முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


துபாயில் ரூம் இன்சார்ஜுகள் எப்படி இருப்பார்கள் ?ஒரு சுவாரஸ்யமான தகவல்கள் :

துபாயில் ரூம் இன்ச்சார்ஜிகள் எப்படி இருப்பார்கள் என்று துபாய் வாழ் நண்பர்கள் நன்கு அறிந்து இருப்பார்கள் அறியாதவர்களுக்கு அது பற்றிய சில சுவாரசியமான ஒரு பதிவு
துபாயில் ரூம் இன்ஜார்ஜிகள் :-
1.அடுத்தவன் பணத்தில் ரூம் வாடகை கழிப்பார்கள்
2.ரூம்பில் அவர் படுக்கும் போது மட்டும் ஏசி எப்போதும் ஆன் செய்து இருக்கும்
3.ரூம்பில் உள்ள சின்ன சின்ன வேலைகளை மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பார் அவர் ஒரு வேலையும் செய்ய மாட்டார்
3.ரூம்பில் முக்கிய இடத்தில் அவருக்கு படுக்கையே வசதியாக அமைத்து கொள்ளுவார்
4.எப்போதும் டிவி ரிமோட்டை அவர் மட்டும் தான் வைத்து இருப்பார் . அவர் விரும்பும் நிகழ்ச்சிகளை தான் மற்றவர்களும் பார்க்க வேண்டும்
5.அவர் படுக்கும் போது மட்டும் FAN அதிகபடுத்தி இருப்பார்
6.அனைவரின் பணத்தில் ஓசி சாப்பாடு சாப்பிட்டு கொண்டு அவர் விரும்பும் சமையல் மட்டும் செய்ய சொல்லுவார்
7.தண்ணீர் கேன் அவருடைய பக்கத்திலேயே வைத்து இருப்பார்
8.அனைவரும் அவர்களுடைய துணிகளை ஆண்கரில் மாட்ட தக்காளி அவர் மட்டும் தனி பிரோ வைத்து இருப்பார்
இப்படி மோசமான ரூம் இஞ்சார்ஜிகளும் இருக்கிறார்கள் துபாயில் …
இப்படி உள்ள நண்பர்கள் இதை படிக்க நேர்ந்தால் தயவு செய்து உங்களுடைய நடவடிக்கையை மாற்றி கொள்ளுங்கள், யாரும் யாருக்கும் எங்கும் எப்போது அடிமை இல்லை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)