முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


பூஜையில் பெண்ணுடன் சாமியார் உல்லாசம்: டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பானதால் ஓட்டம்

பெங்களூர், ஏப்.29-

வாஸ்து நிபுணர் மற்றும் ஜோசியக்காரர் என்று தன்னை தானே விளம்பரப்படுத்திக்கொண்ட சாமியாரான தேவி ஸ்ரீ ராமசாமி என்பவர் கர்நாடகாவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது ஆசிரமத்தில் பூஜையின் போது பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சி கன்னட டி.வி. சேனல்களில் நேற்று அதிரடியாக ஒளிபரப்பானது. 

பூஜையில் பெண்ணுடன் சாமியார் உல்லாசம்: டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பானதால் ஓட்டம்
இந்த வீடியோ டி.வி.யில் ஓட ஆரம்பித்தவுடன் சாமியாரின் ஓட்டமும் ஆரம்பமானது. டி.வி.யில் வீடியோ ஒளிபரப்பான தகவல் கிடைத்தவுடன் சாமியாரின் டிரைவர் அவரை காப்பாற்றி காரில் ஏற்றிச்சென்றுவிட்டார். அந்த ஆசிரமத்தில் சீடனாக இருக்கும் வசந்த் என்பவரும், ஆசிரமத்தின் ஊழியரான உதயா என்பவரும் சாமியாரின் லீலைகளை பார்த்து வெறுப்புற்று அவரை கையும் களவுமாக பிடிக்க அவருக்கு தெரியாமலேயே இந்த வீடியோவை எடுத்துள்ளனர். 

பின்னர் இந்த வீடியோவை அவர்கள் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கொடுத்துள்ளனர். இதை அந்த தொலைக்காட்சி ஒளிபரப்பியவுடன் சாமியாரின் தீவிரமான சீடர்கள் கடும் கோபத்துடன் ஆசிரமத்தை அடித்து நொறுக்கினர். காரில் தப்பிய சாமியார் தற்போது தமிழகத்தில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவருடன் இருக்கும் பெண் யாரென்று இதுவரை தெரியவில்லை.

அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!!

கோலாலம்பூர் ( மலேசியா ) : சென்னை பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழக வேந்தரும், புஹாரியா ஹோல்டிங்ஸ் தலைவரும், துபை ஈடிஏ அஸ்கான் குழும எக்ஸ்கியூடிவ் உதவி தலைவர் மற்றும் சீதக்காதி அறக்கட்டளை தலைவருமாகிய அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புத்ராஜெயா சர்வதேச கன்வென்ஷன் செண்டரில் 25.04.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக தலைமைப் பண்பிற்கான விருது 2014 வழங்கும் விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவ்விருது தி லீடர்ஸ் சர்வதேச வர்த்தக இதழ், அமெரிக்கன் லீடர்சிப் டெவலப்மெண்ட் அமைப்புடன் இணைந்து ஆண்டு தோறும் உலகெங்கிலும் வர்த்தகம், ஊடகம், அரசுத்துறை, சமூகசேவை, சுற்றுலா, தொலைத்தொடர்பு, கட்டுமானத்துறை, போக்குவரத்து உள்ளிட்ட 25 துறைகளில் சிறந்து விளங்கும் தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்விருது உலகெங்கிலும் தலைசிறநத நடுவர்களைக் கொண்டு தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட விருதினை அவரது மகனும், புஹாரியா ஹோல்டிங்ஸ் இயக்குநருமான அஹமது புஹாரி ரஹ்மான் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி சமுதாயம் கல்வியில் முன்னேற முக்கியக் காரணமாக இருந்து வருபவர். இதன் காரணமாக கல்வி வள்ளல் என அழைக்கப்படுகிறார். தமிழகத்திலும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பள்ளிவாசல் நிர்மாணத்திற்கும், கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படுவதற்கும் பல்வேறு உதவிகளை செய்து வருபவர்.
துபை ஈடிஏ அஸ்கான் நிறுவனத்தை ஏற்படுத்தி அதன் மூலம் 75,000 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் மேம்பாட்டுக்கு காரணமாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

முத்துப்பேட்டை தர்ஹா பாக்கர் அலியுடன் மறுமலர்ச்சி தமுமுக நிர்வாகிகள் சந்திப்பு !!


தஞ்சைமாவட்டம் மல்லிபட்டினத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  திட்டமிட்டே கலவர நோக்கோடு  அனுமதியின்றி இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிக்குள் பிரச்சாரம் செய்ய முயற்சித்தனர் . 

அப்போது நான் வெற்றி பெற்றால் தஞ்சை மாவட்டத்தை குஜராத்தாக மாற்றுவேன் என்று அத்தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள பாஜக வேட்பாளார் பிரச்சாரம் செய்துள்ளார் .

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் இப்பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு , பல ஆண்டுகாலமாக இந்துக்களும் முஸ்லீம்களும் அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மச்சான்கள் ஆகவும் வாழ்ந்து வருகிறோம் என கூறி  உள்ளே சென்று பிரச்சாரம் செய்ய அனுமதி மறுத்தனர் .

இதனால் ஆத்திரமடைந்த பாஜக வினர் அப்பகுதி மக்கள் மீது கற்களை வீசியும்   தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியுள்ளனர் .மேலும் அங்கு நிறுத்தப்படிருந்த கார்களை அடித்து நொறுக்கியும் ,பெட்ரோல் பங்க் மீது தாக்குதல் நடத்தியும் ,மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகளை கொளுத்தியும் வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர் .

மதநல்லிணக்க பூமியாக திகழ்ந்து வந்த மல்லிபட்டினம் ,பாஜகவின் வன்முறை வெறியாட்டத்தால் கலவர பூமியாக மாறியது .இதனை தொடர்ந்து முஸ்லீம்கள் தரப்பில் அப்பாவி இஸ்லாமியர்கள் 24 பேரையும் பாஜக வின் தரப்பில் 14 பேரையும் காவல்துறை கைது செய்தனர் .

இதுதொடர்பாக விசாரிப்பதர்காகவும் சட்ட ரீதியிலான உதவிகளை மேற்கொள்வதற்காகவும் மறுமலர்ச்சி தமுமுக நிர்வாகிகளான வழக்கறிஞர் ஜெயனுலாபிதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கடந்த 21 ஆம் தேதி மல்லிபட்டினத்திற்கு வருகை தந்தனர் .

பின்னர்  முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் பத்திரிக்கையாளரை சந்தித்த மறுமலர்ச்சி தமுமுகவினர் மல்லிபட்டினத்தில் நடைபெற்ற வகுப்பு கலவரத்தில் பாஜகவினர் சட்டம் ஒழுங்கை மீறியதாக குற்றம் சாட்டினார் .
இதனை தொடர்ந்து ஜாம்புவோனோடை சென்ற அவர்கள் பாக்கர் அலியுடன் சந்தித்து முத்துப்பேட்டை நிலவரம் குறித்து விவாதித்தனர் .

