முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தம்பிகோட்டையில் கேரளா முஸ்லிம்கள் மீது தாக்குதல் பதற்றம் -ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் சதியா ?


தம்பிக்கோட்டை, நவம்பர் 29: இன்று மாலை 6.30 மணியளவில், நாகூரிலிருந்து கேரளா பாலக்காட்டை சேர்ந்த செளக்கத் அலி என்பவர் டூரிஸ்ட் வேனில் தனது குடும்பத்தினருடன் ஏர்வாடியை நோக்கி ஈசிஆர் சாலையில் பயணமானார். இதில் பெண்கள், குழந்தைகள் என சுமார் 20 பேர் இருந்துள்ளனர்.

தம்பிக்கோட்டை சாலையோரக் கடையில் டீ குடிப்பதற்காக வேனை நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கே இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர்கொண்ட கும்பல் வேனின் மீது கற்களால் தாக்கியுள்ளனர். வேனில் இருந்தவர்களை தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திடீர் தாக்குதலில் வேனின் கண்ணாடி, கதவு உள்ளிட்டவை சேதமடைந்தன. இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த வேன் டிரைவர் வேனை பதட்டத்துடன் அதிரைக்கு ஓட்டிவந்துள்ளார்.

இதனை அறிந்த அதிரை நகர எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் அதிரை இளைஞர்கள் திரண்டு வந்து சம்பவம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆறுதல் கூறினர்.

பாதிக்கப்பட்டோர் சார்பாக அதிரை காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.








ஐம்பது ஆண்டிற்கும் மேலாக கொடிகட்டி பறக்கும் கொய்யா மசாலா !அரைசதம் அடித்து சாதனை மேல் சாதனை !!ஆச்சர்யப்படவைக்கும் அசுர வளர்ச்சி !!!வெற்றி மேல் வெற்றியின் பின்னணி என்ன ?ஓர் சிறப்பு பார்வை !!!!

முத்துப்பேட்டை, நவம்பர் 29: மனிதன் உயிர் வாழ்வதற்கு எப்படி இருதயமும் ,சுவாசமும் இன்றியமையாததோ அதே போல் 

மனிதன் கௌரவமாய் வாழ்வதற்கு வியாபாரமும் ,தொழிலும் வாழ்வின் அச்சாரமாகும் .வியாபாரத்தால் பலர் வாழ்ந்த வரலாறுகளும் ,அதே வியாபாரத்தால் பலர் வீழ்ந்த வரலாறுகளும் உண்டு .

ஆனால் தொடர்ந்து 50- ஆண்டிற்கும் மேலாக ஒரு வியாபாரம் தொழில் சார்ந்த நிறுவனம் ஏறுமுகத்திலேயே -உச்சாணி கொம்பிலேயே இருப்பது என்பது எப்படி சாத்தியமாகும் ?ஆனால் அதை சாத்திய படுத்தி இருக்கிறது கொய்யா மசாலா நிறுவனம் .




















































இது பற்றிய முழுமையான தகவலை பெற முத்துப்பேட்டை உப்பூரில் இயங்கிகொண்டிருக்கும் "கொய்யா மசாலா "நிறுவனத்தில் ஆஜரானோம் .பல்வேறு பணிகளுக்கிடையில் படு பிசியாக இருந்த கொய்யா மசாலா நிறுவனத்தின்  நிர்வாக இயக்குனர் கொய்யா NA .சாதிக் பாட்ஷா ,அவர்கள் நம்மை இன்முகத்தோடு வரவேற்றார் .பின்னர் நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார் .

கே ;   கொய்யா மசாலாவின் நிறுவனர் யார் ?

பதில் : கொய்யா மசாலாவின் நிறுவனர் எனது தந்தை கொய்யா ஹாஜி.N .அப்துல் ரெஜாக் அவர்கள் .


கே :  கொய்யா மசாலா எப்போது -  எங்கு தொடங்கப்பட்டது ?

பதில் : கொய்யா மசாலா 1950 -ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது .


கே :  கொய்யா மசாலாவை தமிழகத்தில் தொடங்கியது எப்போது ?

பதில் :  கொய்யா மசாலாவை 19-10-1996 ஆம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கினோம் .


கே :  தமிழகத்தில் கொய்யா மசாலா எத்தனை மாவட்டங்களுக்கு செல்கிறது ?

பதில் :  தமிழகத்தில் கொய்யா மசாலா -தஞ்சை-நாகை -திருவாரூர்-கடலூர் -பாண்டிச்சேரி -மயிலாடுதுறை -திருச்சி-கோவை -வேலூர் -ராமநாதபுரம் -சிவகங்கை -உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு செல்கிறது .




கே : உங்கள் நிறுவனத்தில் எந்தெந்த வகையான மசாலாக்கள் தயாரிக்கபடுகின்றன ?

பதில் : எங்கள் நிறுவனத்தில் சிக்கன் மசாலா -மட்டன் மசாலா -சிக்கன் 65 மசாலா -மீன் மசாலா -சாம்பார் மசாலா -குழம்பு மிளகாய் தூள் மிளகாய் தூள்  -மஞ்சள் தூள் -  சீரகத்தூள் -சோம்பு தூள் -மிளகு தூள் -ஆகியவை தயாரிக்க படுகிறது .இது தவிர இடியாப்ப மாவு ,அரிசி மாவு ,கடலை மாவு போன்றவைகளும் தயாரிக்க படுகிறது .


