முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் இந்துக்கள் நடத்திய இப்தார் நிகழ்ச்சி- ஆத்மநாதன், வீரசேகரன் ஆகியோரின் மனிதநேயம்!!!


















முத்துப்பேட்டை, ஜூலை 29: முத்துப்பேட்டையில் உள்ள கொய்யா மஹாலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசியல் கட்சியை சார்தவர்கள் தற்பொழுது நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஒரு வணிக நிகழ்ச்சியாகவும், முஸ்லிம்களை ஏமாற்றும் நிகழ்ச்சியாகவும் நடத்தி வரும் இந்த சூழ்நிலையில்,  இந்து மதத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் சேர்ந்து இஸ்லாமியர்களுக்காக இப்தார் நிகழ்ச்சி நடத்தியிருப்பது மனித நேயத்தையும், மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் வகையில்இருந்தது .

முத்துப்பேட்டை ஜாம்புவோனோடையை சேர்ந்தவர் நடுப்பண்ணை என்கிற ஆத்மநான். அதே போல் உப்பூரை சேர்ந்தவர் வீரசேகரன் ஆகிய இருவரும் கடந்த மூன்று வருடங்களாக மனித நேயத்தை பறைசாற்றும் வகையில் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களுக்கு தனது சொந்த செலவில் இஃப்தார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். மூன்றாவது வருடமான இப்தார் நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது .

முன்னதாக தமிழக மனித உரிமை கழகத்தின் மாநிலத்தலைவர் கவிஞர் G. பஷீர் அஹமது அவர்கள் "இஸ்லாமும் மனித நேயமும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் இதில் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஜமாத்தார்களும், இளைஞர்களும், பெரியோர்களும் பாகுபாடின்றி திறந்த மனதுடன் திரளாக வந்து கலந்து கொண்டனர். சரியாக 6:40 மணியளவில் கொய்யா மகாலில் உள்ள முதல் தளத்தில் அமர்ந்திருந்த அனைவரும் நோன்பு திறப்பதற்காக கீழ்த்தளத்தை நோக்கி சென்றனர்.

 கீழ்தளத்தில் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்காக பேரிதம்பழம் , நோன்பு கஞ்சி, கடல் பாசி, கேசரி, சமூசா, போன்ற உணவுப்பொருட்கள் வரிசையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. நோன்பு திறந்தவுடன் இங்கு மக்ரிப் தொழுகையும் நடைபெற்றது. அதன் பின்பு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களான ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன்  ஆகியோரை அனைவரும்  மனமார வாழ்த்தி ஆர தழுவி இருவரையும் இறைவனிடத்தில் பிரார்த்தனை  செய்ததாகவும் கூறினார்கள். 

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன் ஆகிய இருவரும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு கூட்டாக அளித்த பேட்டி பின்வருமாறு: 

எங்களுக்கு இந்து நண்பர்களைவிட இஸ்லாமிய நண்பர்கள் தான் அதிகம் என்றும், நான் வசித்து வரும் ஜாம்புவோனோடை பகுதியில் ஒரு சிலர் மத துவேசத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் மன வேதனையாக இருக்கிறது என்றும், நாம் அனைவரும் ஓர் தாய் மக்கள் என்றும், அவர் தெரிவித்தார். மேலும் பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் அவர்களுக்கு பாலூட்டி வளத்தவர் ஓர் இஸ்லாமிய தாய் ஆய்ஷா பேகம் என்பதை நாங்கள் இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். என் அன்பான அழைப்பை ஏற்று அனைத்து இஸ்லாமியர்களும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.மாற்று மத சகோதர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் நிகழ்ச்சியில் சுமார் 500 இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .


நேரடி களத்தொகுப்பு :ஜே:ஷேக் பரீத் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)