முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை பகுதியில் மது பாட்டில்களை கடத்திய மூவர் கைது!


முத்துப்பேட்டை,அக்டோபர் 31 : திருவாரூர் மாவட்டம் போலிஸ் சூப்பிரண்டு திரு.சேவியர் தன்ராஜ் அவர்களின் உத்திரவின் பேரிலும், மாவட்ட மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ராஜேந்திரன் அவர்களின் மேற்பார்வையிலும், முத்துப்பேட்டை போலிஸ் துணை சூப்பிரண்டு திரு.கோபி அவர்கள் தலைமையில் எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ஆறுமுகம் மற்றும் போலீசார் திரு.பாண்டி ஆகியோர் சத்திரம் என்ற இடத்தில் சம்பவத்தன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருத்துறைப்பூண்டி பகுதியிலிருந்து முத்துப்பேட்டையை நோக்கி கார் ஒன்று வந்தது. சந்தேகத்தின் பேரில் காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தார்கள், அதில் விலை உயர்ந்த சாராயம் 7 கேன்களில் இருந்தது அப்போது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் அம்பாசிடர் கார் ஒன்று வந்தது அதனை நிறுத்தி சோதனை செய்தார்கள் அதில் 648 பிராந்தி பாட்டில்கள் அட்டை பெட்டியுடன் இருந்தது தெரியவந்தது. கைப்பற்ற பட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் 8 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதே இடத்தில் 15 நாட்களுக்கு முன்பு சோதனை செய்தபோது 6 கார்களும் 2 இரு சக்கர வாகனங்கள் மூலம் பிடிப்பட்ட மதுவின் மதிப்புகள் ௪௦ லட்சம் என்றும் ஆகா மொத்தம் இந்த பகுதியில் இதுவரை பிடிப்பட்ட மது பாட்டில்கள் சுமார் 50 லட்சம் மத்திபுகள் இருக்கும் என்று DSP திரு.கோபி தெரிவித்தார். இரண்டு வண்டிகளில் சாராயத்தை ஏற்றி வந்த காரைக்காலை சேர்ந்த ராமகிருஷ்ணன், கீழநம்மங்குரிட்சியை சேர்ந்த தண்டாயுதபாணி மற்றும் சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .
source from www.muthupettaiexpress.blogsot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்,அபு மர்வா.

முத்துப்பேட்டை ஒன்றியத்தையும் கைபற்றியது அ.தி.மு.க...





முத்துப்பேட்டை,அக்டோபர் 30: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த ஒன்றிய தேர்தலில் அ.தி.மு.க. கட்சி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் போட்டயிட்டனர் அப்போது அதிக படியான வாக்குகள் பெற்று அ.தி.மு.க. வின் ஒன்றிய செயலாளரும், வேட்பாலருமாகிய திரு.RKP .நடராஜன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார் . மேலும் துணைத் தலைவர் பதவிக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினரும்,வேட்பாலருமாகிய திரு.தெட்சனமூர்த்தி அவர்கள் வெற்றிபெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று கலை 10 மணியளவில் அவர்களுக்கு பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது. மேலும் அவர்களின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் கட்சியின் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து தன்னுடைய சந்தோசத்தை பரிமாறி கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.அபு மர்வா.

BJP கட்சி .அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? மதுரையில் அத்வானி பேட்டி!


மதுரை,அக்டோபர் 30 : ஊழலுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு யாத்திரையை BJP யின் மூத்த தலைவர் திரு.அத்வானி அவர்கள் மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளருக்கு பேட்டியளிக்கையில் தேர்தலுக்காகவோ அல்லது தனிப்பட்ட அத்வானிக்காகவோ இந்த யாத்திரையை தான் தொடங்கவில்லை என்றும்,தேசிய அளவில் மக்கள் நலன் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக இந்த யாத்திரை நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த நாட்டை ஆழ வேண்டும் என்று விரும்பும் எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், உண்மை நிலவரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மத்தியில் இனிமேல் கூட்டணி இல்லாமல் அரசு அமைப்பது நடக்காது. கண்டிப்பாக கூட்டணி கட்சி ஆட்சிதான் இனிவரும் காலங்களில் ஏற்படும் என்றும், தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி அமைப்பது குறித்து அலோசனை செய்யப்படும் என்றும், அதே போன்று தமிழகத்திலும் உரிய நேரம் வரும் போது கூட்டணி அமைப்பது குறித்து குடிவு எடுக்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தர்.
www.muthupettaiexpress.com
நமது நிருபர்

பாலா (ஆலங்காடு)

முத்துப்பேட்டை:பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு ஜனாப்.அப்துல் வஹாப் வெற்றி!




முத்துப்பேட்டை,அக்டோபர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜனாப்.அப்துல் வஹாப் அவர்கள் 13 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனாப்.நாசர் அவர்கள் 5 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். இதில் அனைத்து வார்டு வேட்பாளர்களும் கலந்து கொண்டு தங்களுடைய வாக்குகளை செலுத்தினார்கள்.

தொகுப்பு

ரிபோர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.அபு மர்வா

முத்துப்பேட்டை கொத்பா பள்ளியின் திறப்பு விழா தேதி மாற்றம்!