கே : மசாலா வகைகள் எப்படி தயாரிக்கபடுகிறது ?

பதில் :அதற்குரிய காலங்களில் ,அதற்கான விளைநிலங்களிலிருந்து ,விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து எங்கள் உற்பத்தி தொழிற்சாலையில் நன்கு பதப்படுத்தி மசாலா வகைகளை தயார் செய்கிறோம் ."COLD GRAIN TECHNOLOGY " என்கிற அதிநவீன கருவி மூலம் இரும்பு தாது கலக்காமல் மிகவும் நேர்த்தியான முறையில் உருவாக்கம் செய்கிறோம் .


கே :  விளம்பரங்களே இல்லாமல் எப்படி வியாபாரம் ?


பதில் :தரமான சுத்தமான பொருட்களுக்கு விளம்பரம் எதற்கு ?நாங்கள் 63 ஆண்டுகளாய் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம் .இது வரை ரேடியோவிலோ ,தொலைகாட்சி களிலேயோ விளம்பரங்கள் செய்தது கிடையாது  -.விளம்பரம் செய் பவர்களுக்கு எப்படி வியாபாரமோ ,அதை விட பன்மடங்கு எங்களுக்கு வியாபாரம் .காரணம் மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை . 


கே :உங்கள் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் நவீன கருவிகள் பற்றி ?

பதில் : CG பல்வரைசர் (PALVARAISAR )  --அரைக்கும் இயந்திரம் 
               ரோஸ்டர்          (ROSTER )          -- மசாலாக்களுக்கு வாசனையூட்டும்                                                                                                                                          இயந்திரம் 
                மிக்சர் மிஷின்(MIXER MACHINE )--கலக்கும் இயந்திரம் 




கே :மசாலாக்களை  எப்படி பேக்கிங் செய்கின்றீர்கள் ?



பதில் :  AUTOMATIC AUGOR FILLER MACHINE 

               AUTOMATIC  FORM FILLING MACHINE 

                AUTOMATICFILLING மசினே
                 HOT AIR SACHET MACHINE   


ஆகிய  தானியங்கி கருவிகளை கொண்டு பேக்கிங் செய்கிறோம் .
இவ்வாறு பதில் அளித்தார்.

 குறிப்பு ;கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற கொய்யா இல்ல திருமணத்திற்கு கலந்து கொள்ள வந்த மாண்புமிகு தமிழக வேளாண் துறை அமைச்சர் அவர்கள் கொய்யா மசாலா நிறுவனத்திற்கு வருகை தந்ததாக  கூறப்படுகிறது .கூடிய விரைவில் கொய்யா மசாலா நிறுவனத்திற்கு தமிழக அரசின் சார்பாக ISO தரச்சான்றும்,வெற்றிகரமாக நிறுவனத்தை நடத்தி வரும் கொய்யா சாதிக் அவர்களுக்கு இளம் சாதனையாளர் விருதும் வழங்கப்படலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது .

சந்திப்பு : ஜே ஷேக்பரீத்

மவுத்து அறிவிப்பு: “முஹம்மது தாவுதம்மாள்”


முத்துப்பேட்டை, நவம்பர் 25: முத்துப்பேட்டை SPKM தோட்ட வளாகம்  மர்ஹும் (இனா கானா) E.K.ஹபிப் முஹம்மது அவர்களின் மகளும், மர்ஹும் O.K.S. அஹமது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், O.K.S.A கேப்டன் ஜுனைது, O.K.S.A அப்துல் காதர், O.K.S.A. சஹாபுதீன் அவர்களின் தாயாருமாகிய முஹம்மது தாவுதம்மாள்” அவர்கள்  இன்று அதிகாலை 1 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)
அன்னாரின் ஜனாஸா இன்று 25.11.13 திங்கள் கிழமை காலை 11.30 மணியளவில் முஹையதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்பவர்: 
O.K.S.A. சஹாபுதீன்

புதுக்கோட்டை சிறையில் முஸ்லிம் கைதி சித்ரவதை - சிறைக்குள் மந்திரம் ஒத கட்டளை -தாடி வைக்க தடை - சிறைக்கு நேரில் சென்ற இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் முத்துப்பேட்டை ஷிப்லி !!!

புதுக்கோட்டை, நவம்பர் 21: புதுக்கோட்டையில் உள்ள சிறுவர் சிறையில் முஸ்லிம் கைதி ஒருவரை மத ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமைக்கு தகவல் கிடைத்தது. உடனே ஷிப்லி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் சகோ சாதிக், நகர நிர்வாகி அத்தீக் , சகோ காயல் ஷரீஃப் ஆகியோர் புதுக்கோட்டை சென்றோம்.நாம் செல்வதற்க்கு முன்பு அங்குள்ள நம் நண்பர் துரை முஹம்மது அவர்களை தொடர்பு கொண்டோம். அவர் புதுக்கோட்டை பெரிய ஜும் ஆ பள்ளிவாசல் நிர்வாகத்திடம் பேசிவைத்திருந்தார். நாம் அங்கு சென்றதும் பள்ளி நிர்வாகத்திடம் ஆலோசனை செய்து விட்டு, பாதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் நபரை மனு போட்டு பார்த்தோம். செய்தி கேள்விபட்டு நகர தமுமுக நிர்வாகிகள் இரண்டு பேர் எங்களுடன் வந்தனர்.

