முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் சுன்னத் ஜமாத்திற்கு மாற்றாக நடைபெற்ற திருமணத்தை தடுத்து நிறுத்திய சுன்னத் ஜமாத்தினர் --சாப்பாட்டு அறைக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு !!!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத் நகரில் மளிகை கடை வைத்து இருப்பவர் அப்துல் வகாப். இவரது மகன் முகம்மது சபியுல்லாவுக்கும,; புதுக்கோட்டை மாவட்டம் பி.ஆர்.பட்டிணம் அபுல்பரக்கத் மகள் சபினா பேகத்திற்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
 

 

 


 திருமணத்தை முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் முறைபடி திருமணமும், அதே பள்ளிவாசலில் சாப்பாடு நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டு திருமண பத்திரிக்கையில் அடிக்கப்பட்டன. அதனால் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசலில் இரண்டு நாட்களாக செய்யப்பட்டன.

 இந்த நிலையில் மணமகன் மற்றும் பெண் வீட்டார் திடீர் என்று தவ்ஹீத் கொள்கை படி திருமணத்தை நடத்த திட்டமிட்டு கருமாரியம்மன் கோவில் அருகே உள்ள மணமகனின் உறவினர் வீட்டில் வைத்து நேற்று காலை 11.30 மணியளவில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் திருமணத்தை நடத்தினர். 

பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் முறைபடி திருமணம் நடத்த தயாராக எதிர்பார்த்து காத்து இருந்த ஜமாத் நிர்வாகிகள், ஊர்காரர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், திருமணத்தை ஜமாத்துக்கு மாறாக தவ்ஹித் கொள்கைப்படி நடத்தியதால் பள்ளிவாசலில் சாப்பிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தனர். 

இதனால் பெரும் பதற்றமானது. உடன் மனமகன் வீட்டாரும், தவ்ஹித் ஜமாத் பிரமுகர்களும் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தொவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் போலீசார் ஆசாத்நகர் பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

இதனால் பிரச்சனை பெரிதாகி ஆத்திரம் அடைந்து சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்ட மதரஸாவை பூட்டுப்போட்டு பூட்டினார்கள். இதனால் மணமகன் உறவினர்கள் தவ்ஹித் ஜமாத் முன்னால் மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். 

இதனால் திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் போக்கு வரத்து தடைப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி தலைமையில் போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு மாப்பிள்ளை தந்தை அப்துல் வகாப் மற்றும் இவரின் தந்தை பக்கிர் ராவுத்தர் ஆகியோர் பள்ளிவாசல் சென்று சுன்னத் ஜமாத் நிர்வாகிகளிடம் நான் செய்தது தவறு மன்னித்து கொள்ளுங்கள்.

 ஜமாத் என்னா முடிவு எடுத்தாலும் கட்டுப்படுகிறேன், வந்தவர்களுக்கு சாப்பாடு வழங்க அனுமதி தாருங்கள் என்று கண்ணீர் விட்டு கேட்டனர். அதனால் சமாதனம் அடைந்த பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், ஜமாத் கூட்டத்தை கூட்டினார்கள். இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும் கலந்துக் கொணடனர்.

 அப்பொழுது பள்ளிவாசலில் நடந்த கூட்டத்தில் போலீசார்கள் மணிகண்டன், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தனது செல் போனில் படம் எடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் இளைஞர்களுக்கும், போலீசுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

பிறகு சமாதானம் செய்யப்பட்டன. அப்பொழுது நடந்த கூட்டத்தில் மாப்பிளை தந்தை பள்ளிவாசலுக்கு, செய்த தவறுக்காக ஒரு லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டன. இதற்கு மாப்பிள்ளை தந்தை அப்துல் வகாப் சம்மதம் தெரிவித்து கையெழுத்து போட்டார். 

அதன் பிறகு திருமணத்துக்கு சாப்பிட வந்த ஆண்கள் மற்றும் பெண்களை சாப்பிடும் மதரஸாவின் பூட்டை திறந்து அனுமதித்தனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் விசாரனை நடத்தினார்கள். 

மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பள்ளிவாசல் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் உதயமானது மறுமலர்ச்சி தமுமுக ----தமுமுக விலிரிந்து பிரிந்து சென்றவர்களின் புதிய முயற்சி !!!
















