முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


சென்னையில் ஹெச் .ராஜா கொடும்பாவி கொளுத்திய SDPI -கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஆர்பாட்டம் !!

கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்தினரையும், சமூக தலைவர்களையும் அவதூறாக விமர்சித்து தமிழகத்தின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், பேசிவரும் பாஜகவின் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக இன்று (31-01-2014) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் T.ரத்தினம் தலைமை தாங்கினார். தென் சென்னை மாவட்ட தலைவர் நேதாஜி ஜமால் துவக்க உரையாற்றி தொகுத்து வழங்கினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் நாஜிம், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், விடுதலை சிறுத்தை கட்சியின் கருத்தியல் பரப்பு துணைச் செயலாளர் சிபிசந்தர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜுனைது அன்சாரி , திராவிட இயக்கத்தின் வழ. துரை அருண் மற்றும் பி.யு.சி.எல் அமைப்பின் ராகவராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா தனது உரையில் கூறும்போது, “தமிழகத்தில் நடந்த பல்வேறு மதக் கலவரங்கள், மோதல்கள் ஆகியவற்றின் பின்ணணியில் பாரதிய ஜனதா, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து முன்னணியின் மத துவேஷ பேச்சுக்கள் தான் முக்கிய காரணமாக அமைந்துள்ளன.அந்த வகையில் தற்போது வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு வாக்குகளுக்காக சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவரும் தமிழக மக்களிடையே மத துவேஷத்தை தூண்டும் வகையில் பாஜக வின் ராஜா பேசியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் சிறுபான்மை கிறிஸ்தவ மக்களையும், முஸ்லிம்களை பற்றியும் அவர்களின் வழிபாட்டு முறைகளைப் பற்றியும் அவர் பேசிய பேச்சுக்கள் மத துவேஷத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் சமூக நீதிக்கு வித்திட்ட தந்தை பெரியார் பற்றியும், அவரை தரக்குறைவாக பேசிய பேச்சுக்களும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு சமூக நல்லிணக்கத்தை, பொது அமைதியை கெடுக்கும் வகையில் பேசியுள்ள பாஜகவின் மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காதது கணடிக்கத்தக்கது. ஆகவே காவல்துறை உடனடியாக மத துவேஷத்தை தூண்டிய பாஜகவின் ராஜா மீது வழக்குப்பதிவு செய்து, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் எஸ்.டி.பி.ஐ கட்சி இதனை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வட சென்னை மாவட்ட தலைவர் முகம்மது ரஷீத்,பொதுச்செயலாளர் ஏ.கே.கரீம், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ராயல் கரீம், திருவள்ளூர்மாவட்ட தலைவர் முகம்மது சலீம், செயலாளர் ஷேக் முகம்மது, காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர்முகம்மது பிலால், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியாக தென்சென்னை மாவட்ட பொதுச் செயலாளர் பல்லாவரம் அன்சாரி நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் பொதுமக்கள்உட்பட 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பேரூராட்சி வாசலில் பிச்சை எடுக்கும் போராட்டம் -வார்டு புறக்கணிப்பால் விரக்தி !!

தனது வார்டை புறக்கணிப்பதாக கூறி முத்துப்பேட்டை பேரூராட்சி வாசலில் நேற்று அதிமுக கவுன்சிலர் நாசர் பிச்சை எடுத்தார்.  முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டம் நேற்று அதன் தலைவர் அருணாச்சலம்(அதிமுக) தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி,   துணை தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் துவங்கியதும், சுயேட்சை கவுன்சிலர் பாவா பகுருதீன், பல்வேறு பணிகளுக்கு எம்.பி நிதி வந்துள்ளது. அது குறித்த விவரங்கள் ஏடி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டதா என்று தலைவரிடம் கேட்டார். அதற்கு தலைவர், அனுப்பிவிட்டதாக கூறினார்.
மீண்டும் பாவா பகுருதீன் சீக்கிரம் அதற்கான வேலைகள் நடைபெறட்டும். அடுத்த முறை யார் எம்.பியாக வருவார்கள் என்று தெரியாது என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கவுன்சிலர் பாவா பகுருதீன் கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
13வது வார்டு அதிமுக கவுன்சிலர் நாசர், தனது வார்டுக்கு வளர்ச்சி திட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக கூறி, கையில் தட்டு மற்றும் வாசகம் அடங்கிய போர்டுடன் வந்திருந்தார். அவர், எனது வார்டை பேரூராட்சி தொடர்ந்து புறக்கணிக்கிறது.
20140131a_01310601101
இதனால் எனது வார்டு மக்கள் குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலைவசதி இல்லாமல் தவிக்கிறார்கள். அதனால் நான் ஏந்தி வந்திருக்கும் இந்த தட்டில் எனது வார்டில் அடிப்படை பணிகளை செய்ய உங்களால் முடிந்த நிதியை தாருங்கள் என்று தலைவரைப் பாரத்து தட்டு ஏந்தி பிச்சை கேட்டார். இதனால் தலைவருக்கும், கவுன்சிலர் நாசருக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.
பிறகு கவுன்சிலர் நாசர் கூட்டத்தைவிட்டு வெளியேறி, பேரூராட்சி வாசலில் நின்று தட்டு ஏந்தி அனைவரிடமும் பிச்சைக் கேட்டார். பா.ஜ. கவுன்சிலர் மாரிமுத்து, திமுக கவுன்சிலர்கள் ஜெய்புனிஷா, செல்வி தம்புசாமி, முஸ்லீம் லீக் கவுன்சிலர் தம்பி மரைக்காயர், சுயேட்சை கவுன்சிலர் பஜரியா அம்மாள் ஆகியோர் அந்த தட்டில் நிதி அளித்தனர்.
வாசலில் கவுன்சிலர் பிச்சைக் கேட்டு நின்றிருந்ததை அறிந்த திமுக கவுன்சிலர் ஜெகபருல்லா, காங்கிரஸ் கவுன்சிலர் மெட்ரோ மாலிக் ஆகியோர் பேரூராட்சி பின்பக்கம் சுவர் ஏறி குதித்து சென்றனர். மேலும் அந்த வழியாக வந்த பொதுமக்களும் கவுன்சிலர் தட்டில் சில்லரை காசுகளை போட்டனர்.
கடைசியில் ரூ.85 வசூல் செய்யப்பட்டதாக எழுதி, அதை பேரூராட்சி சுவற்றில் ஒட்டி விட்டு கவுன்சிலர் நாசர் சென்றார். இது குறித்து கவுன்சிலர் நாசர் கூறுகையில், எனது வார்டு மக்களுக்கு எந்த பணியையும் செய்து கொடுக்க முடியவில்லை. பலமுறை தலைவரிடம் கேட்டும் பயனில்லை.
இதனால் எனது வார்டு மக்கள், ஜமாத் நிர்வாகிகள் என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள். இனிமேலும் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்தால் வருகிற 15ம் தேதி முதல் தினமும் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணி வரை தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் 3 வருடங்களுக்கு தொடரும். அதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு எனது வார்டில் வளர்ச்சி பணி செய்வேன் என்றார்.