 



பாதிக்கப்பட்டவர் சொன்ன தகவல்கள்:

@ ஜெப ஆராதனை நடக்கும் இடத்தில் கண்டிப்பாக அமர வைக்கிறார்கள்
@ இங்கே தாடி வைக்கக்கூடாது. தாடியை மழிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.
@ கோவை சைக்கோ கொலை குற்றவாளிகள் மூன்று பேரிடம் சிறை வார்டன் சாவியை கொடுக்க, குறிப்பிட்ட முஸ்லிம் கைதியின் அறையில் மூன்று பேரும் சென்று அடித்து காயத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
@ வார்டன் கண் முன்னே தீவிரவாதி,பயங்கரவாதி போன்ற வார்த்தைகளை கூறி அசிங்கம் அசிங்கமாக திட்டினார்கள்.

இந்த தகவல்களை கேட்டுவிட்டு, சிறை சூப்பிரண்ட் ரவீந்திரன் அவர்களை சந்தித்து ,
சிறையில் நடந்த கொடுமைகளை கடுமையாக கண்டித்தோம்,

குறிப்பாக வார்டனே சாவியை கொடுத்து அடிக்கச்சொல்லியுளார். இது சிறுவர் சீர்திருத்தப்பள்ளியா அல்லது ரெளடிகளின் கூடாரமா? என்று கேட்டு வார்டனின் அக்கிரமத்தை கண்டித்தோம். அதற்கு அவர், அது என் பார்வைக்கு வராமல் நடந்து விட்டது. அதை உடனே கண்டித்து விட்டேன். அதற்கு நான் தனிப்பட்ட முறையில் பொறுப்பு எடுத்துக்கொள்கிறேன். இனி இது போல் நடக்காது சார். 
நான் பார்த்துக்கொள்கிறேன்.என்றார். 

தாடி விஷயத்தையும், ஜெபக்கூடத்தில் அமரும் விஷயத்திலும் நாம் யாரும் யாரையும் வற்புறுத்துவதில்லை. அவரவர் இஷ்டப்பட்டால் அமரலாம் என்று பொறுமையாக விளக்கம் அளித்தார். 

மேலும் நான் கோயம்புத்தூர் காரன், பாய் மார்கள் அதிகம் இருக்கும் கோவை, பாளையங்கோட்டை சிறைகளில் நான் பணிபுரிந்து இருக்கிறேன். என்னை குறித்து கேட்டுப்பாருங்கள். என்றார்.

நாம், நீங்கள் தெளிவாக பேசுகிறீர்கள். ஆனால் உங்கள் பார்வைக்கு வராமலா இந்த காரியம் நடந்திருக்கும்? வார்டன் காட்டும் மோசமான போக்கை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என்றதும், அவர் மேல் வந்த புகார்களுக்கு நான் உடனே சில நடவடிக்கை எடுத்துவிட்டேன். இனியும் புகார் வராது. வந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். இதை நீங்கள் பெரிதுபடுத்தாதீர்கள் என்றார்.

உடனே நாம்,இந்த பிரச்சனை சாதரணமான விஷயம் அல்ல. வெளியே முஸ்லிம் ஜமாஅத்கள் கடும் கோபத்தோடும், வேதணையோடும் நிற்கிறார்கள். இது முழுக்க மத ரீதியாக துன்புறுத்தும் போக்கை உங்கள் சிறை வார்டன் கடைபிடித்து, அந்த சிறுவனை சித்ரவதை செய்துள்ளனர். மற்ற கொலை குற்றவாளிகள் போல் அல்ல இவர். இவர் மீது பொய் வழக்கு போட்டு இங்கே தள்ளியுள்ளனர். அவர் சிறைக்குள் தொழும் போதும் தொல்லை கொடுத்துள்ளனர். அவர் வணங்குவதற்க்கும தனி இடம் தயார் செய்து கொடுக்குமாறு கூறினோம்.

மேலும் இதே கடும் போக்கு தொடருமானால் உங்கள் சிறைச்சாலையை முற்றுகையிடுவதுடன், தவறு செய்யும் அதிகாரிகள் மீது வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம். என எச்சரித்து விட்டு வெளியேறினோம்.விரைவில் மாநில நிர்வாகிகள் சிறைத்துறை ஐ.ஜி யை சந்திக்க உள்ளனர்.
நன்றி:அப்துல் காதர் மன்பஈ

