முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டையில் பூட்டிய அறைக்குள் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் பயங்கர ரகளை.!!


முத்துப்பேட்டை, ஜூலை 30 : முத்துப்பேட்டை பேரூராட்சியின் சாதாரண கூட்டம் பேரூராட்சி தலைவர் கோ. அருணாச்சலம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி அலுவலக மாடியில்தான் கதவுகள் திறந்த நிலையில் நடைபெறுவது வழக்கம், ஆனால் கூட்டம் துவங்குவதற்கு முன்பு கதவுகள் பூட்டப்பட்டு பூட்டிய அறைக்குள் துவங்கிய கூட்டம் சில மணி நேரத்தில் ஆ. ஊ.., என்றும் அய்யோ, அம்மா, என்றும் கடுமையான புரியாத வாக்குவாதமும் சேர்களை தூக்கி வீசியது, டேபிளை தட்டிய சத்தமும் நீண்ட தூரத்துக்கு கேட்டது. அதில் பழைய பேருந்து அருகில் என்பதால் பயணிகள், வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் சப்தத்தை நோக்கி ஓடினார்கள். பின்பு பூட்டிய அறைக்குள் அந்த சப்தம் வருவதால் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், பயத்திலும், அதிர்ச்சியிலும் அலுவலகத்தை சூற்றி நின்று வேடிக்கைப் பார்த்தனர். முத்துப்பேட்டை அசம்பாவிதம் நிறைந்த ஊர் என்பதால் இவற்றை பெயந்து சில பேர் ஓட்டமும் பிடித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.

இது குறித்து 9 வது வார்டு கவுன்சிலர் பாவா பகுருதீன் கூறியதாவது:
இங்கு பிரச்சனை நடக்கபோகிறது என்று தெரிந்த செயல் அலுவலரும், ஏ.1.கிலார்டும், திருவாரூர் கூட்டத்திற்கு போறோம் என்று சொல்லிவிட்டு அவர்கள் ஒளிந்து விட்டனர். இதில் கணக்கு வழக்குகளை கேட்டால் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணி இந்த நாடகத்தை நடத்தி தப்பித்துல்லார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து 13 வார்டு கவுன்சிலர் நாசர் கூறியதாவது:
எனது வார்டில் பைப்பு விரிவாக்கம் பணிகள் செய்து தருமாறு எனது தலைவரிடம் கேட்டுக்கொண்டிருக்கும் போது, 9 வது வார்டு கவுன்சிலர் பாவா பகுருதீன் குருக்கிட்டதால்தான் இந்த பிரச்சை அதிகமானது என்று அவர் தெரிவித்தார். மேலும் இதில் ரகளை ஏற்பட்டது உண்மைதான் என்றும், டேபில், சேர் உடைய வில்லை என்றும் அவர் தெரிவித்தார்.ஆனால் பூட்டிய அறைக்குள் எதோ மர்மம் உள்ளதாக போது மக்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

முத்துப்பேட்டை தர்ஹாவில் நடைபெற்ற மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..முத்துப்பேட்டை, ஜூலை 29 : முத்துப்பேட்டை ஜாம்புவோனோடையில் நேற்று மாபெரும் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தர்ஹா முதன்மை அறங்காவலர் S.S. பாக்கர் சாஹிப் தலைமை வஹித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழக உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் ஆர். காமராஜ் கலந்து கொண்டு நோன்பு திறந்தார், அப்போது அவர் பேசியதாவது. இந்த நோன்பில் இஸ்லாமிய சகோதரர்கள் ஒரு மாதா காலம் தங்களின் உடலை வர்த்தி நோன்பு இருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கிறது என்றும், மேலும் இந்த சகோதரர்களிடம் கலந்து கொண்டு நோன்பு திறப்பதில் மிகவும் சந்தோசப்படுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜாதி, மதம் பாராமல் தமிழகத்தில் புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன. என் ரமலான் மாதத்தில் கூட 2000 பள்ளிவாசலுக்கு நோன்பு கஞ்சி காட்ச அரிசி வழங்கி உள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இப்பகுதியின் சுற்றுலா தளமான லாகூன் பகுதிக்கு விரைவில் நிதி வழங்கப்படும் என்றும் மேலும் இந்த நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட அனைவரும் காலம் முழுவதும் அண்ணன் தம்பிகளாக வாழ வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கே. உலகநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெயலட்சமி, அம்பிகாபதி, ஒன்றிய kulu தலைவர் R.K.P. நடராஜன், கோட்டூர் ஒன்றிய குழுத்தலைவர் ஜீவானந்தம், அ.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் வி.என்.சண்முகம், முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் கோ. அருணாச்சலம், வர்த்தக கழகத் தலைவர் ராஜாராம், துணைத் தலைவர் முஹைதீன் பிச்சை, பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் செம்பை ராமச்சந்திரன், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் முஹைதீன் அடுமை, ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக தர்ஹா டிரஸ்டி தமீம் அன்சாரி வரவேற்று பேசினார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்

O.M. சுபைத் கான்,

மவுத்து அறிவிப்பு: " ஹாஜிமா ஆசியா மர்யம்"


முத்துப்பேட்டை, ஜூலை 29 : அலியார் சந்து மர்ஹும் ஹாஜி முஹம்மது அவிக்கனார் அவர்களின் மனைவியும், முஹம்மது அலி, முஹம்மது யூனுஸ் ஆகியோரின் தாயாரும், இம்ரான், இர்ஃபான் ஆகியோரின் பாட்டியாரும், S.M. யூசுப் அவர்களின் மாமியாருமாகிய "ஹாஜிமா ஆசியா மர்யம்" அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)

அண்ணாரின் ஜனாஸா இன்று இரவு 7 மணியளவில் குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்
முஹம்மது அலி சகோதரர்கள்.

source from: www.mttexpress.com
நமது நிருபர்

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டை குத்பா பள்ளி வாசலில் தொழுகை நேரம் அறிவிக்கும் மின்னணு இயந்திரம்.முத்துப்பேட்டை, ஜூலை 29: முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட குத்பா பள்ளி வாசலில் தொழுகை நேரம் அறிவிக்கும் புதிய மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் திருவாரூர் மாவட்டத்திலேயே இந்த பள்ளியில் தான் முதலாக வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளியில் பல்வேறு சகோதர சகோதரிகள் தங்களது நன்கொடைகளை வாரி வழங்கி வருகிறார்கள். அதன் அடிப்படையில் இந்த புதிய மின்னணு இயந்திரத்தை ஜனாப். அல்ஹாஜி B.A. மைநூர்தீன் அவர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்

O.M.சுபைத் கான்

மவுத்து அறிவிப்பு: "முஹைதீன் பக்கீர்"


முத்துப்பேட்டை, ஜூலை 26 : தெற்குத் தெரு மர்ஹும் அஹமது ஹாஜா அவர்களின் மகனும், பேட்டை அய்துருஸ் சகோதரர்களின் சிறிய தகப்பனாரும், மர்ஹும் நெய்னா மூஸா, மர்ஹும் அப்துல் மஜீத், அப்துல் ரஹ்மான் ஆகோயோரின் மச்சானும், நாட்சிக்குளம் காதர் முஹைதீன் அவர்களின் மாமனாரும், அப்துல் மஜீத் அவர்களின் பாட்டனாரும், தாஜ் ஹோட்டல் ஷாஜஹான் அவர்களின் தகப்பனாருமாகிய "முஹைதீன் பக்கீர்" அவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்). அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் அரபு சாஹிப் பள்ளிவாசல் மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
source from: www.mttexpress.com
அறிவிப்பவர்.
H .முஹம்மது பாதீம்

நமது நிருபர்

K.M .காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டையில் விரைவில் திறப்பு விழா காண தயாராகும் ஆசாத் நகர் பள்ளி வாசல்.