முத்துப்பேட்டை, அக்டோபர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மரைக்காயர் தெருவில் உள்ள கொத்பா பள்ளிவாசல் கடந்த சில வருடங்களாக கட்டப்பட்டு வருகின்றது. இந்த பள்ளி வாயில் வருகின்ற ஹிஜ்ரி - 1432 துல்ஹாஜ் மாதம் 7 ஆம் தேதி அன்று அதாவது ஆங்கில மாதத்தின் கணக்குப் படி 04 .11 .2011 ஆம் தேதியன்று திறப்பதாக பள்ளியின் நிர்வாகத்தினர் தெரிவித்தார்கள்.ஆனால் இந்த பள்ளிவாயில் திறப்பதற்கு 1 அல்லது 2 மாதங்களாகும் என்று பள்ளியின் நிர்வாகத்தினர் சென்ற (குட்டியார் பள்ளியில் நடைபெற்ற) ஜும்மாவில் தெரிவித்தார்கள். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரிடம் சென்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்கள், மேலே குறிப்பிட்ட தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும் என்ற அடிப்படையில் தான் நாங்கள் அந்த தேதியை தேர்வு செய்து வெளியிட்டோம் என்றும், ஆனால் இன்னும் கொஞ்சம் சிறிய வேலைகள் இருப்பதால் அவற்றை முழுமை படுத்தி திறந்தாள் மிக சிறப்பாக இருக்கும் என்று எண்ணி தேதியை மாற்றியுள்ளோம் என்றும், மேலும் பள்ளி திறப்பு விழாவின் தேதியை விரைவில் இன்ஷா அல்லாஹ் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

குறிப்பு: அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இன்னும் கொஞ்சம் வேலைகள் இருப்பதால் அவற்றிருக்கு நிதி உதவிகளை வழங்கி அல்லாஹ்வின் பேரருளை பெறுங்கள்.
source from www.muthupettaiexpress.blogspot.com,www.muthupettaiexpress.com
மேலும் தொடர்புக்கு:

MKN. MOHAMED MOHAIDEEN,
IOB BANK, A/C,NO: 3456,
MUTHUPETTAI BRANCH,
MOBILE NUMBER: +0091 - 94871 03980.

இப்படிக்கு கொத்பா பள்ளி நிர்வாகம்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK . முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டையில் 110 KV மின்சாரம் விரைவில் அமைக்கப்படும் திரு.கோ.அருணாசலம்.





முத்துப்பேட்டை,அக்டோபர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட திரு.கோ.அருணாசலம் அவர்கள் 2328 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் அவர் தனது பொறுப்பை ஏற்று பதவியில் அமர்ந்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று பெற்றி பெற்றதின் மூலம் முத்துப்பேட்டை மக்களுக்கு என்ன செய்ய உள்ளீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, பின்னர் பதிலளித்த அவர், கட்சிக்கும், கட்சிக்கு அப்பாற்பட்ட பொது மக்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் தான் நான் வெற்றி பெற்றுள்ளேன் என்றும்,அந்த நம்மிக்கைக்கு பாத்திரமாக நான் கொடுத்த தேர்தல் வாக்குரிதியின் விளம்பரம் செய்த நோட்டிசில் கண்டுள்ளபடியும் அதற்கு மேல் அரசால் வழங்கப்பட இருக்கின்ற பல்வேறு நல திட்டங்களும், இன்று முத்துப்பேட்டை பகுதியை ஆளுகின்ற இயக்கத்திருக்கு சொந்தமாக இருக்கின்ற தலைவர் என்ற அடிப்படையில் பல்வேறு நல திட்டங்களை கொண்டு வந்து முத்துப்பேட்டையை தமிழகத்திலேயே பட்டி தொட்டில்கலெலாம் பேசபடுகின்ற அளவிற்கு தான் செயல் படுவேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் கட்சி அமைந்தவுடன் அரசுக்கும், துறைசார்ந்த அமைச்சர்களுக்கும், மாவட்ட செயலாளர் மூலமாக கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் 85 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு நீர் தேக்கத் தொட்டி கட்டுவதெற்கு அவற்றை விரைவில் செயல் படுத்த போவதாகவும் அப்போது அவர் தெருவித்தார். மேலும் மருதன்காவெளி, செம்படவன்காடு ஆகிய பகுதிகளில் தனி தனி ஓவர் டாங் கட்டி தடையற்ற குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், முத்துப்பேட்டையில் நிரந்தரமாக தடையற்ற மின்சாரம் கிடைக்க 110 KV டிரான்ஸ்பார்மர் வைக்க வேலைகள் துவங்கப்பட உள்ளது என்றும், பாதாள சாக்கடை திட்டத்திற்கு மன்னார்குடி குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை இன்னும் 1 மாதத்திற்குள் பணிகள் முடிவுற்று 24 மணிநேரமும் பயன்பாட்டில் இருக்கும் விதமாக அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாகவும், அவர் தெருவித்தார்.மேலும் இதய தெய்வ புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் முத்துப்பேட்டையை முன்மாதிரி நகரமாக மாற்றி காட்டுவேன் என உறுதிபட கூறினார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிபோர்ட்டர் இல்யாஸ்,EK .முனவ்வர் கான்,ASNS .அப்துல் பாரி.