மனைவியை நிர்வாணமாக படம் பிடித்து ரூ.10 லட்சம் கேட்ட டாக்டர் கைது


திருவனந்தபுரம், நவம்பர் 21:  திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் அருகே உள்ள செருவைக் கல் பகுதியை சேர்ந்தவர் வித்யாதரன். இவரது மகன் ஜெயகிருஷ்ணன் (27). பல் டாக்டரான இவர் தற்போது கோதமங்கலத்தில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் எம்.டி.எஸ். படித்து வருகிறார். கடந்த செப்.15ம் தேதி இவருக்கும் அடூர் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. மனைவியுடனான படுக்கை யறை காட்சிகளை அவருக்கு தெரியாமல் ஜெயகிருஷ்ணன் வீடியோ எடுத்துள்ளார்.  மேலும் அவரை நிர்வாணமாக்கி புகைப்படமும் எடுத்துள்ளார். இவை அனைத்தையும் லேப்டாப்பில் பதிவு செய்தார். மனைவியை மது குடிக்கவும், ஆபாச படங்கள் பார்க்கவும் ஜெயகிருஷ்ணன் வற்புறுத்திள்ளார். இதற்கு மனைவி மறுக்கவே அவரை கொடுமைப்படுத்த தொடங்கினார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு மனைவியை எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்ற ஜெயகிருஷ்ணன் நடுரோட்டில் அவரை இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்தவற்றை அந்த பெண் கூறினார். அவர்கள் உடனடியாக அங்கு வந்து அவரை அழைத்து சென்றனர். இந்நிலையில், மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்ட ஜெயகிருஷ்ணன், எனக்கு ரூ.10 லட்சம் தராவிட்டால் உங்களது மகள் என்னுடன் இருக்கும் படுக்கையறை காட்சிகள், நிர்வாண புகைப்படங்களை யு டியூப்பில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நாசரூதீன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, ஜெயகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்து லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரை பறிமுதல் செய்தனர். 

கும்பகோணம் பாத்திமா நாச்சியார் மக்களை ஏமாற்றியது எப்படி ?ஒரு திடுக் ரிப்போர்ட் !!!

