முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


முத்துப்பேட்டையில் நடந்து கொண்டிருப்பது என்ன.? ஒருவர் மீது ஒருவர் புகார்.! எக்ஸ்பிரஸ் தரும் ரிப்போர்ட்..முத்துப்பேட்டை, செப்டம்பர் 08: முத்துப்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சியன் மாவட்ட செயலாளர் S. முஹம்மது மாலிக் அவர்களைப்பற்றி அவதூறான செய்திகளை SDPI கட்சியினர் பரப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் துபாயிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு பதிலளித்த MMK கட்சியன் மாவட்ட செயலாளர் S. முஹம்மது மாலிக் அவர்கள், முத்துப்பேட்டையில் நடந்தேறிய விரும்பத்தாகத சம்பவங்கள் நடந்து முடிந்து சில நாட்கள் ஆகின்றன என்றும், அந்த சம்பவத்தை இணைத்து பொய் பிரச்சாரங்கள் மட்டும் நீடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். இதில் நடந்து முடிந்திட்ட கலவர சம்பவங்களுக்கு இன்னார் காரணம் என காவல்துறையால் அறியப்பட்டு இருதரப்பிலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பட்டது யாவரும் அறிந்ததே. 

அப்படி சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவர்கள் SDPI கட்சியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்களை நான் ஏதோ போலீசாரிடம் அடையாளம் காட்டி கொடுத்துவிட்டதாக ஒரு பொய்யான தகவலை முன் வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், முத்துப்பேட்டையில் நடந்து வந்துள்ள கலவர சம்பவங்களுக்கு சம்பந்தமே இல்லாத அப்பாவிகள் தான் இதுவரை கைது செய்யப்பட்டு வந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இதற்க்கு உதாரணமாக 2005 ஆம் ஆண்டு அப்பாவியான தண்டாயுதபாணியை வெட்டிவிட்டு ஓடியவர்களை யாரும் கைது செய்யப்படாமல், அப்பாவியான 32 பேர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் என்மீது குற்ற எண் 329/2005ல் 147, 148, 341, 324, 397 ஆயுத சட்டம் ஆகிய பிவிவுகளின் கீழ் நானும் கைது செய்யப்பட்டு 43 நாட்கள் சிறையில் இருந்தேன் என்றும், இப்போதாவது முஹம்மது மாலிக் M M K மாவட்ட செயலாளர் என்று மாவட்டத்துக்கே தெரியும் என்றும், அப்போது என்னை பற்றி அதிகம் தெரியாது அப்படி இருக்கும் போது என்னை காட்டிகொடுத்தது யார்? என்றும் கேள்வி எழுப்பினார். இப்போது என்னை கைது பண்ணினால் நான் இந்த கேள்வியை கேட்க்க மாட்டேன் ஏனெனில் இப்போது என்னைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீங்கள் ஆங்கங்கே தங்களை பற்றி விளம்பரம் படுத்தி கொள்ள புகைப்படம் தாங்கிய பிளெக்ஸ் பேனர்கள் விளம்பர சுவரொட்டிகள் பெயர்தாங்கிய துண்டு பிரசூரங்கள் இவைகள் மூலம் தங்களை விளம்பரப்படுதிக் கொண்டு பெயர்களை அவன் சொல்லி விட்டான் இவன் சொல்லி விட்டான் என்று சொல்லி கொண்டு அலைவது ஒரு விளம்பரமே தவிர என்றும், விபரம் புரிந்த எவரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் உண்மையை உடைத்து சொல்ல வேண்டு மென்றால் இந்த முறை நடந்தேறிய கைது சம்பவங்கள் யாவும் காவல்துறை முன் ஏற்பாடாக பதிவு செய்து வைத்திருந்த வீடியோ பதிவில் இடம் பெற்றவர்களை இனம் கண்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பதுதான் அப்பட்டமான உண்மை என்றும், எந்த தவறும் செய்யாமல் நான் கைது செய்யபட்ட காலத்தை ஒப்பிடும் போது இந்த முறை பெரிய அளவில் அப்பாவிகள் யாரும் கைது செய்யப்படவில்லை, யாருடைய வீட்டு கதவும் உடைக்கப்படவில்லை, யாருடைய தகப்பனாரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல வில்லை, வெளியில் நடமாட்டம் இல்லாமல் நம்மை வீட்டுக்குள் முடக்கி விடவில்லை, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அப்பாவிகள் யாரும் வெளி ஊர்களுக்கு ஓடிவிடவில்லை, எந்த கடையும் ஒருநாள் கூட அடைக்கப் படவில்லை, பேருந்துகள் இயக்கப்படமால் இல்லை, அவர் அவர் வேலைகளை அவரவர்கள் பார்த்தோம் என்பது தானே உண்மை என்றும் அவர் தெரிவித்தார்.

