். உடன் அவர்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் இப்ராகீம் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு புதிய பேருந்து நிலையம் பகுதியில் கடைகள் உடன் அமைத்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

அதன் பிறகு பத்து கடைகளும் அகற்றப்பட்டு அதனை புதிய பேருந்து நிலையத்தில் பேரூராட்சி பணியா ளர்கள் வைக்கும் பொழுது அங்கு இயங்கி வரும் ஆட்டோ சங்கம் வேன் சங்கம் , எதிர்ப்பு தெரிவித் ததால் பெறும் பரபரப்பு ஆனது. உடன் தாசில்தார் ராஜகோபால்  சமரசம் பேசி கடைகள் வைக்கப்பட்டன. இச்சம்பவத்தால் முத்துப்பேட்டை நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் காலை முதல் மாலை வரை பெறும் பரபரப்பாக காணப்பட்டன.
                  
நன்றி - செம்பருத்தி 

முத்துப்பேட்டை அலையாத்திகாட்டை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும், அன்னை கல்லூரி மாணவர்கள் கோரிக்கை..


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 26: முத்துப்பேட்டை லகூன் தீவு பகுதியில் அமைந்து உள்ள அலையாத்தி காடு 12 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பசுமை நிறைந்து அமைந்துள்ளது. உலக நாடே வியக்கும் அளவுக்கு இயற்கை அழகு படைத்த இந்த அற்புத காட்டை காண ஏராளமான மக்கள் தினந்தோறும் வருவது இப்பகுதிக்கு பெருமையை சேர்ந்துள்ளது. இந்த காட்டில் பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்து இதனின் பெருமையை உணர்த்தி வருகிறார்கள். இந்த நிலையில் கும்பகோணம் கோவிலாச்சேரியில் உள்ள அன்னைக் கல்லூரியின் மாணவ, மானவில்கள் சுமார் 80 பேர் இந்த அலையாத்தி கட்டுக்கு வந்து கட்டை ஆய்வு செய்து கருத்தரங்கு நடத்தினர்.  


நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கல்லூரி முதல்வர் ஹிமாயூன் பேசுகையில்: இந்த முத்துபேட்டை அலையாத்தி கட்டின் சிறப்பை பற்றி ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நமது கல்லூரி வருடாவருடம் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து செய்து வருறது. 1500 கிலோ மீட்டர் கடல் அலையை இந்த அலையாத்தி வேர் தாங்கி கொடுத்து 1 கிலோ மீட்டராக திருப்பி செலுத்தி அதன் வேர் வளைந்து கொடுக்கிற சிறப்பு இந்த அலையத்தி மரத்துக்கு இருப்பதனால்தான் இதற்க்கு இப்படி ஒரு பெயர். இதன் சிறப்பு பல ஆண்டாக வெளியில் தெரியாமல் இருந்தது. சுனாமி வந்த பிறகு தான் இதன் அடையாளம் உலக நாடுகளுக்கே தெரிந்துள்ளது. இந்த அடர்ந்த காட்டுக்கு அரியவகை மருத்துவகுண தாவரங்கள் வெளிநாடுகளிலிருந்து கடல் கடந்து பயணமாக அரியவகை பறவை சங்கமித்து அமர்ந்து இருக்கும் காட்சிகள் நிரந்த பகுதி. இதனை மத்திய மாநில அரசு பாதுகாக்க வேண்டும் என்றார். 


கல்லூரி பேராசிரியை சங்கீதா பேசுகையில்: தமிழ் நாட்டில் இப்படி ஒரு இடம் இருப்பது இங்கு வந்த பிறகுதான்  தெரிந்து கொண்டேன் என்றும், இங்கு உள்ள மீனவர்களை சந்தித்து கேட்கும்போது ஒவ்வொரு மீனவர்களும் இந்த காடுகளில் பாதுகாப்பாளராக இருக்கிறார்கள். இந்த காடு உலக அதிசயங்களின் ஒன்பதாவதாக நான் கருதுகிறேன் என்று அவர் தெரிவித்தார். 


மாணவி ராஜலெட்சுமி பேசுகையில்: எனது முதல் பயணம் இந்த லகூன் ஆகும், அதுவும் எனக்கு பெரிய அனுபவத்தை கத்து கொடுத்ததாக நான் கருதுகிறேன். எனது சகோதரர் துபாயில் கடலுக்கு அடியில் இருக்கும் ஒரு அதிசயத்தை என்னிடம் கூறினார். இந்த அதிசத்தை எனது குடும்பத்தாரிடம் சொல்வேன். பாத்தாயிரம் செலவு செய்து போனாலும் இது போன்ற இடத்தை பார்க்க முடியாது. இவ்வளவு ஈசியாக இந்த அதிசய அலையாத்தி காட்டை பார்க்க வைப்பு தந்த கல்லூரிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். 