பாஜக வை எதிர்க்க தயாராகும் சீமான் -40 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரச்சாராம் !!

பாஜக-வுக்கு எதிராக தீவிரமாக களம் இறங்க சீமான் முடிவு சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்ய நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. 


விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலையில் ஒரு கூட்டணியும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் களம் காண உள்ளது.


 இந்த கூட்டணியில் ஐக்கியம் ஆவாரா அல்லது தனி அணி காண்பாரா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் நிலைப்பாடு மிகவும் ரகசியமாக உள்ளது. இந்த நிலையில், வரும் தேர்தலில் பாஜக-விற்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்ய நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது.


 இது குறித்து நாம் தமிழர் கட்சி முன்னணி தலைவர்களிடம் பேசிய போது, ஈழத்தில் தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் இலங்கை ராணுவம் அழிப்புக்கு காங்கிரஸ் கட்சி துணை போனது. அத்துடன் அதை திமுக தாங்கிப் பிடித்து. அதனால் தான் மக்கள், திமுகவையும், காங்கிரஸ் கட்சியையும் புறக்கணித்தனர். 


அதே போலத் தான் பாஜகவும் தமிழ் இன அழிப்பை வேடிக்கை பார்த்தது. மேலும், தேச விடுதலைத்தாக பாடுபடும் விடுதலைப்புலிகள் அமைப்பையும், தமிழ் அமைப்புகளையும் பாஜகவில் சமீபத்தில் இணைந்த சுப்பியமணியன் சுவாமி கேலி, கிண்டல் செய்கின்றார். மனம் புண்புடும்படி பேசுகின்றார்.

 இதை அகில இந்திய பாஜக தலைமை தட்டிக் கேட்கவே இல்லை. இவை எல்லாவற்றையும் விட, இந்தியாவுக்குள் இலங்கை அதிபர் ராஜபக்ஷே வரவே கூடாது என பலத்த எதிர்ப்பு இருந்த நிலையில், ராஜஸ்தானில் ராஜபக்ஷேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது அம்மாநில பாஜக அரசு தானே.

 அன்று தமிழக பாஜக அதை தட்டிக் கேட்டதா, இல்லையே. காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பெயர்கள் மட்டும் தான் வேறு வேறு. தமிழத்தில் காங்கிரஸ் கட்சி செத்துவிட்டது. அடுத்து தமிழர்களை ஏமாற்ற பாஜக புது புது கோஷங்களுடன் வலம் வருகின்றது.

 தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே, தமிழர்களின் உண்மையான நலனில் பாஜகவுக்கு துளியும் அக்கறை இல்லை என்பதை மக்களுக்கு தெரிக்க வேண்டியது நமது கடமை. எனவே வரும் தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்கின்றனர் ஆணித்தரமாக

குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் நடுவானில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது..


குவைத், ஜனவரி 29: குவைத் நாட்டில் இருந்து சென்னைக்கு குவைத் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு வந்தது. அந்த விமானத்தில் ஆந்திரா மாநிலம் கடப்பாவை சேர்ந்த ராதா (வயது 27) என்ற பெண் பயணம் செய்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் அங்கு வீட்டு வேலை செய்து வந்தார்.
பிரசவத்திற்காக ராதா தனியாக விமானத்தில் பயணம் செய்தார் விமானம் அதிகாலை 3.30 மணியளில் சென்னையை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது ராதாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
அவர் வலியால் துடிப்பதை பார்த்து விமானப்பணி பெண்கள் பைலட்டிடம் கூறினர். அவர் உடனே சென்னை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இங்கு மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர்.
இதற்கிடையில் ராதாவிற்கு வலி அதிகமானது. அவரை விமானத்தில் கீழே படுக்க வைத்தனர். பணிப்பெண்கள் மற்றும் பயணிகள் உதவி செய்ய அவருக்கு சுகப்பிரசவம் ஆனது அதிகாலை 4.05 மணிக்கு நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, ராதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை கையில் எடுத்து துணியால் துடைத்து சுத்தம் செய்தனர்.
சிறிது நேரத்தில் விமானம் சென்னையில் தரை இறங்கியது. அப்பல்லோ மருத்துவ குழுவினர் தாயையும் சேயையும் பாதுகாப்பாக கொண்டு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர். விமானத்தில் குழந்தை பிறந்தததால் விமானப்பயணிகளிலும், பைலட்களும் பணிப்பெண்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
விமான நிறுவனத்தின் ஏற்பாட்டில் ராதா கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயும்–குழந்தையும் நலமாய் உள்ளனர். ராதாவிற்கு குழந்தை பிறந்த தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌத்து அறிவிப்பு "N செய்து அஹமது"


முத்துப்பேட்டை, ஜனவரி 29: மரைக்காயர் தெரு மர்ஹும். நெய்னா மரைக்காயர் அவர்களின் மகனும், ஹசுபுள்ள மக்கீன், அஹமது கபீர் ஆகியோரின் சகோதரரும், சஜாத் அஹமது அவர்களின் தாய் மாமாவும், S. அப்துல் ஜப்பார், S. முஹம்மது இபுறாஹீம், S. முஹம்மது ரில்வான், S. நெய்னா முஹம்மது, S. முஹம்மது மர்சிக்கீன், S. அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய  "N செய்து அஹமது" அவர்கள் இன்று இரவு 2:30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).

அன்னாரின் ஜனாசா இன்று காலை 11.30 மணியளவில் குத்பா பள்ளி கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

அறிவிப்பவர்:

ஹச்புல்லாமக்கீன் அஹமது கபீர் சகோதரர்கள்..

சென்னை ராயபுரத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்: சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வி.ஹெச்.பி!சென்னையில் பதற்றம்

