
ஆகஸ்ட் 25 : பூரண சமத்துவமும் சகோதர மனப்பான்மையும் முஹம்மதியரிடையே திகள வேண்டும் என்ற உண்மையைத் தம் வாழ்க்கை வாயிலாக முஹம்மத் மெய்பித்துவிட்டார். அங்கே வேறுபாடு இல்லை; சாதி வேற்றுமை இல்லை, கொள்கை வேற்றுமை இல்லை, வர்ண வேறுபாடு இல்லை, பால் வேற்றுமையும் இல்லை. துருக்கி சுல்தான், ஆப்ரிக்காவின் அடிமை சந்தையில் நீக்ரோ இனத்தைச் சேர்ந்த ஒருவனை விலைக்கு வாங்கி, அவனை கைவிலங்கிட்டு அழைத்து வரலாம். அந்த அடிமை முசல்மானாகி விட்டால், அவனுக்கு போதுமான தகுதியும் ஆற்றலும்...