முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் இந்துக்கள் நடத்திய இப்தார் நிகழ்ச்சி- ஆத்மநாதன், வீரசேகரன் ஆகியோரின் மனிதநேயம்!!!


















முத்துப்பேட்டை, ஜூலை 29: முத்துப்பேட்டையில் உள்ள கொய்யா மஹாலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசியல் கட்சியை சார்தவர்கள் தற்பொழுது நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஒரு வணிக நிகழ்ச்சியாகவும், முஸ்லிம்களை ஏமாற்றும் நிகழ்ச்சியாகவும் நடத்தி வரும் இந்த சூழ்நிலையில்,  இந்து மதத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் சேர்ந்து இஸ்லாமியர்களுக்காக இப்தார் நிகழ்ச்சி நடத்தியிருப்பது மனித நேயத்தையும், மத நல்லிணக்கத்தையும் பறைசாற்றும் வகையில்இருந்தது .

முத்துப்பேட்டை ஜாம்புவோனோடையை சேர்ந்தவர் நடுப்பண்ணை என்கிற ஆத்மநான். அதே போல் உப்பூரை சேர்ந்தவர் வீரசேகரன் ஆகிய இருவரும் கடந்த மூன்று வருடங்களாக மனித நேயத்தை பறைசாற்றும் வகையில் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்களுக்கு தனது சொந்த செலவில் இஃப்தார் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். மூன்றாவது வருடமான இப்தார் நிகழ்ச்சி நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது .

முன்னதாக தமிழக மனித உரிமை கழகத்தின் மாநிலத்தலைவர் கவிஞர் G. பஷீர் அஹமது அவர்கள் "இஸ்லாமும் மனித நேயமும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் இதில் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஜமாத்தார்களும், இளைஞர்களும், பெரியோர்களும் பாகுபாடின்றி திறந்த மனதுடன் திரளாக வந்து கலந்து கொண்டனர். சரியாக 6:40 மணியளவில் கொய்யா மகாலில் உள்ள முதல் தளத்தில் அமர்ந்திருந்த அனைவரும் நோன்பு திறப்பதற்காக கீழ்த்தளத்தை நோக்கி சென்றனர்.

 கீழ்தளத்தில் நோன்பாளிகள் நோன்பு திறப்பதற்காக பேரிதம்பழம் , நோன்பு கஞ்சி, கடல் பாசி, கேசரி, சமூசா, போன்ற உணவுப்பொருட்கள் வரிசையாக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. நோன்பு திறந்தவுடன் இங்கு மக்ரிப் தொழுகையும் நடைபெற்றது. அதன் பின்பு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களான ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன்  ஆகியோரை அனைவரும்  மனமார வாழ்த்தி ஆர தழுவி இருவரையும் இறைவனிடத்தில் பிரார்த்தனை  செய்ததாகவும் கூறினார்கள். 

இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன் ஆகிய இருவரும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு கூட்டாக அளித்த பேட்டி பின்வருமாறு: 

எங்களுக்கு இந்து நண்பர்களைவிட இஸ்லாமிய நண்பர்கள் தான் அதிகம் என்றும், நான் வசித்து வரும் ஜாம்புவோனோடை பகுதியில் ஒரு சிலர் மத துவேசத்துடன் நடந்து கொள்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் மன வேதனையாக இருக்கிறது என்றும், நாம் அனைவரும் ஓர் தாய் மக்கள் என்றும், அவர் தெரிவித்தார். மேலும் பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் அவர்களுக்கு பாலூட்டி வளத்தவர் ஓர் இஸ்லாமிய தாய் ஆய்ஷா பேகம் என்பதை நாங்கள் இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். என் அன்பான அழைப்பை ஏற்று அனைத்து இஸ்லாமியர்களும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.மாற்று மத சகோதர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் நிகழ்ச்சியில் சுமார் 500 இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .


நேரடி களத்தொகுப்பு :ஜே:ஷேக் பரீத் 

27 comments:

  1.  ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன்  அவர்கள் இன்னும்பல ஆண்டுகள் மனிதநேயத்தோடு இருக்க என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மாஸா அல்லாஹ்....

    இஃப்தார் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.

    'யார் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்க வைக்கிறாரோ அவருக்கும் அந்த நோன்பாளிக்கு கிடைக்கும் நன்மையளவு நன்மை உண்டு' என நபி (ஸல்) அவர்கள் கூறினாhகள். (நூல்கள்: அஹ்மது, திர்மிதி, இப்னுமாஜா, தாரமி)

    ReplyDelete
  3. இஃப்தார் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.

