முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டை 13 வது வார்டு SDPI யின் புதிய கிளை சார்பாக கொடி ஏற்றப்பட்டது.முத்துப்பேட்டை,ஆகஸ்ட் 30: முத்துப்பேட்டை புதிய கிளை SDPI கட்சியின் சார்பில் நேற்று கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A.அபூபக்கர் சித்திக் அவர்கள் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் M.தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட பொருளாளர் நெய்னா முஹம்மது, மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கிளை பொருப்புத் தலைவர் தேனா,சீனா.ஜெஹபர் அலி 13 வது வார்டில் நடக்கக்கூடிய பிரச்சனைக் குறித்து மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A.அபூபக்கர் சித்திக் அவர்களிடம் மனு ஒன்றை கொடுத்தார். இதில் நகரத் தலைவர். நிசார் அஹமது மற்றும் 50 க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

M.கபீர்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)