
முத்துப்பேட்டை, டிசம்பர் 13 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 28 .10 .2011 அன்று பெய்த கடுமையான மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெறிதளவு பாதிக்கப்பட்டன. அந்த நேரத்தில் புயல் எச்சரிக்கை, வெள்ள அபாயமும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டன. அன்றைய தினம் முத்துப்பேட்டை பேட்டை ரோட்டில் உள்ள ஹாஜா மைதீன் என்பவர் வீட்டில் பேட்டையை சேர்ந்த கட்டிட தொழிலாளி நாடிமுத்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த வீட்டு சுவர் மழைநீரை உள்வாங்கியதால்...