முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றம் : வியாபாரிகள் உண்ணாவிரத முயற்சி...





முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 26: முத்துப்பேட்டையில் உள்ள பழைய பேருந்து நிலையம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிக்கபட்ட கடைகள் 100க்கும் மேற்பட்ட பேரூராட்சி அனுமதித்த ஆக்கிரமிப்பு கடைகள் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள பேரூராட்சி அனுமதியுடன் செயல்படும் பத்து கடைக ளை அப்புறபடுத்த பேரூராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. வியாபாரிகள் மறுத்து பதில் நோட்டீஸ் அனுப்பினர். சென்ற வாரம் பேரூராட்சி நிர்வாகம் அந்த கடைகளுக்கு இறுதி நோட்டீஸ் அனுப்பியது. மீண்டும் வியாபாரிகள் பதில் மனு கொடுத்தனர்.
 இந்த நிலையில் பேரூராட்சி தலைவர் அருணாச்சலம் வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் கடைகள் அரசு மருத்துவ மனைக்கு இடையூறாக இருப்பதாகவும் அதில் மருத்துவமனை நுழைவுவாசல் பகுதியில் உள்ள கடைகள் மட்டும் அப்புறப்படுத்தினால் போதும் என்று பேரூராட்சி நிர்வாகம் கூறியது. அதற்கு வியாபாரிகள் சம்மதம்  தெரிவித்து இருந்த நிலையில் நேற்று அதிரடியாகக் காவல் துறை உதவியுடன் அகற்றப்போவதாக நேற்று முன்தினம் வியாபாரிகளுக்கு தெரிந்தது. உடன் வியாபாரிகள் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ரசூல்பீவி தலைமையில் பேரூராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்தனர்.
 இதற்கு முத்துப்பேட்டை காவல் துறை உண்ணா விரதத்திற்கு அனுமதி மறுத்து, மீறி செய்தால் கைது செய்வோம் என்று ரசூல்பீவி வீட்டில் காவல் துறை நோட்டீஸ் ஒட்டியது. இதனால் வியாபாரிகள் மத்தியில் பெறும் பரபரப்பானது. இந்த நிலையில் நேற்று காலை அதிரடியாக பத்து கடைகளை அகற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன. சம்பவ இடத்திற்கு வட்டாட்சியர் ராஜகோபால் ,முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேலு தலைமையில் போலீசார் பேரூராட்சி செயல் அலுவலர் இப்ராகீம் வருவாய் ஆய்வாளர் ராம சந்திரன்  உட்பட அதிகாரிகள் வந்தனர்.
இதனை கண்ட பாதிக்கப்பட்ட வியாபாரிகள் மார்க்கிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி  செயலாளர் காளிமுத்து மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முகம்மது மாலிக் ஆகியோரின்  தலைமையில் வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தனர். உடன் அவர்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் இப்ராகீம் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு புதிய பேருந்து நிலையம் பகுதியில் கடைகள் உடன் அமைத்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

அதன் பிறகு பத்து கடைகளும் அகற்றப்பட்டு அதனை புதிய பேருந்து நிலையத்தில் பேரூராட்சி பணியா ளர்கள் வைக்கும் பொழுது அங்கு இயங்கி வரும் ஆட்டோ சங்கம் வேன் சங்கம் , எதிர்ப்பு தெரிவித் ததால் பெறும் பரபரப்பு ஆனது. உடன் தாசில்தார் ராஜகோபால்  சமரசம் பேசி கடைகள் வைக்கப்பட்டன. இச்சம்பவத்தால் முத்துப்பேட்டை நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் காலை முதல் மாலை வரை பெறும் பரபரப்பாக காணப்பட்டன.
                  
நன்றி - செம்பருத்தி 

முத்துப்பேட்டை அலையாத்திகாட்டை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும், அன்னை கல்லூரி மாணவர்கள் கோரிக்கை..


முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 26: முத்துப்பேட்டை லகூன் தீவு பகுதியில் அமைந்து உள்ள அலையாத்தி காடு 12 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பசுமை நிறைந்து அமைந்துள்ளது. உலக நாடே வியக்கும் அளவுக்கு இயற்கை அழகு படைத்த இந்த அற்புத காட்டை காண ஏராளமான மக்கள் தினந்தோறும் வருவது இப்பகுதிக்கு பெருமையை சேர்ந்துள்ளது. இந்த காட்டில் பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்து இதனின் பெருமையை உணர்த்தி வருகிறார்கள். இந்த நிலையில் கும்பகோணம் கோவிலாச்சேரியில் உள்ள அன்னைக் கல்லூரியின் மாணவ, மானவில்கள் சுமார் 80 பேர் இந்த அலையாத்தி கட்டுக்கு வந்து கட்டை ஆய்வு செய்து கருத்தரங்கு நடத்தினர்.  


நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கல்லூரி முதல்வர் ஹிமாயூன் பேசுகையில்: இந்த முத்துபேட்டை அலையாத்தி கட்டின் சிறப்பை பற்றி ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நமது கல்லூரி வருடாவருடம் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து செய்து வருறது. 1500 கிலோ மீட்டர் கடல் அலையை இந்த அலையாத்தி வேர் தாங்கி கொடுத்து 1 கிலோ மீட்டராக திருப்பி செலுத்தி அதன் வேர் வளைந்து கொடுக்கிற சிறப்பு இந்த அலையத்தி மரத்துக்கு இருப்பதனால்தான் இதற்க்கு இப்படி ஒரு பெயர். இதன் சிறப்பு பல ஆண்டாக வெளியில் தெரியாமல் இருந்தது. சுனாமி வந்த பிறகு தான் இதன் அடையாளம் உலக நாடுகளுக்கே தெரிந்துள்ளது. இந்த அடர்ந்த காட்டுக்கு அரியவகை மருத்துவகுண தாவரங்கள் வெளிநாடுகளிலிருந்து கடல் கடந்து பயணமாக அரியவகை பறவை சங்கமித்து அமர்ந்து இருக்கும் காட்சிகள் நிரந்த பகுதி. இதனை மத்திய மாநில அரசு பாதுகாக்க வேண்டும் என்றார். 


கல்லூரி பேராசிரியை சங்கீதா பேசுகையில்: தமிழ் நாட்டில் இப்படி ஒரு இடம் இருப்பது இங்கு வந்த பிறகுதான்  தெரிந்து கொண்டேன் என்றும், இங்கு உள்ள மீனவர்களை சந்தித்து கேட்கும்போது ஒவ்வொரு மீனவர்களும் இந்த காடுகளில் பாதுகாப்பாளராக இருக்கிறார்கள். இந்த காடு உலக அதிசயங்களின் ஒன்பதாவதாக நான் கருதுகிறேன் என்று அவர் தெரிவித்தார். 


மாணவி ராஜலெட்சுமி பேசுகையில்: எனது முதல் பயணம் இந்த லகூன் ஆகும், அதுவும் எனக்கு பெரிய அனுபவத்தை கத்து கொடுத்ததாக நான் கருதுகிறேன். எனது சகோதரர் துபாயில் கடலுக்கு அடியில் இருக்கும் ஒரு அதிசயத்தை என்னிடம் கூறினார். இந்த அதிசத்தை எனது குடும்பத்தாரிடம் சொல்வேன். பாத்தாயிரம் செலவு செய்து போனாலும் இது போன்ற இடத்தை பார்க்க முடியாது. இவ்வளவு ஈசியாக இந்த அதிசய அலையாத்தி காட்டை பார்க்க வைப்பு தந்த கல்லூரிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். 


மாணவி ஜமுனாராணி பேசுகையில்: தண்ணீர் மீது நின்று டைவ் அடிக்கும் பறவைகளை காண ஆயிரம் கண்கள் வேண்டும் என்றும், இதில் பூநாரை, செங்கல்நாரை, பாம்புதாரா கூல்கிட் போன்ற ஆயிரம் பறவைகளும் சுதந்திரமாக இருக்க ஏற்ற இடம் இதுதான் என்றும், மக்கள் நல்ல சந்தோசமாக இருக்க போதுமான இடம் தான் இது என்றும், அதே சமயத்தில் இப்பகுதியை பாதுகாக்கவும் அக்கறை வேண்டும் என்றும் இவர் தெரிவித்தார். 



இறுதியாக கருத்தரங்கில் காடுகளை மேம்படுத்த வறண்ட பகுதியில் செடிகள் நட்டு வளர்க்க வேண்டும், காடுகள் அழியாமல் பாதுகாக்க வனத்துறை கடுமையான சோதனையில் ஈடுபட வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பாக பயணத்துக்கு அரசு சார்பில் குறைந்த கட்டணத்தில் படகு விட வேண்டும். பறவைகள் வந்துபோக வசதிகள் செய்ய வேண்டும். மத்திய அரசு அதிசயங்கள் நிறைந்த இந்த அலையத்தி காட்டை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன. 


நமது நிருபர்: முஹைதீன் பிச்சை 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)