முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் (MIWA) சார்பில் இலவச மருத்துவ முகாம்...முத்துப்பேட்டை, ஜனவரி 08 : இன்று 08.01.2012 காலை 7.30 ௦மணி முதல் மாலை 3 மணிவரை 25 ஆண்டு வெள்ளி விழா கண்டு பொன்விழாவை காண போகும் 29 ஆம் வருட முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் Reg: No.32/2009 மற்றும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முன்னணி இணையதளமான முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் இலவச மருத்துவ முகாம் முஹைதீன் பள்ளிவாசல் மதரஸாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை தலைமை பிரதிநிதி ஜனாப்.க.மு.. நெயினார் முஹம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் 250 க்கும் மேற்பட்ட பெரியோர்களும், தாய்மார்களும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இந்த மருத்துவ முகாமில் கீழ்கண்ட பரிசோதனைகள் நடைபெற்றது.
1) சர்க்கரை நோய் (Sugar) கண்டறிதல்.
2 ) இரத்த அழுத்தம் (Preasure )கண்டறிதல்.
3 ) இரத்த வகை (Blood Group )கண்டறிதல்.
4 ) கொழுப்பு (Coloushtral)கண்டறிதல்.
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் மற்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய இந்த நிகழ்சியில் கலந்து கொண்ட அனைத்து மக்களும் இது போன்ற நல்ல காரியங்களை தொடர்ந்து தொய்வின்றி செயலாற்ற இறைவனிடம் துவா செய்வதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தார்கள்.
மேற்கொண்ட பரிசோதனைகளை நாச்சிக்குளம் SAR . இரத்தப் பரிசோதனை ஆய்வக குழுவினரால் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பொறுப்பாளர்கள்:
P .M . ஜாகிர் உசேன், M . ஷாகுல் ஹமீது, ANA . ஹாஜா நஜுபுதீன். மற்றும் முத்துப்பேட்டை பிரதிநிதிகள்

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA . முனவ்வர் கான், அபு மர்வா

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)