முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் 10 லட்சம் மதிப்புள்ள வெளி மாநில மது பாட்டில்கள் பறிமுதல்!





முத்துப்பேட்டை,அக்டோபர் 16 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாட பண்ணுவது போல் வந்த தகவலை அடுத்து, திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சேவியர் தன்ராஜ் அவர்களின் உத்தரவின் படி முத்துப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.கோபி. (DSP ) . அவர்களின் மேற்பார்வையில் எடையூர் இன்ஸ்பெக்டர் திரு. ஆறுமுகம் சிறப்பு SI திரு.ராஜேந்திரன், செல்வம், தெட்சனமூர்த்தி, சண்முகம் இவர்களின் மூலம் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இடையூறு அருகே திடீர் சோதனையில் இடுபட்டனர். அப்போது மிக வேகமாக வந்த காரை மறைத்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 500 க்கும் மேற்பட்ட குவாட்டர் சாராய பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை போலிசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டிவந்த SP பட்டினத்தை சேர்ந்த ஷேக் தாவூத் வயது 35 , மற்றும் முஜூபூர் ரஹ்மான் வயது 35 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதனைதத் தொடர்ந்து மேலும் ஒரு கரை போலிசார் சோதனை செய்ய அந்த காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார், இந்த காரிலும் சுமார் 500 க்கும் மேற்பட்ட குவாட்டர் சாராய பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. தப்பியோடிய டிரைவர் போலீசார் தேடிவருகின்றனர். இதனைத் தொடர்ந்து இரு சக்கர வாகனமான பைக்கையும் அப்போது சோதனை செய்ததில் ஒரு பைக்கில் சுமார் 50 குவாட்டர் சாராய பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது இதில் அந்த பைக்கை ஓட்டி வந்த தாமரைக்கோட்டையை சேர்த்த கிஸ்சர் வயது 40 என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவற்றை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.அபு மர்வா, AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டை பேரூராட்சி 16 வது வார்டுக்கு போட்டியிடுகிறார் மெட்ரோ மாலிக்!




முத்துபேட்டை,அக்டோபர் 15 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள பேரூராட்சி மன்ற தேர்தலில் 16 வது வார்டுக்கு காங்கிரஸ் சார்பாக போட்டியிடப் போவதாக மெட்ரோ மாலிக் அவர்கள் தெருவித்துளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணயதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தான் வெற்றி பெற்றால் பல்வேறு நன்மைகளை எனது வார்டு மக்களுக்கு செய்வேன் என்றும், அதற்கு உதாரம் சென்ற தேர்தலில் நான் சாதித்தது தங்களுக்கு தெரியும் என்றும், கூப்பிட்ட குரலுக்கு எப்படி எல்லாம் ஓடி வந்தேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் எல்லா விதமான மத்திய மாநில அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களை வீடு தேடிவந்து தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்றும் எனவே ௧௬ வார்டு மக்களாகிய நீங்கள் என்னை அதிகபடியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எட்ன்ரும் அவர் தெருவித்தார். மேலும் தனது வார்டுக்கு சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பும் செய்துள்ளார். இதில் காங்கிரசின் நகர தலைவர்.ராஜேந்திரன், சட்ட மன்ற இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர். முஹைதீன் பிச்சை, மாவட்ட முன்னாள் இளைஞர் காங்கிரசின் செயலாளர். கந்தவேல், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர். தாஜுதீன், இளைஞர் காங்கிரசை சேர்ந்த தமீம், தாமரைசெல்வன்,மூத்த காங்கிரஸ் உறுப்பினர்.மாரிமுத்து, சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா, AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவி யாருக்கு?





