முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு? கவனிப்பாரா தமிழக முதல்வர்??


புதுக்கோட்டை, ஆகஸ்ட் 11 : புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் சிறுமருதூர்.அங்கு இஸ்லாமிய மக்களும், உடையார் இன மக்களும், முக்குலத்தோர் இன மக்களும் , தலித் மக்களும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இஸ்லாமிய மக்களுக்கு நிலம் சொத்துகள் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது இவற்றின் மீது நெடுங்காலமாக கண் வைத்து இருந்த அந்த ஊரை சார்ந்த ராஜநாயகம் என்பவர் அங்கு வாழ்ந்து வந்த 30 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களை குண்டர்களை கொண்டு அடித்து சித்திரவதை செய்து கொடுமை படுத்தினார், பின்பு அனைவரின் சொத்துகளையும் பறித்து கொண்டு அந்த மக்களை ஊரை விட்டே விரட்டி விட்டார். எந்த வம்புக்கும் போகாத அந்த அப்பாவி மக்கள் எதிர்க்க தைரியம் இல்லாத நிலையில் அவர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் , உயிரோடுதான் இருக்கிறார்களா? இல்லையா என தெரிய வில்லை. இந்த பிரச்சினையை கிளப்பிய சில சமுதாய அமைப்புகள் கூட வாங்க வேண்டியதை வாங்கி கொண்டு அமைதியாய் இருந்து விட்டன.

அந்த அப்பாவி மக்களை விரட்டியதோடு இல்லாமல் அங்கு அமைந்து இருந்த பழமையான ஜும்மா பள்ளிவாசலும்தரை மட்டமாகி உள்ளது.இவ்வளவு அநியாயம் நடந்தும் இந்த விஷயம் வெளி உலகத்துக்கு வராமல் மிகவும் கவனமாக பார்த்துகொண்டார் ராஜநாயகம்.

கடந்த பொது தேர்தலில் அறந்தாங்கி தொகுதிக்கு நல்ல பிள்ளையாக சீட்டும் வாங்கி தி.மு.க. ஆட்சியில் மேல் மக்கள் இருந்த வெறுப்பின் காரணமாக இவரும் அந்த அலையில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவுடன் அதிகாரம் கைக்கு வந்து விட்டது என்ற மமதையில் அந்த விரப்பட்ட மக்களில் ஒருவரான நைனா முகமது என்பவர் வாசித்த வீட்டை அபகரித்து இன்று அந்த வீட்டில் தான் குடி இருக்கிறார்.
பள்ளிவாசல் இருந்த இடத்தின் மேல் தார் சாலை போட்டு பள்ளிவாசல் இருந்த அடையாளமே இல்லாமல் செய்து விட்டார். ஆனால் வருவாய் துறையின் பதிவுகளில் இவை அனைத்தும் தெளிவாய் உள்ளது. இன்று வரை ராஜநாயகம் வசிக்கும் வீடு அந்த இஸ்லாமிய சமுதாய நண்பர்கள் பெயரில் தான் அணைத்து ரெக்கார்டுகள் உள்ளன. பள்ளிவாசலை இடித்து அதன் மேல சாலை போட்டு எல்லா வற்றையும் அபகரித்து உள்ளார். பாதிக்க பட்டவர்கள் கேட்கவே பயபடுகின்றனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை. உயிரோடுதான் உள்ளார்களா என்பது கூட சந்தேகமாக உள்ளது.

எல்லோரையும் விரட்டி விட்டு இன்று அவர் மட்டும் சந்தோசமாக இருக்கிறார்..