முத்துப்பேட்டை, ஜூலை 26 : அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் அந்த ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக... திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்மா மஸ்ஜித் அழகிய வடிவமைப்பில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவுற்று திறப்பு விழாவும் காண உள்ளது. (அல்ஹம்து லில்லாஹ்) இந்த இறை இல்ல கட்டுமானப் பணிகளுக்கு இந்த நோன்பு நாட்களில் தங்களுடைய சதக்க, ஜக்காத் ஆகிய உங்களது நன்கொடைகளை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். எவர் ஒருவர் இவ்வுலகில் அல்லாஹ்வுக்காக ஒரு மாளிகையை கட்டுவரோ, அவருக்காக அல்லாஹ் மறுமையில்(சுவர்கத்தில்)அழகிய மாளிகையை கட்டுகிறேன் என தனது திருமறையாம் குர்ஆனில் கூறியுள்ளான். இதனை உணர்ந்து சகோதர, சகோதரிகள் தங்களது நன்கொடைகளை அல்லாஹ்வின் ஆலய கட்டுமானப் பணிகளுக்கு வாரி வழங்குகள். அல்லாஹ்வின் அருளை பெறுங்கள். தங்களது நன்கொடைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

MOHAMED JALALUDEEN
A/C,NO: MJ2 609201022473
ICICI BANK
MUTHUPET. BRANCH

மேலும் தொடர்புக்கு
வழக்கறிஞர். ஜனாப். தீன் முஹம்மத்.
தொலைபேசி எங்கள்: 0091 - 98655 57556, 99654 18801.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
இப்படிக்கு

ஆசாத் நகர் பள்ளி நிர்வாகம்.

தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம்

இளம்பெண்கள், குடும்பப் பெண்கள், யாருடன் கொஞ்சிப் பேசலாம்? ஓர் பார்வை.!!!


உலகம், ஜுலை 26 : பெண்கள் எவரிடமும் கொஞ்சிப்பேசக்கூடாது என்பதல்ல! உங்கள் கணவரிடம் எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சிப்பேச வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதைவிட அதிகமாகக்கூட கொஞ்சிப்பேசலாம். கொஞ்சிப்பேசுங்கள் கெஞ்சிப்பேசுங்கள்... இது தம்பதிகளின் இல்வாழ்க்கை செழித்தோங்க உதவும். குழந்தைகளிடமும்.. ஏன் உங்கள் தாயாரிடமும் சகோதரிகளிடமும் கூட கொஞ்சிப்பேசுவதில் தவறில்லை. அது குடும்பத்தில் பாசத்தை வளர்க்கும்.]

ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.
ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். இந்நிலையில் பெண்கள் கொஞ்சிப்பேசினால் என்னவாகும் என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ளலாம். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும்.

ஒரு பெண் ஓர் ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் வாழும் சமுதாய அமைப்பு முறை மேற்கண்டவாறு கோடிட்டுக் காட்டுகின்றது. ஆடவனிடம் பெண்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற நிலைபாட்டை சமுதாயம் அங்கீகரிக்கின்றது. காரணம் இதைச் சமுதாயம் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கின்றது.

இஸ்லாமிய மார்க்கம் இதைத் தான் வஇயுறுத்திக் கூறுகின்றது. பெண்கள் ஆண்களிடம் குழைந்து, கொஞ்சி, நயந்து பேசினார்கள் என்றால் அது அவர்கள் சபல உணர்வுகளுக்குக் காட்டும் பச்சைக் கொடியாகி விடும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.
''நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்''. (அல்குர்ஆன் 33:32)
அதுவும் அல்லாஹ் யாரை நோக்கிக் கூறுகின்றான்? சதாவும் வஹீயின் பாதுகாப்பில் இருந்து கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியரை நோக்கிக் கூறுகின்றான் எனும் போது மற்றவர்களின் நிலைமை எம்மாத்திரம்?
அல்லாஹ் பெண்களை வியாபாரம், தொழில், கல்வி, குடும்ப விவகாரங்கள் தொடர்பாக வெளியே செல்வதைத் தடுக்கவில்லை. ஆனால் இந்த விவகாரங்களில் வரைகளையும், வரம்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால் இந்த வரம்புகள் இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

தொடரும் அவலங்கள்

பெண்கள் இன்று வெளியே ஆட்டோ, கார், பஸ் ஆகியவற்றில் பயணம் செய்கின்றனர். இவற்றிற்கு மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் ஆட்டோ, கார், பஸ் டிரைவர்கள் கண்டக்டர்களிடம் அநாவசியமான பேச்சுக்கள்.
மளிகை, துணி, காய்கறி கடைகளில் சென்று பொருட்கள் வாங்குவதற்கு மார்க்கம் தடை விதிக்கவில்லை. ஆனால் அந்தக் கடைகளில் அதிலும் குறிப்பாக ஏ.சி. போடப்பட்ட நகைக் கடைகளில் ஒய்யாரமாக, உல்லாசமாக உட்கார்ந்து ஊர்பட்ட கதைகளைப் பேசிக் கொண்டிருப்பது.
மேற்கண்ட வியாபாரிகள் வீடுகளுக்கு வருகின்றனர். இதல்லாமல் கணவனின் நண்பர்கள் என்று பலர் வருகின்றனர். இத்தகையோரிடம் கட்டுப்பாடற்ற முறையில் பேச்சுக்கள் நீள்கின்றன.
தொலைபேசியில் தொடரும் பேச்சுக்கள் இன்று தொலைபேசி முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாகும். தொழில், வியாபாரம், குடும்பம், மருத்துவம் இன்னும் எண்ணிலடங்கா துறைகள் ரீதியிலான இதன் பயன்பாடுகளை நாம் பட்டியஇட முடியாது. இன்று வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்களின் ஒரேயொரு ஆறுதல் தொலைபேசியில் தங்கள் துணைவியருடன் உரையாடுதல் தான். ஒரு தடவை மனைவியுடன் போனில் பேசி விட்டால் ஏதோ தாயகம் சென்று திரும்பிய ஒரு திருப்தி கிடைக்கின்றது.

இப்படிப்பட்ட இந்தத் தொலைபேசி, முன் பின் தெரியாத பலருடன் பல கட்டங்களில் நீண்ட நேரம் பேசுவதற்குப் பயன்படுத்தப் படுகின்றது. வட்டிக் கடைக்காரர்கள், வீடியோ கேஸட் விநியோகிஸ்தர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போன்றவர்களிடம் பேசுவதற்காக இந்தத் தொலைபேசிகள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகின்றன.
பாட்டு கேட்டு போன் செய்தல் டிவிக்கள் அதிலும் கலர் டிவிக்கள் ஒவ்வொரு வீட்டிலும் சீரழிய ஆரம்பித்த பின் மார்க்கோனி கண்டுபிடித்த ரேடியோவுக்கு மவுசு இல்லாமல் போனது. நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகள்.