மாணவி ஜமுனாராணி பேசுகையில்: தண்ணீர் மீது நின்று டைவ் அடிக்கும் பறவைகளை காண ஆயிரம் கண்கள் வேண்டும் என்றும், இதில் பூநாரை, செங்கல்நாரை, பாம்புதாரா கூல்கிட் போன்ற ஆயிரம் பறவைகளும் சுதந்திரமாக இருக்க ஏற்ற இடம் இதுதான் என்றும், மக்கள் நல்ல சந்தோசமாக இருக்க போதுமான இடம் தான் இது என்றும், அதே சமயத்தில் இப்பகுதியை பாதுகாக்கவும் அக்கறை வேண்டும் என்றும் இவர் தெரிவித்தார். 



இறுதியாக கருத்தரங்கில் காடுகளை மேம்படுத்த வறண்ட பகுதியில் செடிகள் நட்டு வளர்க்க வேண்டும், காடுகள் அழியாமல் பாதுகாக்க வனத்துறை கடுமையான சோதனையில் ஈடுபட வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பாக பயணத்துக்கு அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் படகு விட வேண்டும். பறவைகள் வந்துபோக வசதிகள் செய்ய வேண்டும். மத்திய அரசு அதிசயங்கள் நிறைந்த இந்த அலையத்தி காட்டை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன. 


நமது நிருபர்: முஹைதீன் பிச்சை 

அரசு கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டக் கோரி முத்துப்பேட்டை அருகே இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சாலை மறியல்.




முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 24: முத்துப்பேட்டை அடுத்து எடையூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் திருத்துறைப்பூண்டி அரசு கலை கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக்கொரியும் கொற்கை பள்ளியில் மாணவர் விடுதி கட்டித்தர்க்கொரியும் சாலை மறியல் போராட்டம் இளைஞர் பெருமன்ற முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் உமேஷ்மாபு தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் முறிகையன் மற்றும் எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தும் எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் போராட்டம் விளைக்கிக் கொள்ளபபட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி, நாகை, முத்துப்பேட்டை, பட்டுகோட்டை வழித்தடத்தில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.  

நமது நிருபர்: முஹைதீன் 

மௌத்து அறிவிப்பு: "சபூரா அம்மாள்"


முத்துப்பேட்டை,ஆகஸ்ட் 24: முத்துப்பேட்டை குட்டியார்பள்ளிதெரு, மர்ஹூம் P.M.முகம்மது ஹமீது அவர்களின் மனைவியும், A.அப்துல் மஜீது,V.A. ஹாஜா துல்கர்ணை, அவர்களின் மாமியாரும் M.அனீஸ் அஹமது, M.ஜியாவுதீன், A. அலீப் அஹமது,K. சதாம் உசேன், K.ஆதில் அஹமது, A. முகம்மது ரபீக், A. ஆரிப் ரஹ்மத்துல்லா, A. முஸ்தாக் அஹமது,V.A.H. அப்துல் சலீம், V.A.H. ரியாஸ் அஹமது, V.A.H. சபீர் அஹமது, V.A.H. அசாருதீன், அவர்களின் பாட்டியாரும் மர்ஹூம் P.M.முகம்மது முகைதீன், P.M.அப்துல் ரஹ்மான், மர்ஹூம் P.M. பசீர் அஹமது, P.M. கமால் நாசர், P.M. ஜாஹிர் உசேன் (MIWA - வின் முன்னால் தலைவர்), ஆகியோரின் தாயாருமாகிய சபூரா அம்மாள் அவர்கள் இன்று (24.08.2013) அதிகாலை 3.00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாஸா இன்று (24.08.2013) காலை 11.00 மணியளவில் குத்பா பள்ளி கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர் : P.M.கமால் நாசர் & சகோதரர்கள்.
தொடர்புக்கு:
P.M.கமால் நாசர் - 050 4952333
P.M.ஜாஹிர் உசேன் - 0505956737
V.A.H. அப்துல் சலீம் - 0065 93887282
V.A.H. சபீர் அஹமது - 0065 84281014
M.அனீஸ் அஹமது - 055 59950042


SDPI கட்சியின் மாநில பொது செயலாலர் மற்றும் மாநில நிர்வாகிகள் முத்துப்பேட்டைக்கு வருகைதந்த காட்சி









முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 22: SDPI கட்சியின் மாநில பொது செயலாலர் மற்றும் மாநில நிர்வாகிகள் முத்துப்பேட்டைக்கு வருகைதந்து இருந்தனர். நோன்பு பெருநாள் அன்று பாசிச கும்பலால் பெருநாளை சீர்குலைக்கும் வகையில் மத கலவரத்தை தூண்டி இதற்கு காவலர்களும் துணை போகும் வகையில் அப்பாவி மக்களை காவல்துறை கைது செய்தது. இதை தொடர்ந்து திருவாரூர் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அப்பாவிகளை விடுவிக்க கேட்டுக்கொண்டது. அதுமட்டுமின்றி முத்துபேட்டைக்கு வருகை தந்து. அனைத்து ஊர் ஜமாஅதார்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர் பின்பு பாதிக்க பட்ட மக்களை சந்தித்தும் கைது செயிதவர்களின் உரவினர்களை சந்தித்தும் ஆறுதல் கூறினர்.

நன்றி: முத்துப்பேட்டை SDPI 



டாக்டர் அப்துல்லாஹ் மரணம் தரும் படிப்பினை!செங்கிஸ்கான்


மருத்துவ மனையில் டாக்டர் அப்துல்லாஹ் 
பெரியார் தாசனின் இறுதித் தருணங்கள் !


