
நியூயார்க், பிப்ரவரி 29 : செல்வம் தான் அதிகாரம் எனில், உலகில் மிக சக்தி வாய்ந்த நாடு வளைகுடா நாடுகளில் கத்தார் தான் என்று பிரபல போர்ப்ஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு நாட்டின் மொத்த வளத்தை அதன் மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது தனி நபர் வருமானம். தனி நபர் வருமான அடிப்படையில் உலகில் முதல் நாடாக இருப்பது தான் கத்தார். உலகின் இயற்கை வாயுவில் மூன்றில் ஒரு பங்கை வைத்துள்ள இந்நாடு தன் பொருளாதாரத்தை உள்கட்டமைப்புக்காக தண்ணீராய் செலவழிக்கிறது...