தமிழகத்தில் உள்ள மக்களை நரகப் படுகுழியில் கொண்டு போய் தள்ளுவதற்காக சன் நெட்வொர்க் நிறுவனத்தார் சன் டிவி, கேடிவி என்று எக்கச்சக்க சேனல்கள் ஆரம்பித்தது போதாது என்று சுமங்கஇ போன்ற கேபிள் டிவிக்களையும் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
பார்ப்பதற்கு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பார்த்துக் கெட்டுப் போங்கள்! பார்த்துக் கெட முடியாத இடங்களில் கேட்டுக் கொண்டே கெட்டுப் போங்கள் என்று சூரியன் எஃப்.எம். ஆரம்பித்துள்ளனர்.

உங்களை நாங்கள் கெடுக்காமல் சும்மா விட மாட்டோம் என்று இந்த எஃப்.எம். அலைவரிசைகள் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றன.
இப்போது இரண்டு சக்கர வாகனங்களில் செல்லக் கூடியவர்களும் ஒரு ரேடியோவை கட்டிக் கொண்டு பாட்டைக் கேட்டுக் கொண்டு பயணத்தைத் தொடர்கின்றனர்.

இந்த எஃப்.எம். ரேடியோக்கள் கையாளும் புது முறை, கலாச்சாரத்தை மேலும் சீரழிக்கத் துவங்கியுள்ளது. வீட்டுப் பெண்களிடம் போன் செய்து உங்களுக்குப் பிடித்த பாட்டு என்ன? என்று கேட்கின்றனர். அதற்கு பாத்திமா பீவியும், பரக்கத் நிஸாவும் எங்களுக்கு இன்ன பாட்டு வேண்டும் என்று கேட்கின்றனர். இந்தப் பாட்டை விரும்புவதற்குக் காரணம்? என்று கேட்கும் போது, நாங்கள் திருமணம் முடித்ததும் முதன் முதஇல் பார்த்த படத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது என்று பதில்.

அடுத்து நிலைய அறிவிப்பாளர், உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்? என்று கேட்கிறார். உடனே இந்தப் பெண், விஜய் என்றோ அஜீத் என்றோ தங்களுக்குப் பிடித்த நடிகரைக் கூறுகின்றார்கள். டிவியிலும் இது போன்ற கேள்விக்குப் பதில் சொல்லும் பெண்களுக்கு அருகில் கணவனும் வெட்கம் கெட்டுப் போய் நிற்கின்றான்.

இது மாதிரி சொல்லும் போது இப்படிப்பட்டவளை இழுத்துப் பிடித்து சாத்தாமல் எருமை மாடு போல் அட்டியின்றி ஆத்திரமின்றி அப்படியே அசையாமல் நிற்கின்றான். ஒரு பெண்ணின் உள்ளம் அனைத்தும் தான் கொண்ட கணவனுக்கே சொந்தம் என்ற நிலை மாறி அடுத்தவனுக்கும் அங்கு இடமிருக்கின்றது என்றாகி விடுகின்றது. அதாவது தனது கணவனை விட அஜீத் தான் தனக்குப் பிரியம் என்ற படுமோசமான நிலைக்கு இவள் போகின்றாள் என்பதை அவளுடைய வார்த்தையே எடுத்துக் காட்டுகின்றது.

பெண்களைப் பற்றி இங்கு எழுதுவதால் ஆண்கள் ரொம்ப சுத்தம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. அடுத்து அப்படியே மைக்கைத் திருப்பி கணவனிடம், உங்களுக்குப் பிடித்த நடிகை யார்? என்று கேட்கிறார்கள். இந்த ஆடவனும் வெட்கமில்லாமல் ஏதேனும் ஒரு விபச்சாரியின் பெயரைக் கூறுகின்றான். டி.வி. அறிவிப்பாளர்களைப் பொறுத்தவரை குடும்பக் கலாச்சாரத்தை குழி தோண்டிப் புதைப்பது என்ற தீர்மானத்தோடு தான் வருகின்றார்கள். அதனால் தான் ஆணிடத்தில் கேட்கும் போது, பிடித்த நடிகை யார்? என்று கேட்பதும் பெண்ணிடத்தில், பிடித்த நடிகன் யார்? என்று கேட்பதும் இவர்களது வாடிக்கையாக உள்ளது.
இப்போது விஷயத்திற்கு வருவோம். எஃப்.எம். ரேடியோ வந்த பிறகு அனைத்துப் பேருந்துகளிலும், டீக்கடைகளிலும் இந்தக் குரல் தான் ஓங்கி ஒலிக்கின்றது.

இந்தப் பெண்மணி வீட்டிஇருந்து பேசுகின்ற இந்தப் பேச்சைக் கேட்டு பேருந்தில் பயணம் செய்யும் முஸ்இலிம்கள் வெட்கித் தலை குனிய வேண்டியிருக்கின்றது. இதில் இந்தப் பெண் தான் வசிக்கின்ற முகவரி, தன் கணவர் பார்க்கும் வேலை, தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் மாமியார் மருமகள் சண்டை உட்பட எதையும் விடாது சொல்இலித் தொலைக்கின்றாள்.
இதில் நிலைய அறிவிப்பாளரிடம் பேசும் போது கொஞ்சுகின்ற கொஞ்சல், சிணுங்குகின்ற சிணுங்கல், குழைகின்ற குழைவு இத்தனையும் கேட்கும் போது உண்மையில் நம்மால் பேருந்தில் இருக்க முடியவில்லை. கணவனிடம் காட்ட வேண்டிய கொஞ்சலையும் குழைவையும் யாரோ ஒரு நிலைய அறிவிப்பாளரிடம் காட்டுவது மட்டுமல்லாமல் அதைப் பகிரங்கமாக, பலர் கேட்கும் அளவுக்குக் காட்டுகின்றார்கள்.

இதில் பெயர், முகவரியை வேறு தெளிவாக அதிலேயே அறிவித்து விடுகின்றார்கள். இதைக் கேட்பவர்களில் அல்லாஹ் கூறுவது போல் உள்ளத்தில் நோயுள்ளவர்கள், சபல புத்தியுள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்? சந்தர்ப்பம் கிடைக்காதா என்று சதி வலை பின்ன மாட்டார்களா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்: ''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்திற்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் விசாரிக்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டில் உள்ளவர்களுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.'' (அறிவிப்பவர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 893)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவது போல் இத்தகைய பெண்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்இயே ஆக வேண்டும்.
''அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். அன்றைய தினம் அவர்களது உண்மையான கூஇயை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவு படுத்தக்கூடியவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.'' (அல்குர்ஆன் 24:24,25)

இந்த வசனத்தின் படி மறுமையில் இவர்களது நாவுகளே அல்லாஹ்விடம் பேசும். அப்போது அல்லாஹ்விடமிருந்து தப்ப முடியாது. எனவே அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என்று இத்தகைய பெண்களுக்கு நாம் அறிவுரை கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

எவரிடம் கொஞ்சிப்பேசலாம்?