சென்னை ராயபுரம் பகுதியில் முஸ்லிம்கள் மீது வி.ஹெச்.பி அமைப்பினரின் தாக்குதலால் அங்கு பதட்டமான சூழல் நிலவிவருகிறது.
சென்னை பழைய வண்ணாரப் பேட்டையில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேல் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இங்கு வாழும் மக்களுடன் பரஸ்பரம் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் சமீப காலமாக இந்த பகுதியில், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் வாழும் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக மதக் கலவரத்தை தூண்டும் வகையில் வி.ஹெச்.பி அமைப்பை சேர்ந்த விக்கி என்ற விக்ரமன், ரமேஷ், குள்ளரவி விஜி போன்றவர்கள் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பேணர்களை திறப்பது அவர்களின் கொடியை ஏற்றுவது, வன்முறை பேச்சுக்களை பேசுவது போன்ற பிரச்சனைகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இதுக்குறித்து அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய மக்கள் சார்பாக அனைத்து இயக்கம் மற்றும் ஜமாத்களை சேர்ந்தவர்கள் கடந்த ஜனவரி 24 அன்று காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் அளித்துள்ளனர். காவல்துறை அதிகாரிகளும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என உறுதியளித்துள்ளனர்.
ஆனால் இன்று காலை ராயபுரம் லாலாகுண்டா பகுதியில் மஸ்ஜிதே நூர் பள்ளி முன்பு வி.ஹெச்.பி அமைப்பின் கொடி மற்றும் பேணர்களை வைக்க முற்ப்பட்ட போது அதற்கு அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மேற்கண்ட வி.ஹெச்.பி அமைப்பை சேர்ந்த விக்ரமன் தலைமையில் 11 க்கும் மேற்பட்ட நபர்கள் ராயபுரம் லாலாகுண்டா பகுதியில் கொட்டு அடித்துக் கொண்டு, இஸ்லாமியர்கள் வாழும் பகுதிக்குள் சென்று, அங்குள்ள மஸ்ஜிதே நூர் பள்ளி முன்பு வன்முறையை தூண்டும் வார்த்தைகளை பேசியுள்ளனர். மேலும் எவனும் உயிரோடு இருக்க முடியாது எனவும், இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு போங்கடா எனவும் மத துவேஷமாக பேசியுள்ளனர்.
இதையடுத்து ஏன் இப்படி செய்கிறீர்கள்? எனக் கேட்டவர்களை கையில் வைத்திருந்த கத்தி, அரிவாள், இரும்பு கம்பிகளை கொண்டு தாக்க முற்ப்பட்டுள்ளனர். அப்போது இவர்களின் தாக்குதலில் அங்கு நின்றிருந்த அக்பர் என்பவரின் வலது கால் நரம்பில் வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டியது.
பின்பு அங்கு இருந்தவர்களை பார்த்து இனி யாராவது போர்டு, பேணர் வைக்க எங்களை தடுத்தால் ஒருவனும் உயிரோடு இருக்க முடியாது எனவும், இரவோடு இரவாக இந்த பகுதியை எரித்து சாம்பலாக்கிவிடுவோம் எனக்கூறி தப்பாட்டம் போட்டு பள்ளிவாசல், வீடுகளை நோக்கி கற்களை எடுத்து வீசிச் சென்றுள்ளனர்.
இதுக்குறித்து விபரம் அறிந்த இஸ்லாமிய மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அப்பகுதிக்கு விரைந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து, சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வண்ணம் தாக்குதல் நடத்திய வி.ஹெச்.பி அமைப்பினரை கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்க்கொள்ளவேண்டும் எனவும் மற்றும் இஸ்லாமிய இயக்கத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

தமுமுக தலைமையகத்திற்கு நேரில் வந்த முக ஸ்டாலின் -திமுக -தமுமுக தொண்டர்கள் நிரம்பி வழிந்ததால் மண்ணடியில் கடும் நெரிசல் !

சென்னை, ஜனவரி 25: திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திமுக மாநாட்டிற்கு அழைப்பு கொடுப்பதற்காக 21.01.2014 அன்று மனிதநேய மக்கள் கட்சித் தலைமையகம் வருகை தந்தார். இந்நிகழ்வின் போது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்,  ஜே.எஸ். ரிபாயி,மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற தலைவர்பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா, மூத்த தலைவர்  எஸ். ஹைதர் அலி,பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது,  பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ்,ணைத் தலைவர் குணங்குடி ஆர். எம். அனிபா உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளுடன் கலந்துரையாடி அழைப்பு விடுத்தார்.


முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பாசிச எதிர்ப்பு பிரச்சாரம்!

முத்துப்பேட்டை, ஜனவரி 24: நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம் உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம். இந்த சங்கபரிவார அமைப்புகளின் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சியின் மதவாதம், ஊழல், போலி தேசிய வாதம், தீவிர வாதம் போன்ற பாசிச முகத்தை தோலுரித்துக் காட்டும் முகமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தை மாநில அளவில் நடத்த உள்ளது. இதன்படி ஜனவரி 2014 முதல் ஏப்ரல் 2014 வரை மாநிலம் முழுவதும் பாசிசத்திற்கு எதிரான நோட்டீஸ் மற்றும் போஸ்டர் பிரச்சாரம், சமூக வலைதளங்களில் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைக் கூட்டங்களை நடத்த உள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள், அனைத்து இயக்க தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து பாசிசத்திற்கு எதிராக ஒருங்கிணைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தின் சார்பாக பா. ஜ. க. வின் இரட்டை வேடத்தை மக்களுக்கு தெளிவு படுத்தும் விதமாக தமிழக முழுவதும் நோட்டீஸ் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு அங்கமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று (24.01.2014) நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.முத்துப்பேட்டையிலிருந்து 20 பஸ்கள் 40 வேன்களில் சிறை செல்லும் போராட்டத்திற்கு செல்கிறோம் -தவ்ஹீத் ஜமாத் அன்சாரி பேட்டி:
முத்துப்பேட்டை, ஜனவரி 24: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  வரும் 28 ஆம் தேதி சிறை செல்லும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது .இதற்காக தமிழகம் முழுவதும் ஆலோசனை கூட்டங்கள் மற்றும் தர்பியா முகாம்களை  தீவிரமாக நடத்தி வருகிறது .

ரபரபிற்கு சிறிதும் பஞ்சமில்லாத முத்துப்பேட்டையில் ,TNTJ வின் போராட்ட பணிகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளது .
போராட்ட பணிகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக ,TNTJ வின் மாநில செயலாளர் அன்சாரி அவர்களை முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள குழுவின் சார்பாக சந்தித்தோம்.
சிறை செல்லும் போராட்ட பணிகளில் ஈடுப்பட்டிருந்த அவர் நமது இணையதளத்திற்கு பேட்டியளித்தார் .

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முத்துப்பேட்டை கிளையின் சார்பாக திருச்சியில் நடைபெறும் சிறைசெல்லும் போராட்டத்திற்கு செல்வதற்காக  20 பஸ்கள் மற்றும் 40 வேன்களில் செல்ல இருப்பதாகவும்,இதற்காக ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார் .

கடந்த 2 மாதத்திற்கு முன்னதாகவே சுவர் விளம்பரங்கள் ,துண்டு பிரசுரங்கள் ,வால் போஸ்டர்கள் ,டிஜிட்டல் போர்டுகள் உள்ளிட்டவைகள் மூலம் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் விளம்பர பணிகள் செய்துவந்ததாக கூறினார் .
இதற்காக தனித்தனியாக  குழுக்கள் பிரிக்கப்பட்டு முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று அழைப்பு பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தார் .

 TNTJ வை சேர்ந்த பெண்கள்  கூப்பாடு செல்வது போல் நேரடியாக  முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி பெண்களிடம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் ,அதில் பெரும்பான்மையான பெண்கள் 

 போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் , இது இஸ்லாமிய இயக்க வரலாற்றில் ,எந்த இயக்கமும் செய்திடாத ஒரு மகத்தான பனி என்றும் அன்சாரி  பெருமிதம் தெரிவித்தார் .
சென்னை ,திருச்சி ,கோவை ,காரைக்கால் பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் ,மும்பை மற்றும் மகாராஷ்டிராவிலும் இந்த சிறை செல்லும் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நடத்த உள்ளதாக தெரிவித்தார் .

