முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டை புகாரி ஷரிபு நிறைவு நாள். நூற்றுக்கணக்காண முஸ்லிம்கள் கலந்துக் கொண்டனர்

ருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்கு தெருவில் உள்ள அரபு ஷாகிப் பள்ளிவாசலில் 24-ம் ஆண்டு புகாரி ஷரிபு நிகழ்ச்சி கடந்த 02.01.2014-ம் ஆண்டு அன்று துவங்கியது. 30 நாட்கள் நடைப்பெறும் இந்த புகாரி ஷரிபு நிகழ்ச்சியில் தினமும் அதிகாலை முதல் காலை 8.30 மணி வரை குர்ஆன், ஹதீஸ் மற்றும் மார்க்க சொற்பொழிவு ஒவ்வொறு நாளும் நடத்தப்பட்டன. தினமும் தப்ரூக் வழங்கப்பட்டன. அதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று அதிகாலை துவங்கி மதியம் 12.30 வரை நடந்தது. இதில் அதிரை லத்திப் ஆலிம், பள்ளப்பட்டி அப்துல் ரஹீம் ஆலிம் ஆகியோரின் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது. இதில் அனைத்து பள்ளி வாசல் ஆலிம்களும் கலந்துக் கொண்டு சிறப்பு பிராத்தனை செய்தனர். இதில் அதிராம்பட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை துளைசியாப்பட்டினம் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து முஸ்லிம்; ஆண்களும,; பெண்களும், சிறுவர் சிறுமிகளும,; நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் பாரிசேக்தாவுது10, சோhழநாடு நைனா முகம்மது, முகம்மது காசிம் மௌலா அபுபக்கர், ஜமால் முகம்மது, கவுன்சிலர் நாசர் ஆகியோர் செய்து இருந்தனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)