அதற்காகாக பெண்கள் எவரிடமும் கொஞ்சிப்பேசக்கூடாது என்பதல்ல! உங்கள் கணவரிடம் எவ்வளவுக்கெவ்வளவு கொஞ்சிப்பேச வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதைவிட அதிகமாகக்கூட கொஞ்சிப்பேசலாம். கொஞ்சிப்பேசுங்கள் கெஞ்சிப்பேசுங்கள்... இது தம்பதிகளின் இல்வாழ்க்கை செழித்தோங்க உதவும். குழந்தைகளிடமும்.. ஏன் உங்கள் தாயாரிடமும் சகோதரிகளிடமும் கூட கொஞ்சிப்பேசுவதில் தவறில்லை. அது குடும்பத்தில் பாசத்தை வளர்க்கும்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்

தமிசுதீன் (நாகைப்பட்டினம்)

ம.ம.க. கட்சியிலிருந்து விலகி SDPI கட்சியில் தங்களை இணைத்துக் கொண்ட 30 செயல் வீரர்கள்.


கொரடசேரி, ஜூலை 26 : திருவாரூர் மாவட்டம் கொரடசேரியில் SDPI கட்சியின் புதிய கிளையின் சார்பாக கட்சிக் கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்கள் ஏற்றி வைத்தார்.பிறகு மாலை 5.30 மணியளவில் ம ம கவில் இருந்த ம ம க நகர பொறுப்பாளர் ஹாஜி தலைமையில் 30 செயல் வீரர்கள் ம ம கவை விட்டு விலகி SDPI கட்சியில் புதிதாக இணைந்த போது அவர்களுக்கு அறிமுக உரையை மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்கள் நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட தலைவர் M.தப்ரே ஆலம் பாதுஷா தலைமை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் A.முகமது பைசல் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.லத்திப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இறுதியாக மாலை 6.40 மணியளவில் SDPI கட்சியின் சார்பாக இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அத்திக்கடை, பொதக்குடி & பூதமங்கலம் ஆகிய கிளை நிர்வாகிகள் கொரடசேரி ஜமாத்தார்கள், பொதுமக்கள் ஆகியோர் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

முஹம்மது பைசல் (தெற்குத் தெரு)

முத்துப்பேட்டையில் 2 வருடமாக நோன்பு நோற்று சாதனை படைத்தது வரும் 4 வயது சிறுவன்.முத்துப்பேட்டை, ஜூலை 25 : முத்துப்பேட்டையில் இரண்டாவது வருடமாக 4 வயது சிறுவன் நோன்பு நோற்று வருகிறான். கடந்த சனிக்கிழமை இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான நோன்பு துவங்கியது. இந்த நோன்பு சுமார் ஒரு மாதம் கடைபிடிக்கப்படும் என்பது யாவரும் அறிந்ததே. அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து சாப்பிட்டு பின்னர் மாலை 6.30 மணிக்கு அவற்றை விடுதல் வேண்டும். இவற்றில் இடைவெளியில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும், அதில் சுபுஹு தொழுகை காலை 5.15 மணிக்கும், மதியம் லுகார் தொழுகை 12.30 மணிக்கும், அசர் தொழுகை மாலை 4 மணிக்கும், மக்ரிப் தொழுகை இரவு 6.45 க்கும், இஷா தொழுகை இரவு 8 மணிக்கு என்னும் ஐவேளை தொழுகைகளும் தொழவேண்டும். இதன் இடையில் அதிகாலை 4.30 மணிக்கு துவங்கும் நோன்பு பின்னர் விரதம் மலை 6.30 மணிக்கு தான் முடித்து பின்னர் சாப்பிட வேண்டும். இதற்க்கு இடையில் தண்ணீரோ, தின்பண்டங்களோ சாப்பிடக்கூடாது. இந்த நோன்பினை பிடிப்பது பெரியவர்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் இந்த வேளையில் 4 வயது சிறுவன் ரமலான் மாதத்தில் நோன்பிருந்து வருவது முத்துப்பேட்டை மக்களை பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் அந்த 4 வயது சிறுவனை நேரில் சென்று வாழ்த்தியும் சில செய்திகளை நம்முடன் பகிர்ந்ததையும் உங்கள் முன்பு எடுத்துரைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

"திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவைச் சேர்ந்த ஜாஹீர் ஹுசைன், முஹமது பாத்திமா இந்த இரு தம்பதிகளின் இரண்டாவது மகன் தான் முஹம்மது ரிஸ்வான். வயது 4, இங்குள்ள பிர்லியண்ட் மெட்ரிக் பள்ளியில் U.K.G. படித்து வருகிறான். படி சுட்டியான இவன் படிப்பிலும் மிகக் கெட்டிக்காரன், மேலும் எல்லா பாடத்திலும் முதல் மார்கே பெற்றுள்ளான். அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் முதல் பரிசுகளையும் வென்றுள்ளான். உலக கல்வியில் அதிகம் அக்கறைக் காட்டும் இந்த மாணவன் மார்க்கக் கல்விகளிலும் அதிகம் ஆசையுடயவனாக நோன்பு வைப்பதிலும் முதலிடம் வகிக்கிறான்.

நான் எல்லா நோன்பையும் கஷ்டம் இல்லமால் நோற்க அல்லாஹ்விடம் துவா செய்யுங்கள் என்று கூறிய சிறுவன் உடல் வலிமையையும் எனக்கு கிடைக்க அல்லாஹ் விடம் எனக்காக துவா செய்யுங்கள் என்றும், என்னை போலா எல்லோ சிறியவர்களும் நோன்பு நோற்க வீட்டு பெற்றோர்கள் அனுமதி வழங்க வேண்டும் என்றும் எம்மிடம் கூறினான். இவற்றை படித்த அனைத்து சகோதரர்களும் இந்த இளம் வயது சிறுவனுக்கு அல்லாஹ் விடம் அதிகம் துவா செய்ய வேண்டுகிறோம்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

யூசுப் அலி(அலீம்),AKLT .அப்துல் ரஹ்மான்.

பாராட்டுவதா.?பரிதாபப்படுவதா? கிழக்குதேர்தலில் குதித்துள்ள முஸ்லிம் சகோதரி ஓர் பார்வைஇலங்கை, ஜூலை 25 : எமது குடும்ப சாப்பாட்டை ஒரு சோறும் ஒரு கறியும் ஒரு சுண்டலுடன் மட்டுப்படுத்தி தியாகத்துடன் வாழ்ந்து சமூக சேவை செய்யும் நான் எனது கணவர் கூலி வேலை செய்து கொண்டு வரும் பணத்தை மிச்சம் பிடித்து அதையும் சமூக சேவைக்கும் மற்றவர்களுக்கு உதவுவதற்கும் பயன் படுத்துவேன் என கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வாழைச்சேனையைச் சேர்ந்த புகாரி சித்தி சபீக்கா KWC க்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்தார்.

கேள்வி:நீங்கள் தேர்தலில் போட்டியிடும் நோக்கம் என்ன?

பதில்:பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பெண்களுக்குதவவும் பெண்களின் நலனை கருத்திற் கொண்டுமே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

கேள்வி: சமூக சேவகியான நீங்கள் அரசியலில் குதிப்பதற்கு பிரதான காரணம் என்ன?