தகவல் :ஜே :ஷேக்பரீத் 

மல்லிப்பட்டினம் கலவரத்தின் புதிய வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை. மறுமலர்ச்சி த.மு.மு.க அமைப்பாளர் குற்றச்சாட்டு.முத்துப்பேட்டை, ஏப்ரல் 21: முத்துப்பேட்டைக்கு நேற்று மல்லிப்பட்டினம் கலவர பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு வந்த மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆப்தீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் கடந்த 14 –ம் தேதி அன்று தேர்தல் பிரச்சாரம் என்ற பேரில் பா.ஜ.க வன்முறையில் ஈடுப்பட்டது. இது குறித்து மறுநாள் 15-ம் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பிரவிண் குமாரை சந்தித்து முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளதையும், அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி இதற்கு காரணமான பா.ஜ.க வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும், அவரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தோம். 

மறுநாள் 16-ம் தேதி காவல் துறை தலைவர் அனூஸ் மிஸ்ராவை சந்தித்தும் மனு கொடுத்தோம். நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் வேலும் பல உன்மைகளை கண்டறிய இன்று(20-ம் தேதி) மல்லிப்பட்டினம் சென்று கலவர பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அங்கு முஸ்லிம்களின் பெட்ரோல் பங்கு, மீன்பிடி போட்டுகள், வழிப்பாட்டு தலங்கள் மற்றும் ஏகப்பட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் சேதமாகி உள்ளன. இதில் 1.5 கோடிக்கு மேல் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளன. 

அதற்காக அரசு இதுநாள் வரை எந்த வித ஒரு ரூபாய் கூட நிவாரனம் வழங்கப்படவில்லை, உயர் அதிகாரிகளும் கலவர பகுதியை பார்வையிட வில்லை, ஒரு வார காலமாகியும் எந்தவித முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை, முஸ்லிம்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இதுநாள் வரை நீதி கிடைக்கவில்லை, பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை இன்று வரை குற்றவாளிகளை தேடுகிறோம் என்ற பேரில் காவல் துறை துன்புறுத்தி வருகிறது, அவர்களுக்கு உரிய நியாயம் வேண்டும், உரிய நிவாரனமும் வேண்டும். இது குறித்து நாளை 21-ம் தேதி(இன்று) சென்னையில் டி.ஜி.பியை சந்தித்து புகார் கொடுக்க இருக்கிறோம்.

 மேலும் அவரிடம் எங்களுக்கு கிடைத்த கலவரம் தொடர்பான புதிய வீடியோ ஆதாரங்களையும், காவல் துறை துணையோடு நடந்த வண்முறை ஆட்டங்கள் குறித்த முக்கிய தகவல்களையும் கொடுக்க இருக்கிறோம். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 30 பேர்களில் 22 பேர் அப்பாவி முஸ்லிம்கள் அவர்களை நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட விடுதலை செய்ய வேண்டும், தமிழக அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும், சட்டரீதியான நடவடிக்கையில் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், அப்படி தவறும் பட்சத்தில் தலைமை செயலகத்தையும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முஸ்லிம் அமைப்புகளை ஒன்று திரட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம், தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வயிலாக எதிர்ப்பை காட்டுவோம். இவ்வாறு ஜெய்னுல் ஆப்தீன் கூறினார். பேட்டியின் போது மாநில ஒருங்கினைப்பாளர்கள் பாட்சா, காரைக்கால் யூசுப், முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகி  முஹம்மது இலியாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.


நமது நிருபர் 

AKL. அப்துல் ரஹ்மான்...

அ.இ.ஆ.தி.மு.க. சார்பில் முத்துப்பேட்டை நகருக்கு வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் நடிகர்...

முத்துப்பேட்டை, ஏப்ரல் 13: முத்துப்பேட்டையில் இன்று சரியாக 8 மணியளவில் அ.இ.ஆ.தி.மு.க. சார்பில் முத்துப்பேட்டை நகருக்கு வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் நடிகர் ஆனந்தராஜ் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  இதில் பேரூராட்சி தலைவர் கோ.அருணாச்சலம், மற்றும் முத்துப்பேட்டை ஒன்றிய தலைவர் RKP நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர். இதானால் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தாமதமானது. இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நமது நிருபர் 

AKL. அப்துல் ரஹ்மான்


முத்துப்பேட்டையில் இயங்கி வரும் அல் மதரஸத்துல் இலாஹியா மதரஸாவில் அட்மிஷன் தொடங்கியது..முத்துப்பேட்டை, ஏப்ரல் 13: முத்துப்பேட்டையில் கடந்த 1 வருடமாக அல் மதரஸத்துல் இலாஹியா இயங்கி வருகிறது. இதில் சுமார் 6 - 9 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் சுமார் 10 பேர் பயின்று வருகின்றனர்.  

இங்கு குர்ஆன் முழுவதையும் மனனம் செய்யும் பாடத்திட்டம் போதிக்கப்படுகின்றன.  இதற்கான தலை சிறந்த உலமாவை கொண்டு மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவு, உடை, தங்கும் இடம் ஆகியவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. 

இதுகுறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு பேட்டியளித்த அல் மதினா டிரஸ்ட் தலைவர் J. பெரோஸ்கான் கூறியதாவது,  இதில் பயில கூடிய மாணவர்கள் அனைவருக்கும் பாட திட்டம் மற்றும் தங்கும் இடம் மற்றும் உணவு உடை ஆகியவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என்றும், 

மேலும் இது தொடர்பாக வெளி நாடுகளில் இருக்கக்கூடிய சகோதரர்கள் இந்த மதரசாவிற்கு பொருளாதார உதவி வழங்க முன்வர வேண்டும் என்றும், மேலும் இந்த மதரஸாவை குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கலாம் என்றும் இதன் மூலம் தெருவித்துக்கொள்கிறேன் என்றும், அவர் தெருவித்தார்.

மேலும் முத்துப்பேட்டை தாஃவா சென்டர்  பெயரில் மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை தூய்மையான வடிவில் எடுத்துரைத்து அதில் இதுவரைக்கும் 8 மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தின் பக்கம் தங்களை இணைத்து உள்ளார்கள் என்றும், அவர்களுக்கு கத்துனா, இஸ்லாமிய பாட திட்டம் ஆகியவைகளும் இலவசமாக இது வரைக்கும் போதிக்கப் பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார். 

மேலும் அல் மதரஸத்துல் இலாஹியா குர்-ஆன் மனனம் செய்யும் மதரஸாவில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இஸ்லாமிய நல்லொழுக்க தீனியாத் வகுப்பு நடைபெற இருப்பதால், தங்களுடைய பிள்ளைகளையும் அனுப்பி பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

நேரம் காலை 9.30 மணி முதல் 1.00  மணி வரையும், மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரை  நடைபெற உள்ளது. 

