
முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை ORG என்ற இணையத்தளத்தின் நிருபரும், சிறந்த சமூக சேவகருமான சகோதரர் அபு ஆஃப்ரீன் என்கிற ரஃபீக் ஜக்கரியா அவர்கள் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சென்னையில் உள்ள ஓர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சகோதரர் அபு ஆஃப்ரீன் அவர்களுக்கு விரைவில் பூரண குணமடைய வல்ல இறைவனிடம் அனைவரும் பிரார்த்திப்போம்.
இப்படிக்கு:
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்...

முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை கல்கெனி தெரு நூர் பள்ளிவாசல் அருகில் கருவைக்காடுகள் நிறைந்து காணப்பட்டன.மேலும் இரயில்வே தண்டவாளம் அருகில் குப்பை கூளமாக காட்சியளித்தது. மேலும் இன்னும் சில நாட்களில் ரமலான் மாதம் துவங்க இருப்பதால் பள்ளிவாசலுக்கு வரும் மக்களுக்கு சிரமமாக இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்ற முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் துப்புறவு பணியாளர்களை கொண்டு அப்பகுதிகளில் உள்ள கருவைக்காடுகளை...

முத்துப்பேட்டை, ஜூலை 08: யானையின் பலம் யானைக்கே தெரியாதாம் ஆனால் யானையின் உருவத்தை கண்டு அஞ்சாதவர்கள் யாருமில்லை. எனினும் நமது அருகாமையில் உள்ள நாடான இலங்கையில் யானைக்கு என தனியாக ஆசிரமம் வைத்து அவற்றை பாதுகாத்தும், கெளரவ படுத்தியும் வருகிறார்கள்.
நமது நாட்டில் மிருகவதை சட்டம் அமல் படுத்தப்பட்ட நிலையில் நமதூர் முத்துப்பேட்டையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக வந்த தனியாருக்கு சொந்தமான யானையை வைத்து முத்துப்பேட்டை...

முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை செம்படவான்காடு பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் மகள் பாகாம்பிரியாள் (20) இவர் தஞ்சாவூர் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் குளிப்பதற்காக அருகே உள்ள குளத்திற்கு சென்றபோது 6 இளைஞர்கள் பாகாம்பிரியாளை கிண்டல் செய்துள்ளனர்.
உடனே பாகாம்பிரியாள் இளைஞர்களை தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் பாகாம்பிரியாளை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்....

முத்துப்பேட்டை, ஜூலை 08: முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவான் ஓடையை சேர்ந்தவர் வெற்றி (35). இவர் திருவாரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை செயலாளராக இருந்து வருகிறார். நேற்று இரவு இவர் மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டைக்கு பொருட்கள் வாங்க வந்தார். பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே ஒரு கார் வந்தது. அந்த கார் திடீரென வெற்றி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார்.
அந்த...