பதில்: அரசியலில் ஈடுபடுவதன் மூலம் பெண்களின் அரசியல் சார்ந்த விசயங்களை கவனிக்கமுடியும் அதற்காகவே அரசியலில் களமிறங்கியுள்ளேன்.

கேள்வி: நீங்கள் ஐக்கிய தேசியக்கட்சியை தெரிவு செய்ததன் நோக்கம் என்ன?

பதில்: ஐக்கிய தேசியக் கட்சி பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன் பெண்களின் உரிமை சார்ந்த விடயங்களிலும் பெண்களின் நலன் சார்ந்த விசயங்களிலும் அக்கறையுடன் செயலாற்றுகின்றது. மற்ற கட்சிகளை விட ஐக்கிய தேசியக்கட்சி எனக்கு பிடித்தமான ஒரு கட்சியாகும்.அத்தோடு இது ஒரு நேர்மையான கட்சியாகும்.

கேள்வி: நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு உங்கள் கணவர் ஆதரவு தெரிவிக்கின்றாரா?

பதில்: நான் அரசியலில் குதிப்பதற்கும் கிழக்கு மாகாண சபை தேர்;தலில் போட்டியிடுவதற்கும் முதலாவது ஆதரவு தெரிவித்தவர் எனது கணவரேயாகும்.

அத்தோடு எனது பிள்ளைகளான பாத்திமா அஸ்னா, பாத்திமா நாஸிபா, அகமட் ஆதில் ஆகிய மூன்று பிள்ளைகளும் ஆதர தெரிவித்ததுடன் இவர்களின் ஒத்துழைப்பு எனது அரசியல் நடவடிக்கை அதிகம் உள்ளது.

கேள்வி: உங்கள் கணவர் என்ன தொழில் செய்கின்றார்?

பதில்: எனது கணவர் மேஸன் தொழில் செய்பவர்

கேள்வி: உங்கள் கணவரின் பெயர் என்ன?

பதில்: முகம்மது ஈஸா,

கேள்வி: உங்கள் கனவரின் உழைப்பு உங்கள் குடும்ப செலவுக்கே போதுமாக இருக்குமா?

பதில்: கணவர் பல திசையிலும் உழைத்து வரும் பணத்தை கொண்டு குடும்ப வாழ்கையை நடத்த முடியாமல் இருக்கின்றது.

எனது மூன்று பிள்ளைகளின் கல்விச் செலவுக்கும் பயன் படுத்த வேண்டியுள்ளது.

கணவர் உழைத்து வரும் பணத்தில் தான் மிச்சம் பிடித்து சமூக சேவைக்கு பயன் படுத்துவேன்.

எனது வீட்டில் மிகவும் எளிமையான முறையிலேயே சமைப்பேன். ஓவ்வொரு நாளும் ஒரு சோறு மற்றும் ஒரு கறி ஒரு சுண்டல் அவ்வளவுதான் இதைவிட வேறு கறிகள் சமைப்பதே கிடையாது.

தியாகத்துடனும் அர்ப்பணிப்புடனும் சமூக சேவையில் ஈடுபடுகின்றேன்.

கேள்வி: உங்கள் பிரதேசத்தில் அரசியல் ஜாம்புவான்கள் இத் தேர்தலில் போட்டியிடும் போது நீங்கள் வெற்றி பெற சந்தர்ப்பம் உண்டா?

பதில்: எனது வீட்டின் வலது இடது இரண்டு புறங்களிலும் இரண்டு வேட்பாளர்கள் இருக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு ஆசனம் நிச்சயம் கிடைக்கும் நான் வெற்றி பெற அல்லாஹ்விடம் பிராத்திக்கின்றேன்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நன்றி - எம்.எஸ்.என். நூர்தீன் இலங்கை

மலேசியா விமான நிலையத்தில் தமிழர்களுக்கு அடி,உதை 300 பேர் பாஸ்போர்ட் தீ வைப்பு..!!!

முத்துப்பேட்டை, ஜூலை 22 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர் சேக்ஜி. இவர் அடிக்கடி மலேசியா, சிங்கபூர் நாடுகளுக்கு சென்று ஜோதிடம் மற்றும் வியாபாரம் செய்வதற்காக சென்று வருபவர். வழக்கம் போல கடந்த 15 ஆம் தேதி அன்று சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் அன்று இரவு மலேசியாவிற்கு சென்று உள்ளார். அங்கே உள்ள விமான நிலையத்தில் இறங்கியவுடன் அவருடன் சென்று 38 பேரையும் எமிகிரேசன் கிளியர் (விசா பரிசோதனை செய்யும் இடம்) இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கே உள்ள விமான நிலைய அதிகாரிகள் எந்த விசாரனயையும் மேற்கொள்ளாமல் கொடுமை படுத்திவருவதை கண்ட இவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த நாட்டிற்க்குள்ளும் விடாமல் ஏர்போர்ட்டிலே வைத்துள்ளனர்.

அதிலிருந்து மீண்டு தப்பி வந்த அவர் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு பேட்டியளித்தது பின் வருமாறு:

கடந்த 15 ஆம் தேதி அன்று மலேசியாவிற்கு புறப்பட்டேன். நான் மாதம் இரண்டு அல்லது மூன்று முறை எனது சொந்த வியாபாரம் விசயமாக செல்வது வழக்கம். இந்த முறை சென்ற பொது எனக்கு அங்கு ஏற்பட்ட கொடுமையை இது வரைக்கும் நன் கண்டது இல்லை. மேலும் எந்த ஒரு தகவலும் எங்களுக்கு சொல்லாமல் வெறும் 50 பேர் மட்டுமே தாங்கும் அறைக்குள் 1312 நபர்களை அடைத்து வைத்தார்கள். இதில் 612 பேர் தமிழர்கள், 17 பேர் பெண்கள் ஆவர்கள். மேலும் அங்கு சாப்பாடு தாநீர் இல்லை 2 ரூபாய் பொருளை 5 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.அப்போது அங்கு சாப்பாடு மற்றும் குடி தண்ணீர் கேட்டால் அங்குள்ள அதிகாரிகள் எங்களை தாக்குகிறார்கள்.சாப்பாடு தண்ணீர் இல்லாமல் அங்குள்ள அனைவரும் மயங்கி கீழே விழுந்தது எனக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. அங்கு நின்று கொண்டு தான் தூங்குகிறார்கள். அப்போது நேற்று முன்தினம் பசி தாங்காமல் 300 தமிழர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .அவர்களை அழைத்து அனைவரின் பாஸ்போர்டை வங்கி கொளுத்திவிட்டனர் மலேசிய அதிகாரிகள்.

இதிலிருந்து நான் தப்பிப்பதற்காக எனக்கு மலேசியாவில் உள்ள பிரபல பத்திரிகை அடையாள உரிமம் இருந்ததை காட்டியவுடன் அதனின் உதவியை கொண்டு நான் உடனே நாடு திரும்ப எனக்கு வாய்ப்பு வந்தது. அவற்றை பயன்படுத்தி முத்துப்பேட்டையில் உள்ள ஜெசீமா டிராவல்ஸில் டிக்கெட் எடுத்து நான் திரும்ப ஊருக்கு வந்து சேர்ந்துள்ளேன். மேலும் மலேசியாவில் இதுவரைக்கும் அவற்றில் சிக்கித்தவிக்கும் அனைத்து தமிழர்கலையும் உடனே விடுதலை செய்யவேண்டும் என்று அரசியல் அதிகாரிகளுக்கு வலிறுத்தி வருகிறேன் என்று தனது பேட்டியில் அப்போது அவர் தெரிவித்தார். தொடரும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தின் வேட்டை...
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிரூபர்

யூசுப் அலி (அலீம்), AKLT. அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டை 9 வது வார்டுக்கு 10 லட்சம் மதிப்புள்ள கழிவு நீர் வடிகால் குழாய் அமைப்பு.