பாடத்திட்டம்:  குர்-ஆனை முறைப்படி ஓத தஜ்வீது வகுப்பு, துஆ-க்களை மனனம் செய்தல், மற்றும் நல்லொழுக்க  பயிற்சி வகுப்புகள்,

கோடைகால தீனியாத் வகுப்பின் இறுதியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு போட்டி வைத்து பரிசுகள் வழங்கப்படும்.,

 மேலும் தொடர்புக்கு:
AL MADARASATHUL ILAAHIYA
Run by AL-MADINAH TRUST
SBI BANK A/C NO: 3321 041 3787
MUTHUPET BRANCH
EMAIL: almadinahmdctrust@gmail.com
Mobile NO: 86752 92490, 98651 32370...

 நமது நிருபர்:

AKL. அப்துல் ரஹ்மான்...


மதுரையில் போலிசே குண்டு வைத்தது அம்பலம்! எஸ்.டி.பி.ஐ வழக்கறிஞர் அணி சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் அதிர்ச்சி!

madurai bomp blast
மதுரையில் நடைபெற்ற அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும், வெடிக்காமல் எடுக்கப்பட்ட குண்டுகளையும் வைத்தது காவல்துறை தான் என்பது அம்பலமாகியுள்ளது.

மதுரையை சுற்றி சிறப்பு பிரிவு போலிஸ் குண்டு வைக்கிறது என சந்தேகப்பட்ட SDPI வழக்கறிஞரணி, இவ்வழக்குகளின் விசாரணையை CBI க்கு மாற்ற கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நிலுவையில் இருந்துவரும் நிலையில், நேற்று இவ்வழக்கில் மதுரை SP யின் இரண்டு கடிதங்களை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் வழக்கறிஞர்.பீட்டர் ரமேஷ் குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

அதிர்ச்சியூட்டும் இக்கடிதத்தில் போலிஸில் உள்ள சில கருப்பு ஆடுகள் தனது இன்பார்மர்கள் மூலம் பல்வேறு சமூகவிரோத செயல்களை செய்வது மட்டுமல்லாமல், வெடிகுண்டுகள் வைக்கும் காரியங்களிலும் ஈடுபட்டு வருவதை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.

இதன் மூலம் மதுரையை சுற்றி இதுவரை எடுக்கப்பட்டதாக கூறப்படும் சுமார் 15 குண்டு, போலிகுண்டு, பட்டாசு குண்டுகளின் பிண்ணனியில் சிறப்பு பிரிவு போலிஸ் இருப்பது தெளிவாகியுள்ளது. இச்சிறப்பு பிரிவிற்கு மதுரைக்கு தலைமை வகித்தது ADSP மாரிராஜனும், ADSP கார்த்திகேயனும் ஆவார்கள். இப்படி இவர்களே குண்டுவைத்து விட்டு அப்பாவி முஸ்லிம்களை விசாரணை என்ற பெயரில் அடித்து சித்திரவதை செய்வது மாபெரும் அநீதியாகும்.


இதுபோன்ற காவல்துறையில் உள்ள கயவாளிகளுக்கு, இன்பார்மர்கள் என்று அழைக்கப்படும் மாமாக்கள் குண்டுவைப்புகளில் உதவி செய்து வருகின்றனர்.


மதுரை சிறப்பு பிரிவு இது போன்ற இன்பார்மர்களை தேர்வு செய்து சட்டவிரோத காரியங்களை செய்து வருகின்றது. தாங்களே குண்டு வைத்துவிட்டு பின்னர் அப்பாவி முஸ்லீீம்களை கைது செய்து மெடலும் , பதவிஉயர்வும் பெருவதற்காக இக்கருப்பு ஆடுகள் இதனை செய்து சிறப்பு மிகுந்த தமிழக காவல்துறைக்கு கலங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.


இவ்வழக்கில் நமக்காக ஆஜராகி தெளிவான வாதங்களை எடுத்து வைக்கும் வழக்கறிஞர். பீட்டர் அவர்கள் இவ்வழக்கை கண்டு அதிர்ச்சியுற்று என்னிடம்,”மாப்ள இது ரெம்ப அநியாயம்டா, இப்படி போலிஸே குண்டுவைப்பார்கள் என்பதை கேள்விதான் பட்டிருக்கின்றேன், இவ்வழக்கில்தான் அதனை நேரடியாக பார்த்து உணர்ந்துள்ளேன்” என்றும் “முஸ்லீம் சமூகம் உண்மையிலையே பாவம்டா ” என்றும் மனமுருகி கூறினார். என எஸ்.டி.பி.ஐ கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இன்னும் இந்த வழக்கில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒடுக்கப்படுகிற மக்களுக்காக குரல் கொடுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி குண்டு வெடிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சட்ட ரீதியான உதவிகளையும் செய்து வருவதோடு, வெகுவிரைவில் உண்மையை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறது.

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் செய்தியின் எதிரொலி --தமிழகத்தின் பட்டி தொட்டிகளிலெல்லாம் விரட்டியடிக்கப்படும் பாஜக தேமுதிகவினர் --


பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கருப்பு கொடி காட்டுவோம் :.இஸ்லாமியர்கள் வசிக்கும் வீதிக்குள் வர தடை விதிப்போம் :மக்களை திரட்டுவோம் கொந்தளிப்போம் என்ற தலைப்பில் கடந்த வாரம் நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிரிந்தோம் .

இதன் விளைவாக தமிழகத்தில் சேலம் ,கோயமுத்தூர் போன்ற பகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் மற்றும் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு இஸ்லாமிய பெருமக்கள் கருப்புக்கொடி காட்டி விரட்டி அடித்தனர் .டும.
அதன் தொடர்ச்சியாக தென்காசியில் மதிமுக சார்பில் போட்டியி சதன் திருமலை குமார் கடையநல்லூர் பகுதியல் பிரச்சாரம் செய்வதற்காக வந்தார் .அவரை கண்டதும் சுமார் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் வேட்பாளருக்கு எதிராக கண்டன கோஷமிட்டு கருப்பு கொடி காட்டினார்கள் .இதனால் விரக்தியடைந்த அந்த வேட்பாளர் தனது பிரசாரத்தை பாதியிலேயே முடித்து கொண்டு திரும்பினார் .

மானமுள்ள இஸ்லாமிய சொந்தங்களே !! இதேபோல் உங்களது ஊரிலும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தயங்காதீர்கள் .இன்றே தயாராகுங்கள் !!!
மோடிக்கு ஒட்டு கேட்டு வருவதால் முஸ்லிம்கள் பகுதிகளில் விஜயகாந்த் கட்சியினர் தொடர்ந்து விரட்டிஅடிக்கபடுவதை காணும் பொழுது சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுகின்றதோ என்றுதான் என்ன தோன்றுகிறது 

2002 ம் ஆண்டு 3000 முஸ்லிம்களை கொன்று , அதற்க்கு ஒரு மன்னிப்பு கூட கேட்காமல் , முஸ்லிம்களை பார்த்து நாய் என்று கூறிய மோடிக்கு ஆதரவாக விஜயகாந்த் ஒட்டு கேட்டு வருவதால்- பல முஸ்லிம் வாழும் பகுதிகளில் கருப்பு கொடிகளும் , மேலும் தேமுக திகாவினரை விரட்டி வருவதால் - மிக பெரும் பரபரப்பு நிலவுகிறது


மோடியின் பயங்கரவாதமும் --விஜயகாந்த் வைகோ போன்றோர்களின் அறைவேக்காட்டுதனமும் !!!

நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கே வந்து விட்டதைப் போலவே தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும் கருத்துகளைப் பரப்புகின்றன. ‘தேசத் தந்தை’யாகவே மோடி, மக்கள் மீது திணிக்கப்படுகிறார்.


 
 
 
 
 
 
 


முகமூடி தரித்துவரும் ‘இந்த கதாநாயகன்’ எப்படி நடிக்க வேண்டும்? எதைப் பேச வேண்டும்? உடை எப்படி அணிய வேண்டும்? மக்களை எப்படி ஏமாற்ற வேண்டும்? இதற்காகவே ஒரு சர்வதேச நிறுவனத்தை (Apco Worldwide) மாதம் ரூ.25,000 அமெரிக்க டாலர் செலுத்தி, வாடகைக்கு எடுத்துள்ளார் மோடி. இதில் இடம் பெற்றுள்ள வெளி நாட்டு நிபுணர்கள் தான் ‘தேச பக்த’ மோடிக்கு மக்களை ஏமாற்றும் தந்திர நடவடிக்கைகளை உருவாக்கித் தருகிறார்கள்.

மோடியின் முகமூடியை அகற்றிப் பார்த்தால் உண்மை முகம் அம்பலமாகிவிடும்.
• இந்தியாவை இந்துக்களின் நாடாக்கும் கொள்கைக்காக செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்று அரசியலுக்கு வந்தவர் மோடி. ‘இந்தியாவை இராணுவ மயமாக்கு; இராணுவத்தை இந்து மயமாக்கு’ என்பதே ஆர்.எஸ்.எஸ். அதன் துணை அமைப்புகளின் முழக்கம். இப்போது முன்னாள் இராணுவ தளபதிகள் அதற்காகவே பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள்.

• நினைவிருக்கிறதா? அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் அதற்காக அத்வானி நாடு முழுதும் ரத யாத்திரை நடத்தியதும் நினைவிருக்கிறதா? அந்த யாத்திரைக்காக திட்டங்களை வகுத்து செயல்பட்டவர்தான் மோடி!

• 2002 ஆம் ஆண்டில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொடூரமாக மோடி ஆட்சியில் இனப் படுகொலைக்கு உள்ளானர்களே, மறக்க முடியுமா? இந்தப் படுகொலைகளை தடுக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டவர் இந்த மோடிதான். அப்போது மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஹரேன்பாடியா எனும் அமைச்சர் விசாரணைக் குழுவின் முன் இந்த உண்மையைப் போட்டு உடைத்தார்.

இதன் காரணமாக அடுத்த சில மாதங்களிலேயே அவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கொலையுண்ட ஹரேன்பாடியாவின் தந்தை, இந்தக் கொலைக்குக் காரணம் மோடிதான் என்று குற்றம் சாட்டினார்., மோடியோ, பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி என்று கதை கட்டி 17 அப்பாவி முஸ்லிம்களை கைது செய்தார். பொய் வழக்கு என்று கூறிய நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்தது.

• கலவரத்தின்போது பிணையில் வெளிவர முடியாத ஆள்தூக்கி சட்டங்களின் கீழ் மோடி கைது செய்த - அனைவருமே இஸ்லாமியர்கள்தான்.
• மூன்று முறை முதல்வராக இருந்த மோடி, எந்த ஒரு தேர்தலிலும் ஒரு வேட் பாளராகக்கூட முஸ்லிம் சமூகத்தைச் சார்ந்தவர்களை நிறுத்தியதில்லை. அவர் தான் இப்போது முஸ்லிம்களின் வாக்குக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்.

• குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை, தனது காரில் ஒரு நாய் குட்டி சிக்கியதைப்போல் உணர்ந்தேன் - என்று கூறியவர் தான் மோடி.
• இந்தியாவின் முதல் நிலையில் இருக்கக்கூடிய 100 முதலாளிகளில் 74 பேர் அடுத்த பிரதமராக மோடியே வரவேண்டும் என்று கருத்து கூறியுள்ளனர். மக்களைச் சுரண்டி கொள்ளையடிக்கும் மோடி பெருமுதலாளிகளின் வேட்பாளர்.

• ‘குஜராத்தில் கலவரம் நடந்தது உண்மைதான். ஆனால் மோடி மீது நீதிமன்றம் குற்றம்சாட்டவில்லை’ என்று பேசித் திரிகிறார்கள், மோடியின் பிரச்சாரப் புலிகள். இது முழு உண்மையல்ல. மோடிக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்வதற்கு போதுமான அளவில் சாட்சிகள் கிடைக்கவில்லை என்றுதான் நீதிமன்றம் கூறியிருக்கிறது. அவர்களிடம் மற்றொரு கேள்வி! மோடி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் மாயா கோத்னானி; அவர் 28 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏன்? 

நரோ பாட்டியா என்ற இடத்தில் 69 இஸ்லாமியர்கள். (பெண்கள், குழந்தைகள் உட்பட) வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அப்போது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினராக இருந்த இந்தப் பெண், இந்தக் கொலைக்கு உத்தரவிட்டார் என்பது குற்றச்சாட்டு. இந்தப் படுகொலைகளை நடத்தியதற்காக 2007இல் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தவர்தான் ‘தேசபக்தர்’ மோடி!

• குஜராத் படுகொலைகள் உலகத்தையே அதிரச் செய்தன. மனித உரிமை அமைப்புகள் கண்டித்தன; இனி எந்த முகத்தோடு வெளிநாடுகளுக்குப் போவேன் என்று பிரதமராக இருந்த இவர்கள் கட்சியைச் சார்ந்த வாஜ்பாயே கூறினார். அது மட்டுமல்ல, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல அய்ரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டுக்குள் நுழையவே மோடிக்கு அனுமதி மறுத்தன. அந்தத் தடை இப்போதும் நீடிக்கிறது. இந்த மனிதர்தான் பிரதமராகி, இந்தியாவின் கவுரவத்தை உலகத்தில் உயர்த்திப் பிடிக்கப் போகிறாராம். இதை மக்கள் நம்ப வேண்டுமாம்!

• குஜராத் காவல்துறை மோடியைக் காப்பாற்றுவதாகக் கூறி ஒரு ‘போலி என்கவுண்டர்’ நடத்தியது. கல்லூரி மாணவி உள்ளிட்ட பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாக மோடி கூறினார். நீதிமன்றம் இது பொய்யாக நடத்தப்பட்ட ‘என்கவுண்டர்’ என்று கூறியது. அதற்காக 32 காவல்துறை அதிகாரிகள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறை தலைமை அதிகாரி வன்சரா என்பவரும் ஒருவர். அவர் சிறையிலிருந்து மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

“அரசாங்கம் கூறியதற்காகவே நாங்கள் கொலை செய்தோம்; தண்டனை எங்களுக்கு மட்டும்தானா! அரசாங்கத்துக்கு இல்லையா?” என்று கடிதத்தில் கேட்டுள்ளார். ஊர் ஊராகப் போய் ‘சவால்’ விடும் மோடி, வாயை மூடிக் கொண்டிருக்கிறார்.