    'யார் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்க வைக்கிறாரோ அவருக்கும் அந்த நோன்பாளிக்கு கிடைக்கும் நன்மையளவு நன்மை உண்டு' என நபி (ஸல்) அவர்கள் கூறினாhகள். (நூல்கள்: அஹ்மது, திர்மிதி, இப்னுமாஜா, தாரமி)

    ReplyDelete
  4. Thanks for admanathan and veerasekaram, every body learn for that type of human being ,

    ReplyDelete
  5. Thanks for admanathan and veerasekaram, every body learn for that type of human being ,

    ReplyDelete
  6. Thanks for admanathan and veerasekaran , all brothers think about same human being , muthupet is great city in India

    ReplyDelete
  7. முத்துப்பேட்டை ஓர் சென்சிடிவ் பகுதியாக இருந்தாலும், மனித நேயத்தை மதிக்கும் சில நபர்களும் வாழ்ந்துவருகிறார்கள் என்பதை பார்க்கும் போதும் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. இவர்களின் இந்த பற்று இறுதி வரை நிலைத்திருக்க வேண்டும்.....

    ReplyDelete

  8. முத்துப்பேட்டையில் எத்துணையோ மதவாத சக்திகள் இருந்தாலும் அவர்களுக்கு செருப்படி கொடுத்த இந்த அன்பு சகோதர்கள் வாழ்க பல்லாண்டு

    ReplyDelete
  9. சகோதரர்கள் ஆத்மநாதன் உப்பூர் வீரசேகரன் மனிதநேயத்தை பாராட்டுகிறேன்,
    இருவரும் பல்லாண்டு சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  10. சகோதரர்கள் ஆத்மநாதன் உப்பூர் வீரசேகரன் மனிதநேயத்தை பாராட்டுகிறேன்,
    இருவரும் பல்லாண்டு சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  11. சகோதரர்கள் ஆத்மநாதன் உப்பூர் வீரசேகரன் மனிதநேயத்தை பாராட்டுகிறேன்,
    இருவரும் பல்லாண்டு சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete




  12. லண்டனில் வாழ்ந்து வந்தாலும் அன்றாடம் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் பார்த்தல் ஊரில் இருப்பது போல் தோற்றம்... Very Very Thanks for MUTHUPETTAIEXPRESS.com

    ReplyDelete
  13. சகோதரர்கள் ஆத்மநாதன் உப்பூர் வீரசேகரன் மனிதநேயத்தை பாராட்டுகிறேன்,
    தம்பி இலியாஸ் தொடர்ப்பு கொள்ளுங்க kaleelfly@gmail.com

    ReplyDelete
  14. சகோதரர்கள் ஜாம்புவோனோடை ஆத்மநாதன் & உப்பூர் வீரசேகரன் இருவருக்கும் எனது உளம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவர்கள் மனிதநேயத்துக்கும் மத நல்லிணக்கத்துக்கும் நம்மிடையே வாழும் உதாரணங்கள். இவர்கள் இருவருக்கும் இறைவன் ஹிதாயத் வழங்கி பேரருள் புரிய பிரார்த்திக்கிறேன்.

    யாரைக்கூப்பிட்டு யார் இஃப்தார் பார்ட்டி வைக்க வேண்டும்... யாரிடம் இருந்து யார் இஃப்தார் பார்ட்டியை ஏற்க வேண்டும் என்கிற பாடத்தை சிறப்பாக நடத்திய இவர்களிடம் நம்ம ஊர் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு இஃப்தார் மூலமாக சொம்பு தூக்கும் முஸ்லிம்களும் பாடம் படிக்கட்டும்.

    ReplyDelete
  15. மாஸா அல்லாஹ்

    இஃப்தார் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.

    'யார் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்க வைக்கிறாரோ அவருக்கும் அந்த நோன்பாளிக்கு கிடைக்கும் நன்மையளவு நன்மை உண்டு' என நபி (ஸல்) அவர்கள் கூறினாhகள். (நூல்கள்: அஹ்மது, திர்மிதி, இப்னுமாஜா, தாரமி)

    ReplyDelete
  16. மாஸா அல்லாஹ்....

    இஃப்தார் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.

    'யார் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்க வைக்கிறாரோ அவருக்கும் அந்த நோன்பாளிக்கு கிடைக்கும் நன்மையளவு நன்மை உண்டு' என நபி (ஸல்) அவர்கள் கூறினாhகள். (நூல்கள்: அஹ்மது, திர்மிதி, இப்னுமாஜா, தாரமி)

    ReplyDelete
  17. Good comment thanks to all

    ReplyDelete
  18. சகோதரர்கள் ஆத்மநாதன் உப்பூர் வீரசேகரன் மனிதநேயத்தை பாராட்டுகிறேன் உங்களை போன்ற நல் உள்ளங்கள் நாட்டில் இருக்கும் போது இந்த நாடும் நாட்டு மக்களும் சகோதரத்துவத்தோடு செழிப்பாக இருப்பார்கள். ஆனால் BJP,RSS போன்ற மத வாத சக்திகள் நாட்டையும் நட்டு மக்கள் இடைய பிரிவினையை உண்டு பண்ணி இந்தநாட்டையும் நாட்டு மக்களை அழித்துவிடுவார்கள்......... மேலும் இன்று போல் என்றும் நாம் ஒற்றுமையுடன் வாழ வல்லவன் ரஹ்மான் அருள் புரிவனாக ஆமீன்........