மறுமலர்ச்சி தமுமுக என்ற புதிய  இஸ்லாமிய அமைப்பின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது .இதில் தமுமுக வின் முன்னாள் மாநில மாணவரணி செயலாளரும் வழக்கறிஞருமான காஞ்சி .ஜைனுலாபிதீன் ,தமுமுக வின் முன்னாள் மாநில துணை தலைவர் கேப்டன் அமீருதீன் ,தமுமுக வின் முன்னாள் மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் பாஷா ,   தமுமுக வின் முன்னாள் மாநில உலமா அணி செயலாளர் யூசுப் எஸ் .பி ,  தமுமுக வின் முன்னாள் தலைமை நிலைய செயலாளர் திருவள்ளூர்  இஸ்மாயீல்,தமுமுக வின் முன்னாள் மாநில மாணவரணி துணை செயலாளர் புளியங்குடி செய்யதலி ,தமுமுக வின் முன்னாள் நெல்லை மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர் .இதில் வெள்ளை கருப்பு வெள்ளை நிறத்திலான மூவர்ண கொடியை மறுமலர்ச்சி தமுமுக வின் அமைப்பாளர் வழக்கறிஞர் காஞ்சி ஜைனுலாபிதீன் அறிமுகம் செய்து வைத்தார் .

பின்னர் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்த வழக்கறிஞர் ஜைனுலாபிதீன் , இரத்தம் சிந்தி உழைத்த தொண்டர்களை தமுமுக தலைமை அவமதிப்பதாக குற்றம் சாட்டினார் .தாம் தொடங்கியுள்ள இந்த இயக்கம் சமூக ஒற்றுமைக்காகவும் ,மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் செயல்பட போவதாகவும்  கூறினார் .மேலும் இந்த அமைப்பிற்கு தமுமுகவின் முன்னாள் துணை தலைவர் விஞ்ஞானி அப்துல் ஜலீல் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் ஜைனுலாபிதீன் தெரிவித்தார் .

தகவல் .ஜே .ஷேக் பரீத் .


பைக்கில் நடமாடும் பல்பொருள் அங்காடி. அசத்தும் வாலிப முதியவர்..

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(62). முதியவரான இவர் சங்கேந்தி கடைத்தெருவில் பேன்ஸி ஸ்டோர் வைத்துள்ளார். ஆனால் கடையில் இருப்பதில்லை. 




தனது மைத்துனர் தேவராஜை கடையில் வைத்துவிட்டு தனது பைக்கில் மினி பல்பொருள் அங்காடி போல் அமைத்துக் கொண்டு தினமும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று அலைந்து பொருட்களை விற்பனை செய்து வரும் இவரிடம் கிடைக்காத பொருட்களே இல்லை. 

குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை வைத்துள்ளார். வேறு ஏதும் மக்களுக்கு தேவைப்பட்டால் போனில் தொடர்புக் கொள்வார். அல்லது இன்று சொன்னால் நாளை நேரடியாக கொடுத்து விடுகிறார். 

வயது 62-ஐ கடந்தாலும் இன்னும் வாலிப பையன் போல் வலம் வரும் பாண்டியனை முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கடைத்தெருவில் மடக்கி விசாரித்ததில் அவர் கூறுகையில் நான் 25 வருடங்களுக்கு மேலாக இந்த தொழில் செய்து வருகிறேன். 

முதலில் சைக்கிளில் சென்று வந்தேன். அதன் பிறகு டிவிஎஸ் 50-ல் அப்புறம் ஸ்கூட்டரில் வந்தேன். இப்பொழுது டிவிஎஸ் விக்டர் வைத்துள்ளேன். தினமும் 200 முதல் 500 வரை எல்லா செலவும் போக கிடைக்கிறது. கடையில் நாள் முழுவதும் உட்கார்ந்தால் கூட இந்த வருமானம் கிடைக்காது. 

அதனால் இப்படி கிளம்பி விடுவேன். இது எனது உடல் ஆரேக்கியத்துக்கும் நல்லதாக உள்ளது. என்னிடம் சமையலுக்குத் தேவையான பருப்பு முதல் காலில் அணியும் செருப்புவரை வைத்துள்ளேன். கடையில் விற்காத பொருட்களை கூட இப்படி கொண்டுவந்து விற்று காசு பார்த்துவிடுவேன் என்ற அவர் தற்பொழுது தேர்தல் சுறுசுறுப்பு இல்லை. 