• “குஜராத்தைப் பாருங்கள்... அடேங்கப்பா... என்ன வளர்ச்சி?” என்று ஆர்ப்பரிக்கிறார்கள், மோடியின் சீடர்கள். அவை எல்லாம் கட்டுக்கதை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. குஜராத்தில் பெரும் தொழிலதிபர்கள்தான் கொழுக்கிறார்கள். ஆனால் மக்கள்...? 

வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களில் குஜராத் இந்தியாவில் 9ஆவது இடத்தில் இருக்கிறது. கல்வி கற்றவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாட்டுக்குக் கீழே 5 ஆவது மாநிலம். குழந்தைகள் மரண வீதத்தில் இந்தியாவிலேயே முதலிடம் குஜராத்துக்குத்தான். பெண் குழந்தைகளை வெறுப்பதிலும், பெண் குழந்தைக் கொலைகளும் குஜராத்தில் அதிகம். 

ஆண்களுக்கு இணையாக பெண்கள் மிகக் குறைவாக இருப்பதில் இந்தியாவிலேயே 11 ஆவது இடத்தில் நிற்கிறது குஜராத். இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் இந்தியாவிலேயே அதிகம் உள்ள மாநிலம் குஜராத். இன்னும் ஏராளமாகப் பட்டியலிட முடியும்.
• குஜராத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் 641 பேர். இவர்கள் விபத்தில் பலியானவர்கள் என்று காவல்துறை பொய்யாக வழக்குப் பதிவு செய்ய மோடி ஆட்சி கட்டாயப்படுத்துகிறது.


• மனித மலத்தை மனிதன் எடுப்பது புனிதமான தொண்டு என்று மோடி கூறினார். அது நூலாகவும் வெளிவந்து பிறகு திரும்பப் பெறப்பட்டது. மனித மலத்தை மனிதர்கள் எடுப்பது அங்கே பெருமளவில் நடைமுறையில் உள்ளது. பாதாள சாக்கடையில் இறங்கி, மூச்சுத் திணறி இறந்து போன துப்புறவுத் தொழிலாளர் எண்ணிக்கை 641 பேர்.


• குஜராத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் தொடருகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் இது. தேனீர்க் கடைகளில் தலித் மக்களுக்கு தனிக் குவளை. அதற்குப் பெயர் ‘இராம பாத்திரம்’. உயர்சாதியினர் கடைகளில் பொருள் வாங்க அவர்கள் நடத்தும் பேருந்துகளில் பயணிக்க, மதிய உணவுத் திட்டத்தில் பிற ஜாதிக் குழந்தைகளுடன் இணைந்து உணவருந்த.... என்று, தடைகள் நீடிக்கின்றன. 

ஆமதாபாத் போன்ற நகரங்களிலேயே ‘தலித்’ பிரிவினருக்கு ‘வீட்டுக்குடியிருப்புகள்’ தனியாகவே அமைக்கப்பட்டுள்ளன. அய்.ஏ.எஸ். போன்ற உயர் அதிகாரிகள்கூட இந்தக் குடியிருப்புகளில்தான் வாழ வேண்டும். ‘ஆமதாபாத்’ தொழில் நகரத்தில் மட்டும் இதேபோல் 300 குடியிருப்பு காலனிகள் உள்ளன. 

மூன்று முறை முதல்வராக இருந்த மோடி ‘தேனீர்க்கடை’யில் வேலை செய்து உயர்ந்தவன் என்று கூறிக் கொள்ளும் மோடியின் கண்களுக்கு இந்த அவலங்கள் தெரியவில்லையா?
• குஜராத்தில் பெரும் தொழிலதிபர்கள் வளருகிறார்கள் என்பதுதான் உண்மை. டாட்டா, அதானி, சத்ரலா, லார்சன் அண்ட் டூட்ரோ போன்ற பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு நிலங்களை ‘தாரை’ வார்த்துள்ளார் மோடி! 

2011-2012ஆம் நிதி ஆண்டில் பெரும் ‘பகாசுர’ தொழில் நிறுவனங்களுக்கு சந்தேகப்படும் வகையில் நியாயமில்லாமல் ரூ.1275 கோடியை மோடி, வாரி இறைத்ததை மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ரூ.160 கோடியை அரசுக்கு செலுத்தாமல் ஏமாற்றிய அதானி நிறுவனத்துக்கு மோடி ஆட்சி ரூ. 240 மட்டும் அபராதம் விதித்து பிரச்சினையை முடித்துக் கொண்டது.

 ஏராளமாகப் பட்டியலிட முடியும்.
• எரிவாயுக்கு ஒரு யூனிட் விலையை மத்திய காங்கிரஸ் கட்சி 4 டாலரிலிருந்து 8 டாலராக உயர்த்தியது. மோடியின் குஜராத் ஆட்சி 16 டாலராக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது, ஏன்? சூரிய மின்சக்தியை எல்லா மாநிலங்களிலும் ஒரு யூனிட் ரூ.8க்கு வாங்கப்படும்போது குஜராத்தில் மட்டும் ரூ.15க்கு வாங்குவது ஏன்? சுரங்க ஊழலில் சிக்கி 3 ஆண்டு தண்டனை பெற்று பிணையில் வெளி வந்துள்ள பாபு பொக்கிரியா, மோடி அமைச்சரவையில் அமைச்சராக்கப்பட்டுள்ளார். ரூ.450 கோடி மீன் வள ஊழலில் சிக்கிய புருசோத்தம் சோலங்கி ‘கேபினட்’ அமைச்சர், அம்பானி குடும்பத்தின் மருமகன் சவுராவ் பட்டேல், குஜராத்தில் எரிவாயு, பெட்ரோலிய எரிசக்தித் துறை அமைச்சர், ஏன்? 

கெஜ்ரிவால் எழுப்பியுள்ள இந்த குற்றச்சாட்டுகளுக்கு மோடியிடமிருந்து பதில் இல்லை.
• இந்திய மருத்துவக் கவுன்சில்தலைவராக இருந்த கேதன் தேசாய் என்ற பார்ப்பனர், மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க 2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடிபட்டவர். 2010 ஏப்ரலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வீட்டில் சோதனையில் சுமார் 1500 கோடி ரூபாய் நோட்டுகளும் 250 கிலோ தங்கமும் பிடிபட்டன. நாட்டையே அதிர்ச்சியடையச் செய்த இந்த பார்ப்பனர் ஊழலால் இந்திய மருத்துவ கவுன்சிலே கலைக்கப்பட்டது. 

