முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் TNTJ நடத்திய இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக் கூட்டம்...











முத்துப்பேட்டை, செப்டம்பர் 02 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நேற்று மாலை 6 மணியளவில் துவங்கி இரவு 10 மணிவரை நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு TNTJ கிளை செயலாளர் ஜனாப். A.M. புஹாரி அவர்கள் தலைமை வகித்தார்.

அர்ரஹ்மத் தவ்ஹீத் பெண்கள் மதரசா, ரஹ்மத் நகர். சகோதரி. ஜெசீரா. ஆலிமா அவர்கள் தீமைகளை தடுப்பதில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதற்க்கு பின்னர் TNTJ மாவட்ட பேச்சாளர் ஜனாப். M. அல்தாப் ஹுசைன் அவர்கள் ரமளானில் பெற்ற படிப்பினை என்ன? என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

மேலும் இதில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட TNTJ மாநில பொதுக் செயலாளர் ஜனாப். கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தின் பெயரில் ஏன் இத்தனை பிரிவுகள்?... என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சி முடிவின் போது TNTJ முத்துப்பேட்டை கிளை - 2 செயலர் ஜனாப். P. அப்துல் அஜீஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த கூட்டத்தில் சில தீர்மானகள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானங்கள் பின் வருமாறு:

இஸ்லாத்தில் இல்லாத தர்ஹா வழிபாடு, முரீது போன்ற இணைவைப்பு காரியங்கள் மற்றும் வரதட்சணை,மது போன்ற தீமையான காரியங்களிலிருந்து விலக முஸ்லிம்களுக்கு வழிகாட்டு மாறு இஸ்லாத்தின் அடிப்பையிலான குர்ஆன், ஹதீஸ் மேற்கோள் கட்டி முத்துப்பேட்டை உள்ள அனைத்து பள்ளி வாசல் நிர்வாகிகளுக்கும், மார்க்க அறிஞசர்களுக்கும், கடிதம் மூலம் நினைவு படுத்தும் பொது அதை கண்டு கொள்ளாமல் இருப்பதும், அந்த கடிதத்தை கிழித்து வீசுவதும் அறிவுடைமைதானா? என சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து இனிமேலாவது அல்லாஹ்விற்கு பயந்து செயல்படுமாறு இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முத்துப்பேட்டை அரசினர் ஆண்கள் உயர்நிலை பள்ளிகூடத்தின் நிர்வாகத்திற்கு மாணவர்களும், பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து ஒழுக்கம் மற்றும் கண்ணியத்திற்கு முஸ்லிம், மாணவர்கள் முன்மாத்ரியாக திகழவேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முத்துபெப்ட்டை அரசினர் ஆண்கள் உயர்நிலை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக பூரிதி செய்து ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை வலப்படுத்துமாறு கல்வி அதிகாரியை இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

புதிய பேருந்து நிலையத்தை சிமென்ட் ரோடு போட்டு செம்மை படுத்தி, போதுக்கூட்டத்திடலாக செயல்படுத்துவதை மாற்றி அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் உள்ளே வந்து செல்ல ஆவன செய்யுமாறு இந்த பொது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மூன்று கிலோமீட்டர் வரை நடந்து செல்கின்றனர். இவர்கள் சிரமப்படாமல் இருக்க ஆசாத் நகர் பகுதியிலிருந்தே மீனவர்கள் ஏரி செல்ல வசதியாக உடனே சவுக்கனி ஆற்றை ஆழப்படுத்தி தருமாறு இந்த பொது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

நம் ஊரின் நீர் நிலைகளான குளங்களை குப்பை மேடாகவும் சாக்கடையாகவும் மாறிவருவதை தடுத்து அதை பழையபடி நீர்பிடிப்பு குலங்களாக மாற்றும் படி இந்த பொது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

