
இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் Aachi இல் கி.பி. 1857 வரை முஸ்லிம் சமுதாயக் கட்டமைப்பை வடிவமைக்கின்ற நிறுவனமாக மதரசாக்கள் திகழ்ந்தன. இறுதி இறை தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை இல் இறை இல்லமும் மதரசவும் ஒருங்கே அமையப் பெற்று முஸ்லிம்களின் ஈருலக வாழ்வியல் தொடர்பான அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டுதல் அங்கேதான் வழங்கப்பட்டன. உலகம் அழிக்கப்படுகின்ற காலம் வரை வாழப் போகும் முஸ்லிம் சமுதாயம் கல்வியை எப்படி பெறவேண்டும் என்று முஹம்மத்...