முத்துப்பேட்டை, அக்டோபர் 15 : களத்தில் 13 பேர்...! கலக்கத்தில் கட்சிகள்...! குழப்பத்தில் மக்கள்...! திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தேர்தலுக்கு போட்டியிட 22 பேர் மனு கொடுத்து இருந்தனர். பின்னர் 9 பேர் வாபஸ் வாங்கி கொண்டனர் போட்டியில் 13 பேர் உள்ளனர். இது முத்துப்பேட்டை பேரூராட்சியில் இது வரை இல்லாத வரலாறு என்று சொல்லப்படுகிறது. காரணம் நமது சமுதாயத்தினர் தான் வரணும் என்று ஒவ்வொரு சமுதாயத்தவரும் நினைத்ததின் விளைவும் நமது சமுதாயத்தில் நான்தான் நியாயமானவன் என்று காட்டிக் கொண்டதின் விளைவும் தான் இந்த போட்டிக்கு காரணம்.அதன் வகையில் களத்தில் உள்ள 13 பேர் உறவினர்களும், நண்பர்களும் யாருக்கு வாக்கு சேகரிப்பதில் பெரும் சங்கடத்தில் பலரும் உள்ள நிலையில், பேரூராட்சியில் உள்ள 18 வார்டுக்கும் கவுன்சிலர் பதவிக்கு சுமார் 80 பேர் போட்டி போடுவதால்முத்துப்பேட்டை நகரத்தில் தேர்தல் வேலை மிக சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொரு வேட்பாளருக்கு பின்னால் சென்று வாக்கு கேட்கும் தனது நண்பர்கள், மறுநாள் வேறு வேட்பாளருக்கு முன்னாடி சென்று வாக்கு கேட்பதால் வேட்பாளர்களுக்கு மத்தியில் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் ஒவ்வொரு வேட்பாளரிடமும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்கள் பின் வருமாறு. source from www.muthupettaiexpress.blogspot.com

1 ). அபூபக்கர் சித்திக்: நான் பேரூராட்சி நிதியிலிருந்து இறைவன் மீது ஆணையாக ஒரு ரூபாய் கூட ஊழல் செய்ய மாட்டேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

2 ). அப்துல் சலீம்: என்னை தலித் மக்கள் தேர்வு செய்து நிற்க வைத்துள்ளனர் என்றும், எனது பணி மக்கள் பாராட்டும் வகையில் அமையும் என்றும் அவர் கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

3 ) கோ.அருணாச்சலம்: நான் நீண்ட காலமாக நகர செயலாளராக இருக்கிறேன், அதற்கு காரணம் எனதின் திறமையான செயல்பாடு. நாங்கள் எதிர்கட்சியாக இருந்தபோது முத்துப்பேட்டை மக்களுக்கு போராட்ட குரல் கொடுத்துரிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

4 ) முகைதீன் அடுமை: நான் இப்பகுதி மக்களுக்கு தேவை படுகிற பல விசயங்களையும், பல நல்ல காரியங்களையும், இஸ்லாமிய மக்கள் மக்கா செல்ல பல்வேறு சேவைகளையும் செய்துள்ளேன் என்றும், நமது பேரூராட்சியை நல்ல நிர்வாகமாக மாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.source from www.muthupettaiexpress.blogspot.com

5 ). முஹம்மத் மாலிக்: மக்களின் முக்கிய பிரச்சனையான, குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு இதனை முன்னிருமை படுத்தி கவனம் செலுத்துவதோடு மக்களின் தேவையை நன்கு அறிந்து திறமையாக செயல்பட பாடு படுவேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

6 ). பத்மநாபன்: என்னை முத்துப்பேட்டை மக்கள் தேர்வு செய்தால் மக்களுக்கு சேவை செய்வதே எனது வாழ்க்கையாக மாற்றிக் கொள்வேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

7 ). சிவக்குமார் பேட்டை: என்னை தேர்வு செய்தால் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் காட்டாக அமையும் என்று கூறினார்.source from www.muthupettaiexpress.blogspot.com

8 ). எஸ்.தமீம்: நான் தி.மு.க.வின் உண்மையான விசுவாசி, நான் கவுன்சிலராக இருந்து பல்வேறு சாதனைகளை செய்து இருக்கிறேன்,என்னை தேர்வு செய்தல் சரித்திரத்தில் சாதனை படிப்பேன் என்று கூறினார்.source from www.muthupettaiexpress.blogspot.com

அதே போல சுயேச்சை வேட்பாளரான:

9). சஹாப்தீன்: மொத்தம் உள்ள 18 வார்டுகளையும் என் நேரடி கண்காணிப்பில் இணைத்து அந்த அந்த வார்டு உருபினர்கலையும், முக்கிய பிரமுகர்களையும் கலந்து ஆலோசித்து, தேவைகளை அறிந்து உடனுக்குடன் செய்து கொடுப்பதற்கு ஏற்பாடு செய்வேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

10 ). ஹாரூன்: முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு தகுதியானவர் எல்லோருக்கும் அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்றும், அதற்கு தகுதியானவர் நான்தான் என்றும் கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

11 ). லெப்பைத் தம்பி: மக்கள் பணியில் முறையான சேவை செய்யாமல் மக்களை அலைகழிக்கும் நேர்மையற்ற அதிகாரிகளை அகற்றி, நேர்மையான அதிகாரிகளை அமைத்து மக்கள் பணி தாமதமின்றி நடந்திட ஏற்பாடு சென்வேன் என்று கூறினார்.