பிணையில் வெளி வந்துள்ள தேசாய் மீது வழக்கு நிலுவையில் இருக்கும்போதே மோடி ஆட்சி குஜராத் பல்கலை வழியாக இவரை (மீண்டும் மருத்துவக் கவுன்சிலுக்கு உயிரூட்டப்பட்டு), அதன் கவுன்சில் உறுப்பினராக்கியுள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத்தும் உடந்தை. இதற்கு எழுத்து மூலம் எதிர்ப்பு தெரிவித்த சுகாதாரத் துறை செயலாளர் கேசவ் தேசிகராஜ் - வேறு துறைக்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளார். இதுதான் மோடியின் ஊழல் ஒழிப்பு லட்சணமா? இந்த பார்ப்பன பாசிச சக்திகளிடம் தமிழர்களே, ஏமாறாதீர்!

பாராளுமன்ற தேர்தலில்மறுமலர்ச்சி தமுமுக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு!மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரத்துடன் நேரில் சந்திப்பு !!

மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமையவும் பாஜக வை தோற்கடித்திடவும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என மதமுமுக தலைமை நிர்வாக குழு முடிவு செய்தது அதன் அடிப்படையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய நிதி அமைச்சருமான ப சிதம்பரத்தை மறுமலர்ச்சி தமுமுக மாநில அமைப்பாளர் ஜெய்னுல் ஆப்தீன் தலைமையில் மாநில ஒருங்கினைப்பாளர்கள் Taஇஸ்மாயில் Mmபாஷா புளியங்குடி செய்யதுஅலி Ks ரசூல்மைதீன் மெளலவி யூசுப் Sp ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து கொன்டனர் ப சிதம்பரம் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்து கொன்டார் அதை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது முன்னதாக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் திரு ஞானதேசிகன் மறுமலர்ச்சி தமுமுக மாநில நிர்வாகிகளை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவை கோரினார் தமிழகம் முழுவதும் மதமுமுக காங்கிரஸ் கட்சி வெற்றிக்கு பாடுபடுவோம் என செய்தியாளர்களிடம் மாநில அமைப்பாளர் ஜெய்னுல் ஆப்தீன் தெரிவித்தார்.


 
தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளருக்கு மலை போல் குவிந்திருக்கும் கிரிமினல் வழக்குகள் -- வேட்புமனு ஏற்புக்கு எதிராய் வழக்குபோடுவார்களா சமூக ஆர்வலர்கள் !!

தஞ்சாவூர்: தஞ்சை நாடாளுமன்ற பா.ஜ.க வேட்பாளர்  மீது கொலை வழக்குகள் உடபட 20 வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
 வேட்புமனு தாக்கலின்போது அவர் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான சனிக்கிழமை அவர் உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.அதில், இவர்  மீது திருத்துறைப்பூண்டி நடுவர் நீதிமன்றத்தில் கொலை முயற்சி பிரிவு 6 வழக்குகள், கொலை மிரட்டல் பிரிவில் 7 வழக்குகள், சொத்து சேதப்படுத்துதல் பிரிவில் 6 வழக்குகள் உடபட 20 வழக்குகள் விசாரணையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பொதுநலனில் அக்கறை உள்ளவர்களாகவும் ,சாதி சமயத்திற்கு அப்பாற்பட்டவராகவும் ,இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவராகவும் ,தேசிய ஒருமைப்பாடு ,சமூக நல்லிணக்கம் ,ஆகியவற்றில் உறுதியானவராகவும் ,இருக்க வேண்டும் என்று அரசியல் சாசன சட்டமும் தேர்தல் விதிமுறைகளும் கூறுகின்றன .
ஆனால் தஞ்சையில் பாஜக வின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள இந்த வேட்பாளருக்கோ ஏகப்பட்ட கிரிமினல் வழக்குகள் .அதுவும் ஒஎரு சமுதாயத்திற்கு எதிரான  முஸ்லீம்  சமுதாயத்திற்கு எதிரான  கலவர வழக்குகள் .
இவரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டுள்ள தேர்தல் அதிகாரி மீது வழக்கு போட யாரேனும் சமூக ஆர்வலர்கள் முன் வரும் பட்சத்தில் அவருக்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் துணை நிற்கும் . 

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி ஓர் கண்ணோட்டம் ---வெற்றி வேட்பாளாராகும் ஹைதர் அலி !!இந்த கணிப்புக்கு நாம் எடுத்துக்கொண்டிருப்பது கடந்த சட்டமன்ற (2011) தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் அல்லது தனிக் கட்சிகளும் வாங்கிய வாக்கு விவரங்களும்… அவற்றிலிருந்து உள்ளே சேர்ந்துள்ள அல்லது வெளியேறிய கட்சிகள் வைத்திருக்கும் வாக்கு வங்கியை சேர்த்தோ அல்லது கழித்தோ இறுதியாக வந்திருக்கும் அல்லது வரப்போகின்ற முடிவு பற்றியது தான்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் 1) மயிலாடுதுறை 2) கும்பகோணம், 3) பாபநாசம், 4) திருவிடைமருதூர், 5)பூம்புகார் மற்றும் 6) சீர்காழி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியிருக்கின்றன.
இவற்றில் கடந்த தேர்தலில் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருக்கின்றது. மற்ற நான்கு தொகுதிகளில் இரண்டில் காங்கிரஸ் கட்சியும் ஒன்றில் பாமகவும் மற்றொன்றில் விசிகவும் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியிருக்கின்றன.


** இந்த ஆறு சட்டமன்ற தேர்தல்களிலும் சேர்த்து 2011 தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை
= 946777 (சராசரியாக 82 சதவிகிதத்திற்கும் கூடுதலாக)
** இவற்றில் திமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 414722 (43.80%)
** அதிமுக கூட்டணி பெற்றுள்ள வாக்குகள் = 472832 ( 49.94%)
** பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் = 9495 (1.00%)
இப்பொழுது நாம் கணக்கு வழக்குகளுக்கு வருவோம்.
முதலில் திமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்….
இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்


1) பாமக (4% அதாவது 37,871 வாக்குகள்)
2) காங்கிரஸ் (2% அதாவது 18935 வாக்குகள்)
இந்த இரண்டையும் திமுக கூட்டணி வாக்குகளில் (414722) இருந்து கழித்தால் கிடைப்பது = 357916 வாக்குகள்.
இந்த வாக்குகளில் திமுக கூட்டணிக்கு வரவாக இருக்கக் கூடிய வாக்குகள்/ கட்சிகள் என்றால்….
1) மனிதநேய மக்கள் கட்சி (2.48% அதாவது 19814 வாக்குகள். இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் அக் கட்சி தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம்)

2) கடந்த தேர்தலில் (அ) காங்கிரஸோடு திமுக சேர்ந்ததாலும், (ஆ) இலங்கைப் பிரச்சினையில் திமுகவுக்கு எதிராக மிகப்பலமான லாபி எழுந்து அதுவும் ஒரு முக்கிய தேர்தல் வெற்றி அளவுகோலாக இருந்ததாலும் (இ) 2ஜி விவகாரம் (ஈ) கலைஞர் குடும்ப ஆதிக்கம் மற்றும் கரண்ட் பிரச்சினை போன்ற ஆட்சிக்கு எதிரான பலம் வாய்ந்த பிரச்சாரங்கள்…. என்று வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாக விழுகின்ற வாக்குகள் கூட இந்த வெறுப்பினால் வெளியேறி அதிமுக கூட்டணிக்கு விழுந்த வகையில் திரும்பப் போகின்ற வாக்குகள் (3% அதாவது 28403 வாக்குகள்)

