முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


இஸ்லாமியர்களுக்கும்,கிறிஸ்தவர்களுக்கும் இலவச தொழிற் பயிர்ச்சி முகாம்:


முத்துப்பேட்டை, நவம்பர் 12 : தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் (TAMCO) மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (NFDC) இணைந்து இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இலவச தொழில்நுட்ப பயிர்ச்சி முகாமை நடத்தி வருகிறது. இதற்கான ஆவணங்களை கீழே கொடுக்கப் பட்டுல்லுள்ளது அவற்றை சரி பார்த்து அனுப்பவும்.
1 ) 10 ஆம் வகுப்பிற்கு மேல் படித்திருக்க வேண்டும்.
2 )18 வயதிலிருந்து 35 வடதிருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3 ) குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திருக்கு குறைவாக இருக்க வேண்டும்.
4 ) கடைசியாக படித்த மதிப்பெண் சான்று (MARK SHEET ), இட மாற்று சான்றிதல் (TC ) ஆண்டு வருமானச் சான்றுதல் (INCOME CERTIFICATE ) போன்றவை சமர்பிக்க வேண்டும்.
5 ) இந்த தொழில்நுட்ப பயிர்சிக்கு வகுப்பு ஒரு மாத காலத்திற்கு மட்டுமே நடைபெறும்
எனவே சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவர், இவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தொடர்புக்கு:

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NFDC) கோ - ஆப் டெக்ஸ் வேர் அவுஸ் பில்டிங்
முதல் மாடி NO: 350 , பாந்தியன் சாலை,
எழும்பூர், சென்னை - 600 008 .
தொலை பேசி எங்கள்: 044 - 2819 2407 , 2819 2506 , 2819 1203 .
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்

அக்பர் அலி. B.sc ., BL . (ஆசாத் நகர்)

முத்துப்பேட்டை மக்களும், மார்கத்தின் ஈடுபாடுகளும்?முத்துப்பேட்டை, நவம்பர் 11 : முத்துப்பேட்டையில் ஒரு காலம் இருந்தது இங்கு முழுமையான மதரச இல்லாவிட்டாலும் கூட ஊரில் உள்ள பெரும்பாலான ஆண்களும், பெண்களும் இமாம்களுக்கு சமமாக மார்கத்தை விளங்கி குர்ஆனைத் தஜ்வீத் முறையில் ஓதி இமாமத் செய்கின்ற அளவிற்கு முத்துப்பேட்டை மக்கள் இருந்து வந்தார்கள். மேலும் பள்ளி வாசல்களிலேயே அதிக காலங்கள் தங்குபவர்களாகவும், அதிக தொடர்புடையவர்களாகவும் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றோ அந்த அளவிற்கு மார்கத்தை விளங்கியவர்களையும் அதிகமாக காணுவது என்பது வெறும் கேள்விக்குறியாகத்தான் தற்போது இருந்து வருகிறது. அதே சமயம் மார்க்கம் என்ற பெயரில் பல்வேறுப் பிரச்சனைகளை தினித்து வருகின்றார்கள். குறிப்பாக சொல்லபோனால் ஊரின் ஒற்றுமையை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் பள்ளியின் தொடர்பற்றவர்கலாகவும், மது, சூது, விபச்சாரம் ஆகியவைகளுக்கு அடிமைகளாகவும் இருந்து வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் குர்ஆனை அரைகுறையாக ஓதி விளங்கியவர்கள் பள்ளிக்கிக்கூட தொழ வராத அவள நிலையை காண முடிகிறது. நம் ஊரில் உள்ள பள்ளிகள் எல்லாம் அதிக நேரம் பூட்டப் பட்டும் (தொழுகை நேரங்கள் தவிர்த்து), பள்ளியில் உள்ள குர் ஆன்களெல்லாம் புளிதியடைந்தும் காணப்படுகின்றன. கடந்த ரமலான் மாதத்தில் நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை உங்களுக்கு நினைவூட்ட கடமைபட்டுள்ளேன். அவை ஒரு பள்ளியில் ஒரு நாள் கூட ஒருவரும் குர்ஆனை எடுத்து ஓதவில்லை, அதன் காரணமாக குர்ஆன் அனைத்தும் உள்ளே உள்ள அறைகளில் வைக்கபட்டிருக்கிறது. இன்னொரோ பள்ளியில் தொழுவதற்கு இமாமைத் தவிர்த்து ஒரு ஆளை பார்த்தல் கூட அது ஒரு பெரிய விசயமாகத்தான் நமக்குத் தெருகிறது. ஏன் இந்த நிலை? மறுமையின் பயம் எங்கே போனது? அல்லாஹ்வின் அச்சம் எங்கே போனது? அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்கள் எங்கே போனார்கள்? அல்லாஹ் வின் பள்ளிகள் சபிக்க ஆரபித்து விட்டால் நம் மக்களில் நிலைமை என்னவாகும்? மறுமையில் நம்மவர்களின் நிலைமை என்னவாகும்?
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
இந்த நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும்:

1) முதலில் ஒவ்வொரு முஹல்லாவிலும் இஸ்லாமிய ஆரம்ப பாடசாலைகள் (மதரசாக்கள்) முழுமையாக ஆரம்பிக்கப் படவேண்டும் அதில் நம் குழந்தைகள் பங்கு பெற்று பயனடைய வேண்டும்.

2) ஒவ்வொரு மதரசாக்களிலும் நமது குழந்தைகளுக்கு குர் ஆனை தஜ்வீத் முறைப்படி முறையாக கற்றுகொடுக்க வேண்டும்.

3) குர் ஆனை முழுமையாக ஓதத்தெரியாத நமதூர் முதியவர்களுக்கும் அந்த அந்த முஹல்லாவில் மதரசாக்களை உருவாக்க வேண்டும்.

4) மேலும் எந்த ஒரு நல்ல விசயத்தையும் நம்மோடு நிறுத்திக்கொள்ளாமல், மற்ற மக்களுக்கும் நபி (ஸல் ) அவர்களின் வலியில் அவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும், மேலும் நன்மையின் பக்கம் மக்களுடைய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

சிந்திங்கள் நாம் அனைவரும் சொர்கத்திற்கு சொந்த காரவர்கலாக மாறலாம் நீங்கள் முயற்சித்தால் இன்ஷா அல்லாஹ்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ஆசிரியர்.சாலிஹ் முக்தார். (முத்துப்பேட்டை) ரிப்போர்ட்டர் இல்யாஸ்.

ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு.


உலகம்,நவம்பர் 11 : ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து பிரிட்டனின் சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழு ஆய்வுகளை நடத்தியுள்ளன.இந்த ஆய்வு முடிவு பற்றித் தெரிவித்துள்ள குழுவின் அறிக்கையில் மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவதனால் உடலுக்கு நோய் இல்லாமல் பாதுகாக்கின்றது எனக் கூறப்படுகின்றது.19 முதல் 64 வயது வரையில் உள்ளவர்களின் 12 ஆயிரத்து 68 மருத்துவ ஆவணங்களைப் ஆய்வு செய்தே இந்த முடிவுக்கு மருத்துவக் குழு வந்திருக்கிறது.இந்த மருத்துவக்குழுவின் அறிக்கையின் படி, பெரும் பாலானவர்கள் திட உணவுக்கு முன்பாக கோப்பி அல்லது தேநீர் போன்றவற்றை அருந்த விரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.பால் மற்றும் பருப்பு வகைகள் கல்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றைத் தரும் என்பதால் அவற்றை எடுத்துக் கொள்வதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)