முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டை அருகே பயங்கர தீ விபத்து. 4 வீடுகள், வைக்கோல் போர் எறிந்து சாம்பல் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் பார்வையிட்டார்.முத்துப்பேட்டை, பிப்ரவரி/25/2015: முத்துப்பேட்டை அடுத்த ஆரியலூர் திருவாசல் மேடு புதுத்தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கே உள்ள குடியிருப்பு பகுதியில் செல்லும் உயர மின் விளக்கு கம்பிகள் தாழ்வாக கூறை வீடுகளை உரசியவாறு செல்கிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முருகைய்யன்(65) என்பவரது கூறை வீட்டின் மேல் ஒன்றோடு ஒன்று மின் கம்பி உரசியதால் அதிலிருந்து ஏற்பட்ட நெருப்பு பொறி வழுந்து தீ பற்றி எறிந்தது. இதனை கண்ட மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் அருகில் இருந்த ராஜேந்திரன், பூமிநாதன், காளிதாஸ் ஆகியோரின் வீடுகளும், அருகில் இருந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போரும் தீ பிடித்து எறிந்தது. தகவல் அறிந்து திருத்துறைப்பூண்டி தீயணைப்பு அலுவலர் லோகநாதன் தலைமையிலும், முத்துப்பேட்டை தீயணைப்பு அலுவலர் நெடுஞ்செழியன் தலைமையிலும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள் 4 வீடுகளும் இருகில் இருந்த வைக்கோல் போர் முழுவதும் எறிந்து சாம்பலானது. மேலும் வீடுகளிலிருந்த கட்டில், பீரோல், டிவி போன்ற பொருட்களும் முக்கிய ஆவணங்களும் தீயில் எறிந்து நாசமானது. சேதம் மதிப்பு 3 லட்சம் என்று தெரிகிறது. 

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி, ஒன்றிய செயலாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் முருகையன், முன்னால் ஊராட்சி தலைவர்கள் ஞானசேகரன், மேட்டு கோட்டகம் சண்முகம் உட்பட பலரும் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இதில் வருவாய் துறை சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் நிவாரணம் சழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால்தான் இந்த விபத்து நடந்தது. இதன் போன்ற சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதனை உயரமாக மாற்றி தர வேண்டும் என்றார்.

நமது நிருபர்:

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

டாக்டர் பட்டம் பெற்ற முத்துப்பேட்டை தொழில் அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த செயல்அலுவலர்!


முத்துப்பேட்டை, பிப்ரவரி/25/2015: முத்துப்பேட்டை தொழில் அதிபர் ஹைதர் அலிக்கு சமீபத்தில் ஐரோப்பிய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. இதனையடுத்து முத்துப்பேட்டைக்கு திரும்பிய அவருக்கு பல்வேறு அமைப்புகள் வரவேற்ப்பு அளித்து வரவேற்றனர். இந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி டாக்டர் பட்டம் பெற்ற ஹைதர் அலியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவரிடம் செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி பேரூராட்சிக்கு தேவையான பொருட்கள் வாங்க நிதி உதவி கேட்டதாகவும் தெரிகிறது. அவருடன் பேரூராட்சி கவுன்சிலர் ஜெகபருல்லா உடன் இருந்தார். அதேபோல் முன்னால் எம்.பிக்கள் நாகை செல்வராஜ், வேலூர் அப்துல் ரகுமான் ஆகியோரும் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 நமது நிருபர்:

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

முத்துப்பேட்டை பிரச்சனை குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பிய ம.ம.க சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.


முத்துப்பேட்டை, பிப்ரவரி 25/2015: முத்துப்பேட்டை பிரச்சனை குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பிய ம.ம.க சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.MLA.,அவர்களின் கேள்விக்கு மாண்புமிகு முதல் அமைச்சர் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்.....
ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நடைபெற்ற சம்பவம் குறித்து இன்று (20.2.2015) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆற்றிய உரையில்,
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடந்த 31.12.2014 அன்று இரவு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தின்போது இந்துக்கள் சிலர், ஷேக் தாவூத் தர்கா வழியாகச் சென்றபோது, கோஷங்களை எழுப்பியதால் அங்கிருந்த முஸ்லீம்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது அவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு, அப்பகுதியில் இருந்த தெரு விளக்குகள் சேதப்படுத்தப்பட்டன.
இதன் பின்னர் சில அடையாளம் தெரியாத நபர்களால் அங்குள்ள மற்றொரு தர்காவின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதப்படுத்தப்பட்டது. காவல் துறையினர், உடனடியாகத் தலையிட்டு இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொண்டு, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக, முஸ்லீம் தரப்பினர் அளித்த புகார்களின் பேரில், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வீரமூர்த்தி உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். இச்சம்பவங்களையடுத்து,
01.01.2015 அன்று சில அடையாளம் தெரியாத நபர்கள் பாலமுருகன் என்பவரது பணிமனையில் இருந்த மூன்று கார்களின் கண்ணாடிகளை சேதப்படுத்தியது தொடர்பாக, அவரது புகாரின் பேரில், மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. வழக்குகள் புலன் விசாரணையில் இருந்து வருகின்றன என்று கூறினார்.
தகவல் நன்றி – பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)