முத்துப்பேட்டை, 22 : முத்துப்பேட்டை 9 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடுகளில் பயன்படுத்தக்கூடிய கழிவு நீர்களை குழாய்கள் மூலம் அவற்றை அப்புறப்படுத்தும் விதமாக வார்டு கவுன்சிலர் ஜனாப். பாவா பகுருதீன் அவர்கள் தற்போது 10 லட்சம் பாதிப்புள்ள வடிகால் குழாய் அமைத்து நடைமுறைக்கு வருகிறது. இதில் முஹைதீன் பள்ளி தெரு மெய்ன் ரோடு, முஹைதீன் பள்ளி தெரு O.M. வீட்டு சந்து, முஹைதீன் பள்ளி பைந்தப்ப வீட்டு சந்து, குட்டியார் பள்ளி வடக்கு தெரு சந்து, O.M. மில் சந்து, பக்கீர்வாடி தெரு குட்டியார் பள்ளி வடக்கு தெரு, ஆகிய இடங்களில் 1 அடி முதல் 1 1/2 அடி குழாய்கள் (அந்தந்த தெருவிற்கு தகந்தாற்போல்)அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பக்கீர் வாடி தெருவில் சுமார் 3 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது என்று 9 வது வார்டு கவுன்சிலர் ஜனாப். பாவா பகுருதீன் அவர்கள் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்

யூசுப் அலி (ஆலிம்),AKLT .அப்துல் ரஹ்மான்

எப்போது திறக்கப்படும் இந்த பள்ளிவாசல் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸின் நேரடி ரிப்போர்ட்..!!


திருவாரூர், ஜூலை 21 : திருவாரூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையம் அருகில் ஐக்கிய ஜமாத்திற்கு சொந்தமான சுமார் 60 ௦ ஆயிரம் ஸ்கொயர் பீட்டில் நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களில் உள்ள ஒரு சிறிய பகுதியில் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்னதாக கட்ட துவங்கினார்கள். அதற்க்கு எல்லா விதமான அரசு அனுமதிகளும் பெற்று அனைத்து பணிகளும் முடிவுறும் தருவாயில் உள்ளது. இதில் பள்ளி மக்தப் மதரசாவும் மேலும் வெளியூரூ வாசிகள்தொழுகைக்கு உரிய இடமாகவும் அமைக்கக் கூடியவை அடையாளப் படுத்தும் விதமாக மினாராவை அப்போது எழுப்பினார்கள். இவற்றை விரும்பாத சில சமூக விரோதிகள் பல்வேறு இடையூறுகளை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மினாராவை இடிக்க வேண்டும் என்ற சூழலுக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். இந்த செய்தியை அறிந்த பாப்புலர் ஃபிரண்டாப் இந்தியாவின் (PFI) நிர்வாகிகள் மற்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளமும் நேரில் சென்று சம்பந்தப்பாட்ட நபர்களை அணுகி சட்ட ரீதியான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் நிலையில் இருக்கிறோம். மேலும் இந்த இடத்தின் பணிகளை விரைவில் முடித்து பொது மக்களின் பயன் பாட்டிற்கு விட குறிகிய காலங்களே உள்ளன. இது குறித்து தொடரும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தின் வேட்டை...
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்

AKLT .அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்),

மவுத்து அறிவிப்பு: ராஜா முஹம்மது (என்கிற) முஹம்மது அலி ஜின்னா


முத்துப்பேட்டை, ஜூலை 20 : சரிப் தெரு மர்ஹும் ஹாஜி வா.மு.வாட்சா முஹைதீன் அவர்களின் மகனும், ஆசாத் நகர் மர்ஹும் A.M. ஷாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், M. முஹம்மது தம்பி, M. அப்துல் ரஹ்மான் இவர்களின் சிறிய தகப்பனாரின் மகனும், ஷாகுல் ஹமீது, முஹம்மது யூசுப், முஹம்மது இபுறாஹீம், நிஜாம் மன்சூர் ஆகோயோரின் சகோதரரும், அதிராம்பட்டினம் K.M. முஹம்மது அலியார் அவர்களின் மைத்துனரும், ஆசாத் நகர் அஜீஸ் வாத்தியார், தீன் முஹம்மது, தாஜுதீன் ஆகியோரின் சகலையும், ஆசாத் நகர் பகுருதீன் சகோதரர்களின் மருமகனுமாகிய ராஜா முஹம்மது என்கிற முஹம்மது அலி சின்ன அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5.30 மணியளவில் முஹைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்.
வா.மு. முஹம்மது யூசுப் & சகோதரர்கள்

நமது நிருபர்

K.M. காதர் கனி (பாடகர்)

உயிரை எடுக்கும் மொபைல் ஃபோன்கள் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்...!!!


இந்தியா, ஜூலை 05 : நாட்டின் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை டிசம்பரில் மட்டும் 94.7 (1.07%) லட்சம் அதிகரித்து 89.38 கோடியானது. நவம்பரில் இது 88.43 கோடியாக இருந்தது. எம்.பி.பி.எஸ். முடித்து தாராபுரத்தில் பயிற்சி மருத்துவராக இருந்த துடிப்பான பெண் அவர். சென்னையிலுள்ள தனது வீட்டுக்கு விடுமுறைக்காகச் சென்றபோது நடந்தது அந்த அதிர்ச்சிகரமான விபத்து. ரயிலில் அடிபட்டு இறந்த அவரை அடையாளம் காணவே முடியவில்லை. அவரைக் கண்டறிய உதவியது அவரது மொபைல்போன். உண்மையில், அந்த மொபைல்போனால்தான் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்பாதையைக் கடந்தபோது மொபைல்போனில் பேசியபடியே சென்றதுதான் அவர் செய்த தவறு. தூரத்தே ரயில் வருவது குறித்து பலர் அவரை கூக்குரலிட்டு எச்சரித்தும் அது அவரது காதில் விழவே இல்லை. விளைவாக, திறமையான மகப்பேறு மருத்துவராக விளங்கியிருக்க வேண்டிய அவர், சிறு வயதிலேயே பரிதாபமான முறையில் பலியானார்.

மாடிப் படியில் இறங்கும் போது செல்ஃபோனில் உள்ள மிஸ்ஸுடுகால்களை பார்த்துக் கொண்டே இறங்கிய ரவீந்தர் கால்தவறி விழுந்து பலத்த காயத்துடன் மருத்துவாமனையில் அனுமதிக்கப் பட்டு சமீபத்தில் உயிரிழந்தார்.

அடுத்து கோவையில் நடந்த சம்பவம் ஒன்று. அண்மையில் தான் திருமணமான வாலிபர் அவர். புது மனைவியுடன் மொபைல் போனில் பேசியபடியே ரயில்பாதையைக் கடந்தார். அருகில் ரயில் வருவதுகூடத் தெரியாமல் மனைவியுடன் பேசிக்கொண்டே இருந்தவர், அப்படியே போய்ச் சேர்ந்துவிட்டார். அவரை அடையாளம் காட்டியதும், உண்மையில், அந்த மொபைல்போனால்தான் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.

