முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு மாஷா மாலிக் போட்டி: ம.ம.க தலைமை தகவல்!!


முத்துப்பேட்டை, அக்டோபர் 02 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் மாஷா மாலிக் என்கிற S . முஹம்மத் மாலிக் போட்டி இடப் போவதாக மனித நேய மக்கள் கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், கடந்த 14 ஆண்டுகளாக இன்று வரை சமுதாயப் பணியிலும், முத்துப்பேட்டையின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து TMMK சார்பாக பணியாற்றி வருகிறேன் என்றும், தற்போது நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு தான் போட்டி இடுகிறேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் தொடர்ந்து மக்கள் சேவையில் TMMK ரத்ததானம், மருத்துவ சேவை, ஆம்புலன்ஸ் சேவை, அனைத்து தரப்பு மக்களிடமும் TMMK வின் சேவைகள் பரவி உள்ளது என்றும் எனவே இந்த தேர்தலில் MMK இன்ஷா அல்லா அமோக வெற்றி பெரும் என்றும் அவர் தெருவித்தார்.மேலும் கடந்த 5 ஆண்டுகாலமாக பேரூராட்சி நிர்வாகத்தின் குறைகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெருவித்தார். மேலும் MMK கட்சியுடைய தேர்தல் வாக்குறிதிகள் இன்ஷா அல்லா விரைவில் வெளியிடப் படும் என்றும் அப்போது அவர் தெருவித்தார். மேலும் சட்ட மன்ற தேர்தலில் அ.தி.மு.க உடனான கூட்டணி வைத்த நீங்கள் ஏன் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி வைக்க வில்லை என்ற முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர். ச.ம.தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி வைத்து உண்மைதான் எனினும், முஸ்லிம்களின் பிரதிநிதித்த்துவத்தை அதிகப்படுத்துவது தான் MMK வின் நோக்கம் என்றும், அந்த நோக்கத்தை சிதைக்கும் விதமாக நாங்கள் கோரிய இடங்கள் முழுமையாக அ.தி.மு.க தலைமை ஒதுக்காததால் தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டி இடுகின்றோம். மக்கள் சேவையில் சாதி மதம் வேறுபாடின்றி செயல்படும் மனித நேய மக்கள் கட்சிக்கு முத்துப்பேட்டை மக்கள் அனைவரும் ஆதரவு தந்து வெற்றிப் பெறச்செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,ஊழலற்ற உள்ளாட்சி அதுவே "மனித நேய மக்கள் கட்சியின்" மனசாட்சி என்று அவர் தெருவித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நகர தலைவர். M . சம்சுதீன் உடனிருந்தார்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, அபு மர்வா (துபாய்)

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு கி. முஹைதீன் அடிமை போட்டி: இ.யூ.மு.லீ, தகவல்!!!


முத்துப்பேட்டை, அக்டோபர் 02 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவருக்கு பதவிக்கு போட்டியிட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைமை என்னை பணிந்துள்ளது என்று கட்சியின் வேட்பாளரும், கட்சியின் மாவட்ட செயலாளருமாகிய கி. முஹைதீன் அடுமை தெருவித்துள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர். முத்துப்பேட்டை நகர மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அவர்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தாமதமின்றி செய்து கொடுப்பேன் என்றும்,நான் அரசியல் வாழ்கையில் இ.யூ.மு.லீக்கில் 42 ஆண்டுகாலம் ஜாதிமத பேதமின்றி தான் பாடு பட்டு வருவதாகவும், குறிப்பாக மாநில மத்திய அரசு நலத் திட்ட உதவிகளை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்தந்த திட்டங்களை நிறைவேற்றி கொடுத்திருக்கிறேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் கல்வியின் பிளிப்புனர்வை முத்துப்பேட்டை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்த மேலும் ஏழை மாணவ மாணவிகளுக்கு ப அறக்கட்டளை மூலமாக உதவிகளையும், மேலும் அவர்கள் மேல்படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வந்துள்ளேன் என்றும் அவர் தெருவித்தார். தமிழ் நாடு ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்வோருக்கு குழுக்கள் மூலமாக தேர்ந்தெடுப்பதற்கு அவர்களுக்கு சிரமமின்றி அவர்களுக்கு பாடுபட்டு வருகிறேன் என்றும் தெருவித்தார். மேலும் தி.மு.க. உடனான கூட்டணி பற்றி முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 10 ஆம் தேதி அன்று ஆடுதுறை அடுத்து திருமங்கலக் குடியில் முஸ்லிம் லீக்கின் முதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுத்ததில், தி.மு.க கட்சியுடன் முஸ்லிம் லீக் தொடர்ந்து கூட்டணி வைக்கும் என்றும் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 10 % விழுக்காடு முஸ்லிகளுக்கு ஒதுக்கி தரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டு முஸ்லிம் லீக் தமக்கு வாய்ப்புள்ள இடங்களில் அவற்றை பெற்றுத்தர வேண்டி அவர்களிடம் தீர்மானம் நிறைவேற்றப் பட்டன. அவற்றை தி.மு.க. தலைவர் கலைங்கருக்கும் அந்த தீர்மானம் அனுப்பி உள்ளோம் என்றும் அவர் தெருவித்தார்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ். ASNS .அப்துல் பாரி, EK . முனவ்வர் கான்

