
முத்துப்பேட்டை, அக்டோபர் 19: முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள நியூ ஹோட்டலில் நேற்று முன்தினம் (15/10/13) இரவு 11 மணி அளவில் கோவிலூரை சேர்ந்த பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேர் ஹோட்டல் ஊழியரை தாக்கி பிரச்சனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மூவரும் குடிபோதையில் ஹோட்டலுக்கு வந்துள்ளனர், அடுத்தநாள் பெருநாள் என்பதால் சற்று கூட்டமாக இருந்துள்ளது. கடையின் உரிமையாளர் மற்றும் சப்ளையர் மணிகண்டன் ஆகிய இரண்டு பேர் மட்டும் இருந்து...