
நாகப்பட்டினம்,நவம்பர் 18: தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிமுன்அன்சாரி (வயது 47). இவருடைய மனைவி பாத்திமா (40).
இவர்கள் தங்க நகைகளை கொடுத்தால் மாதந்தோறும் பணம் தருவதாகவும், ஒரு பவுனுக்கு ரூ.ஆயிரம் தருவதாகவும், கேட்கும் நேரத்தில் தங்க நகைகளை பணத்துடன் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறி தொழில் நடத்தி வந்தனர். இவர்கள் கூறியதை உண்மை என நம்பிய மயிலாடுதுறை கிளியனூர், வடகரை, சிதம்பரம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச்...