146619613 ஆயிரம் பவுன்; 30 கோடி மோசடி – பாத்திமா நாச்சியார் கூறும் பரபரப்புத் தகவல்கள்.   கும்பகோணம் வட்டிப்பிள்ளையார் கோயில் அருகில் இந்திரா நகர் புதுத் தெருவில் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தவர் பாத்திமா நாச்சியார். இவர் மயிலாடுதுறை சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர். இவரது கணவர் தமிமுன் அன்சாரி.
பாத்திமாவிடம் 10 பவுன் தங்க நகையைக் கொடுத்தால் ரூ.15 ஆயிரம் தருவாராம். இதுவரை நூற்றுக்கணக்கானோரிடம் ரூ.30 கோடி மதிப்புள்ள நகைகளைப் பாத்திமா வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நகைகளைப் பெற்ற பாத்திமா நாச்சியார், அவற்றைத் திரும்பத் தராமல் ஏமாற்றியதாக சென்னையில் தமிழக டிஜிபி ராமானுஜத்திடம் சிலர் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை சென்னை சென்ற பாத்திமா, டிஜிபியைப் பார்த்துவிட்டு வெள்ளிக்கிழமை காலை கும்பகோணம் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பாத்திமா நாச்சியார் வீட்டுக்குச் சென்றபோது அவர் அங்கு இல்லை. ஒரு மணி நேரம் கழித்து வந்தவர், “தி இந்து” நிருபரிடம் கூறியதாவது:   “2010-லிருந்து 2012 ஜனவரி வரை நகை சுழற்சி (?) செய்து வந்தேன். எனக்கு 23 பேர் முகவர்களாகச் செயல்பட்டனர். நாகை மாவட்டத்தில் உள்ளவர்களிடம்தான் நாங்கள் நகைகளை வாங்கியுள்ளோம். அவர்கள், தங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து 10 பவுன் நகை வாங்கித் தந்தால், 10 நாளில் ரூ.15 ஆயிரம் தருவேன்.
ஒரு மாதத்தில் நகையை திரும்பத் தந்து விடுவேன். எல்லோரும் ஒரு குடும்பம்போல் இருந்தோம். நகை சுழற்சி நடக்கும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. நகைகளை மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீராம் சிட் பண்ட் நிறுவனத்தில் அடகு வைத்துதான் பணத்தை தந்து கொண்டிருந்தேன். முதலில் அவர்கள் எவ்வளவு வேண்டும் என்றாலும் நகை வைக்கலாம் என்றார்கள். ஒருகட்டத்தில், அவர்கள், தொகை ரூ.8 கோடிக்கு மேல் தாண்டிவிட்டது, இனிமேல் நகை வைக்க முடியாது என்றதால் பண சுழற்சி நின்றுவிட்டது.
அப்போதுதான் பிரச்சினை தொடங்கியது. இந்நிலையில் மயிலாடுதுறை ஐசிஐசிஐ வங்கி நகை மதிப்பீட்டாளர் சங்கர் என்பவர் உதவ முன்வந்தார். ஒருவரின் பெயரில் ரூ.4.50 லட்சம் வரை நகைக் கடன் பெறலாம் என்பதால், அவரே சுமார் 150 பேரின் பெயரில் நகைக் கடன் பெற்றுத் தந்தார். அவரே பெயர் வைத்து, ஆவணங்களையும் தயார் செய்து கொண்டார். இதற்காக என்னிடம் ரூ.4.50 கோடி வரை கமிஷனாகப் பறித்துக்கொண்டார்.
இந்நிலையில், சில வாடிக்கையாளர்கள் 10 மாதம் வரை நகையை வைத்துக்கொள்ளுங்கள், முதலிலேயே ரூ. 1 லட்சமாகத் தந்துவிடுங்கள் என்றனர். அப்படி என்றால் நகையை திரும்பத் தரும்போது பணத்தையும் திரும்பத் தந்துவிடவேண்டும் என்ற நிபந்தனைப்படி எல்லோருக்கும் பணம் தந்தேன். முகவர்களால்தான் பிரச்சினை இதற்காக நான் யாரிடமும் எழுதிக் கொடுக்கவில்லை. என்னிடம் வாங்கிய பணத்துக்கு முகவர்கள் எழுதித் தந்துள்ளனர்.
அந்தப் பணத்தை அவர்களை வேறு வழிகளில் முதலீடு செய்து, வீடும் சொத்தும் சேர்க்கத் தொடங்கியதால்தான் பிரச்சினை ஏற்படத் தொடங்கியது. இந்நிலையில்தான், மயிலாடுதுறையிலிருந்து நான் அடித்துத் துரத்தப்பட்டு, கும்பகோணத்தில் உள்ள எனது கணவருக்குச் சொந்தமான வீட்டில் கடந்த ஓராண்டாக வசித்து வருகிறேன். மயிலாடுதுறையில் உள்ள வீட்டை எனது முகவராக செயல்பட்ட தன்ஷிலா வடகரை என்பவருக்காக பாமகவைச் சேர்ந்த வி.ஜெ. மணி, ம.க. ஸ்டாலின் ஆகியோர் எங்களை மிரட்டி வீட்டின் பத்திரத்தை வாங்கிச் சென்று விட்டனர்.
என் மீது நாகை காவல் நிலையத்தில் புகார்கள் பதிவு செய்யப்பட்டு நான் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டது. அப்போது எனக்கு உதவ உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இம்தியாஸ் என்பவர் முன்வந்தார். என்னை குண்டர் சட்டத்தில் கைது செய்யவுள்ளதாகவும், அதனால் முன்ஜாமீன் பெற வேண்டும் என்று அவர் கூறியதோடு, இந்தப் பிரச்சினைகளை முழுமையாக முடித்துத் தருவதாகக் கூறி ரூ.13 லட்சம் வரை பறித்துக் கொண்டார். முன் ஜாமீன் மட்டும்தான் பெற்றுத் தந்தார்.
முன்ஜாமீன் பெற ரூ.22 ஆயிரம்தான் செலவாகும் என்பது பின்னர்தான் தெரிந்தது. என்னை மிரட்டி பணம்பறித்துக்கொண்ட அவர், எனது காரையும் தர மறுக்கிறார்.   கடந்த 12-ம் தேதி அடையாளம் தெரியாத சுமார் 20 பேர் வந்து எனது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து என் கணவரை கடத்திச் சென்று விட்டனர். இதுகுறித்து நான் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு திரும்பிய நிலையில், டி.வி.யில் நான் நகை மோசடி செய்துவிட்டு தலைமறைவானதாக செய்தி வந்தது.
அதனால், நான் உடனே புறப்பட்டு சென்னை சென்று டிஜிபி ராமானுஜத்தைச் சந்தித்து விளக்கம் அளித்தேன். நாகை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு உங்கள் தொடர்பான புகார்களை அனுப்பிவிடுகிறோம். அவர்கள் அந்த வழக்கை விசாரிப்பார்கள். உங்கள் கணவரையும் மீட்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறி அனுப்பிவைத்தார். 8 ஆயிரம் பவுன் நகை அடகு இப்போது எனது பொறுப்பில் 8,000 பவுன் நகைகள் வங்கியில் மீட்க முடியாத நிலையில் உள்ளன. மற்றவை எனது முகவர்களிடம்தான் உள்ளது.
எனக்கு முகவர்கள் தர வேண்டிய தொகை ரூ.8 கோடி வரை உள்ளது. நகை மற்றும் ரூ.8 கோடி பாக்கியை அவர்கள் தந்தால்தான் பணத்தை திரும்பத் தர முடியும். நான் யாரிடமும் நகையை வாங்கும்போது கையெழுத்திடவில்லை. ஆனால் முகவர்கள் என்னிடம் வாங்கிய தொகைக்கு ஆதாரம் இருக்கிறது. என்னுடைய பிரச்சினையைப் பயன்படுத்தி, முகவர்கள், வழக்கறிஞர்கள், போலீஸார் எனப் பலரும் என்னிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்” என்றார்.
இதன் பின்விளைவுகள் தெரிந்துதான் இதில் ஈடுபட்டீர்களா, வாடிக்கையாளர்களிடம் வாங்கிய நகைகளுக்கு யார் பொறுப்பு என்றபோது, “இதை விளையாட்டாகத்தான் செய்யத் தொடங்கினேன். இந்த அளவுக்கு விபரீதமாகும் என்று நினைக்கவில்லை. எனது கணவர் வெளிநாட்டில் இருந்ததாலும், நான் ஒரே பிள்ளை என்பதாலும் எனக்கு ஆலோசனை வழங்க யாரும் இல்லை. நான் என்ன செய்துள்ளேன் என்பதை நினைக்கும்போது பயமாக உள்ளது. வாழ்வா, சாவா என்ற நிலையில் இருக்கிறேன்” என்கிறார் பாத்திமா.
கதவுகளை இயக்கிக் கொண்டிருந்த நவீன ரிமோட் கருவிகள், வீட்டினுள் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள டி.வி., ஆடம்பரப் பொருள்கள், வெளிப்புற கண்ணாடிகள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்தன. வீட்டினுள் வயதான தாய், தந்தை, கடத்தல் பயத்தால் 10-ம் வகுப்போடு படிப்பு நிறுத்தப்பட்டு கடந்த ஓராண்டாக வீட்டினுள் அடைபட்டுள்ள மகன் மகளுடன், சில இளைஞர்களின் பாதுகாப்புடன் மார்பிள் கற்களால் இழைக்கப்பட்ட தளத்தில் குஷன் சோபா செட், மென்மயிர் கம்பளம் விரிக்கப்பட்ட முற்றத்தில் அமர்ந்தவாறு அச்சத்துடன் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார் பாத்திமா நாச்சியார்.