இந்த சிறை செல்லும் போராட்டத்தில் 20 லட்சம் பேர் கலந்துகொள்ள இருப்பதாகவும் ,இதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அணிதிரள உள்ளதாகவும் கூறினார் .வரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அதிமுக விற்கு ஆதரவு கொடுக்கபோவதாக செய்திகள் பரவி வருகிறதே என்ற கேள்விக்கு ,அதை நீங்கள் போராட்டத்திற்கு பிறகு தெரிந்து கொள்வீர்கள் என பதிலளித்தார் .

ஆசாத் நகரில் கட்டப்பட்டு வரும் தவ்ஹீத் மார்க்சிற்கு ,ஒரு சில விஷமிகள் எதிராக செயல்படுவதாகவும் ,எந்த இடத்தில் வேண்டுமானாலும் இறை இல்லங்கள் கட்டிக்கொள்ளலாம் என இந்திய சட்டம் சொல்வதாகவும் ,எனவே திட்டமிட்டபடி அதே இடத்தில் தவ்ஹீத் மார்க்ஸ் கட்டி எழுப்பப்படும் எனவும் அவர் தெரிவித்தார் .

சந்திப்பு :ஜே :ஷேக் பரீத் மாற்றுதிறனாளி இஸ்லாமியருக்கு மிதிவண்டி வழங்க பரிந்துரை செய்த திமுக மாவட்ட துணை செயலாளர் கார்த்திக்கிற்கு முத்துப்பேட்டை தமுமுக பாராட்டு !!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தனது பாராளுமன்ற நிதிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு சக்கர மோட்டர் சைக்கிள்களை நாகை எம்.பி ஏ.கே.எஸ்.விஜயன் வழங்கினார். இதனை நாகை எம்.பிக்கு பரிந்துறை செய்த மாவட்ட தி.மு.க துணைச்செயலாளரும், முத்துப்பேட்டை நகர செயலாளருமான கார்த்திக்கை முத்துப்பேட்டை நகர த.மு.மு.க சார்பில்  சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். அப்பொழுது நவாஸ்கான், அலிஅக்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் பெற்ற மாற்றுத்திளனாளிகளும் த.மு.மு.க வினரும் உடன் இருந்தனர்.

ராமநாதபுரம் முஸ்லீம்களிடத்தில் அடி வாங்கியும் திருந்தாத H .ராஜா -கமிஷனர் அலுவகத்தில் SDPI புகார்

மதவெறி, இனவெறியை தூண்டி கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசிய பா.ஜ.க மாநில நிர்வாகி எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இன்று காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்து தர்ம பாதுகாப்பு என்ற அமைப்பின் கூட்டத்தில் பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா, கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், திராவிடர் கழகம், ஹிந்துதுவாதிகளுக்கு எதிராக உள்ளவர், ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களையும், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், மதவெறியை தூண்டி விடும் விதமாகவும் பேசியுள்ளார். அவரது பேச்சு யூ டியூப் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.(<http://www.youtube.com/watch?v=7rO7qPp0ps4>, <http://www.youtube.com/watch?v=jV9qVLRVMEY>, <http://www.youtube.com/watch?v=hxH0Ra-ap2Q>) இதனை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை கண்டுள்ளனர்.

அவர் தனது உரையில் இந்துக்கள் மட்டும் தான் தமிழர்கள் என்றும் கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் தமிழர்கள் இல்லை என்கிறார். தந்தை பெரியார் ஒரு சாதி வெறியர் என்றும், தலித் பெண்கள் மேலாடை அணிவதால் தான் துணி விலை உயர்ந்ததாக தந்தை பெரியார் கூறியதாக அவதூறாக பேசியுள்ளார். சென்னையில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது போல் இந்துக் கடவுள்களை பற்றி பேசிய, நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்றும், அவரை கொல்ல வேண்டும் என்றும் அவர் அப்பாவி மக்களை தூண்டிவிடுகிறார்.

கிறிஸ்துவர்களின் கடவுளாக வணங்கி வரும் மேரி எப்படி கணவன் இல்லாமல் குழந்தை பெற்றார் என கேலி செய்துள்ளார். மேலும் எஸ்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பாதிரியார்களை பற்றிய பட்டியல் தங்களிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னையே காப்பாற்ற முடியாத ஏசு எப்படி உங்களை காப்பாற்றுவார் என்றும் கிறிஸ்துவர்களை நோக்கி கேள்வி எழுப்புகிறார். நபிகள் நாயகம் பற்றி அவதூறாக வெளிவந்துள்ள சில புத்தகங்களை படித்து அதனை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் பொது அமைதியை கெடுக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

பாபர் மசூதியை இடித்தது நாங்கள் தான் என்றும், வரும் மே மாதத்திற்கு பிறகு அங்கு ராமர் கோவில் எழுப்பப்படும் என்றும் பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சுக்கள் இணையதளத்தில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எச்.ராஜாவின் பேச்சு மத உணர்வுகளை புண்படுத்துவதுடன், அமைதியாக வாழ்ந்து வரும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது. எனவே அவரை கைது செய்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது


தொகுப்பு :ஜே ஷேக் பரீத் 

நாகூர் ஹனீபா ஓர் வரலாற்று பார்வை
1560458_3812132679690_363324455_n


சுயமரியாதை இயக்கத் தொண்டராய், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராய் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் நாகூர் ஹனீபா. நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர். பட்டுக்கோட்டை அழகிரி, பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் நேசத்திற்குரியவர். கண்ணியத் தலைவர் காயிதே மில்லத்தின் அன்பைப் பெற்றவர்.தமிழக அரசியல் களத்திலும், இஸ்லாமியப் பண்பாட்டுத் தளத்திலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பாடல்கள் ஒலிக்காத பெருநாள்கள் இல்லை. அவர் குரல் கேட்காத கூட்டங்கள் இல்லை. அவரது பாடல்களில் உருகாத நெஞ்சங்கள் இல்லை.


தற்போது 89 வயதைத் தொட்டிருக்கும் அந்த மகத்தான கலைஞரின் வாழ்க்கைப் பாதையை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும். இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் 1925 டிசம்பர் 25 ஆம் நாள் முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் நாகூர் ஹனீபா.

இஸ்மாயில் முஹம்மது ஹனீபா என்பது இயற்பெயர். அப்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனீபா என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது. இசை உலகில் பிரபலமானவுடன் ‘இசைமுரசு’ எனும் அடைமொழியும் அப்பெய ரோடு இணைந்தது.

சிறு வயதிலிருந்தே ஹனீபா பாடத் தொடங்கி விட்டார். நாகூரில் அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பள்ளிக்கூடத்தில் இறைவணக்கம் பாடியதுதான் அவரது முதல் பாடல் அனுபவம். அதன்பிறகு, திருமண நிகழ்ச்சிகளின்போது நடைபெறும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலங்களில் பாடினார் ஹனீபா.