12 ). ஜெயச்சந்திரன்: எல்லா மக்களுக்கும் பயன் பெரும் விதமாக பல்வேறு நல திட்டங்களை முத்துப்பேட்டை மக்களுக்கு கொண்டு வருவேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

13 ). ஹாஜ மைதீன்: மிக முக்கியமாக குடிநீர் வசதி, தங்கு தடையின்றி முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்வேன் என்று கூறினார்.www.muthupettaiexpress.blogspot.com

இந்த நிலையில் நமது சமுதாயத்தினர் தான் வரணும் என்று ஒவ்வொரு சமுதாயத்தினரும் நினைக்கின்றார்கள். ஆனால் அதற்கு மாறாக ஒரு சமுதாயத்தில் பலரும் போட்டியிடுவதாலும், ஆளு ஆளுக்கு வித்தியாசமான வாக்குறுதி வழங்குவதாலும் மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.யார் ஓட்டை யார் பிரிப்பார்? ஒவ்வொரு வேட்பாளர்களும் தனக்கு கிடைக்கும் வாக்குகளை கூறும் போது 13 வேட்பாளர்களுக்கு 48 ஆயீரம் ஓட்டுகள் கணக்கு வருது ஆனால் பேரூராட்சியில் 13 ஆயிரம் வாக்குதானே இருகின்றது. அதில் எத்தனை பதிவாகுமோ.. இதன் கணிப்பு யாருக்கு சாதகமோ என்ற குழப்பத்தில் கட்சியினர் உள்ளனர். இதே நிலைமைதான் 18 வார்டு கவுன்சிலர்கள், வேட்பாளர்களுக்கும் ஆனால் முத்துப்பேட்டை மக்கள் வேட்பாளர்களில் தனது சொந்த நடைமுறையில் யாரை பிடிக்கிறதோ அவர்களை தேர்வு செய்ய தயாராகி விட்டார்கள். முத்துப்பேட்டையில் யாரை நிலைமையை தற்போது கணித்து பார்க்கும் போது இரு சமுதாயத்தின் வாக்குகளையும் யார் அதிக அளவில் வாக்கு வாங்குவார்களோ அவர் தான் முத்துப்பேட்டையின் பேரூராட்சியின் தலைவர் ஆவார். பொறுத்திருந்து பாப்போம்!!! ஒற்றுமையின் குரல் ஓங்க.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான்.ASNS .அப்துல் பாரி.AKL .அப்துல் ரஹ்மான்.அபு மர்வா, முஹைதீன்.

முத்துப்பேட்டை பேரூராட்சி: வாக்கு சேகரிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!




முத்துப்பேட்டை, அக்டோபர் 15 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் கி.முஹைதீன் அடுமை அவர்களை, ஆதரித்து நேற்று நடைபெற்ற வாக்கு சேகரிப்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில கொள்கை பரப்புச்செயலாளர், அல்ஹாஜ். G .M . ஹாஷிம் அவர்கள் கலந்து கொண்டு முத்துப்பேட்டை முழுதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் தனது வேட்பாளருக்கு வாக்குகளை சேகரித்தார். இதன் பின்பு பேசிய அவர்,தலைவர் கருணாநிதி உடன் இருந்து பல்வேறு உதவிகளை நமது சமுதாயாத்தவருக்கு பெற்றுத்தந்தது இந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்றும், இந்த கட்சி பல ஆண்டுகளாக இருந்து வருவது தாங்கள் யாவரும் அறிந்ததுதான் என்றும், அவர் தெருவித்தார். மேலும் முத்துப்பேட்டை மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை தாமதமின்றி செய்து கொடுப்பார் என்றும், இந்த கட்சி முஸ்லிம்கள் மீது அக்கறை காட்டக் கூடிய கட்சியாக இன்றுவரை இருந்து வருகிறது என்றும் அவர் தெருவித்தார். இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட தலைவர் M .M . ஜலாலுதீன், திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி.M .முஹம்மத் அலி, திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் H .M .ஹபீபுல்லாஹ் மற்றும் கட்சி உறுபினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.AKL .அப்துல் ரஹ்மான்.

முத்துப்பேட்டை பேரூராட்சி: MMK விற்கு வாக்கு சேகரிக்க MLA பங்கேற்பு!!