எனக்கும் தேர்தல் ஆர்வம் கிடையாது என்றார். நடமாடும் இந்த மினி பல்பொருள் அங்காடியை கொண்டுவரும் பாண்டியனை மக்கள் வேடிக்கையுடன் பார்த்து வருகிறார்கள்.

எனது திருமணத்தில் அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள் --H .சிராஜுதீன் BBA அழைப்பு !!




முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ரபிவுல் ஆஹிர் பிறை 05,  அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 06-04-2014 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில்  எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்.

மௌத்து அறிவிப்பு அல்ஹாஜ் "M .A .குலாம் ரசூல் "

புதுத்தெரு மர்ஹும் N. முகம்மது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் M.A ஜக்கரியா, மர்ஹும் M.A சாகுல் ஹமீது ஆகியோரின் சகோதரரும், G. ரோஷன்தீன் அவர்களின் தகப்பனாருமாகிய“அல்ஹாஜ் M.A குலாம் ரசூல்” அவர்கள் நேற்று (28.03.2014) இரவு 11.30 மணியளவில் சிங்கப்பூரில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னாரின் ஜனாசா இன்று (29.03.2014) காலை 11.30 மணியளவில் சிங்கப்பூரில் நல்லடக்கம் செய்யப்படும்.
அறிவிப்பவர்
G. ரோஷன்தீன்

இந்திய தேசிய லீக் கட்சி 6 இடங்களில் தனித்து போட்டி --விடுதலை சிறுத்தை ,மனிதநேய மக்கள் கட்சி ,SDPI ,புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு --தடா ரஹீம் அறிவிப்பு !!

மயிலாடுதுறையில் வேட்பாளராக கலத்தில் உள்ள ம.ம.க. தலைவர் ஹைதர் அலி அவர்களை ஆதரித்தும் !

2)தேனி வேட்பாளர் ஜெ.எம்.ஆரூன் (காங்கிரஸ்) அவர்களை ஆதரித்தும் . 

3)வேலூர் வேட்பாளர் அப்துர் ரஹ்மான் (இ.யூ.மு.லீக்) அவர்களை ஆதரித்தும் ..

4)ராம்நாடு , நெல்லை , வட சென்னை ஆகிய தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ.கட்சி வேட்பாளர்களை ஆதரித்தும் !



முஸ்லீம் வேட்பாளர்கள் நிற்காத இடங்களில் சுமார் 6 தொகுதிகளில் இந்திய தேசிய லீக் கட்சி 
1) மத்திய சென்னை – ஜான் பாஷா பி.ஏ. 
2) திண்டுகல் தொகுதி ---- வழக்கறிஞர் ஜமால்
3) மதுரை - முஹமது அலி (எ) மதுரை அலி
4) திரு
வேட்பாளர் கள் போட்டி இடுகின்றனர் 

வண்ணாமலை --- ரசூல் மைதீன்
5) திருச்சி - அன்வர் பாஷா
6) கள்ளகுருச்சி -------- ஏ.ஷாஜஹான் 



முத்துப்பேட்டையில் நாகை காங்கிரஸ் வேட்பாளருக்கு வரவேற்பு. முக்கிய பிரமுகர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

முத்துப்பேட்டைக்கு நேற்று மாலை நாகை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செந்தில் பாண்டியன் வந்தார். அவருக்கு வட்டார நகர காங்கிரஸ் சார்பில் வட்டார நிர்வாகி காமராஜ், நகர தலைவர் ராஜேந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹாஜா, மாவட்ட முன்னால் பொது செயலாளர் பகுருதீன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையன், சட்ட மன்ற இளைஞர் சாங்கிரஸ் நிர்வாகிகள் முகைதீன், காந்தி நாராயணன், விவசாயி பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சுந்தரராமன், நகர காங்கிரஸ் செயலாளர் ஜெகபர்அலி, நிர்வாகிகள் பேட்டை ராஜு, அஜ்மல் கான், பேட்டை கோபி, மாவட்ட செயற்குழு உருப்பினர் தினகரன் வட்டார காங்கிரஸ் உப்பூர் கோவன்னா, அய்யப்பன், அன்னாதுரை, சாமிநாதன், கண்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். பின்னர் வேட்பாளர் முத்துப்பேட்டை வட்டாரம் முழுவதும் ஒவ்வொறு கிராமத்தின் முக்கிய பிரமகர்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார். 

