முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


தஞ்சையில் பயங்கரம் - வாய் பேச முடியாத இளம் பெண் 4 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல்களால் கற்பழிப்பு !!!

தஞ்சாவூரில் வாய் பேச முடியாத முஸ்லிம் பெண்ணை நான்கு அயோக்கியர்கள் கற்பழித்து கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்கள். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்த முழு விவரங்கள் பின் வருமாறு....
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீத், இவருடைய மகள் பானு (32) மாற்றுத்திறனாளி (வாய்பேச முடியாதவர், மிகவும் ஏழை குடும்பம்)
இவரை நேற்றுமுன்தினம் 4 பேர் கொண்ட காமவெறியர்கள் காரில் கடத்திச் சென்று ஒரத்தநாடு பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பானுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுதிரனாளி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு தஞ்சை கீழவாசல் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறவினர்களிடம் உறுதி கூறியதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தை கை விட்டனர்.
மேலும் இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் பானுவின் உறவினர்கள் புகார் மனுவும் அளித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

1 comments:

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)