    ReplyDelete
  19. Excellent Mr.Athmanathan, jambai & Mr.Veerasekaran, uppur. Royal salute.

    ReplyDelete
  20. Excellent Mr.Athmanathan, Jambai& Mr.Veerasekaran, Uppur. This is the real mankind. Once again hats off to you.

    ReplyDelete
  21. அல்ஹம்துலில்லாஹ் இதை பார்த்து படிக்கும் போதே ஏதோ செய்வரியாது மணதிணுள் ஒரு புத்துணர்ச்சியும் எண்ணை அரியாது கண்கலிருந்து கண்ணீரும் வெளியாகிறது. மத நல்லிணத்தை எந்த ஒரு அரசியல் அல்லது லாபம் தரும் நோக்கமல்லாது சிரப்பாக செய்த அந்த இரு சகோதரர்களுக்கு எண் மணமார்ந்த வாழ்த்துக்கள்.

    காவிகளுக்கு இது ஒரு மாபெரும் சருக்கு.



    முத்துபேட்டை சகோதரர்களுக்கு எண் நெஞ்சாந்த வாழ்த்துக்கள்.
    இவண்.
    அதிரை முகமது ஷாபி.

    ReplyDelete
  22. முத்துபேட்டையில் இதுபோல் ஒரு மத நல்லிணக்க நிகழ்ச்சியா? அதுவும் இரு மாற்று மத சகோதர்களால் நடத்தபட்டதா?, மேலும் மூன்று வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறதா ?..நம்ப முடியவில்லை.

    அரசியல் அமைப்புகளாலும், இயக்கங்களாலும் வெறும் அலங்காரத்திற்காக செய்யும் இஃப்தார் நிகழ்ச்சியே விட இதுபோன்றவற்றில் தான் உண்மையான மதநல்லிணக்கம் உள்ளது.

    உங்கள் இருவருக்கும் மற்றும் மதநல்லிணக்கம் விரும்பும் அனைத்து மத சகோரதர்களுக்கும், அனைத்து பிணிகளும் நீங்கி, உங்கள்/உங்களின் குடும்பத்தார்களின் உடல் நலம் மற்றும் வியாபாரம் சிறக்க இப்புனித ரமலான் மாதத்தில் அணைத்து மக்களுக்கும் பொதுவான கடவுளிடம் வேண்டும் ஒரு மதநல்லிணக்கவாதி.

    முகைதீன்,
    தம்மாம்/சவுதி அரேபியா.

    ReplyDelete
  23. மாஷா அல்லாஹ்...
    அருமையான ஒரு நிகழ்வு.
    சகோதரர்கள் ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.....
    இந்த ஃஇப்தார் விருந்து மத நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு...
    இது போன்ற நிகழ்வுகள் தொய்வின்றி தொடர நாம் அனைவரும் மதங்களை மறந்து மனிதர்களாக ஒன்றிணைவோம்......


    ReplyDelete
  24. மாஷா அல்லாஹ்.....

    அருமையான ஒரு நிகழ்வு......

    மத நல்லிணக்கத்திற்கு மாபெரும் எடுத்துக்காட்டு.....
    இப்படி ஒரு சிறப்பான ஃஇப்தார் நிகழ்ச்சிக்கு வித்திட்ட சகோதரர்கள் ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன் ஆகியோருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....

    இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் மதங்களை வென்று மனிதர்களாக நாம் பிரகாசிப்போம்....

    ReplyDelete
  25. இந்நிகழ்வில் வெளிப்படுவது மத நல்லிணக்கத்தோடு கூடிய மனித நேயம்!
    இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம்தான் மதங்களை வென்று மனித நேயத்துடன் நாம் செயல் பட முடியும்!!
    நிகழ்ச்சிக்கு வித்திட்ட சகோதரர்கள் ஆத்மநாதன் மற்றும் உப்பூர் வீரசேகரன் ஆகியோருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்....
    --- அன்புடன் உங்கள் சகோதரன்:
    பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
    My BLOG: http://portonovocomputertech.blogspot.com/ (தொட்டு விடும் தூரம்)

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)