முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை -ரிக்டரில் 43.6 செ.மி .ஆக பதிவு

தஞ்சாவூர், செப்.11–
தஞ்சை டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழைபெய்து வருகிறது. நேற்று இரவும் தஞ்சையில் மழை பெய்தது. நேற்று முதல் இன்று காலை 8.30 மணிவரை (24மணிநேரம்) பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு


கல்லணை–12.8, திருக்காட்டுப்பள்ளி–3.2, தஞ்சாவூர்–4.2,அய்யம் பேட்டை–6.0, நெய்வாசல் தென்பாதி–4.8, பூதலூர்–0.4, வெட்டிக் காடு–5.4, பேராவூரணி–2.8, ஒரத்தநாடு–9.6, மதுக்கூர்–4.2, பட்டுக்கோட்டை–3.0, நீடாமங்கலம்–1.4, திருத்துறைப்பூண்டி –11.2, முத்துப்பேட்டை–43.6, கோரையாறு–2.4, தலை ஞாயிறு–18.4, திருப்பூண்டி– 13.0, வேதாரண்யம்–3.2.


அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 43.6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் 42.2 மி.மீட்டர் மழையும் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 51.0 மி.மீட்டர் மழையும் பெய்தது. இன்று ஒரத்தநாட்டில் 9.6 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆனால் மயிலாடுதுறையில் மழை பெய்யவில்லை.


கல்லணையில் இருந்து இன்று காலையில் காவிரி ஆற்றுக்கு 800 கனஅடி தண்ணீரும், வெண்ணாற்றுக்கு ஆயிரத்து 301 கனஅடி தண்ணீரும், கல்லணை புதுஆற்றுக்கு 2ஆயிரத்து517 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 4 ஆயிரத்து 614 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றுக்கு நேற்று கல்லணையில் இருந்து 518 கனஅடி தண்ணீரும் கோவிலடி சேனலுக்கு 5 கனஅடி தண்ணீரும், பிள்ளைவாய்க்காலுக்கு 5 கன அடி தண்ணீரும் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டிருந்தது.டெல்டா மாவட்டத்தில் தொடரும் மழை: முத்துப்பேட்டையில் 43.6 மி.மீ.பதிவு


டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிரிடப்பட்டுள்ள சம்பா சாகுபடி நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கொள்ளிடம், கோவிலடி சேனல், பிள்ளை வாய்கால் ஆகிய ஆறுகளுக்கு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று நிறுத்தப்பட்டது.

நாகர்கோவிலில்ஆபாச படத்தில் மனைவியை கண்டு அதிர்ந்த கணவர்!பதைக்கவைக்கும் கள்ளத் தொடர்புகள் !!!

yarlminnal.com (4)


நாகர்கோவில்,செப்டம்பர் 12: நாகர்கோவிலில் மனைவி, வேறு ஒரு ஆணுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச சி.டி.யை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் அந்த சி.டி. ஆதாரத்துடன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். முதலில் மறுத்த மனைவி பின்பு ஒப்புக் கொண்டார். ஆனால் அருகில் இருப்பது கணவன் என கூறியதால் குழப்பம் ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஆபாச சி.டி.க்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.

அந்த பகுதியில் நண்பர்கள் சிலர் வாங்கிய ஆபாச சி.டி.யை போட்டு ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு அந்த படத்தில் உல்லாசமாக இருந்த பெண்ணின் படத்தை பார்த்ததும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த பெண், அவருடைய நெருங்கிய நண்பரின் மனைவி ஆவார். இந்த தகவலை அறிந்த மற்ற நண்பர்களும் அதிர்ச்சி அடைந்து, அது குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரிடம் தெரிவிக்க முடிவு செய்தனர். அதன்படி, நாகர்கோவில் அருகே வசிக்கும் கணவனிடம் அந்த சி.டி.யை கொடுத்தனர்.

கணவன் அந்த சி.டி.யை போட்டு பார்த்தபோது, அவருடைய மனைவி மற்றொரு வாலிபருடன் உல்லாசமாக இருந்த காட்சியை பார்த்து அதிர்ந்துவிட்டார். 15 நிமிட நேரம் ஓடிய அந்த காட்சியை பார்த்தபின், மனைவியிடம் அதுபற்றி குறிப்பிட்டு தகராறு செய்தார். இந்த தம்பதியினருக்கு கல்லூரியில் படிக்கும் வயதில் மகன் இருக்கிறார். இந்த நிலையில் மனைவியின் ஆபாச படத்தை பார்த்த கணவன் மனைவியுடன் தொடர்ந்து குடும்பம் நடத்த மறுத்துவிட்டார். 

அவர், மனைவியின் குடும்பத்தினரை அழைத்து, தங்களுடன் அழைத்துச்சென்றுவிடும்படி வற்புறுத்தினார். இரு தரப்பு குடும்பத்தினராலும் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியவில்லை. இதனால் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சி.டி. யுடன் சென்ற கணவர் மனைவி பற்றி புகார் கூறினார். 

கள்ளக்காதல் விவகாரம் குறித்து பல்வேறு வகையான புகார்களை பார்த்துள்ள போலீசாருக்கு, ஆனால் மனைவி மற்றொருவருடன் உல்லாசமாக இருந்த சி.டி. ஆதாரத்துடன் வந்துள்ள புகார் அதிர்ச்சியை அளித்தது. இந்த புகார் குறித்து இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சி.டி.யில் உள்ள காட்சி குறித்து மனைவியிடம் விசாரித்த போது படத்தில் இருப்பது நான் இல்லை என்று கண்ணீர்மல்க மறுத்தார். 

தீவிர விசாரணைக்கு பிறகு “அந்த காட்சியில் இருப்பது நான் தான். படம் பிடித்து இருக்கும் இடமும் எங்கள் வீடு தான். ஆனால், என் அருகில் இருப்பது கணவர்தான்” என்றார். ‘பளிச்’சென்று அடையாளம் தெரியும் அளவுக்கு அந்த ஆணின் முகம் தெளிவாக தெரியாததால், குழப்பம் ஏற்பட்டாலும், சி.டி. காட்சியில் இருப்பது நான் இல்லை என்று, கணவர் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், இந்த ஆபாச காட்சி, ஊரில் பலருடைய செல்போனில் பதிவாகி இருக்கும் தகவலையும் கூறினார். 

போலீசார் கணவரை சமாதானம் செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், மனைவியை பிரிவதில் கணவர் உறுதியாக இருந்தார். இறுதியில் மனைவி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

முத்துப்பேட்டை அடுத்து தம்பிக்கோட்டையை சேர்ந்த மாணவன் ஆற்றில் மூழ்கி பலி.


முத்துப்பேட்டை, செப்டம்பர் 12: முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தை சேர்ந்த அய்யா கணபதி. இவரது மகன் முருகேஷ் குமார் (14). இவர் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் முகேஷ்குமார் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். மாலை நேரத்தில் செம்படவான்காடு பாமணியாற்றில் நண்பர்களுடன் குளித்த போது ஆற்றின் நீரால் முகேஷ்குமார் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது முகேஷ்குமார் நீரில் மூழ்கி பலியானார். 

பின்னர் முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் பலமணிநேரம் போராடி முகேஷ்குமாரின் உடலை மீட்டனர். பின்னர் முகேச்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். மாணவன் முகேஷ்குமார் பலியான சம்பவத்தால் நேற்று அவர் படித்த தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி ஒரு நாள் விடுமுறையளித்துள்ளது. 

தொகுப்பு:  A.K.L.T. அப்துல் ரஹ்மான். BBA.  

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)