அதேப் போல் ஜாம்புவானோடை தர்ஹா சென்று அங்கு நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொருப்பாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்பொழுது அவருடன் திருவாரூர் சக்தி, திருத்துறைப்பூண்டி மதியரசு மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

முத்துப்பேட்டையில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்படுமா?

முத்துப்பேட்டை, மார்ச் 24: முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கடைத்தெரு பகுதியில் கடந்த 2 தினங்களாக சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒன்று மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்தரிகிறார். 

சிவப்புக் கலர் டாப்ஸ் கருப்பு பேண்ட் உள்ள சுடிதார் அணிந்திருக்கும் சிறுமி சமீபத்தில்தான் மனநலம் பாதிக்கப்பட்டதுபோல் தெரிகிறது. வெளிமாநில மொழி பேசுவதால் சிறுமி பேசுவது என்ன என்று தெரியவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தின இரவு அப்பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள் மற்றும் சாலையில் செல்லும் காம வெறியர்கள் தங்களது காம பசிக்கு துரத்தியுள்ளனர். 

இதனை கண்ட அப்பகுதி மக்கள் மீட்டு பாதுகாத்துள்ளனர். இதுகுறித்து முத்துப்பேட்டை காவல்நிலைத்திற்கும், வருவாய்த்துறைக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தும் சிறுமியை மீட்டு காப்பகத்திற்கு ஒப்படைக்கவில்லை. இதனால் மீண்டும் சிறுமி அப்பகுதியை சுற்றி வருகிறார். சிறுமியின் பாதுகாப்பு நிலைமை மோசமாகி உள்ளது. இந்த சிறுமியை மீட்டு தக்க நேரத்தில் காப்பகத்தில் சம்மந்தபட்ட அதிகாரிகள் சேர்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

முத்துப்பேட்டையில் ஆப்பிள் வியாபாரியின் பொது நல பார்வை !!

முத்துப்பேட்டை, மார்ச் 24: முத்துப்பேட்டை பகுதி பழக்கடைகளுக்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்த் போன்ற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆப்பிள்கள் விற்பனை செய்யபப்டுகிறது. 

ஒரு கிலோ 150 முதல் 220 வரை விற்கப்படும் ஆப்பிள்கள், விற்பனை கவர்ச்சிக்காக ஆப்பிள் மீது பாலிஸ் கொடுப்பது, தனித்தனியாக உறைகள் மாட்டுவது, ஸ்டிக்கர்கள் ஒட்டி பார்வையாக அமைப்பது போன்ற செயல்களில் ஆப்பிள் மொத்த வியாபாரிகள் செய்து வருகிறார்கள். 

ஆப்பிள் மீது பாலிஸ் கொடுக்கும் மெழுகுகள் உடலுக்கு கெடுதல் என்று உணராமல் மக்கள் ஆப்பிள்களை ஆசையுடன் சென்று அப்படியே கடித்து சாப்பிடுவதும,; சிலர் பெயரளவில் தண்ணீரில் நனைத்துவிட்டு சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு பலவகை கெடுதல்கள் எற்படுவதை உணராமல் மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள். 


சமீபத்தில் நடந்த ஆய்வில் ஆப்பிள் மீது பூசப்பட்டிருக்கும் மெழுகால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும,; பல்வேறு கெடுதல்கள் உடல் நலத்திற்கு ஏற்படுத்துகிறது என்று ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

ஆனாலும் மக்கள் கடைகளில் கிலோ கணக்கில் வாங்கிச் செல்வதால் வேறு எந்தவொரு மாநிலத்திலும் விற்காத அளவிற்கு தமிழகத்தில் அதிக அளவில் விற்பனை ஆகுவதாக மொத்த வியாபாரிகள் கூறுகிறார்கள். இந்த நிலையில் முத்துப்பேட்டை பழைய பஸ்டாண்ட் அருகில் பழக்கடை வைத்திருக்கும் பாலகுமார் என்பவர் கடையில் ஏகப்பட்ட பலவித ரகங்கள் கொண்ட ஆப்பிள்கள் குவிக்கப்பட்டுள்ளது. 



