
முத்துப்பேட்டை ஜூலை 26 : அலையாத்திக் காடுகளுக்குப் பேர் போன இடம்தான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை. இதற்கு மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், என்று எங்கு இருந்து சென்றாலும் கிட்டத்தட்ட ஒரே பயண நேரம்தான் முத்துப்பேட்டைக்கு. பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோவில் கொஞ்சம் தூரம் பயணமானாள் ஆறும் கடலும் சங்கமிக்கும் இடம்தான் 'லகூன்!'சுற்றிலும் வேர்களைத் தண்ணீருக்கு மேல் வைத்து சுவாசிக்கும் அலையாத்தி மரங்கள் காடாகப்...