முத்துப்பேட்டை, அக்டோபர் 15 : முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தல் தலைவர் பதவிக்கு போட்டியிடும் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் மாஷா மாலிக் என்கிற முஹம்மத் மாலிக் அவர்களை ஆதரித்து நேற்று நடைபெற்ற வாக்கு சேகரிப்பில் ஆம்பூர் சட்ட மன்ற உறுப்பினர், அஸ்லம் பாஷா அவர்கள் கலந்து கொண்டு முத்துப்பேட்டை முழுவதும் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் சென்று தனது வேட்பாளருக்கு வாக்குகளை சேகரித்தார், இதன் பின்பு பேசிய அவர், தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமானது கடந்த ஆண்டுகளில் சமுதாய சேவைகளில் களப்பணியாற்றி வருவதாகவும், அதில் மக்களுக்கு முக்கியமாக ஆம்புலன்ஸ் சேவையை அதிகப்படுத்தி வந்துள்ளது என்றும், அவர் தெருவித்தார். எனவே கடந்த 16 ஆண்டுகள் சமுதாய சேவையில் களப்பணி ஆற்றிவந்த நமது வேட்பாளரான முஹம்மத் மாலிக் அவர்களுக்கு தாங்கள் வாக்களிக்குமாறும், இவர் பல்வேறு சமுதாய மக்களுக்கு ரெத்ததான முகாம், ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ முகாம், ஆகிய சேவைகளை செய்துள்ளார் என்றும், எனவே இவரை வெற்றிபெற நீகள்தான் முன் வரவேண்டும் என்றும் அவர் தெருவித்தார். மேலும் நாங்கள் கொடுத்த தேர்தல் அறிக்கை அது ஒரு வாக்குறிதி என்றும் எங்களால் என்ன செய்யமுடியுமோ அவற்றை நாங்கள் தங்களுக்கு கொடுத்துள்ளோம் என்றும், அவர் தெருவித்தார். அனால் வேறு கட்சிகாரர்கள் தங்களுடைய வாக்குறிதிகலை அதிகமாக குறிப்பிட்டு அவற்றை செய்ய மாட்டார்கள் என்றும் அவர் தெருவித்தார். இந்த மனித நேய மக்கள் கட்சி சிறப்பான அரும்பணிகளை ஆற்றிவருகிறது என்றும் அதில் தனது வேட்பாளர் மிக எளிமையானவர் என்றும், தூய்மையானவர் என்றும் அவர் தெருவித்தார். இந்த கூட்டத்தில் TMMK வின் மாநில செயற்குழு உறுப்பினர் தாஜுதீன், TMMk நகர தலைவர் சம்சுதீன், மற்றும் கழக தொண்டர்கள், மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் வாக்கு சேகரிக்க களப்பணியில் SDPI !!!


முத்துப்பேட்டை, அக்டபேர் 15 : இன்று காலை 10 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் எதிர்புறத்திலிருந்து பெரிய கடைதெரு பழைய பேருந்து நிலையம் வழியாக ஆசாத் நகர் வரை மிகப் பெரிய ச்ட்பி செயல் வீரர்களும் ஆதரவாளர்களும் கொண்ட மாபெரும் ஊட்டு சேகரிப்பு நடைபெற இருக்கின்றது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாவட்ட செயலாளர் தப்ரே ஆழம் பாதுஷா அவர்கள், தற்போது இந்துக்கள் மத்தியிலும், முஸ்லிம்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் மத்தியிலும், தலித்தவர் மத்தியிலும் ச்ட்பி இந் பனி மிகப் பெரிய எதிர்பார்ப்பையையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது என்றும், நாங்கள் மக்களிடம் நடந்து கொண்ட ஆகு முறை நடக்கக் கூடிய பிராச்சாரம், மேலும் எங்களுடைய வாக்குறுதி ஏற்படுத்தி உள்ள தாக்கத்திற்கு ஊக்கம் ஏற்படுத்தும் முகமாக இந்த ஒட்டு சேகரிப்பு பணி நடைபெற இருக்கின்றது என்றும், அவர் தெருவித்தார். இதில் மாணவர்கள் மற்றும் ஊர் பொது மாக்கலான அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெருவித்தார். இதில் துபாய் மண்டல பொறுப்பாளர், யூசுப் சுகைல், நகர பொறுப்பாளர், நிசார் ஆகியோர் உடனிருந்தனர்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)