
டிசம்பர் 6 வருகிறது! 22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அந்தக் கோரச் சம்பவங்கள் நினைவுகளை கண்ணீரோடு மீட்டுகின்றன.நான் 1992ல் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் அயோத்தி விவகாரம் பரபரப்பான நிகழ்வாக இருந்தது.பாபரி மஸ்ஜிதை உடைக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு சமுதாய மக்களிடம் இருந்தது.டிசம்பர் 6 நெருங்க நெருங்க மதக்கலவர அபாயங்கள் அனைவரையும் அச்சமூட்டிக் கொண்டிருந்தது. செய்தித் தாள்களும், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனும், வானொலியும்தான்...