
சென்னை, நவம்பர் 03 : நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் மமக சார்பில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒருநாள் நிர்வாக பயிற்ச்சி முகாமும், சான்றிதல் அளிக்கும் நிகழ்ச்சியும் சென்னை சிராஜ் மஹாலில் நேற்று நடைபெற்றது. மேகத்துடன் கூடிய மழைச்சாரலும் , குளிர்ந்த காற்றும், சென்னை மாநகரை இதமான ஒரு சூழலில் பரவசப்படுத்தி கொண்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளை தலைமை நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்தியது...