
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்ய வில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.
இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமானதால் பொது மக்கள் மழை பெய்யாதா என ஏங்கி கொண்டு இருந்தனர். விவசாயிகளும் மழை பெய்தால் பயிர்கள் புத்துயிர் பெறும் என்று மழையை எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை மேகம் கூடி விட்டு மழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது. ஆனால் இன்று காலை யாரும் எதிர்பார்க்காத நிலையில்...