தினமும் அதிக அளவில் ஆப்பிள்களை விற்பனை செய்யும் பாலகுமார் ஒவ்வொரு முறையும் தான் கடையில் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஆப்பிள் மீது பூசப்பட்டுள்ள மெழுகை கத்தியால் சுரண்டி காட்டி அதனை கெடுதலையும் உணர்த்துகிறார். மேலும் ஆப்பிள் சாப்பிடும்பொழுது இப்படி சுரண்டிவிட்டு சாப்பிடனும் என்றும,; அல்லது தோலை அகற்றிவிட்டு சாப்பிடுங்கள் என்று அட்வைஸ் செய்கிறார். 

மக்களின் உடல் நலத்தில் மீது அக்கறை கொண்டு வியாபாரம் செய்யும் பாலகுமார் கடையில் ஆப்பிள் வாங்குவதற்கென மக்;கள் கூட்டமாக காணப்படுகிறார்கள். வாடிக்கையாளர்களும் பாலகுமாரை பாராட்டி செல்கிறார்கள்.

முத்துப்பேட்டையில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் AKS .விஜயன் --பொதுமக்கள் உற்சாக வரவேற்பு !!

முத்துப்பேட்டையில் முக்கிய பிரமுகர்களை நாகை நாடாளுமன்ற தி.மு.க வேட்பாளர் ஏ.கே.எஸ் விஜயன் சந்தித்து வாக்கு சேகரித்தார். முன்னதாக மனித நேய மக்கள் கட்சி அலுவலகம் சென்ற விஜயன் அங்கு நகர தலைவர் நைனா முகம்மது, நகர செயலாளர் வக்கில் தீன்முகம்மது, தமுமுக ஒன்றிய செயலாளர் ஜெகபர் சாதிக், நகர செயலாளர் பைசல், நகர பொருளாளர் தாவூதுஷா, முன்னால் தலைவாகள்; துவான் அப்துல் ரஹ்மான், தாவூது மற்றும் நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார். 



பின்னர் ஆசாத் நகர் ஜும்ஆ பள்ளிக்கு சென்று தொழுகை முடிந்து வந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் பிரிலியண்ட் பள்ளிக்கு சென்று முதல்வர் முகம்மது யாகூபை சந்தித்தார், முஸ்லிம் லிக் அலுவலகம் சென்று மாவட்ட செயலாளர் முகைதீன் அடுமை, நிர்வாகி முகம்மது அலி, கவுன்சிலர் தம்பி மறைக்காயர் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். அப்பொழுது தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக் நகர துணைச் செயலாளர் நவாஸ் கான்,மாவட்ட பிரதிநிதிகள் இபுராஹிம், மகாராஜா தமீம், நிர்வாகிகள் செல்வம், பாலு ஆகியோர் உடன் இருந்தனர். 

முத்துப்பேட்டை அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முரண்பாடான பேச்சால் குழம்பி போன அதிமுக தொண்டர்கள். பரபரப்பு...

முத்தப்பேட்டையில் நேற்று முன்தினம் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஒன்றியச் செயலாளர் நடராஜன் தலைமையில் நடந்தது. அப்பொழுது பேசிய தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய தலைவர் தங்கமுத்து 'நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் டாக்டர்.கோபால் யாரென்று உங்களுக்கு தெரியுமா அவர் இந்த தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வேதையனின் மருமகன்தான் அதனால் நிச்சயம் வெற்றி பெறுவார்' என்று அறிமுகம் செய்து வைத்தார். 

இதனால் பேச்சைக் கேட்ட தொண்டர்கள் 'காங்கிரஸ் கட்சி நமக்கு எதிரணி ஏன் இவர் இந்த நேரத்தில் இப்படி சொல்றார்' என்று தொண்டர்கள் முனுமுனுத்தனர். அடுத்ததாக பேசிய அமைச்சர் காமராஜ் 'ஒன்றியச் செயலாளர் நடராஜன் பேசும்போது அதிக ஓட்டு வாங்கித்தரும் பொறுப்பாளர்களுக்கு ஒரு பவுன் என்றார். 

அதற்கு நான் 2 பவுன் தருகிறேன் என்றேன். இது தேர்தல் விதிமுறைக்கு ஒத்துவராது என்பதால் ஒன்றியச் செயலாளர் அந்த பவுனை வழங்குவார்' என்றார். மீண்டும் தொண்டர்கள் 'எப்படியெல்லாம் அமைச்சர் தப்பிக்க பாரக்கிறார் பார் இதை தேர்தல் அதிகாரிகள் கண்காணிக்காமலா இருக்கிறார்கள்' என்று பேசிக் கொண்டனர். 