பிரபல நகை மோசடி பேர்வழி கும்பகோணம் பாத்திமா கைது -சங்க்பரிவார கும்பல் பின்னணியா ?

மயிலாடுதுறையில் 6 ஆயிரம் பவுன் தங்க நகைகள் மோசடி: கைதான கணவன்–மனைவியிடம் போலீசார் விசாரணை

நாகப்பட்டினம்,நவம்பர் 18: தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிமுன்அன்சாரி (வயது 47). இவருடைய மனைவி பாத்திமா (40).
இவர்கள் தங்க நகைகளை கொடுத்தால் மாதந்தோறும் பணம் தருவதாகவும், ஒரு பவுனுக்கு ரூ.ஆயிரம் தருவதாகவும், கேட்கும் நேரத்தில் தங்க நகைகளை பணத்துடன் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறி தொழில் நடத்தி வந்தனர். இவர்கள் கூறியதை உண்மை என நம்பிய மயிலாடுதுறை கிளியனூர், வடகரை, சிதம்பரம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், தங்களுடைய தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்தனர்.

முதலில் பெண்களிடம் தங்க நகைகளை வாங்கி அதை தனியார் வங்கிகள், பெரிய நிதி நிறுவனங்களில் அடகு வைத்து மாதந்தோறும் பணமாக கொடுக்கப்பட்டது. இதை நம்பி மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மேலும் பல பெண்கள் தமிமுன்அன்சாரி மற்றும் பாத்திமாவிடம் தங்க நகைகளை கொடுத்தனர்.
பின்னர் இருவரும் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் முகவர்களை நியமித்து தொழில் நடத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் 10 ஆயிரம் பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்க நகைகளை கொடுத்த பெண்களுக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து தமிமுன்அன்சாரி மற்றும் அவரது மனைவி பாத்திமாவிடம் கேட்டனர். அப்போது கணவன்–மனைவி இருவரும் தங்க நகைகளை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மயிலாடுதுறை பகுதிகளை சேர்ந்த பெண்கள் நாகை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் பாத்திமா தமிமுன்அன்சாரி ஆகியோர் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு பணம் கொடுத்தது பற்றியும், பின்னர் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றியது பற்றியும் கூறி இருந்தனர். பின்னர் இதுதொடர்பாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தியிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று நகை மோசடி குறித்து புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து 10 ஆயிரம் பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக புகார் கூறப்பட்ட பாத்திமா சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தனது கணவர் தமிமுன்அன்சாரி கடத்தப்பட்டு விட்டதாக கூறி இருந்தார். இந்த புகார் மனு கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மோசடி புகார் தொடர்பாக நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு கும்பகோணத்தில் இருந்த பாத்திமா, அவருடைய கணவர் தமிமுன்அன்சாரி ஆகியோரை நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நாகைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருவரிடமும் விசாரணை நடந்தது. விசாரணையில் தமிமுன் அன்சாரியும், பாத்திமாவும் சேர்ந்து மயிலாடுதுறை பகுதி பெண்களிடம் இருந்து 6 ஆயிரத்து 184 பவுன் நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேரையும் நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

துபாயில் ரூம் இன்சார்ஜுகள் எப்படி இருப்பார்கள் ?ஒரு சுவாரஸ்யமான தகவல்கள் :