1930 களில் பிரபலமாக இருந்த உருதுப் பாடகர்கள், காலு கவால்; பியாரு கவால் மற்றும் தமிழ் பிரபலங்களாகிய கே.பி.சுந்தராம்பாள், இஸ்லாமியப் பாடகர் காரைக்கால் தாவூத் ஆகியோரின் பாடல் களால் ஈர்க்கப்பட்டார்.

வடமாநிலங்களில் அக் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ‘சைகால்’ என்ற பாடகரின் காந்தாரமான குரலும், தியாகராஜ பாகவதரின் உச்சஸ்தாயி சஞ்சாரமும் ஹனீபாவை ஒருசேர ஈர்த்தபோதும் யாருடைய பாணியையும் பின்பற்றாமல் தமக்கென தனியொரு பாணியை உருவாக்கிக்கொண்டார்.

1941 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் தேரிழந் தூரில் ஒரு திருமண நிகழ்வில் இசைக்கச்சேரி செய்ய ஹனீபாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. வெளியூர் சென்று இசைக் குழுவினருடன் ஹனீபா செய்த முதல் கச்சேரி அது. முறையாகப் பணம் பெற்றுக்கொண்டு செய்த கச்சேரியும் அதுவே. 25 ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஹனீபா அந்தக் கச்சேரியை நடத்தியபோது அவருக்கு வயது 15.

ஹனீபா முறையாக சங்கீதம் கற்றவர் அல்லர். அவரது எடுப்பான குரல் இயற்கையாகவே அமைந்தது. 1954 இல் அவரது பாடல்கள் இசைத் தட்டில் பதிவாயின. இலங்கை கம்பலையில் வாழ்ந்த நல்லதம்பி பாவலர் எழுதிய ‘சின்னச் சின்னப் பாலர்களே! சிங்காரத் தோழர்களே!’ என்று தொடங்கும் சிறுவர்களுக்கான அறிவுரைப் பாடலும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்ற உணர்ச்சிப் பாடலும் ஒரே இசைத்தட்டில் பதிவாகி முதன் முதலில் வெளிவந்தது.

ஹனீபா ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். பல்லாயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 1940களில் தொடங்கி 2006 வரை சுமார் 65 ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கச்சேரிகள் செய்துள்ளார். எந்த இசைக் கலைஞரும் செய்யாத அரிய சாதனை இது.

உலக நாடுகள் பலவற்றிலும் ஹனீபாவின் இசை முழக்கம் அரங்கேறியுள்ளது. இலங்கையில் தொடங்கிய அவரது உலக இசைப்பயணம், சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபுதாபி, கத்தார், பஹ்ரைன், ஹாங்காங் என தொடர்ந்தது.

ஹனீபாவின் பாடல்கள் சமய சமூக நல்லிணக் கத்துக்கு பெருந்துணை புரிந்துள்ளன. தமிழகத்தில் சமயப் பூசல்கள் இன்றி சமூகங்களுக்கு இடையே அன்பும் அமைதியும் நிலவுவதற்கு ஹனீபாவும் ஒரு காரணம். தவத்திரு குன்றக்குடி அடிகளார், ஹனீபாவின் தீவிர ரசிகர். மதுரை ஆதீனம் காரில் பயணம் செய்யும் போதெல்லாம் ஹனீபாவின் பாடல்களையே பெரிதும் விரும்பிக் கேட்பாராம். பிரபல எழுத்தாளர் பாலகுமாரன், தமக்குச் சஞ்சலம் ஏற்படும் போதெல்லாம் ஹனீபாவின் பாடல்களைக் கேட்டு மன அமைதி அடைவாராம். திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியும் ஹனீபாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்டவர். ஹனீபாவின் பாடல்களைக் கேட்டே தாம் இஸ்லாமிய வரலாறுகளை அறிந்து கொண்டதாகக் கூறுகிறார் அவர்.

ஹனீபா பாடிய ‘எவர் கிரீன்’ பாடலான ‘இறை வனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்ற பாடல், மத வேறுபாடு களைக் கடந்து இந்து மற்றும் கிறித்தவ வீடுகளி லெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்பாட லுக்கு மணிக்கணக்கில் சிலேடை நயத்தோடு விளக்கம் சொல்வாராம் கிருபானந்த வாரியார். ‘அப்பா ஹனீபா! நீ பாடகன் அல்லவப்பா; நீ பாட்டுக்கே தலைவனப்பா!’ என்று உளமாற ஹனீபாவைப் பாராட்டியுள்ளார் வாரியார்.

திரைத்துறையிலும் தடம் பதித்தவர் ஹனீபா. குலேபகாவலி திரைப்படத்தில் ஜிக்கி மற்றும் எல்.ஜி.கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து, ‘நாயகமே நபி நாயகமே’ என்ற பாடலைப் பாடினார். பின்னர் பாவமன்னிப்பு படத்தில் டி.எம்.சௌந்தரராஜனோடு இணைந்து ‘எல்லோ ரும் கொண்டாடுவோம்’ என்ற பாடலையும், செம்பருத்தி படத்தில் ‘நட்ட நடு கடல் மீது’ என்ற பாடலையும், ராமன் அப்துல்லா படத்தில் ‘உன் மதமா என் மதமா’ என்ற பாடலையும் மேலும் பல திரைப்பாடல்களையும் பாடியுள்ளார்.

பெரியார் பற்றி ஹனீபா நிறைய பாடியுள்ளார். பெரியாரைப் பற்றிய பாடல் ஒன்றை முதன்முதலில் இசைத் தட்டில் பதிவு செய்தவரும் ஹனீபா தான். ‘பேரறிவாளர் அவர் பெரியார் என்னும் ஈ.வெ.ரா.. தூங்கிக் கிடந்த உன்னைத் தூக்கித் துடைத்தணைத்து தாங்கித் தரைமேல் இட்டார்
தமிழர் தாத்தாவாம் ஈ.வெ.ரா.வே!’ என்பதே அந்தப் பாடல். 1955 ஆம் ஆண்டு இப்பாடலின் இசைத்தட்டு வெளிவந்தது.

அண்ணாவைப் பற்றி ஹனீபா பாடிய ‘அழைக்கின்றார்.. அழைக்கின்றார் அண்ணா’ எனும் பாடல் தி.மு.க.வின் கருத்தியலை பட்டி தொட்டியெங்கும் பரப்பிய பாடலாகும். 1955ஆம் ஆண்டு அப்பாடல் இசைத்தட்டில் வெளிவந்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதலில் அப்பாடலைப் பதிவு செய்ய HMV இசைத்தட்டு நிறுவனத்தார் மறுத்து விட்டனர். இஸ்லாமியப் பாடல்களைப் பாடுமாறு கூறினர். ‘இந்தப் பாடலைப் பதிவு செய்யவில்லையெனில், நான் வேறு பாடல்கள் பாட மாட்டேன்’ என ஹனீபா மறுத்துவிட்டார். அதன்பிறகே பாடலைப் பதிவு செய்தார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இசைத்தட்டு விற்பனை விவரத்தை HMV நிறுவனத்தார் அறிவிப்பது வழக்கம். அந்த ஆண்டில் ‘அழைக் கின்றார் அண்ணா’ என்ற இசைத்தட்டுதான் விற்பனையில் சாதனை படைத்தது. HMV அப்பாடலை பதிவு செய்தது குறித்து அண்ணா வியந்தார். இசைத்தட்டு விற்பனை உச்சத்துக்குச் சென்றதைக் கண்டு HMV நிறுவனம் வியந்தது.