இந்த வரவு வாக்குகளை திமுக கூட்டணி வாக்குகளில் சேர்த்துக் கூட்டினால் (357916 + 19814 +28403) = 406133 வாக்குகள்.
இது தான் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி இந்த முறை வாங்கவிருக்கின்ற மிகக் குறைந்தபட்ச வாக்குகள்….
அடுத்ததாக அதிமுக கூட்டணியை எடுத்துக்கொள்வோம்……


இக் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாக்குகள்/கட்சிகள் என்றால்…
1) தேமுதிக (5.6% அதாவது 53019 வாக்குகள். இது கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் இக் கட்சி தனித்து நின்று பெற்ற வாக்கு சதவிகிதம்)
2) கம்யூனிஸ்ட்டுகள் (1.5% அதாவது 14201 வாக்குகள்)
3) மனிதநேய மக்கள் கட்சி (2.48 % அதாவது 19814 வாக்குகள்)
4) கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு எதிராகவும், மற்றும் இலங்கை, 2ஜி போன்ற குற்றச்சாட்டுகளின் காரணமாகவும் அதிமுகவுக்கு கூடுதலாகக் கிடைத்த வாக்குகள் (6% அதாவது 56807 வாக்குகள். இதில் இருந்து தான் 3% வாக்குகள் மீண்டும் திமுகவுக்கும் இன்னொரு 3% வாக்குகள் மூன்றாவது அணியான பாஜக கூட்டணிக்கும் செல்கிறது. இதைத்தான் அதிமுக எதிர்ப்பு வாக்குகளை பாஜக அணி பிரிப்பது அதிமுகவுக்கு லாபம் என்று ஊட்கங்கள் பரப்புரை செய்துகொண்டிருக்கின்றன)
இந்த வாக்குகளை அதிமுக கூட்டணி வாக்குகளில் (472832) இருந்து கழித்தால்….

(472832) – (53019 +14201 + 19814 + 56807) = 328991 வாக்குகள்.
ஆக திமுக கூட்டணி வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 406133 (42.90%)
அதிமுக வாங்க வாய்ப்பிருக்கும் வாக்குகள் = 328991 (34.75%)
வாக்கு வித்தியாசம் = 77142 வாக்குகள்.
இந்த இரண்டு கூட்டணிகளும் பெறப்போகின்ற வாக்கு சதவிகிதம் = (77.5%)

வரும் தேர்தலில் 88 சதவிகித வாக்குப் பதிவு இருக்கும் என்று எடுத்துக்கொண்டால்… மொத்த வாக்குகளான (இந்த முறை) 13 லட்சம் வாக்குகளில் பத்து சதவிகிதம் அதாவது 130000 (ஒரு லட்சத்தி முப்பதாயிரம்) வாக்குகளை பாஜக கூட்டணியும் காங்கிரஸும் பிரித்துக்கொள்ளும் (காங்கிரஸ் சார்பாக மணிசங்கர் ஐயர் நிற்பதால் பாஜக கூட்டணி வாக்குகளில் கணிசமான சேதாரம் இருக்கும்.


ஆக திமுக கூட்டணியின் மனிதநேய மக்கள் கட்சி மிகத்தெளிவான வெற்றியை மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் பெறும். இதில் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய எழுச்சி நிறைந்த பிரச்சாரமும் அவருக்கு கட்சியில் கிடைத்திருக்கின்ற அடுத்த தலைவர் இமேஜும், கடும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருந்த அழகிரியின் வெளியேற்றமும் நடுநிலை மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் அதிகமாக ஈர்க்கும். 

அதே சமயம் அதிமுகவுக்கு வரவுக்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை மாறாக பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கில் இப்பொழுது வந்து கொண்டிருக்கும் ஊழல் பட்டியல் அதிமுக வாக்கு வங்கியில் மேலும் கணிசமான சேதாரத்தை ஏற்படுத்தலாம்.


பின் குறிப்பு: திமுக – அதிமுக கூட்டணி வாக்குகள் கடந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கூடுதலாக இருக்கின்ற புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அவர்கள் பெறுகின்ற வாக்குகளின் எண்ணிக்கை சதவிகிதக் கணக்கு மாறாமல் ஏற்றம் பெறும் என்பதையும் இதைப் படிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதை தடுக்க இஸ்லாமியர்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் --டெல்லி தலைமை இமாம் வேண்டுகோள் !!!

புதுடெல்லி: முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று டெல்லி ஜும்மா மசூதி இமாம்  சயீது அஹமது புகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் எங்களுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறோம்.  என்றார்.

மேலும் அவர் கூறுகையில்,  60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்க காரணமான முசாபர் நகர் தாக்குதலில் முஸ்லிம்களை காப்பாற்ற சமாஜ்வாதி அரசு முயலவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார். 

அதே போல தேர்தலுக்கு பின் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தரமாட்டோம் என மாயாவதி உறுதியளிக்க தவறிவிட்டதாகவும் இமாம் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாடு பெரும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளதாகவும், இதற்காகவே மதவாத சக்திகளின் கையில் நாடு சென்றுவிடாமல் நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.


காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை இமாம் சந்தித்து முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்றும் பொய் வழக்குகளில் சிக்கியுள்ள முஸ்லிம்கள் குறித்தும் பேசியமை  குறிப்பிடத்தக்கது.

தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளருக்கு முத்துபேட்டையை சேர்ந்த பிரபல முஸ்லீம் தொழிலதிபர் பண உதவி செய்துவருவதாக தகவல் !!!


தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் பாஜக வின் சார்பில் முத்துப்பேட்டையை சேர்ந்த  ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் . தஞ்சை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இவர் முத்துப்பேட்டையில் அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களையும் இந்துக்களையும் பிரித்து அதன் மூலம் உயர் சாதி பார்ப்பன கும்பல்களுக்கு பல்லக்கு தூக்கி வருவதாலும் ,இந்து ஒற்றுமை என்று கூறி இந்துக்களையே மிரட்டி அடிமைபடுத்த நினைபதாலும்   இந்த வேட்பாளருக்கு இந்துக்கள் மத்தியில்  கடும் கோபமும் கடும் அதிருப்திகளும் உள்ளன .

இந்நிலையில் தஞ்சை தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள  இவர் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் வெற்றிபெற்றுவிடலாம் என்று பகல் கனவு கண்டு வருகிறார் .இவருக்கு முத்துப்பேட்டையில் உள்ள இந்துக்களே பண உதவி செய்ய முன் வராத நிலையில் பிரபல இஸ்லாமிய தொழிலதிபர்  ஒருவர் தாராளமாக நிதி உதவிகளை வழங்கி வருவதாக திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன .

அதுமட்டுமில்லாமல் இந்த இஸ்லாமிய தொழிலதிபர் பாஜகவின் தேசிய செயலாளர் இல கணேசனை வெளிநாட்டிற்கு அழைத்து அவருக்கு வீர வாள் வழங்கி கௌரவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது .இவரது சொத்துக்களை பாதுகாத்து கொள்வதற்காகத்தான் பாஜக வுடன் கைகோர்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
இது போன்ற மன்னிக்க முடியாத செயல்களில் ஈடுபடவேண்டாம் என முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் அவருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கின்றது .
இவரின் இந்த சமுதாய துரோக போக்கு தொடருமேயானால் இவரின் அத்துனை வண்டவாளங்களையும் துணிவோடு தோலுரிக்கும் இன்ஷா அல்லாஹ் >>>>>

பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு கருப்புக்கொடி காட்டுவோம் !!இஸ்லாமியர்கள் வசிக்கும் வீதிக்குள் வர தடைவிதிப்போம் !!மக்களை திரட்டுவோம் !!கொந்தளிப்போம் !!

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட யார் வெற்றி பெறக்கூடாது என்பதே இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் கவனிக்க வேண்டிய  முக்கியமான அம்சமாகும் .குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லீம்களை படுகொலை செய்த படு பாதகன் நரபலி மோடி ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களின் நிலை என்னவாகும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும் .

தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் எதிரான கொள்கைகளை கொண்ட பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பலுடன் தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசியல் வியாபாரிகள்  பச்சை  துரோகிகளான மதிமுக பொதுசெயலாளர் வைகோ , தேமுதிக தலைவர் விஜயகாந்த்,பாமக நிறுவனர் ராமதாஸ் , IJK தலைவர் SRM பாரிவேந்தர் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் ,புதிய நீதி கட்சியின் தலைவர் AC சண்முகம் ,உள்ளிட்ட கயவர்கள் இணைந்துள்ளனர் .

 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ,மனிதநேய மக்கள் கட்சியின் பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி போன்றோர்கள் மதவாத சக்திகளுடன் கைகோர்க்க வேண்டாம் என்று பலமுறை முயற்சிகள் மேற்கொண்டும் அனைத்து இஸ்லாமியர்களின் கோரிக்கைகளையும் காலில் போட்டு மிதித்து விட்டு உதாசீன படுத்திவிட்டு காந்தியை சுட்டுகொன்ற தேச விரோத கும்பலுடன் கைகோர்த்து விட்டனர் .


பாஜக மற்றும் அதன் பரிவாரங்களுடன் கூட்டணி சேர்ந்துள்ள இவர்களுக்கு நாம் எப்படி பாடம் புகட்ட வேண்டும் ?நாம் செய்ய வேண்டியவை என்ன ?

பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை இஸ்லாமியர்கள் வசிக்கும் தெருவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது .இவர்களுக்கு ஆதரவாக யார் பிரச்சாரம் செய்ய வந்தாலும் அனைத்து இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்து கருப்பு கொடி காட்டி நம் எதிர்ப்புகளை காட்ட வேண்டும் .இப்படி செய்வதினால் பாஜக வுடன் கூட்டணி சேர்ந்துள்ள மற்ற கட்சிகளுக்கு வயிற்றில் புலியை கரைப்பதோடு அடுத்த முறை பாஜக வுடன் கூட்டணி வைக்க தயங்குவார்கள் .

பாஜகவுடன் ராமதாஸ் வைகோ போன்றோர்கள் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட போதே அவர்களின் தலைமை அலுவலகங்களுக்கு முன்னாள் முற்றுகை போராட்டம் நடத்தியிருந்தால் விஜயகாந்த்   போன்றோர்களை யோசிக்க வைத்திருக்கும் .

எனவே இஸ்லாமிய சகோதரர்களே நமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்துவிட்டு இப்பொழுதே பாஜக கும்பல்களுக்கு எதிரான ஆக்கபூர்வமான் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்று முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் மூலமாக அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன் .

என்றென்றும் தாயக பணியில் உங்கள் 

ஜே :ஷேக்பரீத் 


மௌத்து அறிவிப்பு "ராபியத்துல் பஜரியா "

முஹைதீன் பள்ளி தெரு    மர்ஹூம்  சு. மு. முகைதீன் பக்கீர் அவர்களின் மகளும், மர்ஹூம் மீ. மு. பாவா முகைதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சு.மு. கணக்கப்பிள்ளை என்கிற செய்யது  ஹமீது அவர்களின் சகோதரியும், மௌலானா என்கிற செ. முஹமது அலி சகோதரர்களின் மாமியும், எம்.அன்சாரி அவர்களின் மாமியாருமான ராபியதுல் பஜரியா அவர்கள் இன்று பகல் (01.04.2014)  12 மணிக்கு மௌத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி  வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி  ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில்  நல்லடியார்களின்   கூட்டத்தோடு   இணைய  வைப்பானாக……ஆமீன்.

அன்னாரின்  ஜனாஸா  இன்று  மாலை  7 மணிக்கு முகைதீன் பள்ளி  மைய வாடியில்  நல்லடக்கம் செய்யப்படும்.

பள்ளிவாசல்களில் வாக்கு சேகரிக்க பாஜக கூட்டணி கட்சிகளுக்கு தடைவிதிக்க வேண்டும்:தடா அப்துல் ரஹீம் தமிழக தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை !!

பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி ஆதரவு கட்சிகள் மசூதிகளில் ஓட்டு கேட்பதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் இந்திய முஸ்லிம் லீக் கட்சி புகார் கொடுத்துள்ளது.இதுகுறித்து இந்திய முஸ்லிம் லீக் கட்சி மாநில தலைவர் தடா ரகீம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரை இன்று சந்தித்து மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:–

தேர்தல் பிரசாரத்தின் போது மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் சென்று ஓட்டு கேட்பது வழக்கம். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சேலத்தில் தே.மு.தி.க.வினர் பள்ளி வாசலில் ஓட்டு கேட்ட போது மோதல் ஏற்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடரக்கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையத்திடம் மோடி ஆதரவு கட்சிகள் மசூதிகள், பள்ளிவாசலில் ஓட்டு கேட்பதை தவிர்க்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இந்து–முஸ்லிம் மோதல் ஏற்படுவதை தடுக்க வேண்டும், கூட்டணி கட்சிகளிலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்கள் மசூதிக்கு வேட்பாளரை அழைத்து செல்லும் போது மசூதியில் உள்ள சில முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் பிரச்சினை ஏற்படுகிறது.

இத்தகைய மோதல் போக்கை தடுக்க மசூதிகளில் வாக்கு சேகரிக்க செல்வதை ஒட்டுமொத்தமாக தடுக்க வேண்டும். அல்லது பா.ஜனதா ஆதரவு கட்சிகள் செல்வதை மட்டுமாவது தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)