முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சிங்கப்பூர் : முத்துப்பேட்டை அஷோசியேசனின் செயல்பாட்டுக் கூட்டமும், கலந்துரையாடலும்..




சிங்கபூர், ஜனவரி 27: முத்துப்பேட்டை அசோசியேசன் சிங்கப்பூரின் இவ்வருட செயல் பாட்டுக் கூட்டமும், கலந்துரையாடலும் 20.01.2013 ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் பென்கூளேன் பள்ளி கீழ் தளத்தில் அமைந்துள்ள ஒரு ஹாலில் சேர்ந்த ஆலோசனைக் கூட்டாமாக நடப்புத் தலைவர் M .A .Y.ஜாஹீர் ஹுசைன் தலைமையில் நடந்தது. அதுசமயம் செயலாளர் D .ஷபீர் அஹ்மத் அவர்கள் சிறப்பான பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.

 அதன் அடிப்படையில், பொது தூரநோக்குnசிந்தனையின் வெளிப்பாடாக நமது M .A .S .அசோசியேசன், சக அசோசியேசனின் தோழமையுடன் இணைந்து இரத்ததானம் வழங்குதல்,முதியோர்களின் இல்லத்திற்கு சென்று உதவியும், உடல் உழைப்பு சேவையும், சிங்கை குடியரசில் முக்கிய சேவையாக தேவைப்படும் சமயத்தில் நாமும் நமது M .A .S .யைபிரதி நிதித்து கலந்து கொள்ளுதல் என்றும்,ஒவ்வொரு இரு மாதத்திற்கு ஒருமுறை M .A .S .கூடி நடந்த, நடக்க இருக்கின்ற தேவைகளை ஆலோசனை செய்து தேவைப்படும் மாற்றங்களை சரி செய்வது என்றும், இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 17.03.2013 ஞாயிற்றுக் கிழமை நமது M .A .S .ன் குடும்ப தினமாக நாம் அனைவரும் தத்தம் குடுபத்தினர்களோடு ஓன்று கூடி சிறப்பாக கொண்டாடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.  

அதனை தாமதிக்காமல் உடனே செயல்படுத்துவது என்றும் தீர்மானமாக குறிக்கப்பட்டது. இந்த வருட முக்கிய நிகழ்வாக நமது M .A .S .க்கு தன்னார்வ நன்கொடையாக மனமுவந்து அதிகமாக தந்துதவும் சகோதரர்களையும்,தரும் தொகையின் அளவிற்கு ஏற்ப வருசைப்படுத்தி தகவல் தருவது, ஒவ்வொரு M .A .S .ன் குடுபத்தினரும் குறைந்த பட்ச நன்கொடையாக $50/= கொடுப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டது. இந்த நிகழ்சிக்கு M .A .S .ன்முன்னாள் தலைவர் ஜனாப்.M.A.முஹம்மது முஸ்தபா, M.A.முஹம்மது யூசுப், பொருளாளர் முஹம்மது நூருல் அமீன், ஹாஜா அலாவுதீன், அப்துல் லத்திப், ரஷீத் அலி, முஹம்மது அசாருதீன்,  தமீம் நசீர், தப்ரே ஆலம், எர்ஷாத், அப்துல் பாஸித், ஷேக் அப்துல் காதர், அப்துல் பாஸித் அப்துல் சலாம் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள், இறுதியாக சிற்றுண்டியுடன் இந்நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
source from: www.muthupettaiexpress.com

தொகுப்பு:

ஜெ. ஷேக் பரீது 

மவுத்து அறிவிப்பு; "ஹாஜி. முகம்மது மைதீன்"



முத்துப்பேட்டை, ஜனவரி 24: நடுத்தெரு மர்ஹூம் முஹம்மது லெப்பை கனி அவர்களின் மகனும், மர்ஹூம் முகம்மது சாலிஹூ அவர்களின் மருமகனும், மர்ஹூம் சாகுல்ஹமீது, ஜனாப் ஹபீப் முஹம்மது  ஆகியோர்களின் சகோதரரும், மர்ஹூம் ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் முஹம்மது கனி, ஜனாப் முகைதீன் பிச்சை, ஜனாப் அப்துல் காதர் ஆகியோர்களின் மச்சானும், ஜனாப் ஷாகுல் ஹமீது அவர்களின் சகலையும், ஷேக்தாவூது அவர்களின் சிறிய தகப்பானரும், ஹாஜா அலாவுதீன், ஜாகிர் உசேன் ஆகியோர்களின் மாமனாரும், ஜெகபர் சாதிக், முஹம்மது காசிம், சுலைமான் ஆகியோர்களின் பெரிய தகப்பானருமாகிய ஹாஜி. முகம்மது மைதீன் அவர்கள் நேற்று 5 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்.
அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும். 