ஹனீபாவின் பாடல்கள் இசைத் தட்டிலிருந்து ஆடியோ கேசட்டாகி, சி.டி.யாகி, இன்று லேப்டாப், ஐபேட் என்று பரிணாமம் பெற்று உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இணையத்தில் நாகூர் ஹனீபா என்று தட்டினாலே அவரது பாடல்கள் வந்து குவிகின்றன. அவரது கச்சேரிகளின் வீடியோ காட்சிகளும் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன.

ஹனீபாவின் வளர்ச்சியும், வெற்றியும் தமிழக முஸ்லிம்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிராமங்களில் சிறுவர்கள் ஒன்றுகூடி மணல்மேடை அமைத்து ஹனீபா போல் வேடம் அணிந்து கச்சேரிகள் நடத்தும் அளவுக்கு அவர் பிரபலமானார். ஹனீபாவின் பாணியைப் பின் பற்றி அவரது பாடல்களையே பாடக்கூடிய ஏராளமான பாடகர்கள் உருவாயினர்.

ஹனீபா உயிரைக் கொடுத்துப் பாடியிருக்கிறார்; இரத்த வாந்தி எடுக்குமளவுக்குப் பாடியிருக்கிறார். உச்சஸ்தாயியில் பாடிப் பாடியே தமது செவித் திறனை இழந்திருக்கிறார். அவ்வாறு உழைத்து, ஊர் ஊராக அலைந்து சேர்த்த செல்வத்தைக் கொண்டு நாகூரிலும், சென்னையிலும் சொந்த இல்லங்களைக் கட்டினார். நாகூரில் கட்டிய முதல் வீட்டுக்கு ‘கலைஞர் இல்லம்’ என்றும், அதே ஊரில் எழுப்பிய இரண்டாம் வீட்டுக்கு ‘அண்ணா இல்லம்’ என்றும் பெயர் சூட்டினார். சென்னையில் உள்ள வீட்டுக்கு ‘காயிதே மில்லத் இல்லம்’ என்று பெயர் வைத்தார்.

இப்போது ஹனீபா, நாகூரில் தாம் கட்டி எழுப்பிய கலைஞர் இல்லத்தில், ஓர் ஈசி சேரில் சாய்ந்தவாறு ஓய்வில் இருக்கிறார். பூரண ஆரோக்கியத்தோடும், அதே பழைய கம்பீரத்தோடும், குலையாத மன வலிமையோடும் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் நீடூழி வாழ வேண்டும்!

தொகுப்பு :ஜே ஷேக் பரீத்


மௌத்து அறிவிப்பு -ஷேக் அலாவுதீன்


முத்துப்பேட்டை, ஜனவரி 19: மரைக்கா தெரு மர்ஹூம் அஹமலை தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் அ.க. அஹமது ராவுத்தர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் S.A.. ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரரும், S.சேக் அப்துல் காதர், S.அல்லாபிச்சை இவர்களின் தந்தையுமான “S.A சேக் அலாவுதீன்” அவர்கள் 18.01.2014 இரவு 11 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.


முஸ்லீம் லீக் தலைவருடன் முத்துப்பேட்டை நிர்வாகிகள் சந்திப்பு !!

சென்னை, ஜனவரி 19: இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் KM .காதர் மொஹிதீன் அவர்கள்  கடந்த சில நாட்களுக்கு முன்  கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் .திருச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு முத்துப்பேட்டை மற்றும் திருவாரூர் மாவட்ட முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் காதர் மொஹைதீன் அவர்களை நேரில்  சந்தித்து நலம் விசாரித்தனர் .

முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர்  K.முகைதீன்அடுமை. மாவட்ட  துணை செயலாளர் Mமுஹம்மதுஅலி. Sதம்பிமரைக்காயர் நகர பொருளாளர் நேனா மோட்டார்ஸ்  A.S.N.முஹம்மதுஇபுராகிம். நகர தலைவர்  S.அபுஹனிபா. Y.B.சலீம். Sஹாஸ்பாவா. ஷாஜகான். சூப்பர் டிராவல்ஸ்  H.ஜாஹிர்உசேன். ஆகியோர் நேரில் சந்தித்தனர் .

தகவல் :S .ஹாஸ் பாவா 
தி.மு.க.வுடன் கூட்டணி கருணாநிதியுடன் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு

சென்னை, ஜனவரி 18: தி.மு.க. தலைவர் கருணாநிதியை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.


கருணாநிதியுடன் சந்திப்பு
கடந்த 2011–ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ரிபாயி, பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, தி.மு.க. தரப்பில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் உடன் இருந்தனர். மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு 12.30 மணி வரை நீடித்தது.
தி.மு.க.வுக்கு ஆதரவு
பின்னர், வெளியே வந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ரிபாயி, பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
கடந்த 10–ந் தேதி சென்னையில் நடைபெற்ற எங்கள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில், வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதை முறையாக தெரிவிக்க வேண்டும் என்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து கூறினோம்.
தொகுதி பங்கீடு பற்றியும் பேசியுள்ளோம். எத்தனை தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்ட பிறகு கூட்டணி தலைவர் கருணாநிதி அறிவிப்பார். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வும் வர வாய்ப்பு இருப்பதாக நம்புகிறோம்.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும். மத்தியில் மதசார்பற்ற கட்சி ஆட்சியமைக்க வேண்டும். ராஜ்யசபா தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரிப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சச்சார் பரிந்துரைகளில் 76 இல் 72 ஓகே ! மன்மோகன் அதிரடி...!!!


இந்தியா, ஜனவரி 14: இந்தியா போன்ற பாரம்பரியம் மிக்க நாட்டில் மதச்சார்பற்ற தன்மையை வாழ்க்கையுடன் இணைத்து மக்கள் பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகின்றனர். இதுதான் இந்தியாவின் பலமாக கருதப்படுகிறது. ஆனால், சமுதாயத்தில் மதம்,மொழி, கலாசாரம் ஆகியவற்றில் நிலவி வரும் ஒற்றுமையை சீர்குலைக்க பிரிவினைவாதச் சக்திகள் முயன்று வருகின்றன.
மேலும், மதச்சார்பற்ற தன்மையை மாற்றியமைக்கவும் அவை திட்டமிட்டு வருகின்றன. இதை நாட்டு மக்கள் அனுமதிக்கக் கூடாது. பெரும்பான்மை சமுதாயத்தினருக்கும் சிறுபான்மை சமுதாயத்தினருக்கும் இடையே உள்ள நல்லுறவுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நாட்டின் பலபகுதிகளில் முயற்சிகள் நடைபெறுகின்றன.
இதனால் பாதிக்கப்படும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது
சமுதாயத்தில் பின்தங்கிய முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்காக, சச்சார்குழு அளித்த 76 பரிந்துரைகளில் 72 பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுகொண்டுள்ளது

.டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில சிறுபான்மை ஆணையத்தின் மாநாட்டில் மன்மோகன் சிங் பேசியது.