துபாயில் ரூம் இன்ச்சார்ஜிகள் எப்படி இருப்பார்கள் என்று துபாய் வாழ் நண்பர்கள் நன்கு அறிந்து இருப்பார்கள் அறியாதவர்களுக்கு அது பற்றிய சில சுவாரசியமான ஒரு பதிவு
துபாயில் ரூம் இன்ஜார்ஜிகள் :-
1.அடுத்தவன் பணத்தில் ரூம் வாடகை கழிப்பார்கள்
2.ரூம்பில் அவர் படுக்கும் போது மட்டும் ஏசி எப்போதும் ஆன் செய்து இருக்கும்
3.ரூம்பில் உள்ள சின்ன சின்ன வேலைகளை மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பார் அவர் ஒரு வேலையும் செய்ய மாட்டார்
3.ரூம்பில் முக்கிய இடத்தில் அவருக்கு படுக்கையே வசதியாக அமைத்து கொள்ளுவார்
4.எப்போதும் டிவி ரிமோட்டை அவர் மட்டும் தான் வைத்து இருப்பார் . அவர் விரும்பும் நிகழ்ச்சிகளை தான் மற்றவர்களும் பார்க்க வேண்டும்
5.அவர் படுக்கும் போது மட்டும் FAN அதிகபடுத்தி இருப்பார்
6.அனைவரின் பணத்தில் ஓசி சாப்பாடு சாப்பிட்டு கொண்டு அவர் விரும்பும் சமையல் மட்டும் செய்ய சொல்லுவார்
7.தண்ணீர் கேன் அவருடைய பக்கத்திலேயே வைத்து இருப்பார்
8.அனைவரும் அவர்களுடைய துணிகளை ஆண்கரில் மாட்ட தக்காளி அவர் மட்டும் தனி பிரோ வைத்து இருப்பார்
இப்படி மோசமான ரூம் இஞ்சார்ஜிகளும் இருக்கிறார்கள் துபாயில் …
இப்படி உள்ள நண்பர்கள் இதை படிக்க நேர்ந்தால் தயவு செய்து உங்களுடைய நடவடிக்கையை மாற்றி கொள்ளுங்கள், யாரும் யாருக்கும் எங்கும் எப்போது அடிமை இல்லை

மெளவத் அறிவிப்பு: "A. அப்துல் ஜப்பார்"


முத்துப்பேட்டை, நவம்பர் 09: முத்துப்பேட்டை கல்கேனித்தெரு மர்ஹும் M.முகமது ஹசனாலை அவர்களின் மகனும், மர்ஹும் M. மௌலா அபூபக்கர், மர்ஹும் M. நைனா முகமது, M.அப்துல் கரீம் ஆகியோரின் சகோதரரும், J. அஸ்கர் அலி, முத்துப்பேட்டை இஸ்லாமிய நலச்சங்கத்தின் துணைத் தலைவர் MRS. அஹமது ராவுத்தர், ஜனாப் சேக் தாவுத் (மதுக்கூர்) இவர்களின் மாமனாரும் A. முகமது ஹசன் அவர்களின் தகப்பனாருமாகிய “A. அப்துல் ஜப்பார்” அவர்கள் நேற்று காலை 8 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) 

அன்னாரின் ஜனாசா நேற்று மாலை 4.30 மணியளவில் குத்பா பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


அறிவிப்பவர்:

A. முகமது ஹசன் +971 55 88 44 392

மேலும் தொடர்புக்கு:

MRS.அஹமது ராவுத்தர். +971 55 22 37 541
MRS. சேக்காதி.                    +971 50 45 08 132

நமது நிருபர்:

KM காதர் கனி (பாடகர்)


எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள்: "தவ்சிஃப் அஹமது" அழைப்பு:



முத்துப்பேட்டை,நவம்பர் 09 : முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து சகோதரர் களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1435 முஹர்ரம் பிறை 27,  அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 01-12-2013 ஞாயிற்று கிழமை காலை 11:30 மணியளவில் பெரியோர்களால்  நிச்சயித்த வண்ணம் திருத்துறைப்பூண்டி விஜிலா திருமண மஹாலில்  எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 

இப்படிக்கு: 

மேலும் தொடர்புக்கு:

பவுசுல் ரஹ்மான்: 
கிட்டங்கித் தெரு: 
தொலைபேசி எண்: 0091 7845 412 661

நமது நிருபர் 

AKLT. அப்துல் ரஹ்மான்.

கொத்பா பள்ளிவாசல் அருகே மலை போல் குவியும் குப்பைகள் -பேரூராட்சியின் மெத்தனப்போக்கை கண்டித்து டிராக்டரை முற்றுகையிட்ட 8-வது வார்டு மக்கள் :

முத்துப்பேட்டை நவ – 06
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு காய்ச்சலால் பலரும் பாதிக்கபட்டுள்ளனர் . இந்த நிலையில் நகர் முழுவதும் குப்பைகள் பேரூராட்சி அப்புறப்படுத்தாததால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி அதன் மூலம் டெங்கு கொசுகள் உற்பத்தி ஆவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் பல நாட்களாக குப்பைகள் அல்லபடாததை கண்டித்தும், கொத்துபாபள்ளி வாசல் எதிர்புறம் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவதை கண்டித்தும் நேற்று கொத்துபாபள்ளி வாசல் எதிர்புறம் குப்பை சேகரிக்க வந்த பேரூராட்சி டிராக்டரை அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ அயுப்கான், ஹமீது கட்டி , சஃபான் மற்றும் பொதுமக்கள் வழிமறைத்து முற்றுகையிட்டு சிறைபிடித்தனர் . இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள் கூடினார்கள் . சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை போலீசார் மற்றும் பேரூராட்சி சுகாதார அலுவலர் வீரமணி ஆகியோர் சிறை பிடித்த மக்களிடம் இனிமேல் பள்ளிவாசல் முன்பு குப்பைகள் கொட்டமாட்டோம் . வார்டு பகுதியில் நாளை முதல் உடனக்குடன் குப்பைகள் அகற்றப்படும் என்று உறுதி அளித்ததால் சிறைபிடித்த டிராக்கடரை பொதுமக்கள் விடுவித்தனர் .





