முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

த.மு.மு.க வை சீண்டிப்பார்த்த ஜெயலலிதா!!! தலைநகரம் திணறியது!!!






சென்னை, ஜூலை 07: இறைவனின் பெரும் கிருபையினால் மிக மோசமான அடக்கு முறைகளையும் தாண்டி, காவல்துறையின் அராஜகங்களையும் மீறி, தடையை உடைத்து பல்லாயிரக்கணக்கான தமுமுக வினர் சென்னை எக்மோரில் குழுமினர். 


சென்னை நகரில் வரும் வழியெல்லாம் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தபோதும் காவல்துறையின் கண்களின் மன்னை தூவி விட்டு அவர்கள் சம்பவ இடத்தை நோக்கி விரைந்தனர். பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வந்திறங்கிய தமுமுகவினரை காவல் துறையினர் கைது செய்து மண்டபங்களுக்கு இழுத்து சென்றனர். 

இதையெல்லாம் மீறி காவல்துறையின் அராஜகங்களை கண்டித்து தமுமுகவினர் நகரின் பல இடங்களின் சாலை மறியல் செய்தனர். ஒரு வழியாக 3 மணிக்கெல்லாம் தக்பீர் முழக்கங்களோடு அதிரடிப்படை போல பாய்ந்து வந்த தமுமுகவினரை தடுக்க முடியாமல் காவல் துறை திணறியது. அடுத்த அரைமணி நேரத்துக்குள் கூட்டத்தின் எண்ணிக்கை 30,000 ஐ தாண்டியதும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினர். 

ஆண்களும் பெண்களும் காவல்துறையின் பேருந்துகளில் கைதாகி முழக்கங்களை எழுப்பிக் கொண்டே சென்றனர். காவல் துரையின் மண்டபங்கள் எல்லாம் நிரம்பி வழிந்ததும் இனி எங்களால் கைது செய்ய முடியாது என்று காவல்துறை கூறி விட்டது. உங்கள் மக்களை நீங்களே களைந்து செல்ல சொல்லுங்கள் என்று தலைவர்களிடம் கெஞ்சினர். கூட்டத்தினரோ 6 மணி வரை கலையாமல் அங்கேயே முழக்கமிட்டபடி நின்றனர். தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்ட காவல்துறையினர் தாங்களாகவே கலைந்த பின்னர் தான் மக்கள் கலைந்தனர் என்பது ஒரு புதிய சரித்திரம் ஆகும். 

"புயல் காற்றை தடுத்திட: விஞ்ஞானத்திற்கு வழியில்லை! 
தமுமுகவினரை அடக்கிட: தமிழ்நாட்டில் யாருமில்லை!
வாகனங்களை தடுத்து விட்டால்: வரும் வழி தெரியாதோ!
அடக்கு முறைகளை ஏவினால்: அதை தடுக்கும் முறை தெரியாதோ!

போன்ற முழக்கங்கள் உற்சாகத்தோடு முழங்கப்பட்டன. அப்போது காவல்துறையும், உளவுத்துறையும் தலைகவிழ்ந்து நின்றதை பத்திரிக்கையாளர்கள் மிகுந்த நகைப்போடு ரசித்தனர். 

ஜெயலலிதா நாடாளுமன்ற தேர்தலில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் தனக்கான தோல்வியை தேவை இல்லாமல் ஏற்படுத்திக் கொண்டார் என இப்பேரணியை பார்வையிட்ட மூத்த பத்திரிக்கையாளர் கூறினார்.

தேசிய நெடுஞ்சாலைகள் எங்கும் அனைத்து வாகனங்களையும் தடுத்த நிலையில், ரயிலில் வந்தவர்களையும் கைது செய்த நிலையில் 2000 பேருக்கு மேல உங்களை கூட விட மாட்டோம் என்று சவால் விட்ட சூழலில் தமுமுக வினர் தங்கள் போர் குணத்தின் மூலம் தங்கள் பலத்தை வெளிக்காட்டி உள்ளனர்.

உரிய நேரத்தில் இப்பேரணியை தடை செய்த தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து கலைஞர் வெளியிட்ட அறிக்கை பேரணிக்கு மற்றொரு விளம்பரத்தையும், பலத்தையும் பெற்றுக் கொடுத்தது. 

காட்சி ஊடகங்களான சன்டிவி, கலைஞர் டிவி, மக்கள் டிவி, புதிய தலைமுறை, தந்தி டிவி, பாலிமர் டிவி போன்றவை தடையை மீறி நடந்த பேரணியின் நீளத்தையும் அகலத்தையும் சிலிர்ப்புடன் காட்டி உற்சாகமான வர்ணனைகளை கொடுத்தது குறிப்பிட தக்கது. குறிப்பாக கேப்டன் டிவி ஒன்றரை மணி நேரம் நேரலையாக காட்டியது. 

இப்போது குளுகுளு கொடநாட்டில் கோடை வெயில் கொளுத்துவதாக தெரிகிறது.

யாரோடு மோத வேண்டும் என்ற விவரம் தெரியாமல் மோதியவர்கள் இப்போது தோல்வியை ஒப்புக் கொள்வார்களா?

நாங்கள் காற்றில் உதிரும் புளியம்பூக்கள் அல்ல... காண்டாமிருகத்தின் பிடரியை உலுக்கும் சிங்கக் குட்டிகள்! 

பகை எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும் அதை பந்தாடிய பிறகுதான் எங்களுக்கு ஓய்வு என்பது தெரியாதா? இறைவன் பெரியவன்! அவனே அனைத்தையும் தீர்மானிப்பவன்!

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)