மரியாதைக்குரிய பிரதமர் அவர்களே சூப்பராக பேசியுள்ளிர்கள் .
ஆமா சார்
முஸ்லிம்கள்,
சச்சார் கமிட்டி ,
76 பரிந்துரைகளில் 72 பரிந்துரைகளை ஏற்று கொண்டது
இதெலாம் இப்பதான் உங்களுக்கு நினைவுக்கு வந்ததோ ?
சாரி சார் மறந்து போச்சு நீங்க நாலரை வருஷமா
பாரின் டுர்லேயே இருந்துடீங்கலே..... !


நன்றி: எஸ்.என்.சிக்கந்தர்

முத்துப்பேட்டையில் சூடு பிடிக்கும் TNTJ மாநாட்டு பணிகள் -வீடு வீடாக சென்று பிரச்சார பணியில் ஈடுபடும் தவ்ஹீத் ஜமாத்தினர் !!


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 1 சார்பாக 13.01.2014 அன்று ஜனவரி 28 போராட்ட அழைப்புபனி வீடுவீடாக நடைபெற்றது
அதுசமயம் போராட்ட விளம்பரம் பதித்த விசிறிகளும் ரேசன் கார்டு கவர்களும் வீடுவீடாக வினியோகிக்கப்பட்டது
முன்னதாக தொண்டரனிக்காக தயார் செய்யப்பட்ட ஜனவை 28 போராட்ட விளம்பரம் பதித்த 50 டீசர்ட் மானவர்களுக்கு வழங்கப்பட்டது 

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக முத்துப்பேட்டை மரைக்காயர் தெருவை சேர்ந்த L.முஹம்மது மன்சூர் அவர்கள் நியமிக்கப்பட்டார்.முத்துப்பேட்டை, ஜனவரி 12:  அரசியல் அதிகாரங்களாக இருந்தாலும் சரி, விளையாட்டு துறையாக   இருந்தாலும் சரி, பொருளாதார முன்னேற்றமாக இருந்தாலும்  சரி, அல்லது கல்வியில் முதன்மையாக வருவதாக இருந்தாலும்  சரி, சாதனைகள் படைப்பதில் நமதூர் இளைஞர்கள்  சளைத்தவர்கள் அல்ல.

இந்த சாதனைகளுக்கெல்லாம் வழு சேர்த்திருக்கிறார் முத்துப்பேட்டையை சேர்ந்த  சகோதரர். AKL. முஹம்மது மன்சூர் IAS, அவர்கள். 

காரைக்கால் மாவட்ட ஆட்சியராக மன்சூர் நியமிக்க பட்டுள்ளார்.

முத்துப்பேட்டை மரைக்காயர் தெரு குத்பா பள்ளிவாசல் எதிரே உள்ளது சகோதரர்  மன்சூர் அவர்களின் வீடு. இவரது தகப்பானாரின் பெயர் மர்ஹூம் சேஹனா (எ) லெப்பை தம்பி மரைக்காயர்  ஆகும்

மதிப்பிற்கும்  மரியாதைக்கும்  உரிய மன்சூர் அவர்களின் தகப்பனார் லெப்பை தம்பி மரைக்காயர்   அவர்கள்தான் முத்துப்பேட்டையின் முதல் பேரூராட்சி தலைவராவார். இவரின் ஆட்சிகாலத்தில் முத்துப்பேட்டை மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து கொடுத்துள்ளார்.மரைக்காயார் தெரு கோரைஆறு,பட்டறைகுளம் அரசர்குளம்,செக்கடிகுளம்,குண்டாங்குளம்,ஆசாத் நகர் சட்ரஸ் அணை,சில்லாடி   உள்ளிட்டவைகள் இவரின்  ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவைகளாகும்.

சேஹனா (எ) லெப்பை தம்பி மரைக்காயர்           அவர்களுக்கு ஒரே மகனாய் பிறந்தார் மன்சூர். தமது இளம் வயதிலேயே எழுத்தாற்றலிலும், பேச்சாற்றலிலும், முன்னோடியாக திகழ்ந்தார் மன்சூர். 
                     
இனிமை, எளிமை, பொறுமை, மற்றும் ஆளுமைகளுக்கு சொந்தக்காரராக விளங்கி வருபவர் மன்சூர். கல்வியில் எப்படி அதிக நாட்டம் உடையவரோ, அதே போல்  சன்மார்க்க நெறிகளையும் பின்பற்ற கூடியவர்.  .ஐ வேலை தொழுகை தவறாத மன்சூர் அவர்கள், ஜமாஅத் செல்வதில் அதீக நாட்டம் உடையவர்.

தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் சென்னை கிரசென்ட் தனியார் மெட்ரிக் பள்ளியில் முடித்தார் மன்சூர்.

பின்னர் டெல்லியில் உள்ள  இந்திய ஆட்சி பனி அகடாமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.

இதனை தொடர்ந்து காரைக்கால் மாவாட்ட துணை ஆட்சியராகவும், பின்பு புதுவை மாநில சுற்றுலா துறை இயக்குனராகவும், புதுவை மாநில சிவில் சப்ளை இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் முத்துப்பேட்டை மன்சூர் அவர்களை, காரைக்கால் மாவட்ட ஆட்சி தலைவராக நியமித்து புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.

அன்பு சகோதரர் மன்சூர் அவர்களின் மக்கள் பனி சிறக்க எல்லாம்  வல்ல இறைவனிடம்  துவா செய்வோம். ஆமீன்.

source from: muthupettaiexpress.comஅதிரை அருகே கத்தியால் குத்த வந்த மர்ம நபர்களிடம் 2 பவுன் நகையை பறிகொடுத்துவிட்டு தப்பித்த முத்துப்பேட்டை குடும்பத்தினர் !முத்துப்பேட்டை, ஜனவரி 11: குட்டியார் பள்ளி தெருவை சேர்ந்தவர் சேக் முஹம்மது இவரின் உறவினர் முஹம்மது அப்துல் பாசித். இவர்கள் இருவரும் இன்று மதியம் 3.30 மணியளவில் இரு பெண்கள் உட்பட 5 பேரைகொண்ட தனது குடும்பத்தினருடன் அதிரை கடற்கரைதெருவில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக டாட்டா நானோ வாகனத்தில் பயணம் மேற்கொண்டனர்.