பாவச் செயல்களை செய்பவர்களுக்கும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் ஒரே தண்டனைத் தான் என்பதை சனிக்கிழமை வரம்பு மீறிய கூட்டத்தை பற்றி அல்லாஹ் சொல்லவதன் மூலம் அறிய முடிகிறது. தீமையை தடுப்பதில் உறுதியாக இல்லாவிட்டால் நாமும் பாவியாகிவிடுவோம் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏ கிரேடு வரி செலுத்தியும் சி கிறேடைவிட மோசமாக குப்பை சாக்கடையால் நாரிப்போயக்கிடக்கும் தெருக்களை உடனடியாக சுத்தம் செய்து நோய்வராமல் பாதுகாக்குமாறு இந்த பொது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். என்று இவாறு தீர்மானகள் நிறைவேற்றப்பட்டன.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

கொரடாசேரியில் SDPI கட்சி கொடியை உடைத்த சமூக விரோதியை கண்டித்து ஆர்பாட்டம்.







கொரடாசேரி,செப்டம்பர் 01 : திருவாரூர் மாவட்டம் கொரடாசேரியில் கடந்த மாதம் SDPI கட்சி சார்பில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி SDPI கட்சியில் இணைந்தனர். அங்கு கிளை துவங்கப்பட்டு கொடியும் ஏற்றப்பட்டது. இக்கொடியை கடந்த நோன்பு பெருநாள் அன்று சில சமூக விரோதிகள் இக்கொடி கம்பத்தை உடைத்துள்ளனர். இந்த செயலை கண்டித்து இன்று கோரடசெரி யில் SDPI கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. மேலும் இதற்க்கு திருவாரூர் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுசா அவர்கள் தலைமை வகித்தார். இதற்க்கு கண்டன உரை தஞ்சை மாவட்ட பொது செயலாளர் முஹம்மது ஃபாரூக் அவர்கள். கண்டன கோசம் எழுப்பியவர் நெய்னா முஹம்மது. இத கண்ட ஆர்பாட்டத்தில் ஏராளமான பொது மக்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from: www.muthuppettaiexpress.blogspot.com
நமது நிருபர்

M.கபீர்

முத்துப்பேட்டையில் குடிநீர் தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் பொது மக்கள் ஓர் பார்வை...!!!



முத்துப்பேட்டை,செப்டம்பர் 01 : முத்துப்பேட்டையில் கடந்த 10 நாட்களாக குடி தண்ணீர் அதிகமாக தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. கடந்த நோன்பு நாட்களில் குடிதண்ணீர் சாக்கடை நீர் கலந்து வந்ததால் பொது மக்கள் அனைவரும் அதிர்ச்சி குள்ளானார்கள். மேலும் இதனைத்தொடர்ந்து சில நாட்களாக வீட்டுக்கு குழாய் மூலம் வரும் குடிதண்ணீரையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனினினும் வேறு ஊர்களிலிருந்து முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் குடிதண்ணீரை லாரி மூலம் பொது மக்களுக்கு விநியோகம் செய்தனர். இந்த தண்ணீர் விநியோகத்தின் போது முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முறையாக விநியோகம் செய்ய வில்லை என்று பொது மக்கள் ஆத்திரத்துடன் அங்கும் இங்குமாக தண்ணீரை பெற அலைந்து திருந்து போராடி கொண்டிருக்கிறார்கள். மேலும் வீடுகளுக்கு குழாய் மூலம் வரும் குடிதண்ணீரை சுத்தம் செய்து எப்போது பயன் பாட்டிற்கு விடப்போகிறார்கள் என்று பொது மக்களின் கேள்விக் குறியாகவே உள்ளது. மேலும் முத்துப்பேட்டை நகருக்கு எப்போது முழுமையாக குடிதண்ணீர் கிடைக்கும் என்று ஏக்கத்துடுன் எதிர்பாத்துக்கொண்டிருக்கும் பொது மக்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

AKL. அப்துல் ரஹ்மான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)