சமூக சேவகர்கள் யாராவது இதை தட்டி கேட்டால் தன்னுடைய பதவி அதிகாரங்களை காட்டி மிரட்டுகிறார் . இவரால் அ. இ. அ. தி. மு.க கட்சிக்கும் தூய்மையான ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படும் சூழல் உள்ளதால் இதன் உண்மை நிலைமையை தமிழகமுதல்வர்
உளவுத்துறையின் மூலமாக அறிந்து அவர் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் , இஸ்லாமிய அமைப்புகள் , மனித உரிமை இயக்கங்கள் போன்றவை முன் வர வேண்டும். எந்தவித பிரச்சனையிலும் ஈடுபடாத அந்த மக்களின் நிலைமை என்று என்ன வென்றே தெரியவில்லை. அதிகாரம், குண்டர்களின் துணை என வலம் வரும் இவரை போன்றவர்களை எதிர்ப்பது கொஞ்சம் சிரமம் தான். ஆனால் மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் சர்வாதிகாரன் ஹிட்லருக்கு ஏற்பட்ட நிலைமை தான் இவரை போன்றவர்களுக்கும் ஏற்படும் என்பதனை நாம் தெரிய படுத்துவோம்..

தயவு செய்து இந்த செய்தியை படிக்கும் அனைத்து நண்பர்களும் இதை share செய்யவும். எங்காயாவது ஒளிந்து வாழும் அந்த மக்கள் வெளிச்சத்தின் முன்னே வர ஒரு தைரியம் கிடைக்கும்.
கேட்க கூட நாதி இல்லாத அந்த இஸ்லாமிய குடும்பங்களுக்காக சகோதருக்காக நம்மால் ஆனா உதவியை செய்வோம்.

வெளி உலகத்துக்கு வராமல் இருக்கும் இந்த செய்தியை வெளி உலகத்திற்கு எப்படி கொண்டு வந்து அவர்களுக்கு தண்டனை வாங்கி தந்து பாதிக்கப்பட்ட அந்த மக்கள் தன்னுடைய சொந்த வீட்டுக்கு செல்லும் நாளை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.. மக்களே ஒன்று கூடுங்கள்..
source from: www.muthupettaiexpress.blogspot.com
தகவல் - முஹம்மது யூசுப், கோட்டைப்பட்டினம்,

முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியினர் நடத்திய 3 ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி.

துபாய், ஆகஸ்ட் 11 : முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியினர் சார்பில் மாபெரும் மூன்றாம் ஆண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமான முறையில் துபாயில் உள்ள அல் தவார் பார்க் என்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுமார் 5 மணியிலிருந்து முத்துப்பேட்டை மக்கள் கூட்டம் கூட்டமாக அல் தவார் பார்க்கை நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக மிக ஆர்வத்துடன் படையெடுத்து வந்த வண்ணமாய் காட்சியளித்தது.

இங்கு நோன்பு திறப்பதற்காக நோன்பு காஞ்சி, பல்வேறு விதமான பல வகைகள், ஜூஸ்கள், மற்றும் பேரிச்சை பழங்கள் ஆகியவைகள் இப்தார் விருந்திற்காக வைக்கப்பட்டிருந்தது. மேலும் சரியாக 6 மணிக்கெல்லாம் அல் தவார் பார்க் முத்துப்பேட்டை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. பின்னர் சரியாக 7.05 மணியளவில் நோன்பு திறக்கப்பட்டு மக்ரிப் தொழுகையும் இங்கு நடைபெற்றது. தொழுகையின் முடிவின் போது சிறப்பு பயானும் இங்கு நடைபெற்றது. பின்னர் சிறப்பு விருந்தும் அளிக்கப்பட்டு, இந்த நிகழ்ச்சி மிகவும் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

மேலும் நிகழ்ச்சியின் முடிவில் முத்துப்பேட்டை சகோதரர்கள் ஒருவருக்கொருவர் தங்களுடைய அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும், இது போன்ற நிகழ்ச்சி துபாய் வாழ் முத்துப்பேட்டை நண்பர்களுக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது என்றும் இதில் கலந்து கொண்ட அனைவரும் வாழ்த்தினார்கள். மேலும் இது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் இறைவனிடம் பிராத்தித்தனர். இந்நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிகளை முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

துபாயிலிருந்து முத்துப்பேட்டை J .சேக் பரீது

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)