முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


தி மெசேஜும் முஸ்லிம்களுக்கான மெசேஜும்.
உலகம் செப்டம்பர் 16: தி.மெசேசெஜ் THE Message ஆங்கில திரைப்படம் தமிழ் பின்னணி குரலுடன் தயாரிக்கப்பட்டு,முஸ்லிம் பிரமுகர்கள்,சமூக ஆர்வலர்கள்,பத்திரிகையாளர்களுக்கு கடந்த வாரம் சென்னை வடபழனியிலுள்ள ஆர்.கே.வி திரையரங்கில் திரையிட்டு காட்டப்பட்டது.
இந்த படம் குறித்து,இன்றைய (16/9/20130)தேதியிட்ட தி ஹிந்து நாளிதழ் சிறப்பாக செய்தியை வெளியிட்டுள்ளது.

பொதுவாக திரைப்படங்கள் குறித்து முஸ்லிம்கள் மத்தியில் சரியான புரிதல் இல்லை.திரைப்படம் ஹராம்(விலக்கப்பட்டது) என்ற சிந்தனை முஸ்லிம்கள் மத்தியில் திணிக்கப்பட்டிருக்கிறது.(ஆனாலும் இப்படி புரிதல் இல்லாமல் ஹராம் தீர்ப்பு கொடுக்கும் பலர் திரைப்படங்களை பார்கிறார்கள் என்பது தனி விஷயம்) ஒரு திரைப்படத்தில் வரும் காட்சிகள் இஸ்லாமிய வரையறைகளை மீறும் வகையில் உள்ளதா என்பது தான் கவனிக்கப் பட வேண்டிய விஷயம்.
சினிமா என்பது மிகப்பெரிய வெகுஜன ஊடகம்.அதன் மூலம் இஸ்லாமிய செய்திகளையும்,சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் மனித குலத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

தி மெசேஜ் திரைப்படம் குறித்து தி ஹிந்துவிற்கு நாளிதழிடம் பேரா.ஜவாஹிருல்லாஹ், ''செய்திகளை மக்களிடம் முழுமையாக கொண்டு செல்வதில் காட்சி ஊடகங்களில் மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது.இஸ்லாத்தின் செய்திகளையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளையும் காட்சி ஊடகங்கள் மூலம் சொல்வதில் எந்த தவறும் இல்லை.ஒரு திரைப்படம் ஹராமா இல்லையா என்பதை அந்த திரைப்படத்தின் உள்ளடக்கத்தை அறிந்த பின்னர் தான் தீர்மானிக்க முடியும்.அதனால்,திரைப்படங்கள் ஹராம் என கண்மூடித்தனமாக வகைப்படுத்த முடியாது.''என்று சரியான கருத்தை தெரிவித்துள்ளார்.இந்த படத்தை தமிழாக்கம் செய்த முஹம்மது தம்பி,''இஸ்லாத்தை பற்றிய மிகப்பெரிய அளவில் தவறான புரிதல் முஸ்லிம் அல்லாத மக்கள் மத்தியில் நிலவுகிறது.முஸ்லிம்களில் பலரும் கூட நபிகள் நாயகத்தைப் பற்றியோ,அவர்களின் போதனையைப்பற்றியோ தெளிவான பார்வை இல்லை.இந்த படம் பலரது மனநிலையில் படிந்து போயுள்ள தவறான கருத்துக்களை அகற்றும்'' என ஹிந்து நாளிதழிடம் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படங்கள் குறித்த முஸ்லிம்களின் பார்வையில் தெளிவு பிறக்க வேண்டும்.திருமணச் செய்தி: "A. முஹம்மது மர்சிகீன், M. மாஜிதா"


முத்துப்பேட்டை, செப்டம்பர் 16: ஹிஜ்ரி 1434 துல்கைதா பிறை 8, 15.09.2013 காலை 11.30 மணியளவில் முத்துப்பேட்டை மரைக்காயர்  தெரு ஜனாப். செய்யது அஹமது அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் S. முஹம்மது மர்சிகீன், SPKM தொட்டவளாகம், தீங்குலச்செல்வி M.மாஜிதா மணாளிக்கும் இரு வீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 2 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து மக்கா பள்ளி இமாம் ஜனாப். இமாமுதீன், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்.)
source from: www.muthupettaiexpress.com

நமது நிருபர்: 

AKLT. அப்துல் ரஹ்மான்.BBA.

வாழ்த்துக்கள் தெரிவிக்க:

முஹம்மது மர்சிகீன்.

தொலைபேசி எண்: 0091 72007 69840...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)