வாகனம் தம்பிக்கோட்டையை வந்தடைந்ததும் அங்குள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிவிட்டு புறப்பட முற்படும்போது இருசக்கர பல்சர் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் வாகனத்தின் கண்ணாடியில் பொறிக்கப்பட்டிருந்த 'மாஷா அல்லாஹ்' என்ற அரபிக் எழுத்துகளில் எச்சிலை துப்பிவிட்டு, வாகனத்தில் இருந்தவர்களிடம் வம்பு இழுத்தாகவும், இதைதொடர்ந்து நிலைமை மோசமாவதை அறிந்துகொண்டு இவர்கள் அங்கிருந்து வாகனத்தை விரைவாக ஓட்டி தப்பித்துள்ளனர். இவர்களை பின்தொடர்ந்த மர்ம கும்பல் மேலும் இருவரை தங்களுடன் சேர்த்துக்கொண்டு மீண்டும் வாகனத்தை இடைமறித்து அதில் இருந்தவர்களை தாக்கி இருக்கின்றனர். அப்போது மர்ம கும்பலில் இருந்த ஒருவர் தனது பாக்கெட்டில் வைத்து இருந்த கத்தியால் வாகனத்தை ஓட்டிச்சென்ற முஹம்மது அப்துல் பாசித்தை நோக்கி குத்த முற்பட்டுள்ளார். உடனே வாகனத்தின் பின்புற இருக்கையில் அமர்ந்து இருந்த இவரின் பெரியம்மா தனது கையால் தடுக்க முயன்றுள்ளார். மர்ம கும்பல் அவரின் கையில் அணிந்துள்ள 2 பவுன் மதிப்புள்ள செயினை பறித்துள்ளதாக தெரிகிறது.

பெரும் அசம்பாவிதம் நடக்க இருப்பதை எண்ணிய இவர்கள் பெரும் அச்சத்துடன் வாகனத்தை அதிரைக்கு ஒட்டி வந்துள்ளனர். இதை தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து சேக் முஹம்மது அதிரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுகொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்தனர். மேலும் புகார் குறித்து விரைவாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

ஒன்றிணைந்த அதிரை சமுதாய அமைப்புகள் :
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அதிரை நகர SDPI, த.மு.மு.க, TNTJ ஆகிய சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் அதிரை இளைஞர்கள் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் பாதிக்கப்பட்டோருக்கு வேண்டிய உதவிகளை செய்தனர்.

பொதுமக்களின் எதிர்பார்ப்பு :
குறிப்பிட்ட அந்த பகுதியில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், இந்த பகுதியில் வாழும் இரு சமுதாய மக்கள் காலங்காலமாக அன்னியோன்யமாக வாழ்ந்து வருகின்றனர் என்றும், இவர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாக சமூக விரோதிகள் சிலர் இதுபோன்ற காரியங்களில் அவ்வப்போது ஈடுபடுவதாகவும், இதற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராதவாறு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அங்கே கூடியிருந்த பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

களத்திலிருந்து அதிரை நியூஸ் குழு

எக்ஸ்பிரஸ் கருத்து கணிப்பில் இன்றைய நிலவரம்:முன்னிலையில் SDPI :இரண்டாம் நிலையில் பாஜக
முத்துப்பேட்டை, ஜனவரி 10: முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு பொருத்தமானவர்கள் யார் என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இயனயத்தளம் கருத்து கணிப்பை நடத்தி வருகிறது. கடந்த 08-01-2014 அன்று துவங்கப்பட்ட கருத்து கணிப்பு வரும் 30-01-2014 அன்று முடிவடைகிறது. முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர்கள் அனைவரும் இந்த கருத்து கணிப்பில் தவறாமல் பங்கேற்று பிடித்தமானவர்களுக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 
எக்ஸ்பிரஸ் நடத்தி வரும் கருத்து கணிப்பில் (11-01-2014) இன்றைய நிலவரப்படி மாலை 4:30 மணி வரை  SDPI கட்சியின் அபூபக்கர் சித்திக் 54% சதவிகிதம் பெற்று 88 புள்ளிகளுடன்    முதலிடத்திலும், பா.ஜ.க. வின் பேட்டை சிவா 35% சசதவிகிதம் பெற்று 57 புள்ளிகளுடன்   இரண்டாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

எக்ஸ்பிரஸ் கருத்து கணிப்பில் இன்றைய நிலவரம் :முன்னிலையில் SDPI :இரண்டாம் நிலையில் பாஜக 

முத்துப்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப வேண்டும், பேரூராட்சிக்கு தமுமுக கோரிக்கை.முத்துப்பேட்டை, ஜனவரி 10: மன்னார்குடி போன்ற முத்துப்பேட்டையிலும் ஆகிரமப்புகளை அகற்றி குளங்களில் தண்ணீர் நிரப்ப பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுக கோரிக்கை விடுத்துள்ளது. முத்துப்பேட்டை தமுமுக நகரத்தலைவர் நெய்னா முஹம்மது முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்ற சில தினங்களுக்கு முன்பு முத்துப்பேட்டை பேரூராட்சி கூட்டத்தில் 9 வது வார்டு கவுன்சிலர் பேட்டை சாலையில் 5 வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் 13 வது வார்டு கவுன்சிலர் அந்த பேட்டை சாலை குண்டும் குழியுமாக ஆகி சேதமாகி உள்ளது. சீர் செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் பேசியுள்ளார். இது வரவேற்கத்தக்கது பேட்டை சாலை தற்பொழுது உள்ள நிலையை பார்க்கும் பொழுது அந்த சாலை தேவை இல்லை என்று தான் தோன்றுகிறது. காரணம் மக்களும், வாகனங்களும் செல்ல முடியாமல் படு மோசமாக உள்ளது. அதனை பேரூராட்சி நிர்வாகம் கவனத்திற்கு எடுத்து சீர் செய்யவேண்டும். சமீபத்தில் மன்னார்குடி நகராட்சி வறண்டு போன குளத்தை ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்கால் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குளத்தை நிரப்பிய செய்தியை நாம் தெரிந்தோம். நகராட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை மிகவும் வரவேற்க்கத்தக்கது. 

அது போல முத்துப்பேட்டையிலும் பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிப்பு களால் தூர்ந்தும் பல குளங்கள் தண்ணீர் வரமுயாத நிலையிலும் உள்ளது. உடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி நகரில் உள்ள குளங்களில் தண்ணீர் நிரப்ப பேரூராட்சி கடமை உணர்வுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டறை குளத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு பயன் அளிக்காத வகையில் பல லட்சம் மன்றத் தலைவரால் செலவு செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு தேவையற்ற செயலாகும். இதற்க்கு செலவிடப்படும் பணத்தை தூர்ந்துள்ள வாய்க்கால்களை தூர்வாரி நிலத்தடி நீரை சேமித்து முத்துப்பேட்டை நகரத்தில் நீர் ஆதாரம் கிடைக்க பேரூராட்சி முன்வர வேண்டும் இவ்வாறு கோரிக்கை மனுவில் நெய்னா முஹம்மது கூறியுள்ளார். 

இப்படிக்கு: நகரத் தலைவர் நெய்னா முஹம்மது. 

நமது நிருபர்: AKL அப்துல் ரஹ்மான். 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)