ஞாயிறு அன்று காலையில் நண்பர் இப்ராகிம் காசிம் அவர்கள் மும்பையில் இருந்து போன் செய்து செங்கிஸ் கான் பாய் நாம் நினைத்தது போல் நடந்து விட்டது ! டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் மரணத் தருவாயில் இருக்கிறார் என அவரது மகன் வளவனிடம் நான் பேசினேன் அவரது உடலை நம்மிடம் தர மாட்டார்களாம் இது பற்றி அனைத்து அமைப்புகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லுங்கள் ! நான் உடனே மும்பையில் இருந்து இரவுக்குள் விமானத்தில் சென்னை வந்து விடுகிறேன் என்று கூறினார்.

சனியன்று இளையான்குடியில் நடை பெற்ற பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா ? ஆவணப்பட திரையிட்டு நிகழ்ச்சியை முடித்து விட்டு சென்னைக்கும் பேருந்தில் சமயத்தில் அவரும் நானும் டாக்டரின் உடல் நிலை குறித்தும் அவருடைய குடும்பத்தார் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையில் , அவரும் ஆவண ரீதியாக தனது பெயரை மாற்றாத நிலையில் அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அவரை இஸ்லாமிய அடிப்படையில் சிக்கல் வரலாம் ' என கவலைப்பட்டுக் கொண்டு வந்தோம் ! அது ஞாயிறு அன்று நடந்தே விட்டது !

நான் உடனடியாக வளவனின் நண்பரான தமுமுக வின் ஹாஜா கனி அவர்களுக்கு தகவலைத் தெரிவித்து விட்டு நீங்கள் அவரோடு பேசுங்கள் எனக் கூறிவிட்டு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அப்போலோ ஹனிபா அவர்களிடம் ' 'அண்ணே அவரது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுப்பதில் இரு வேறு கருத்துக்கள் இருப்பதால் நாளை அவர்கள் குடும்பத்தார் முன்னிலையில் நமது கருத்து கருத்து வேறுபாட்டை வைக்காமல் முன்னத்கவே கூட்டமைப்பு சார்பில் ஒரு முடிவு எடுத்து செயல்படுவது நல்லது ஆகையால் கூட்டமைப்பைக் கூட்டி முடிவு எடுங்கள் நாங்கள் இங்கு மருத்துவ மனையில் இருந்து நிலைமையை பார்க்கிறோம் எனக் கூறிவிட்டு பெரும்பாக்கம் குளோபல் மருத்துவ மனைக்கு விரைந்தோம் !

இரவு எட்டரைக்கு மருத்துவமனை சென்ற போது ஆளுர் ஷாநவாஸ் கொடுத்த தகவலின் அடைப்படையில் திருமாவளவன் அங்கு வந்திருந்தார் ! அவரோடு சேர்ந்து அப்துல்லாஹ் அவர்களைப் பார்த்த போது அவர் சக்ராத் எனும் இறுதி நிலையில் இருந்தார. இழுத்து வாங்கிய மூச்சு அவரின் மெலிந்த தேகத்தை தூக்கிப்போட்டது ! வெளியில் வந்து திருமா அவர்கலோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்த போது இறுதியாக இந்த ஆவணப் படத்துக்காக் பயணித்த விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம்!

அப்போது நம்மோடு வந்த ஜாகிர் , ஜக்கரியா, அமிருதீன் ஆகியோர் அவருக்கு இறுதி நேரத்தில் கலிமாவை சொல்லிக் கொடுத்ததாகவும் அதை திரும்ப சொல்லும் நிலையில் அவர் இல்லாவிட்டாலும் அதை உள்வாங்கியதை உணர்ந்து கொண்டதாக கூறினர்! நானும் கலிமாவை கொடுத்த போது அதை உள்வாங்கியதை உணர்ந்தேன்.

பேசிக் கொண்டிருந்ததை உற்றுக் கவனித்த திருமாவளவன் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டார். உங்களில் இறக்கும் தருவாயில் இருப்பவருக்கு கலிமா எனும் ஏகத்துவ உறுதி மொழியை சொல்லிக் கொடுங்கள் என்பது நபிகளாரின் வாக்கு ! அதைத் தான் சொல்லிக் கொடுத்தார்கள் எனக் கூறிய அது என்ன வார்த்தை என திருமாவளவன் கேட்க இறைவன் ஒருவனே இறுதித் தூதர் முஹம்மது [ஸல் ] என மொழிவதே கலிமா ! எனக் கூறிய கவனமாக கேட்ட திருமாவிடம் ஏன் எனில் ' முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள் ' எனும் இறை வசனத்தை அவரின் நண்பர் நினைவூட்டியதால் இஸ்லாத்தை ஏற்றவர் அவர் ! அவருக்கு இறுதி நேரத்தில் அதை நினைவூட்டுவது இஸ்லாத்தின் ஒரு நடைமுறை ! என்ற போது அதை மீண்டும் சொல்லுங்கள் என திருமா கேட்ட போது முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்' முஸ்லிம் என்பது ஒரு இனத்தின் பெயரல்ல இறைவனுக்க கட்டுப்பட்டவர்கள் எனும் பொருள் என விளக்கிய பொது அனைத்தையும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டார் திருமாவளவன் ! அல்லாஹ அவர்களுக்கு ஹிதாயத் வழங்கட்டும்.


