முக்கியச் செய்தி

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம்: போப் ஆண்டவர் அறிவிப்பு...


அமெரிக்கா, பிப்ரவரி 28 : உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் தான் என்று போப் ஆண்டவர் (பாப்பரசர்) விடுத்துள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி வத்திக்கான் என்ற இணையத்தளம் செய்தி ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் உலகில் அதிகம் பரவி வரும் மார்க்கங்களில் இஸ்லாம் தான் முன்னிலை வகிப்பதாகவும், கிருஸ்தவ மத நம்பிக்கையாலர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளார்கள் என்றும், உலக அளவிலான மக்கள் தொகையில் நூற்றில் 17 .5 சதவீதத்தினர் கிறிஸ்தவர்கள் என்றால் அதில் 19 சதவீதத்தினர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். வருடத்திற்கு சுமார் 40 ஆயிரம் பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும், கிறிஸ்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதியில் தங்களை இஸ்லாத்தில் இணைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்றும் அப்போது அவர் தெரிவித்துள்ளார்.
source from: www.muthupettaixpress.com, www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டையில் கேஸ் தட்டுப்பாட்டை தடுக்க SDPI - யின் நகரக் கூட்டம்..

முத்துப்பேட்டை, பிப்ரவரி 28 : முத்துப்பேட்டையில் SDPI சார்பில் நகரக்கூட்டம் இன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இக்கட்சியின் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா அவர்கள் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிரூபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த முத்துப்பேட்டை SDPI - யின் நகர தலைவர் ஜனாப். ரஹ்மத்துல்லாஹ் அவர்கள், முத்துப்பேட்டையில் நிலவிவரும் கேஸ் தட்டுப்பாடு குறித்தும், மேலும் ரேசன் கடையில் சரியான முறையில் பொருட்களை கொடுபத்தில்லை என்றும் அவ்வாறு கொடுக்கும் போது கொடுக்கப்படும் பொருட்களின் இடையை குறைத்தும் கொடுப்பதை தடுத்து நிறுத்தவும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ரேசன் கடையில் பொருட்கள் கொடுக்கும் போது உரியவர் வந்து கையெழுத்து போட வேண்டும் என்பதை தடுத்து நிறுத்த தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜனாப். பாவா பகுருதீன், நகர செயலாளர் முஹம்மது முஹைதீன், துணைச் செயலாளர் நிஜாம், நகர செயற்குழு உறுப்பினர் நிசார் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் O .M . சுபைத் கான்.B .Tech தாவூத் கான் DCT .

முத்துப்பேட்டை தர்ஹாவின் அடிப்படை வசதிகளை அரசு உடனே துவக்க வேண்டும்முத்துப்பேட்டை, பிப்ரவரி 28 : முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்ஹா கந்தூரி விழாக்கான அடிப்படை வசதிகளின் பணிகளை அரசு முன்கூட்டியே துவக்கப்பட வேண்டும் என்று தர்ஹா டிரஸ்டி ஜனாப். SS .பாக்கர் அலி சாஹிப் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முத்துப்பேட்டை தர்ஹாவின் முதன்மை டிரஸ்டி ஜனாப். SS .பாக்கர் அலி சாஹிப் அவர்கள், முத்துப்பேட்டையில் உள்ள செகுதாவூது தர்ஹா சுமார் ஆயிரம் ஆண்டை கடந்த வரலாற்று மிக்க தர்ஹாவாக காணப்படுவது மிகவும் சந்தோசமாக இருக்கின்றது என்றும், இந்த தர்ஹாவை காண வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்லும் ஓர் சிறந்த இடம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வர் அவர்கள் தமிழ் நாட்டிலேயே எந்த ஓர் தர்ஹாவிர்க்கும் செய்யாத பல லட்சம் ரூபாய் செலவில் பக்கதர்கள் நிறுத்தும் வாகனகளுக்கு தனியிடம் அமைக்க நிதி தந்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த தர்ஹாவின் 710 ஆம் ஆண்டு கந்தூரி விழா வருகிற மார்ச் 24 ஆம் தேதி துவங்கப்பட உள்ளது என்றும், எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் , அடிப்படை வசதிகளான சுகாதாரம், தூய்மையான குடிநீர், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருத்தல், தடை இல்லா மின்சாரம், தெருவிளக்குகள், இவைகளை சீரமைத்து தர வேண்டும் என்று தனது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.
source from: www.muthupettaixpress.com, www.mttepxress.com
நமது நிருபர்

O.M. சுபைத் கான், B . Tech , அப்துல் அஜீஸ் B . Tech

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)