முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் குடிபோதையில் ஹோட்டல் ஊழியரை தாக்கியவர் கைது!பெருநாள் தினத்தில் கலவரத்தை ஏற்ப்படுத்த முயற்சி ?

முத்துப்பேட்டை, அக்டோபர் 19: முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள நியூ ஹோட்டலில் நேற்று முன்தினம் (15/10/13) இரவு 11 மணி அளவில் கோவிலூரை சேர்ந்த பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேர் ஹோட்டல் ஊழியரை தாக்கி பிரச்சனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மூவரும் குடிபோதையில் ஹோட்டலுக்கு வந்துள்ளனர், அடுத்தநாள் பெருநாள் என்பதால் சற்று கூட்டமாக இருந்துள்ளது. கடையின் உரிமையாளர் மற்றும் சப்ளையர் மணிகண்டன் ஆகிய இரண்டு பேர் மட்டும் இருந்து கூட்டத்தை சமாளித்துக்கொண்டு இருந்துள்ளனர். அந்த நேரத்தில் குடிபோதையில் சாப்பிட வந்த பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் சாப்பாடு கேட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் மணிகண்டன் மட்டுமே அனைவரையும் கவனித்துகொண்டு இருந்ததால் கொஞ்சம் பொறுங்கள் தருகிறேன் என்று கூறியுள்ளார் அதற்கு குடிபோதையில் இருந்த மூவரும் மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்கிவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடியுள்ளனர்.

தலையில் பலமாக தாக்கப்பட்ட மணிகண்டன் பலத்த காயத்துடன் மயக்கமடைந்தார். உடனே 108 ஆம்புலன்சை அழைத்துள்ளனர், 108 வந்து பார்த்துவிட்டு முத்துப்பேட்டையில் அரசு மருத்துவமனை இருப்பதால் நாங்கள் திருத்துறைப்பூண்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாது என்று கூறிவிட்டனர்.

எனவே தமுமுக ஆம்புலன்சை அழைத்தனர் உடனே வந்த அவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு மணிகண்டனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலை நடத்திய பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கடையின் உரிமையாளர் முஹம்மத் அலி  கொடுத்த புகாரின் பேரில் பிரபு மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டு நேற்று கோர்ட் விடுமுறை என்பதால் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். அவர்களின் மீது Sec : 294(b), 323, 324, 427, 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் முத்துப்பேட்டையில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு நோன்பு பெருநாளை சீர்குலைக்க நினைத்து பரபரப்பை ஏற்படுத்தினர் அதேபோல இந்த பெருநாளை சீர்குலைக்க திட்டமாக இருக்குமோ? என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)