இதற்குள் மும்பையில் இருந்து இப்ராகிம் காசிம் வந்து சேர்ந்து விட்டார் ! தடா ரஹீம் உள்ளிட்ட சகோதரர்களும் வந்து சேர்ந்தனர். அவர் இறுதியாக அப்துல்லாஹ்வின் நிலைமையைக் கண்டு அவரும் கலிமா சொல்லிக் கொடுக்க அவரது குடும்பத்தார் 45 வருடங்களாக தன நேரத்தை சமுதாயத்திற்கு செலவிட்டார். இறுதி நேரத்தை எங்கள் குடும்பத்தாருடன் இருக்க விரும்புகிறோம் ! தயவு செய்து வெளியில் இருங்கள் எனக் கேட்டுக் கொண்டதை அடுத்து அனைவரும் வெளியில் வந்து காத்திருந்தோம்!

அரை மணி நேரத்திற்குப் பின் மருத்துவருடன் வளவன் வெளியில் வந்து 1.23 க்கு அவர் உயிர் பிரிந்ததாகவும் வாழ்நாளில் பெரும்பகுதி கற்பித்தலில் கழிந்த தனது உடல் வாழ்வுக்க்ப்பின்னரும் கல்விக்காக பயன்பட வேண்டும்' எனும் அவரின் இறுதி விருப்பத்திற்கு இணங்க அவரது உடல் மருத்துவ ஆய்விற்கு கொடுக்கப்பட குடும்பத்தார் முடிவு செய்துள்ளோம் இதற்கு இஸ்லாமிய சமுதாயம் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
இன்ஷா அல்லாஹ உங்களின் இந்தக் கோரிக்கையை கூட்டமைப்பு தலைவர்களுக்கு தெரிவிக்கிறோம் ! எனக் கூறி விட்டு அப்போலோ ஹனிபா அவர்களுக்கு தெரிவித்து விட்டு ஆளுர் ஷானவாஸ் அவர்களிடம் ஊடகங்களுக்கு செய்தி தெரிவிக்க சொல்லி விட்டு கனத்த இதயங்களுடன் இரவு 2.30 மணியளவில் கலைந்தோம்


அவரோடு இஸ்லாத்தை பெரியார் ஏற்றாரா எனும் வராற்று சிறப்பு மிக்க அந்த ஆவணப்படத்தில் பணியாற்றியது, அதன் திரையீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த மே மாதம் துபாயில் பயணித்தது, ஸ்டார் மெட்ரோ ஹோட்டலில் 10 நாட்கள் விடிய விடிய பேசிக் கொண்டிருந்த அந்த நாட்கள் அவரின் மொத்த வாழ்க்கையையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட அந்த இரவுகள், என் கண்ணில் நிழலாடி நீரை வரவழைத்தது !
அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த கூலியை வழங்கட்டும்! 



வாழும் வரைக் கற்றுக் கொடுப்பவராக இருந்த டாக்டர் அப்துல்லாஹ் அவர்கள் இறப்பில் கூட இஸ்லாமிய சமுதாயத்திற்கு சில படிப்பினைகளை விட்டு சென்றுள்ளார் !
அதில் முதலாவது இஸ்லாத்திற்கு வரும் சகோதர சகோதரிகளின் வருகையைக் கொண்டாடும் நாம் வந்த பின் செய்ய வேண்டிய கடமைகளில் பொடுபோக்காக இருக்கிறோம். முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள் எனும் இறை வசனத்தின் படி வந்தவர்களை முஸ்லிம்களாக மரணிக்க செய்யும் கடமையும் நமக்குள்ளது !

அப்துல்லாஹ் அவர்களின் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் நடந்த கூட்டமைப்பின் நேற்றைய மசுராவில் ஒரு இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் ' இஸ்லாமிய அடைப்படையில் இறுதிக் கடமை செய்யாது நாளைக்கு என்னையும் இப்படித்தான் என் குடும்ப விருப்பபடி அடக்க விட்டு விடுவீர்களாக ? எனக் கண்ணீருடன் கேட்ட எளிய கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை !

இனிமேல் நாம் செய்ய வேண்டியதெல்லாம் இஸ்லாத்தை ஏற்க வரும் போடும் அபிடவுட் உடன் எனது இறுதி சடங்கு இஸ்லாமிய அடைப்படையில் இருக்க வேண்டும் என்பதையும் உறுதி மொழியாக வாங்கி சம்பந்தப்பட்ட அமைப்புகள் வைத்துக் கொள்ள வேண்டும் !

இப்படி ஒரு பிரச்சனை உள்ளது உடனடியாக கூட்டமைப்பைக் கூட்டி முடிவெடுங்கள் எனக் கூறியும் எந்த சமுதாயத் தலைவரும் அவர் உயிருடன் இருக்கும் நிலையில் உடனடியாக மருத்துமனைக்கு வந்து சம்பந்தப் பட்டவர்களை சந்தித்து பேசவில்லை !