காந்தியை ஏன் கொலை செய்யக் கூடாது? இந்த தேசத்தைக் கெடுத்ததே அவர்தானே.. -இந்துத்துவப் பெண்ணின் திமிர் பேச்சு!

சென்னை, நவம்பர் 04: சன் டிவி வளாகத்தில் பேராசியர் மார்க்ஸ் அவர்களுக்கும் இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கும் மத்தியில் நடந்த உரையாடலின் சுருக்கும்:

முஸ்லிம்கள் மீது நடைபெற்ற வன்முறை ஒன்று குறித்து விவாதிக்க 'சன் டிவி' வீரபாண்டியன் கூப்பிட்டிருந்தார்.

முன்னதாக கான்டீனில் அமர்ந்து நானும் அவரும் தேநீர் குடித்துக் கொண்டிருந்தோம், சற்று நேரத்தில் என்னுடன் விவாதிக்க இருந்த இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்த ஒரு பெண்மணி அங்கு வந்தார்.

வந்தவுடன் எங்கள் இருவரிடமும் ஆளுக்கு ஒரு 'டி.வி.டி'யைத் தந்தார். படு பந்தாவாகப் பேசிக் கொண்டிருந்தார்.

தான், ஒரு முறை காரில் திருச்சி சென்றபோது உளுந்தூர்பேட்டை அருகில் காரில் ஏதோ ரிப்பேர் ஏற்பட்டு, இரண்டு மணி நேரம் அங்கு நிற்க நேரிட்டதாம்.

அதற்குள் ஏகப்பட்ட லாரிகளில் மாடுகள் கேரளாவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததைப் பார்த்து மனம் நொந்தாராம்.

அது தொடர்பாக எடுக்கப்பட்ட ஆவணப் படம் இது, என்றார்.

அப்படியா, வீட்டிற்குப் போய் பார்க்கிறேன் என்றேன்.

cow slaughter தொடர்பான அந்தப் படம் எடுக்கும்போது பல மாநிலங்களிலும் தகவல் திரட்டுவதில் ஏற்பட்ட கஷ்டத்தை விளக்கிய அவர், குஜராத் மாநில நிர்வாகத்தை வெகுவாகப் புகழ்ந்து தள்ளினார்.

குஜராத் மாநில 'அனிமல் ஹஸ்பன்டரி' இயக்குனரிடம், அங்குள்ள நிலை குறித்து கேட்ட மாத்திரத்தில் விவரங்களை அடுத்த கணமே அவர் கூறி விட்டாராம்.

அந்த அம்மையாரின் அலட்டல்களால் சற்றே எரிச்சலுற்றிருந்த நான், இந்த இடத்தில் வாய்விட்டுச் சிரித்தேன்.

"why, why, why are you laughing?" என்றார்.

"ஒண்னும் இல்ல. அவர் என்ன பதில் சொல்லியிருப்பார்னு நினைச்சுப் பார்த்தேன், சிரிப்பு வந்துவிட்டது" என்றேன்.

"what, what, what do you mean?" என்றார்.

"we don't slaughter cows. we slaughter only Muslims"

அப்படீன்னு அவர் சொன்னாரா? என்றேன்

கொதித்துப் போனார் அவர். சட்டென்று நாற்காலியிருந்து எழுந்தார். "இப்பிடியெல்லாம் பேசக் கூடாது. இங்கே எவ்வளவு வன்முறைகள் நடந்திருக்கு? எவ்வளவு இந்துக்கள் கொல்லப்பட்டிருக்காங்க, அதை எல்லாம் பேசுவீங்களா?' எனச் சீறினார்.

விவாதம் முற்றியது...

காந்தி கொலை பற்றிப் பேச்சு வந்தது. "காந்தியையே கொல்லவில்லையா நீங்கள்?" என்றேன்.

"Yes, Gandhi was killed. Why not one kill him.. இந்தை தேசத்தைக் கெடுத்ததே அவர்தானே.."என்றார்.

வீரபாண்டியனுக்குத் தர்மசங்கடமாகி விட்டது. என்ன இருந்தாலும் அவர் host அல்லவா. ஒரு மாதிரியாகச் சமாதானப்படுத்தி ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றார்.

அன்று நிகழ்ச்சி விவாதமும் படு காரசாரமாக இருந்தது.

நிகழ்ச்சி முடிந்து கீழே செல்ல லிஃப்டை நோக்கிச் சென்றோம். ஊழியர் ஒருவர் எங்களை அழைத்துச் சென்றார்.

லிஃப்ட் அருகில் வந்ததும் அவர், "நான் இந்த ஆளோட போக மாட்டேன்.." எனச் சத்தமாகச் சொல்லிவிட்டு எதிரே இருந்த லிஃப்டை நோக்கி தட தடவென ஓடினார்...

அழைத்து வந்த ஊழியர் ஒரு கணம் திகைத்துப் பின் புன்னகைத்தார்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)