நமது நிருபர் 

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டையில் தனியார் பஸ்ஸிலிருந்து இறங்க அடம் பிடித்த ''குடி''மகன்



முத்துப்பேட்டை, ஜனவரி 17: முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு அற்புதம் என்ற தனியார் டவுன் பஸ் சென்று வருகிறது. வழக்கம்  போல் நேற்று பகல் 1 மணிக்கு முத்துப்பேட்டையிலிருந்து புறப்பட ஆயத்தமாகி இருந்தது. அதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஜீன்ஸ் பேண்ட், கருப்பு டீ சர்ட் அணிந்த ஒரு இளைஞர் கடும் குடி போதையில் ஏறி உள்ளார். நடத்துனர் சுதாகரிடம் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துவரங்குறிச்சிக்கு டிக்கெட்டும் எடுத்து உள்ளார். அவர் இறக்கும் ஸ்டாப் வந்தும் இறங்கவில்லை, பொறுத்து பார்த்த பஸ் பட்டுக்கோட்டைக்கு சென்றது, அங்கேயும் இறங்காததை கண்ட நடத்துனர் சுதாகர் அந்த குடிமகனிடம் கேட்டும் முறையான பதில் இல்லை. பின்னர் மதியம் 2.20 க்கு பட்டுக்கோட்டையிலிருந்து பஸ் புறப்பட்டது மீண்டும் அந்த குடிமகன் இறங்கும் துவரங்குறிச்சி வந்தும் இறங்காததை கண்ட நடத்துனர் இறங்கும் படி கூறியதற்கு இறங்க அடம் பிடித்து உள்ளார். 

மீண்டும் பஸ் முத்துப்பேட்டை வந்து கொண்டு இருந்தது, கடும் குடி போதையில் இருந்த அந்த இளைஞர் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் சீட்டின் அடியில் உட்கார்ந்து வாந்தியும் எடுத்து உள்ளார். இதனால் பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியது, சரியாக 3.15 மணியளவில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் வந்து சேர்ந்தது பஸ், அங்கேயும் இறங்க அடம் பிடித்தார். மிகவும் நோந்துபோன டிரைவர் முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு பஸ்ஸை ஓட்டி வந்தார். பின்னர் அங்கு பணியில் இருந்த காவலர்கள் சண்முகநாதன், ஜீவா ஆகியோர் குடி மகனிடம் பல மணி நேரம் போராடி நைசாக பேசி பின்னர் கீழே இறக்கி விடப்பட்டார். இந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:

ரிப்போர்ட்டர் முகைதீன் பிச்சை

உலக நாயகன்? கமலுக்கு உலக பொதுமறை வழங்கும் INTJ!



சென்னை, ஜனவரி 17: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எங்கும் தஃவா, எதிலும் தஃவா என்ற கொள்கையை மையமாக கொண்டு, எக்களதையும் தஃவா களமாக மாற்றி இஸ்லாத்தை நோக்கி அழைத்து விடுத்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ் 

இவ்வழிமுறையை பின்பற்றி கடந்த வாரம் விஸ்வரூபம் என்ற திரைப்படம் சம்மந்தமாக நடிகர் கமலஹாசனை சந்தித்த இஸ்லாமிய கூட்டமைப்பில் முக்கிய இடத்தை பெற்றுள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத், நடிகர் கமலின் திரைபடங்களில் இடம் பெற்றுவரும் இஸ்லாமிய விரோதப்போக்கை கண்டித்து, முஸ்லிம்கள் யாரும் பயங்கரவாதிகளோ, தீவிரவாதிகளோ, வந்தேறி வந்த அந்நியர்களோ அல்ல, இம்மண்ணின் மைந்தர்கள், ஒரு தொப்புள் கொடி உறவுகள் என்று கூறி, இஸ்லாத்தை பற்றி விளக்கி, இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி அழைப்பு விடுத்து, திருமறை குர்ஆன் தமிழாக்கத்தையும் INTJ துணை தலைவர் முஹம்மது முனீர் அன்பளிப்புச் செய்தார்.

உலக நாயகன் என்ற போலியான புனைப் பெயர்களால் அழைக்கப்படும் நடிகர் கமல் போன்றோரை, உலகம் போற்றும் உத்தமர், எம்பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றி வாழச்செய்ய, அல்லாஹ் போதுமானவன். 

எனவே நடிகர் கமல் அவர்கள் நேர்வழி பெற இறைவனை பிராத்திக்கும் படி நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:

ஜெ. சேக்  பரீது 

பட்டுக்கோட்டையில் மத கலவரத்தை தூண்ட முயற்ச்சி!



பட்டுக்கோட்டை ஜனவரி 16: நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை அண்ணா நகர் பள்ளியில் இமாம்மாக இருக்கும் மைதீன் அப்துல் காதர் பிலால் அவர்கள் இரவு சுமார் 11 மணியளவில் வலவன்புறத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது குடிபோதையில் பிரச்சனை செய்து கொண்டு இருந்த பாலா,சிற்றரசு,சிரஞ்ஜீவி ஆகியோரின் தலைமையிலான 15 பேர் கொண்ட ரவுடி கும்பல் அந்த வழியே சென்று கொண்டு இருந்த இமாம் அவர்களை காமக் குரோதமான வார்த்தைகளால் திட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். 

