
முத்துப்பேட்டை, மார்ச் 19 : முத்துப்பேட்டை அடுத்து பெருகவாழ்ந்தான் காவல் சரகம் புத்தகரம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை அவர்களது மகள் மீனா (வயது 17) தனது உறவினருடன் தென்பரை கிராமத்துக்கு பஸ்ஸில் சென்றார். பின்னர் பஸ்ஸில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்ற போது தல மாணிக்கம் கிராமத்தை சேர்ந்த காமராஜ் மகன் தமிழ் நேசன் மற்றும் சிலர் காரில் மீனாவின் துணைக்கு வந்த பெண்ணை தாக்கிவிட்டு மீனாவை கடத்தி சென்று உள்ளனர். தகவல் அறிந்ததும் மீனாவின் தாய் செல்வி அண்ணாத்துரை...