ஆனால் சம்பந்தமே இல்லாத திருமாவளவன் ஆளுர் ஷானவாசின் கோரிக்கைக்கு இணங்க மருத்துவமனைக்கு வந்து வளவனிடம் இறுதிச் சடங்கு விஷயத்தில் இஸ்லாமியர்களோடு ஒத்துழையுங்கள் என கோரிக்கை வைக்கிறார் ! நம்மிடத்தில் உலமாக்கள் என்ன சொல்கிறார்கள் ? இதில் முரண்பாடு இல்லாமல் இரு தரப்பாருக்கும் ஏற்ற ஒரு நிலையை எடுக்க என்ன வழி என ஆலோசனை கேட்கிறார்.

டாக்டரின் குடும்பத்தாருடன் ஆலோசனை செய்கிறார்.அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அணைக்கிறார்.
மருத்துவர்களிடத்தில் பேசுகிறார்! மருத்துவமனை செலவுக்கு மறுக்க மறுக்க பணத்தை

எடுத்து குடும்பத்தாரின் கைகளில் திணிக்கிறார் ! இரண்டு மணி நேரம் நிலையாக நின்று அந்தக் குடும்பத்தரின் மனங்களை மட்டுமல்ல அங்கே இருக்கும் முஸ்லிம்களின் மனங்களையும் வெல்கிறார்.

ஆனால் இதை எல்லாம் இஸ்லாம் நமக்குக் கற்றுத் தந்திருக்க செயல்படுத்த வேண்டிய தலைவர்கள் ஒருவரும் வராதது
வேதனை ! மரணத் தருவாயில் இருக்கிறார் இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என நாம் அனைவருக்கும் அறிவித்தும் இறந்து பல மணி நேரங்களுக்குப் பிறகும் எந்தத் தலைவர்களும் மருத்துவ மனை வரவில்லை என்பது வருத்தத்திற்கு உரிய செய்தி !ஒரு வேளை தலைவர்கள் வந்திருந்தால், திருமா செய்த மனித நேயத்தை வெளிப்படுத்தி இருந்தால் அவர்களின் இதயங்களில் மாற்றம் வந்திருக்கலாம் ! அல்லாஹ்வே அறிந்தவன் !

மேலும் அழைப்புப் பணியை அல்லாஹ் நம் மீது சுமத்தி இருக்க அதை மறந்து விட்டு இருக்கும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு மத்தியில், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட காலம் முதல் இறக்கும் வரை எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் பம்பரமாக சுற்றி உலகெங்கும் அழைப்புப் பணியை மேற்கொண்டு இயலவில்லை எனும் நிலயில் இருக்க விரும்பாமல் இறைவனடி சேர்ந்த விதத்திலும் நமக்கு படிப்பினை உள்ளது.

இன்ஷா அல்லாஹ் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் மரணத்தில் இருந்து படிப்பினை பெரும் மக்களாக அல்லாஹ நம்மை ஆக்கி வைப்பானாக!

-செங்கிஸ் கான்.

தௌபீக் சுல்தானா கற்பழிப்பு பற்றி முத்துப்பேட்டை வித்தக கவிஞர் பஷீர் :

எல்லோர் நினைவிலும் நீயே 
நீங்கா இடம் பிடித்து விட்டாய் தாயே

முகநூல் முழுக்க உன் படம் 
உனக்காக கையேந்தி நிற்கிறது என் சமூகம் இறைவனிடம் 

என்ன நினைத்தாயோ நீ கொலை ஆனா போது
சின்ன பில்லைடி உனக்கு என்ன தெரியும் சூது வாது

இந்த நேரத்தில் வர மாட்டனா ஒரு பாய்
என்று கொலை ஆனபோது நீ நினத்து இருப்பாய்

என் தங்கமே ஒத்தன் கண்ணுலையும் படளையடா
நீ கதறி அழுதும் கூட அந்த வேசி மகன் உன்னை விடலையடா

பள்ளி சென்று படித்து வந்து
விளையாடுவாய் பல்லான் குழியில்

பல்லாண்டு வாழ வேண்டிய உன்ன வேறு வழி
இல்லாமல் புதைத்தோம் குழியில்

நீ நினைக்கலாம் எனக்காய் நீங்கள் குரல்தானே கொடுக்க முடியும்

உன்னை குரல் வலையை நெரித்தவன் இவனென தெரிந்தால் அவன் குரல் வலையை அறுக்க முடியும் 



இந்த சமூகம் அமைதியை விரும்புகிறது
உனக்காய் இந்த சமூகம் அணிவகுக்க தயாராய் இருக்குகிறது

உனக்கு நேர்ந்த கெதி
இனி எவருக்கும் நேரக்கூடாது என இயற்றனும் சட்ட விதி

நீதி வேண்டும் என் மகளுக்கு
இல்லையேல் போராட்டம் வரும் வீதிக்கு
அதற்கு சிறைஎன்றால் என் தலை முடி போனது சமம் பாதிக்கு

பஷீர்

அதிகாலையில் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை: தமுமக வினரின் போராட்டத்தால் பரபரப்பு...







முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 18: முத்துப்பேட்டையில் தேர்வுநிலை பேரூராட்சியில் அலுவலகம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு செயல் அலுவலராக நாகராஜ் என்பவர் பொறுப்பேற்றார் . திடீரென்றுபணியில் இருக்கும்பொழுது மாரடைப்பால் மரணம் அடைந்தார். காரணம் அலுவலக நிர்வாகத்தில் குளறுபடிகள் இருந்ததாலும், வரவு - செலவு கணக்கில் தணிக்கையில் சில பிரச்சனைகள் இருந்ததால் மனஅழுத்தம் காரணமாக இறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்ததாக பொறுப்பு ஏற்ற பாலசுப்ரமணியன் ஒரு விபத்தில் படுகாயம் அடைந்தார். அதன்பிறகு பொறுப்பேற்ற நந்தகுமார் மனஉளைச்சல் காரணமாக பணி செய்ய விரும்பாமல் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பொறுப்பேற்ற சித்தி விநாயகமூர்த்தி அலுவலகத்தில் ஒத்துழைப்பு இல்லாததால் அவரும் சென்றதாகவும், அதன்பிறகு பொறுப்பேற்ற சிவராமன் உடல் நிலை காரணமாக சென்று விட்டதாகவும், அதன்பிறகு பொறுப்பேற்ற இப்ராகிம் என்பவர் இந்த சம்பவங்களெல்லாம் கேள்விபட்டு பொறுப்பேற்று இதுநாள் வரை தனது அறையில் அமரவில்லை என்று தெரிகிறது. 

மேலும் , பேரூராட்சி தலைவராக உள்ள அருணாச்சலதுக்கு சில மாதங்கள் முன்பு உடல்நிலை சரியில்லாமால் பல மாதங்கள் அலுவலகத்திற்கு வரவில்லை. பேரூராட்சி திமுக கவுன்சிலர் ஐயப்பன் சென்ற மாதம் விபத்தில் சிக்கி படுகாயம், பேரூராட்சி மதிமுக கவுன்சிலர் மதியழகன் என்பவருக்கு உடல் நிலை சரியில்லை, சில தினங்களுக்கு முன்பு பாஜக கவுன்சிலர் மாரிமுத்து பேரூராட்சி பணியாளர் ராஜா ஆகியோருக்கு விபத்தில் சிறு காயம், மேலும் பேரூராட்சி பணியாளர்கள் கவுன்சிலர்களுக்கு மன உளைச்சல், கடன்தொல்லை, குடும்பத்தில் தொல்லை இப்படி தொடர்ந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த பேரூராட்சி நிர்வாகம் - கடவுள் குத்தம் இருக்குமோ என்று கருதி அலுவலகத்தில் கணபதி ஓமம் நடத்த முடிவு செய்யப்பட்டன . அதன்படி இன்று அதிகாலை 3 மணிக்கு புரோகிதர்களை கொண்டு கணபதி ஓமம் பேரூராட்சி அலுவலர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் அருணாச்சலத்திற்க்கு கழுத்தில் மாலை போட்டு தோஷம் கழிக்கப்பட்டது. பின்னர் புனிதநீரை அலுவலகத்திற்கு சுற்றுப்புறமும் புரோகிதர் தெளித்தார்.

 அதிகாலையில் இது நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெறும் பரபரப்பானது. இதனால் ஏராளமான மக்கள் கூடினர் . அப்பொழுது தமிழ்நாடுமுஸ்லிம்முன்னேற்றகழகம் நகர தலைவர் நெய்னா முகம்மது தலைமையில் ,ஒன்றிய செயலாளர் ஜெகபர் சாதிக் மற்றும் மனித நேய மக்கள் மாவட்ட செயலாளர் முகம்மது மாலிக் உரிமை மீட்பு இயக்கம் மாநில நிர்வாகியும் சமூக ஆர்வலருமான நிஜாமுதீன் உட்பட தமுமுகவினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தடுக்க முயற்சித்தனர் . இதனால் பெறும் பரபரப்பானது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தனிபிரிவு காவலர் குணசேகரன் உட்பட போலீசார் முற்றுகையிட்ட தமுமுகவினரிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர் . பிறகு உரிய விசாரணை செய்யப்படும். என்று தெரிவித்தார். மேலும் ரம்ஜான் அன்று கலவரம் நடந்த நிலையில் இச்சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: முத்துப்பேட்டை TMMK    


திருச்சியில் பாசிச தீவிரவாதத்திற்கு பலியான 8–ம் வகுப்பு மாணவி! தௌபீக் சுல்தானா ..