இதுபோன்ற நிகழ்வுகள் சமீபகாலமாக அடிக்கடி நடக்கின்றன. ரயில்பாதையில் மட்டுமல்ல, சாலைகளிலும் கூட மொபைல் போன் பேசியபடி நடை பயில்பவர்களால் விபத்துகள் நேரிடுகின்றன. குறிப்பாக, "மொபைல்போன் மேனியா' என்று குறிப்பிடத் தக்க போக்கு தற்போதைய இளம்பெண்களை ஆட்டிப் படைக்கிறது. இதன் சமூக பாதிப்புகள் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்.

சாலையில் நடந்தபடியே மொபைல்போன் பேசாத பெண்களை பத்தாம்பசலிகள் என்று ஒதுக்கிவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு மொபைல்போன் இளைஞிகளை ஆட்டிப் படைக்கிறது. இதனால் அவர்களுக்கும் ஆபத்து, சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் ஆபத்து என்பது புரிவதே இல்லை.

சாலைவிபத்துகளை ஆய்வு செய்த காவல்துறை, பெரும்பாலான விபத்துக்களுக்கு மொபைல்போன் பேசியபடி இளைஞர்கள் வாகனத்தை இயக்குவதே காரணம் என்பதைக் கண்டறிந்தது. தற்போது போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் வாகனங்களை இயக்குகையில் மொபைல்போன் பேசுவது போலவே, சாலையில் நடந்து செல்லும்போது பெண்கள் மொபைல்போன் உபயோகிக்கின்றனர். ஆனால் இதை யாரும் ஆபத்தானதாகக் கருதுவதில்லை. கவனச்சிதறலை உருவாக்குகிறது என்பதாலேயே வாகனங்களை ஓட்டும்போது மொபைல்போன் பேசுவது தடை செய்யப்படுகிறது. நடந்து செல்வோருக்கும், சாலையைக் குறுக்கே நடந்து கடப்பவருக்கும் கூட, மொபைல்போன் பேச்சு கவனச்சிதறலை ஏற்படுத்துவதில்லையா?

மொபைல்போன் பேச்சு நமது கவனத்தை முற்றிலும் சீர்குலைக்கிறது. மறுமுனையில் பேசுபவரின் உணர்வுகளுடன் ஒன்றிவிடுவதே இந்தக் கவனச் சிதறலுக்குக் காரணம். மறுமுனையில் பேசுபவரின் முகம் நமது மனக்கண்ணில் நிழலாடலாம்.

அதே நினைவில் சாலையைக் கடந்தால் என்ன ஆகும்? ஒழுங்காக வாகனத்தை இயக்குபவரும் இதனால் விபத்தில் சிக்கலாம்.

நவீன சாதனங்களை நமது வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து, அந்தச் சாதனங்களின் அடிமையாக நாம் மாறி வருகிறோம். மொபைல்போன் இல்லாத உலகை கற்பனை செய்ய முடியாத நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம்.

நமது மொபைல்போன் சார்பு அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது.

பலநாள் பட்டினி கிடந்தவன் விருந்துச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது என்று புரியாமல் தன்மீது வாரி இறைத்துக் கொள்வது போல, நமது மொபைல்போன் பயன்பாடு இருக்கிறது.

தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலங்களில் பேச முடியாத முந்தைய தலைமுறைகளுக்கும் சேர்த்துப் பேசித் தீர்த்துவிடுவது என்று, இப்போதைய தலைமுறையினர் கங்கணம் கட்டிவிட்டனரா?

மொபைல்போன் பயன்படுத்தாமல் இருப்பது இனி சாத்தியமில்லை. நடந்து செல்வோர் மொபைல்போன் பேசுவதைத் தடுக்கவும் வழியில்லை. ஆனால், ரயில்பாதை, சாலைகளைக் கடக்கும்போதேனும் மொபைல்போன் பேசாமல் செல்லலாமே?

கட்டாயமாக போன் பேச வேண்டுமானால், சில நிமிடங்கள் சாலையோரமாக நின்று பேசித் தீர்த்துவிட்டுச் செல்லலாமே? "போய்ச் சேர' அப்படி என்ன அவசரம்? அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல். இத்தகைய அரிய, இனிய மனித வாழ்க்கையை மொபைல்போன் பேச்சுக்காக இழக்க வேண்டுமா? இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்.

தொகுப்பு

உயிரை எடுக்கும் மொபைல் ஃபோன்கள் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்...!!!
இந்தியா, ஜூலை 03 : நாட்டின் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை டிசம்பரில் மட்டும் 94.7 (1.07%) லட்சம் அதிகரித்து 89.38 கோடியானது. நவம்பரில் இது 88.43 கோடியாக இருந்தது. எம்.பி.பி.எஸ். முடித்து தாராபுரத்தில் பயிற்சி மருத்துவராக இருந்த துடிப்பான பெண் அவர். சென்னையிலுள்ள தனது வீட்டுக்கு விடுமுறைக்காகச் சென்றபோது நடந்தது அந்த அதிர்ச்சிகரமான விபத்து. ரயிலில் அடிபட்டு இறந்த அவரை அடையாளம் காணவே முடியவில்லை. அவரைக் கண்டறிய உதவியது அவரது மொபைல்போன். உண்மையில், அந்த மொபைல்போனால்தான் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில்பாதையைக் கடந்தபோது மொபைல்போனில் பேசியபடியே சென்றதுதான் அவர் செய்த தவறு. தூரத்தே ரயில் வருவது குறித்து பலர் அவரை கூக்குரலிட்டு எச்சரித்தும் அது அவரது காதில் விழவே இல்லை. விளைவாக, திறமையான மகப்பேறு மருத்துவராக விளங்கியிருக்க வேண்டிய அவர், சிறு வயதிலேயே பரிதாபமான முறையில் பலியானார்.

மாடிப் படியில் இறங்கும் போது செல்ஃபோனில் உள்ள மிஸ்ஸுடுகால்களை பார்த்துக் கொண்டே இறங்கிய ரவீந்தர் கால்தவறி விழுந்து பலத்த காயத்துடன் மருத்துவாமனையில் அனுமதிக்கப் பட்டு சமீபத்தில் உயிரிழந்தார்.

அடுத்து கோவையில் நடந்த சம்பவம் ஒன்று. அண்மையில் தான் திருமணமான வாலிபர் அவர். புது மனைவியுடன் மொபைல் போனில் பேசியபடியே ரயில்பாதையைக் கடந்தார். அருகில் ரயில் வருவதுகூடத் தெரியாமல் மனைவியுடன் பேசிக்கொண்டே இருந்தவர், அப்படியே போய்ச் சேர்ந்துவிட்டார். அவரை அடையாளம் காட்டியதும், உண்மையில், அந்த மொபைல்போனால்தான் அவர் ரயிலில் அடிபட்டு இறந்தார்.