அடுத்ததாக பேசிய வேட்பாளர் கோபால் 'அமைச்சர் எனது வெற்றிக்காக அயராது பாடுபடுகிறார். இரண்டு தினங்களுக்கு முன் நன்னிலம் ஜமாத் பிரமுகர் பிரமுகர்களிடம் வாக்கு சேகரிக்க சென்றபோது அவர்கள் அரசு மருத்துவமனையில் இரவில் டாக்டர்கள் இல்லை என்று கோரிக்கை விடுத்தனர். உடன் அமைச்சர் சுகாதாரத்துறை அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு இரவில் டாக்டரை உடன் நியமனம் செய்ய உத்தரவிட்டார். 

உடன் சுகாதாரத்துறை டாக்டர் ஒருவரை நியமனம் செய்தது அவர் என்று பொறுப்பையும் எடுத்துக் கொண்டார்' என்றார். தேர்தல் விதிமுறையை மீறி பேசிய வேட்பாளரின் இந்த தவலை கூட்டத்தை கண்காணிக்க வந்த தேர்தல் அலுவலர்கள் பதிவு செய்து கொண்டனர். இப்படி கூட்டத்தில் தலைவர்கள் பெரும் குழப்பத்துடன் பேசிய தலைவர்களால் அதிமுக தொண்டர்கள் பலரும் எரிச்சலடைந்து குழப்பத்தில காணப்பட்டனர். 

முத்துப்பேட்டை தெற்கு தெரு கோரையாற்றில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு !!






முத்துப்பேட்டை, மார்ச் 24: முத்துப்பேட்டை தெற்குத் தெரு அரபுசாகிப் பள்ளிவாசல் அருகில் உள்ள கோரையாறு வாய்க்காலில் நேற்று காலை பிணம் ஒன்று மிதப்பதாக அப்பகுதிக்கு காலை கடன் முடிக்கச் சென்ற ஒருசிலர் பார்த்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி இன்ஸ்பெக்டர் சண்முகவேல் சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், பெர்னான்டஸ், ராமலிங்கம் கிராம நிர்வாக அலுவலர் சிங்காரவேலு மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உதவியோடு பிணம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவந்தனர். 

அப்பொழுது நடத்திய விசாரணையில் முத்துப்பேட்டை சின்னக்கட்சி மரைக்காயர் தெருவைச் சேரந்த கமால் என்பவரது மகன் அன்சாரி என்கிற ஷேக் அப்துல்லா(27) என்று தெரிய வந்தது. ஷேக் அப்துல்லா நேற்று அதிகாலை காலைக்கடன் முடிப்பதற்காக கோரையாற்றுக்கு வந்து பிறகு கால் அலசுவதற்காக வாய்க்காலுக்குள் இறங்கியதில் தவறி விழுந்து பலியானது தெரியவந்தது. மேலும் ஷேக் அப்துல்லாவுக்கு நரம்பு தளர்ச்சி மற்றும் உடல் நடுக்கம் அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது. முத்துப்பேட்டை போலிசார் ஷேக் அப்துல்லா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

எனது திருமணத்தில் அனைத்து நண்பர்களும் கலந்துகொள்ளுங்கள் ---- முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள ஆசிரியர் A .முஹம்மது இலியாஸ் MBA .அழைப்பு !!!!


https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/1001120_653224951367944_1534064672_n.jpg




முத்துப்பேட்டை, மார்ச் 10: முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 ஜமாத்துல் அவ்வல்  பிறை 14,  அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 16-03-2014 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம் முத்துப்பேட்டை முஹைதீன்  பள்ளிவாசல்  மதரசாவில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

இப்படிக்கு:  A. முஹம்மது இலியாஸ். MBA.,MA. (Journalism & Mass Communication) 

மேலும் தொடர்புக்கு:


A. முஹம்மது இலியாஸ்


துபாய் தொடர்புக்கு: 00971 - 55 786 5516.

இந்தியா தொடர்புக்கு: 0091 - 98426 81426.  

முத்துப்பேட்டையில் பள்ளியின் முன்பு வாகனங்களை நிறுத்தாமல் இருக்க தலைமையாசிரியர் அதிரடி விளம்பர போர்டு.