இதனை அறிந்த இமாம் அவர்களுடைய மாமனார் தடுக்க சென்றுள்ளார். அவரை துளுக்க நாயே உங்களை இத்தோடு ஒழித்துவிடுவோம் என்று கூறி அவரையும் தாக்கியுள்ளனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட SDPI-ன் நகர தலைவர் அமானுல்லாஹ் அவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு சென்று பிரச்சனையில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து விளக்கிவிட்டுள்ளார். அப்போது உன்னையும் கொல்லாமல் விட மாட்டோம் என கூறி பைப், உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற கடுமையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர், மேலும் இமாம் அவர்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். 

இந்த சம்பவத்தை கண்டித்து கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய ரவுடிகளை கைது செய்ய வழியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மேலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை ஜமாத்தார்கள் சார்பில் மணிகூண்டிலிருந்து ஊர்வளமாக சென்று DSPI -யிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த ஊர்வளத்தில் அனைத்து இஸ்லாமிய இயக்க தலைவர்களும் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:
ஜெ . சேக் பரீது  

திருத்துறைபூண்டி வழக்கறிஞர் சங்க பொருளாளராக முத்துபேட்டை தீன் முஹம்மது தேர்வு :



முத்துபேட்டை, ஜனவரி 16: முத்துப்பேட்டை நகர மனித நேய மக்கள் கட்சியின் செயலாளராக இருப்பவர் தீன் முஹம்மது .32 வயதாகும் இவர் த.மு மு. க வில் மாநில மாணவரணி செயலாளர் , உட்பட மாவட்ட ,நகர ,பொறுப்புகளை வகித்தவர் .திருச்சி சட்டக்கல்லூரியில் 2003 ஆம் ஆண்டு சட்டம் பயின்று ,பின்னர் 2005 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை திருத்துறைபூண்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் .இந்நிலையில் பார் கவுன்சில் பொருளாளராக தேர்வாகி இருப்பதற்கு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .


நமது நிருபர்:
A .முஹம்மது ஷபான் .DCE 

தமுமுகவை காப்பி அடித்து சிலர் கட்சி நடத்துகிறார்கள் :மாலிக் பேட்டி :


முத்துப்பேட்டை, ஜனவரி 12: 
ஏன் இந்த பொதுக்கூட்டம்?
முத்துபேட்டையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது.ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி அதை உடனே திறந்திட கோரியும்,முத்துப்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துணை மின்நிலையம் அமைக்க கோரியும்,முத்துப்பேட்டையை தனி தாலுக்காவாக அறிவிக்க கோரியும் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளோம் .

2.த.மு.மு.க மற்றும் ம.ம.க-வின் வளர்ச்சி எப்படி உள்ளது?
திருவாரூர் மாவட்டம் முழுவதும் மது கடைகளுக்கு எதிரான பிரச்சாரம், அந்நிய முதலீட்டுக்கு எதிரான பிரச்சாரம் வீரியமாக நடைபெற்றது.காவிரி நீரில் தமிழகத்திற்க்குள்ள உரிமையை நிலைநாட்ட தலையில் கருப்பு முண்டாசு கட்டி போராட்டம் நடைபெற்றது.இஸ்லாமிய இளைஞர்களும் மாற்றுமத அன்பர்களும் த.மு.மு.க மற்றும் ம.ம.க-வில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

3.முத்துப்பேட்டையில் த.மு.மு.க வீழ்ந்து விட்டதாக சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்களே?
தமிழக மண்ணில் முஸ்லீம்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க,வீதிக்கு வந்து போராடத்தெரியாத நிலையை மாற்றி போராட்ட களத்திற்கு அழைத்து வந்த பெருமை த.மு.மு.க-வையே சாரும். கொடி வேண்டாம், போராட்டம் வேண்டாம்,அரசியல் வேண்டாம்  என்று நேற்று கூறியவர்கள்,இன்று த.மு.மு.க-வை பார்த்து ஈயடிச்சான் காப்பி வேலையை செய்து வருகிறார்கள். நாங்கள் ஒரு போதும் வீழமாட்டோம், பீனிக்ஸ் பறவையை போல் எழுந்து நிற்ப்போம்.

4.உள்ளாட்சி மன்ற தேர்தலில் உங்களின் வேட்பு மனுவை வாபஸ் வாங்குமாறு பலர் கூறியும் நீங்கள் பின் வாங்கி விட்டதாக கூறப்படுகிறதே?
இதை சொல்பர்கள் முதலில் இறைவனுக்கு அஞ்சி கொள்ளட்டும் நான்தான் பலரிடம் போய்எடுத்துச் சொன்னேன். ஆனால் அவர்கள் பதவி வெறியில் ஆணவத்தோடு பதில் கூறினார்கள் .நாங்கள்தான் இந்த ஊருக்கு தியாகம் செய்தவர்கள் என்று சொன்னார்கள்.அது என்ன தியாகமோ?
 சந்திப்பு :ஜே :ஷேக் பரீத் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)