முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் நாளை கடை அடைப்பு மற்றும் கண்டன ஆர்பாட்டம்...


முத்துப்பேட்டை, ஜூன் 21: குவைத் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கும் முத்துப்பேட்டையை சேர்ந்த S. சுரேஷ் மற்றும் சித்தாம்பூர் C. காளிதாஸ் ஆகியவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி குவைத் அரசு விடுதலை செய்வதற்கு இந்திய அரசும், தமிழக அரசும் முயற்சி எடுக்க வலியுறுத்தி முத்துப்பேட்டையில் நாளை கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்பாட்டம் நடத்த வர்த்தகர்களும், வியாபாரிகளும், பொதுமக்களும் இப்போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். எனவே நாளை காலை சரியாக கடையடைப்பு 9 மணிமுதல் 12 மணிவரையும், இதன் தொடர்ச்சியாக சரியாக 10 மணியளவில் முத்துப்பேட்டை கஸ்டம்ஸ் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டமும் நடைபெற உள்ளது. 

தொகுப்பு:

AKLT . அப்துல் ரஹ்மான் 

உத்ரகாண்ட் பெரு வெள்ளம் தமிழக அரசுக்கு SDPI கோரிக்கை :


சென்னை, ஜூன் 21: எஸ்.டி.பி.ஐ கட்சியின்  மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அவர்கள் இதுதொடர்பாக இன்று  வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் :
உத்ரகாண்ட் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் பெரும் பாதிப்புகள்  ஏற்பட்டுள்ளன. குறிப்பாக உத்ரகாண்டில் மிகப்பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.  தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஆறுகளில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு பகுதிகளிலும்  நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
மத்திய மாநில அரசுகளின் வேகமான நிவாரணப் பணிகள் பாராட்டுக்குரியது. மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து  தேவையான நிதியுதவிகளை அறிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.  மழைக்காலங்களுக்கு முன்பாகவே முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொள்வது சேதங்களை  தடுக்க உதவும் என்பதை உணர்ந்து  செயல்பட வேண்டும் என மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். உயிரிழந்தோர் மற்றும்  உடமைகளை இழந்தோருக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தை  சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உத்ரகாண்டில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை  மீட்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மௌத்து அறிவிப்பு: "ஹபிபுனிஷா"


முத்துப்பேட்டை ஜூன் 21: முத்துப்பேட்டை SPKM தோட்ட வளாகம் P .M .காதர் முஹைதீன் DCTO, அவர்களின் மகளும், மதுக்கூர் M .யூசுப் (CROWN EXCHANGE -SINGAPORE) அவர்களின் மனைவியும், பஷீர், யாசர் ஆகியோர்களின் மாமியாருமாகிய "ஹபிபுனிஷா" அவர்கள், இன்று அதிகாலை மௌத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5.30 மணியளவில் முஹையதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


அறிவிப்பவர்:

P .M .காதர் முஹைதீன் DCTO ..+91 94435 89431.

நன்றி: ரஷித் அலி - முத்துபேட்டை.




தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)