துபாய் வாழ் முத்துப்பேட்டை நண்பர்கள் பேரூராட்சி தேர்தலில் SDPI க்கு ஆதரவு!!துபாய், அக்டோபர் 02 : துபாய் ஹோர் அல் அன்ஜ் முத்துப்பேட்டை நண்பர்கள் ரூமில் நடை பெற்ற கூட்டத்தில் நமதூர் ஊராட்சி மன்ற தேர்தலில் யாருக்கு நமது வாக்கு என்ற தலைப்பில் விவாதிக்க பட்டது அதில் தேர்தலில் பங்குபெறும் அணைத்து சகோதர்களும் நல்ல நிய்யதோடு செயல் படுகிரவர்கல்தான் என்றும் அதே சமயத்தில் கடந்த சில ஆண்டுகளாக சமுதாயத்திற்காக சிறப்பாக செயல் படுபவர் யார் என்று அனைவரிடமும் தனி தனியாக கேட்டு, ஒருமனதாக முடிவெடுக்கபட்டது அதில் மச்சான் என்று அழைக்கப்படும் எஸ் டி பி ஐயின் வேட்பாளர் அபு பக்கர் சித்திக் அவர்கள் தான் நமதூருக்கு சரியான வேட்பாளர் என்று முத்துப்பேட்டை நண்பர்கள் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்துள்ளனர் ஆகையால் முத்துப்பேட்டை வாசிகள் அனைவரும் நமது வேட்பாளர் சித்திக் அவர்களுக்கு வாக்களிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் இங்கு அணைத்து ரூமிற்கும் சென்று எடுத்து சொல்வதற்காக ஒரு கமிட்டியும் தேர்ந்தெடுத்துள்ளனர். இப்படிக்கு கடல் கடந்து வாழும் முத்துப்பேட்டை நலன் விரும்பிகள்.
source from muthupettai express

நமது நிருபர்

தண்டைய (எ) ஷாகுல் ஹமீது ( துபாய் )

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு போட்டியிடும் அ.தி.மு.க.வேட்பாளரின் பேட்டி!


முத்துப்பேட்டை, அக்டோபர் 02 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட அ.தி.மு.க. தலைமை என்னை பணிந்துள்ளது என்று கட்சியின் நகரச் செயலாளரும், வேட்பாலருமாகிய கோ. அருணாச்சலம் தெருவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர். அ.தி.மு.க. அரசு தற்போது ஆட்சியில் இருப்பதால் அந்த அரசு மக்களுக்கு செய்யும் பல்வேறு நலத்திட்டங்களை முத்துப்பேட்டை மக்களுக்கு மிக எளிதில் கிடைக்க மிகவும் பாடுபடுவேன் என்றும் அதில் எந்த ஒரு பாரபட்சமும் பார்க்க மாட்டேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் முத்துப்பேட்டை மக்களுக்கு இருக்கின்ற அடிப்படையான பிரச்சனை என்னவெனில் குடிநீர் பிரச்சனை தான், அதில் 18 ஆயிரம் மக்களுக்கு 18 லட்சம் லிட்டர் தேவைபடுகின்றது. தற்சமயம் 9 லட்சம் லிட்டர் தான் குடிநீர் வடிகால் வாரியத்தால் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இரண்டு மேல்நிலைத்தொட்டிகள் முத்துப்பேட்டையில் கட்டுவதற்கான செயல்களை செய்யப் போவதாகவும், அவர் தெருவித்தார். மேலும் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள மக்கள் குறுப்பிட்ட அளவிற்கு மேற்பட்ட மக்கள் வெளிநாட்டில் இருப்பதால் கியாஸ் பெறுவதற்கு கூடுதல் செலவு செய்து இடைதரகர் மூலம் பெற்று வருகின்றனர் என்றும், இதனை அரசுக்கு நான் வகிக்கின்ற பல்வேறு பொறுப்புகளின் அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து கேட்ட தின் விளைவாக கேஸ் ஏஜென்ட்டை முத்துப்பேட்டைக்கு வளங்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டையில் முதன் முதலில் STD உருவாக்கித்தந்ததும் முத்துப்பேட்டையில் 33 KV தடையற்ற மின்சாரம் கிடைக்க இங்கு மின்சார துணை மின்நிலையம் அமைக்கப்பட்டது. மேலும் 100 KV துணை மின்நிலையம் அமைக்க பவேறு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெருவித்தார். மேலும் முத்துப்பேட்டைக்கு பாதாள சாக்கடை திட்டத்தை அரசுக்கு கொண்டு சென்றுள்ளேன் என்றும் தெருவித்தார். முத்துப்பேட்டையை சுற்றுலாத் தலமாக மற்ற கண்டனத 10 ஆண்டுகளாக முழு மூச்சாக செயல் பட்டு வருவதாகவும், மேலும் சிறுபான்மை உடைய சொத்து, நலன்கள் ஆகியவிகள் பாதிக்கப் படாத வண்ணம் 38 ஆண்டுகளாக பாடுபட்ட வந்த நான் வருகின்ற காலங்களிலும் அந்த நிலையை பேணுவேன் என்றும் அவர் தெருவித்தார்.

Source from muthupettai express

தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ். EK.முனவ்வர் கான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)