 மேலும் நான் ஒன்று கேட்கிறேன் கலவர சம்பவம் நடந்து விட்டது அதற்க்கு சம்பந்த பட்ட வர்கள் மீது கைது நடவடிக்கை வரத்தானே செய்யும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் கைது நடவடிக்கைக்கு உட்பட்டுதானே ஆகா வேண்டும் என்றும், எனது சமுதாய சொந்தங்களே நான் இந்த ஊரையும், இந்த ஊர் ஜமாஅத் உறவுகளையும், இந்த ஊரில் உள்ள அனைத்து தரப்பு மனிதநேயம் கொண்ட மக்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என்ற வகையில் சொல்கிறேன் நான் யாரையும் வசைபாடி வம்புக்கு இழுத்து கொண்டும் கடின தொந்தரவு கொடுத்து கொண்டும் ஜமாத்தின் கட்டுப்பாட்டுக்கு கட்டுங்கடங்காமல் ஊரின் அமைத்திக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டும் சிலரை போல் செல் போன் வைத்து அதன் மூலம் உளவு வேலை பார்த்துக் கொண்டும் தெரு தெருவாக திரிபவன் நான் அல்ல என்றும், அவர் தெரிவித்தார். 

இதிலும் நீங்கள் குறை கண்டு இல்லை இல்லை நீதான் காரணம் என்று சொல்பவர்கள் யாராவது இருந்தால் என் மீதுள்ள குற்றம் சாட்டுகளை முன் வைத்து என்னிடம் நேரடியாகவோ அல்லது பொது இடத்திலோ இது சம்பந்தமாக விவாத்திக்க எந்த குற்றமும் செய்யாத நான் தாயாராக இருக்கிறேன் என்றும் இதற்க்கு நீங்கள் தயாரா.? என்றும் அப்போது அவர் கேள்வி எழுப்பினார். இந்த செய்திகள் அனைத்தையும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்துத்துடன் பகிருந்து கொள்ள காரணம் நமது சமுதாய இளைஞர்களிடம் என்னை பற்றி தவறான பொய் பிரச்சாரம் செய்து அதனை நம் சகோதர்கள் புறம்தள்ளி அவரவர்கள்தான் உண்மையை விளக்க சொல்லி சொன்னதால்தான் நான்  இவற்றை உங்கள் முன்பு எடுத்துரைக்கிறேன் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். 

நானும் என்னை சார்ந்தவர்களும் முன் வைத்த கருத்துகளை உங்கள் முன்பு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றும், அவையாவது ம.ம.க. மாவட்ட செயலாளர் முஹம்மது மாலிக் ஆகிய நான் என் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் SDPI கட்சியினருக்கு பகிரங்க சவால் விடுகிறேன் என்றும், நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகளை பொது இடத்தில் வைத்து ஆதாரத்தோடு நிரூபிக்க தயாரா? என்றும் அப்படி நிரூபித்துவிட்டால் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகிக்கொள்ள தயார் என்றும், இதனை ஏற்றுக்கொண்டு முன்வர SDPI கட்சியின் நிர்வாகிகள் தயாரா என்றும் அவர் சவாலை முன்வைத்துள்ளார். 


இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட்  ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர்  A. அபூபக்கர் சித்திக் அவர்களிடம் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் துபாயிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், மனித நேய மக்கள் கட்சியினர், SDPI கட்சியின் மீது கூறப்பட்டுள்ள அவதூறு சம்பந்தமாக SDPI கட்சியின் பொறுப்பாளர்கள், உறுபினர்கள் யாரைப்பற்றியும் எந்தவிதமான அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை என்றும், தன்னை பற்றிய ஓர் மளிவான விளம்பரத்திற்காகவே அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும் இது போன்ற செயல்பாடுகளில் ஒருக்காளும் SDPI கட்சியினர் ஈடுபடவில்லை என்றும், யாரேனும் MMK கட்சியின் மீது அவதூறான செய்திகளை பரப்பிருந்தாள் மாவட்ட நிர்வாகிகள் இதே ஊரான முத்துப்பேட்டையில் தான் இருந்து வருகிறார்கள் என்றும், அந்த மாவட்ட நிர்வாகிகளை நேரடியாகவோ, அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களுடைய விளக்கங்களை அறிவித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவது சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல அவரை சார்ந்திருக்கக்கூடிய கட்சிகளும் இழுக்கானது என்றும் மேலும் அவர் தெரிவித்தார். 

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தின் வேண்டுகோள்: 

அன்பிற்கினிய சகோதரர்களே நமதுதூரில் உள்ள மதவாத சக்திகளுக்கு மத்தியில் நமதூர்  ஓர் மாபெரும் வளர்ச்சியை மேற்கொண்டு வரும் இந்த தருணத்தில் நமக்குள் ஏன் இந்த சண்டை சச்சரவுகள்? மேலும் மதவாதிகளுக்கு தக்க செருப்படி கொடுக்கும் நிகழ்வு நமதூரில் மாற்று மத சகோதரர்கள் மூலம் நடத்திய மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சியே ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.அவர்களுக்கு நாம் ஓர் எடுத்துக்காட்டாக நடந்து கொள்ள வேண்டும்.  அதை விட்டுவிட்டு இப்படிபட்ட சூழ்நிலையில் நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்வது நமது மார்கத்தில் இடமில்லை. ஆகவே யாரையும் யாரும் பகைவராக கருதாமல், தனது கூட பிறந்த சகோதரர்கள் போல வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. மேலும்  ஏக நாயனானாக அந்த அல்லாஹ்வின் கைற்றை வலுவாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் இறைவனின் உதவி என்றும் நமக்குத்தான். 

தொகுப்பு:

A. முஹம்மது இலியாஸ். MBA., MA. (Journalism & Mass Communication) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)