திருச்சி, ஆகஸ்ட் 16: திருச்சியில் ரெயில்வே தண்டவாளத்தில் 8–ம் வகுப்பு மாணவி உடல் துண்டாகி பிணமாக கிடந்தார். அவர் ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவர் சவுதி அரேபியாவில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி மெகபுனிசா. இவர்களது மூத்த மகள் தவ்பிக் சுல்தானா (13) ஒரு தனியார் பள்ளியில் 8–ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 13ஆம் தேதி பள்ளிக்கு சென்ற தவ்பிக் சுல்தானா மீண்டும் வீடு திரும்பவில்லை. இரவு நேரமாகியும் வீட்டுக்கு வராததால் மாணவியை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் இரட்டைமலை பகுதியில் ஆள் இல்லா ரெயில்வே கேட் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் மாணவி ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு மறுநாள் காலை தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அந்த மாணவி உடல் துண்டு, துண்டாகி கிடந்தார். அருகே மாணவியின் அடையாள அட்டையும், அவரது புத்தக பையும் கிடந்தன. அடையாள அட்டையை பார்த்தபோது அதில் தவ்பிக் சுல்தானா விவரம் இருந்தது.

இதையடுத்து அந்த பள்ளிக்கும், மாணவியின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் கோரமாக கிடந்த தவ்பிக் சுல்தானாவின் உடலை கண்டு கதறி அழுதனர்.

இது குறித்து பள்ளி மாணவிகளிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் கடந்த 13ஆம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் வழக்கமாக செல்லும் பஸ்சில் ஏறாமல் மற்றொரு பஸ்சில் ஏறிச் சென்றதும், அரிஸ்டோ ரவுண்டானா அருகே அவர் திடீரென இறங்கியதும் தெரிந்தது.

அதன் பின்னர் தவ்பிக் எப்படி இரட்டைமலைக்கு வந்தார். அவரை யாரேனும் கடத்தி வந்தார்களா? என விசாரணை நடத்தினர். அவரை யாரேனும் இந்த பகுதிக்கு அழைத்துவந்து பலாத்காரம் செய்த பின்னர் கொலை செய்துவிட்டு தண்டவாளத்தில் வீசிச் சென்றதால் உடல் துண்டானதா? அல்லது ரெயில் வரும்போது தள்ளிவிட்டதில் இறந்தாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவியின் நோட்டுகளை பார்வையிட்டபோது அதில், ஒரு கவிதையும், 2 செல்போன் எண்களும் எழுதப்பட்டு இருந்தன. அதனை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஆஸ்பத்திரியில் மாணவி தவ்பிக் சுல்தானாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளை கைதுசெய்ய கோரிக்கை விடுத்தனர்.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் மாணவி தவ்பிக் சுல்தானா பிரேத பரிசோதனை முடிந்ததும் நேற்று மாலை உடலை உறவினர்களிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைக்க முடிவு செய்தனர். அப்போது உடலை வாங்க மறுத்து மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் அணைத்து இஸ்லாமிய இயக்கத்தை சார்ந்தவர்களும் ஒன்று சேர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திருச்சி அரசு ஆஸ்பத்திரி நுழைவுவாயில் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாநகர துணை போலீஸ் கமிஷனர் அபினவ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘மாணவி சுல்தானாவை 2 வாலிபர்கள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு கொலை செய்துள்ளனர். அந்த காமக்கொடூரர்களை கைது செய்ய வேண்டும். மேலும் மாணவியின் உடலில் ஒரு கையும், சில உறுப்புகளும் இல்லாமல் உள்ளது.

அதனை தேடிக்கண்டுபிடித்த பின்னர் தான் உடலை வாங்கி செல்வோம். அதுவரை உடலை பெற மாட்டோம். மேலும் இந்த வழக்கில் கிடைத்துள்ள செல்போன் எண்ணை வைத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்க வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் அபினவ்குமார் அவர்களிடம் பேசுகையில், ‘‘சம்பந்தப்பட்ட இடத்தை நான் பார்வையிட்டு 2 மணி நேரம் நேரில் விசாரணை நடத்தினேன். 8–ம் வகுப்பு மாணவி அவ்வளவு தூரம் தனியாக சென்றது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவி மாயமானது தொடர்பாக பாலக்கரை போலீசாரும், உடல் கிடந்த இடத்தை வைத்து ரெயில்வே போலீசாரும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ரெயில்வே போலீசாரும் சப்–இன்ஸ்பெக்டர் அக்பர்கான் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். மாநகர போலீஸ் சார்பில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம். ரெயில் ஏறி இறங்கியதில் உடலின் பாகங்கள் பல துண்டாகி விட்டன. இதில் ஒரு கையும், உறுப்புகளும் கிடைக்காதது குறித்து ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தேடியும் கிடைக்கவில்லை. ரெயில்கள் ஏறி இறங்கியதால் உருக்குலைந்து போகி இருக்கும்’’ என்றார்.

இதையடுத்து இந்த வழக்கில் 24 மணி நேரத்திற்குள் அதாவது சம்பந்தபட்டவர்களை கைது செய்யாவிட்டால் உடலை வாங்க மாட்டோம், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அனைவரையும் கலைந்து செல்ல அறிவுறுத்தினர். அதன்பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மாநகர போலீஸ் கமிஷனர் அபினவ்குமார் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி:

ஹபீபுல்லாஹ் திருச்சி 

முத்துப்பேட்டை பெரிய நாயகி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திரதின கொண்டாட்டம். ரசூல் பீவி கொடி ஏற்றினார்.





முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 15: முத்துப்பேட்டை கோவிலூர் பெரியநாயகி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 67- வது சுதந்திரதின விழா இன்று நடைபெற்றது. முத்துப்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கோவிலூர் மந்திரபுரீஸ்வர் கோவில் நிர்வாகி அதிகாரி இளங்கோ, அரிமா மாவட்ட தலைவர் டாக்டர். இளங்கோ, ஒன்றிய கவுன்சிலர் ஜெகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தலைமையாசிரியை தாமரைச்செல்வி வரவேற்று பேசினார். தேசியக் கொடியை முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ஹாஜி. ரசூல் பீவி ஏற்றிவைத்து பேசினார். 

அப்போது பேசிய ஒன்றியக்குழு தலைவர் நடராஜன் கூறிகையில் இந்து அறநிலைத் துறைக்கு சொந்தமான இந்த பெண்கள் பள்ளி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஆண்டாண்டு காலம் இந்த பள்ளி இருந்து வருகிறது என்றும்,  அதற்க்கு ஒரு உதாரணம் இன்று நடைபெற்ற சுதந்திரதின விழாவில் முன்னாள் கவுன்சிலரும் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண்மணியுமான ஹாஜி. ரசூல் பீவி கொடி ஏற்றி வைத்து சிறப்பித்திருப்பது முத்துப்பேட்டையின் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நிகழ்கிறது என்றும், மேலும் இந்த பள்ளிக்கு கழிப்பிடம் மற்றும் அடிப்படை வசதிக்காக ரூ.70 லட்சத்தில் திட்டமதிப்பீடு செய்து இந்து அறநிலைதுறை சார்பில் அரசிடம் வழங்கி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் 90 சதவீதம் திட்டப்பணி ஒதுக்கீடு செய்து குறித்து வேலைகள் முடிந்துவிட்டது இதற்கான திட்டம் விரைவில் நிறைவேற்ற உத்தரவு வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் பி.டி.எ. இணைச்செயலாளர் திருநாவுக்கரசு கல்விக்குழு உறுப்பினர்கள் சம்மந்தம், தங்கமணி, முத்துராமலிங்கம், மங்கல் கூட்டுறவு வங்கி தலைவர் அன்பழகன், கீழக்காடு கூட்டுறவு வங்கி தலைவர் நாராயணசாமி, அரிமா மாவட்ட தலைவர் ராஜசேகர், ஜெயபால் ரோட்டரி மாவட்டத் தலைவர் மெட்ரோ மாலிக், அறங்காவலர் ராஜேந்திரன் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜெகவருல்லா, மேலாண்மை கமிட்டி உறுப்பினர் ஐயப்பன், பி.டி.எ. பொருளாளர் மருதுராஜேந்திரன், கல்விக்குழு தலைவர் குணசேகரன் உட்பட பலர் பேசினர். நிகழ்ச்சி இறுதியில் உதவி தலைமையாசிரியை உமாமகேஸ்வரி நன்றி கூறினார். 

நமது நிருபர்:  AKL. அப்துல் ரஹ்மான்..

முத்துப்பேட்டை முஸ்லிம்கள் மீது காவல்துறை தடியடி.!!! அப்துல் ரஹ்மான் எம்.பி. கண்டனம்...






முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 15: முத்துப்பேட்டையில் பெருநாள் தொழுகையின் போது முஸ்லிம்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி அறிக்கை பின்வருமாறு:

முத்துப்பேட்டையில் வெள்ளிக்கிழமை ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. அப்போது பா.ஜ.க இளைஞரணி மாநில பொருப்பாளர் கருப்பு என்கிற முருகானந்தம் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் ஊர்வலமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்றனர். இதைப் பார்த்த முஸ்லிம் இளைஞர்கள் ரமலான் பெருநாள் அன்று இவர்கள் நம்பகுதியில் எப்படி கோஷம் போட்டு செல்லலாம் என இளைஞர்கள் எண்ணி நாமும் பேரணி செல்வோம் என கூறி மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலம் சென்றனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே பிரச்சணை வரும் சூழ்நிலை உருவானது.

இருப்பினும் பெருநாள் அன்று காவல்துறை அதிகாரிகள் எப்படி பிஜேபினருக்கு அனுமதி அளிக்கலாம் பலமுறை மோதல்கள் உருவாகும் பகுதி முத்துப்பேட்டை என தெரிந்தும் முஸ்லிம்களுக்கு இன்று பெருநாள் என்றும் தெரிந்தும் காவல்துறையினர் அனுமதி அளித்தது தவறு அதுமட்டுமில்லாமல் பெருநாள் தொழுகை முடிந்து வந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது கடும் கண்டனத்திற்குறியது .உடனடியாக முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்ட காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அப்துர் ரஹ்மான் எம்.பி பேசினார் .அதற்கு அந்த அதிகாரி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் முஸ்லிம்களை அமைதிகாக்க சொல்லுங்கள் என திருச்சி கோட்ட காவல்துறை உயர் அதிகாரி அப்துர் ரஹ்மான் எம்.பியிடம் கேட்டுக்கொண்டார் .

தகவல்: லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)