முத்துப்பேட்டை, மார்ச் 10: பழைய பேருந்து நிலையத்தில் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதன் அருகே காவல் நிலையம,; அரசு மருத்துவமனை, ரிஜிஸ்டர் ஆபிஸ் போன்றவைகள்  இருப்பதால் அலுவலகங்களுக்கு வருபவர்களும், மற்றும் அப்பகுதிக்கு பொருட்கள் வாங்க வருபவர்களும் தங்களது வானங்களை பள்ளியின் முன்பு நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இது மாணவ மாணவிகளுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் இடையூறாக தொடர்ந்து இருந்து வந்தன. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் பலமுறை சம்பந்தப்பட்டவர்களை தடுத்தும் பயனில்லை. காவல் நிலையத்தில் புகார் கூறியும் யாரும் தங்களது பழக்கங்களை மாற்றிக் கொள்ளவில்லை. வெறுத்துப்போன பள்ளி தலைமையசிரியர் ராமலிங்கம் நீங்கள் மிகவும் நல்லவர். பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு இரைடயூறாக தயவு செய்து இங்கே வாகனங்களை நிறுத்தாதீர் என்று ஒரு விளம்பர போர்டை பள்ளி முகப்பு கேட்டில் மாட்டி உள்ளார். அதன் பிறகு வாகனங்கள் நிறுத்துபவர்கள் இந்த பக்கம் வருவதில்லை. தினமும் பள்ளி திறக்கும் நேரத்தில் அந்த விளம்பர போர்டை மாட்டி விடுவதும் பிறகு பள்ளி நேரம் முடிந்ததும் எடுத்து பள்ளிக்குள் வைத்துக் கொள்ளும் நடைமுறையை பள்ளி நிர்வாகம் செய்து வருகிறது. 

FLASH NEWS :மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலி : இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் முத்துப்பேட்டை அப்துல் ரஹ்மான் :

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தங்களது வேட்பாளர் பெயர்களை அறிவித்துள்ளது  .



திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் விடுதலைசிறுத்தை கட்சிக்கு 2 தொகுதிகளும் ,புதிய தமிழகம்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ,மற்றும் மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன .



ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்ற சிதம்பரம் தொகுதியில்  விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் தலைவர் திருமாவளவனும் ,தென்காசி தொகுதில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியும் போட்டியிட உள்ளனர் .



இந்நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும்  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி, தங்களின் வேட்பாளரின் பெயர்களை இன்று அறிவித்தது .



அதன்படி, ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற அப்துல் ரஹ்மான்  வேலூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் KM .காதர் மொஹைதீன் சென்னையில் இன்று அறிவித்தார் .



அதேபோல் ,மனித நேயமக்கள் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் ,அக்கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி போட்டியிட உள்ளதாக ,அக்கட்சியின் தலைவர் ஜே .எஸ் .ரிபாயி சென்னையில் இன்று அறிவித்தார் .






முத்துப்பேட்டை சாலை ஓரத்தில் ஆண் உடல் ! விபத்தா ? அல்லது அடித்து கொலையா ? போலீசார் விசாரனை !

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலை, படித்துறை அருகே சாலை ஓர வாய்க்காலில் ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். 

உடன் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப-;இன்ஸ்பெக்டர் சாமிநாதன், வருவாய் ஆய்வாளர் ராமசந்திரன், வி.ஏ.ஓ ஆகியோர் உடலை பார்வையிட்டு விசாரனை நடத்தினர்.
 அப்பொழுது கருப்பு சட்டை கைலி அணிந்து கிடந்த உடல் அருகே சால்வையும் அவரது செல் போனும் கிடந்ததை வைத்து விசாரித்ததில் அவர் வேதாரன்யம் தாலுக்கா, தென்னடார் நடுக்காடு, கிராமத்தை சேர்ந்த செவந்தான் மகன் சுப்பிரமணியன்(43) என்று தெரிந்தது. 


சுப்பிரமணியன் ஆலங்காடு பகுதியில் ஒரு துக்க வீட்டுக்கு நேற்று முன்தினம் வந்ததாக கூறப்படுகிறது. துக்க வீட்டிற்கு சென்று விட்டு சாலையை கடக்க முயன்றபோது அடயாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தாரா? அல்லது யாரும் அடித்து கொன்று விட்டார்களா ? என்ற பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. போலீசார் உடலை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரனை மேற்கொண்டு உள்ளனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)