முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டையில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது..!
முத்துப்பேட்டை, ஜூன் 02 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக கலை இலக்கிய நிகழ்வு விடிய விடிய நடைபெற்றது. முன்னதாக மண்ணை சாலை ரயில்வே கேட்டிலிருந்து மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இச்சங்கத்தின் நிர்வாகி டாக்டர். கே. இளங்கோ தலைமை வகித்தார். இச்சங்கத்தின் ஒன்றிய செயலாளர் திரு.கே.வி.ராஜேந்திரன், சி.பி.எம்.நகர செயலாளர் ஏ. காளிமுத்து, சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் முருகையன், துணைச் செயாளர் ஆர்.எஸ்.ராமநாதன், காங்.பிரமுகர் நா.ஜீவானந்தம், உள்பட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். அப்போது ஊர்வலமாக குமரன் பஜார், பழைய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக ஆசாத் நகர் பழைய பேருந்து நிலையம் சென்று விழா மேடையை அடைந்தனர்.மேலும் இதில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் தஞ்சை ஜான் பீட்டரின் தப்பாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் ஆகியதும் நடைபெற்றது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

AKLT.அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நடத்திய வினா,விடையும், வெற்றி பெற்றவர்களின் விபரமும்..


முத்துப்பேட்டை, ஜூன் 02 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய மாபெரும் வினா விடை போட்டி மிக சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் அதிகமான வாசகர்கள் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக பதிலளித்தனர். மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்ட முதல் மூன்று பரிசை பெற்ற வாசகர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்படும். மேலும் இதில் கலந்து கொண்டு அனைத்து வாசகர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் தங்களுடைய வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வெற்றி பெற்றவர்களின் விபரம்:

முதல் பரிசு பெற்றவர் J.லாமிய அவர்கள் புதிய காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 26 பதில்.சரியானவை

இரண்டாவது பரிசு பெற்றவர் ம.கபீர் அவர்கள் தெற்கு தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 24 பதில்.சரியானவை

மூன்றாவது பரிசு பெற்றவர் ஆ.நே. ஹாஜா நஜுபுதீன் அவர்கள் புதுத் தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 18 பதில் சரியானவை
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

பெற்றோல் விலையை கண்டித்து திருவாரூரில் SDPI நடத்திய மாபெறம் ஆர்பாட்டம்...

திருவாரூர், ஜூன் 02 : SDPI திருவாரூர் மாவட்டம் சார்பாக பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு 01 /06 /2012 அன்று மாலை 4 .30 மணிக்கு நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுசா அவர்கள் தலமை தங்கினார் , மாவட்ட தொழிற்சங்க தலைவர் அப்துல் கரீம் , மாவட்ட பொருளாளர் நைனா முஹம்மது, நன்னிலம் தொகுதி கமிட்டி உறுப்பினர் அப்துல் ஹமித், ஆகியோர் கலந்து கொண்டனர் . .மாநில செயற்குழு உறுப்பினர் A .அபூபக்கர் சித்திக் அவர்கள் சிறப்புரை ஆற்றினர் .மாவட்ட செயலாளர் N .m .பாவா பக்ருதீன் கண்டன உரை ஆற்றினார் .ஷேக் முஹைதீன் நகர செயற்குழு கண்டன கோஷம் ஆற்றினார் .இறுதியாக மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் A . முஹம்மது பைசல் அவர்கள் நன்றி உரை ஆற்றினார் இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அணைத்து கிளை நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் .இதில் நூற்றுகணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்

தொகுப்பு

AKL .அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)