இதுபோன்ற நிகழ்வுகள் சமீபகாலமாக அடிக்கடி நடக்கின்றன. ரயில்பாதையில் மட்டுமல்ல, சாலைகளிலும் கூட மொபைல் போன் பேசியபடி நடை பயில்பவர்களால் விபத்துகள் நேரிடுகின்றன. குறிப்பாக, "மொபைல்போன் மேனியா' என்று குறிப்பிடத் தக்க போக்கு தற்போதைய இளம்பெண்களை ஆட்டிப் படைக்கிறது. இதன் சமூக பாதிப்புகள் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்.

சாலையில் நடந்தபடியே மொபைல்போன் பேசாத பெண்களை பத்தாம்பசலிகள் என்று ஒதுக்கிவிடலாம் போலிருக்கிறது. அந்த அளவுக்கு மொபைல்போன் இளைஞிகளை ஆட்டிப் படைக்கிறது. இதனால் அவர்களுக்கும் ஆபத்து, சாலையில் செல்லும் வாகனங்களுக்கும் ஆபத்து என்பது புரிவதே இல்லை.

சாலைவிபத்துகளை ஆய்வு செய்த காவல்துறை, பெரும்பாலான விபத்துக்களுக்கு மொபைல்போன் பேசியபடி இளைஞர்கள் வாகனத்தை இயக்குவதே காரணம் என்பதைக் கண்டறிந்தது. தற்போது போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் வாகனங்களை இயக்குகையில் மொபைல்போன் பேசுவது போலவே, சாலையில் நடந்து செல்லும்போது பெண்கள் மொபைல்போன் உபயோகிக்கின்றனர். ஆனால் இதை யாரும் ஆபத்தானதாகக் கருதுவதில்லை. கவனச்சிதறலை உருவாக்குகிறது என்பதாலேயே வாகனங்களை ஓட்டும்போது மொபைல்போன் பேசுவது தடை செய்யப்படுகிறது. நடந்து செல்வோருக்கும், சாலையைக் குறுக்கே நடந்து கடப்பவருக்கும் கூட, மொபைல்போன் பேச்சு கவனச்சிதறலை ஏற்படுத்துவதில்லையா?

மொபைல்போன் பேச்சு நமது கவனத்தை முற்றிலும் சீர்குலைக்கிறது. மறுமுனையில் பேசுபவரின் உணர்வுகளுடன் ஒன்றிவிடுவதே இந்தக் கவனச் சிதறலுக்குக் காரணம். மறுமுனையில் பேசுபவரின் முகம் நமது மனக்கண்ணில் நிழலாடலாம்.

அதே நினைவில் சாலையைக் கடந்தால் என்ன ஆகும்? ஒழுங்காக வாகனத்தை இயக்குபவரும் இதனால் விபத்தில் சிக்கலாம்.

நவீன சாதனங்களை நமது வசதிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து, அந்தச் சாதனங்களின் அடிமையாக நாம் மாறி வருகிறோம். மொபைல்போன் இல்லாத உலகை கற்பனை செய்ய முடியாத நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கிறோம்.

நமது மொபைல்போன் சார்பு அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது.

பலநாள் பட்டினி கிடந்தவன் விருந்துச் சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது என்று புரியாமல் தன்மீது வாரி இறைத்துக் கொள்வது போல, நமது மொபைல்போன் பயன்பாடு இருக்கிறது.

தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலங்களில் பேச முடியாத முந்தைய தலைமுறைகளுக்கும் சேர்த்துப் பேசித் தீர்த்துவிடுவது என்று, இப்போதைய தலைமுறையினர் கங்கணம் கட்டிவிட்டனரா?

மொபைல்போன் பயன்படுத்தாமல் இருப்பது இனி சாத்தியமில்லை. நடந்து செல்வோர் மொபைல்போன் பேசுவதைத் தடுக்கவும் வழியில்லை. ஆனால், ரயில்பாதை, சாலைகளைக் கடக்கும்போதேனும் மொபைல்போன் பேசாமல் செல்லலாமே?

கட்டாயமாக போன் பேச வேண்டுமானால், சில நிமிடங்கள் சாலையோரமாக நின்று பேசித் தீர்த்துவிட்டுச் செல்லலாமே? "போய்ச் சேர' அப்படி என்ன அவசரம்? அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல். இத்தகைய அரிய, இனிய மனித வாழ்க்கையை மொபைல்போன் பேச்சுக்காக இழக்க வேண்டுமா? இளைய தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

அபு மர்வா

முத்துப்பேட்டையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான இரு கார்கள்..


முத்துப்பேட்டை, ஜூலை 03 : முத்துப்பேட்டையில் இன்று அதிகாலையில் நேருக்கு நேராக மோதிக்கொண்டு இரு கார்களும் நாசமடைந்துள்ளது. இன்று அதிகாலையில் திருத்துறைப்பூண்டியிலிருந்து வந்த காரும் பட்டுக்கோட்டையில் இருந்து வந்த காரும் முத்துப்பேட்டை ECR பகுதியில் நேருக்கு நேராக மோதிக்கொண்டது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களை தஞ்சாவூர் அரசு மருத்துவமைக்கு கொண்டு சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
source from: www.mttexpress.com, www.muthupettaixpress.com,
நமது நிருபர்

கோவிலூர் லக்ஷ்மணன்

முத்துப்பேட்டையில் அடையாலம் தெரியாத வாகனம் மோதி டிராக்டர் டிரைவர் பிணம்.


முத்துப்பேட்டை, ஜூலை 03 : முத்துப்பேட்டையில் நேற்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிராக்டர் டிரைவர் கணபதி இறந்து கிடந்தார். நேற்று அவர் ECR பாதை வழியில் வாக்கிங் சென்று கொண்டிருக்கும் போது எதிர் பாராமல் அவர் எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
source from: www.mttexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்

AKL .அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்)

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தின் புதிய வெளியிடு ஓர் பார்வை.


முத்துபேட்டை,ஜூலை 03 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தற்போது வெப் டிசைன், வெப் ஹோஸ்டிங் என்ற புதிய விளம்பரத்தை உங்கள் முன்பு அறிமுகம் செய்துள்ளது. இதில் என்னவெனில் வர்த்தகம் சார்ந்தவை, விளையாட்டு சார்ந்தவை, செய்திகள் சார்ந்தவை, சமூகம் மற்றும் சமுதாயம் ஆகிய பெயரில் வலைத்தளம் உருவாக்குவது குறித்து உங்கள் பார்வைக்கு கொடுத்துள்ளோம் தாங்கள் விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இதை மிக குறைந்த விலையில் உங்களுக்கு டொமைன் நேம் மற்றும் வெப் ஹோஸ்டிங் செய்து தரப்படும்.
MTT EXPRESS இணையதளத்தின் புதிய வெளியிடு:
1) Domain Name Registration
2) Web Design
3) Web Site Management
4) Web Hosting
5) Web Based Email
6) Hosted Exchange
இவைகள் மற்றும் சமுதாய பொதுக் கூட்டம் மற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு எங்களிடம் MTT EXPRESS மூலமாகவும், மற்றும் தனியாகவும் நேரடி ஒலிபரப்பு செய்ய விருப்பம் உள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரம் அறிய
public.mttexpress@gmail.com, 00971- 553871984, 00971 - 558006543, 0091 - 9944783244, ஆகிய எங்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
source from: www.mttexpress.com, www.muthupettaixpress.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)