அமெரிக்கா, பிப்ரவரி 28/2016: பூமிக்கு தென்படாத நிலவின் மறுபக்கத்தில் இசை போன்ற விண்வெளி ஓசையை 1969 ஆம் ஆண்டு அந்த பகுதியை கடந்து சென்ற விண்வெளி வீரர்கள் கேட்டிருப்பது தற்போது வெளியாகியுள்ளது.
நிலவில் முதல் முறை தரையிறங்கிய அப்பலோ 11 விண்கலத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரான அப்பலோ 10 விண்வெளி பயணத்திலேயே இந்த மர்மமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அசாதாரண ஒலி பற்றி அதனைக் கேட்ட விண்வெளி வீரர்களின் உரையாடலே தற்போது வெளியாகியுள்ளது. இது வரை காலமும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த சம்பவம் சயன்ஸ் சன்னல் நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளது.
‘நாஸாவின்...