முத்துப்பேட்டையில் வீடு இடிந்து விழுந்ததில் சிக்கிய கொத்தனார் கவலைக்கிடம்!






முத்துப்பேட்டை,அக்டோபர் 28 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை குட்டியார் பள்ளி தெருவில் ஷபீகா ஜிவல்லரி உரிமையாளர் ஜனாப்.ஹாஜமைதீன் அவர்கள் தனது குட்டியார் பள்ளி வாசல் எதிர்புறத்தில் உள்ள அவரது வீட்டை இடித்து புது வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் அப்போது கொத்தனார் வேலைகள் மும்புரமாக நடைபெற்று வந்த நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள மது சுவர் தீடிரென்று இடிந்து பணியாட்கள் மேலே விழுந்தது. இது குறித்து முத்துப்பேட்டை தீயணைப்பு துறைனருக்கு தகவல் தெருவிக்கப் பட்டன . தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.கு.வாசு, திரு.ராஜேந்திரன் மற்றும் பணியாட்களுடன் உடனே வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடத்தில் பணியாற்றிய திருமதி.நாடிமுத்து வயது 35 , தமிழரசு வயது 28 , திரு சுரேஷ் வயது 30 ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமையில் சேர்க்கப்பட்டனர். அதில் சுரேஷ் என்பவரது கை துண்டாகியதால், அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்த உடனே முத்துப்பேட்டையின் பேரூராட்சி தலைவர் திரு.கோ.அருணாச்சலம் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு இதை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றார்,உடன் அ.தி.மு.க.நகர துணைத் செயலாளர் ஜனாப்.முஹம்மது முஹைதீன் அவர்கள் உடனிருந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி.EK .முனவ்வர் கான்.

முத்துப்பேட்டையில் SDPI கட்சியினர் நேற்று மக்களுக்கு நன்றி தெருவித்தனர்.





முத்துப்பேட்டை,அக்டோபர் 28 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜனாப்.அபூபக்கர் சித்திக் அவர்களுக்கு 1927 வாக்குகள் அளித்தமைக்கு தனது நன்றியை முத்துப்பேட்டை மக்களுக்கு தெருவிக்கும் விதம் நேற்று நன்றி தெருவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருதங்காவெலி, வெள்ளைக்குலத்தான்கரை, பேட்டை, தெற்குத் தெரு, மரைக்காயர் தெரு, பழைய பேருந்து நிலையம், ஆசாத் நகர், புது காளியம்மன் கோவில் தெரு, செம்படவான் காடு, ஆ,நே,பள்ளி, மேலும் அனைத்து இடங்களிலும் உள்ள வார்டு மக்களுக்கு தனது நன்றியை அப்போது அவர் தெருவித்தார். இதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய SDPI யின் மாநில செயலாளரும், வேட்பாலருமாகிய ஜனாப்.அபூபக்கர் சித்திக் அவர்கள், அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவு நீர் வசதிகளை சீர் செய்யும் பணிகள் உடனே நிறைவேற்றி தரப்படும் என்றும், அரசு ஆண்கள், பெண்கள் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறைகளை சரிசெய்து மாணவர்களின் அடிப்படை வசதிகளான கழிவறை மற்றும் மாற்று குடிநீர் ஆகியவை கிடைக்க செய்து மேலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்வியில் ஒழி ஏற்றுவதற்காக முறையான பேரூராட்சி நிர்வாகத்தினரை அணுகுவதெனவும், A,B,C சொத்து வரி விதிப்பு இருக்கக்கூடிய முறைகேடுகளை களைந்து தமிழக அரசு ஆணையின் அடிப்படையில் ABC மண்டல பிரிவை அமல்படுத்த முயற்ச்சி செய்வோம் என்றும், இப்படிப்பட்ட பல்வேறு முறைகேடுகளை களைந்து சரியான ரீதியில் மக்களுடைய தேவைகளை நிறைவேற்ற அரப்போராட்டங்கள் மூலம் மக்கள் பணியாற்றுவோம் என்றும்,ஒருகால் பேரூராட்சி நிர்வாகம் கவன குறைவு மற்றும் அலட்சியமாக செயல்படும் பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி அரப் போராட்டங்களின் மூலமாக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவோம் என்றும் அப்போது அவர் உரைநிகள்தினார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

Riporter Ilyas, ASNS. Abdul Bari, EK. Munavar Khan, Abu Marvaa

முத்துப்பேட்டையில் கேட்பாரற்று கிடக்கும் பட்டறைக் குளம்? ஓர் பார்வை:






முத்துப்பேட்டை,அக்டோபர் 28 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையின் நகரத்தின் இதயம் போன்ற பகுதியில் அமைந்துள்ளதுதான் பட்டறைக்குலம். கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், தலித் ஆகிய அனைத்து தரப்பு மக்களும் பயன்பட்டு வந்தன. இதில் ஆண்,பெண் ஆகிய இருபாலரும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர். இந்த பட்டறைக்குலம் முத்துப்பேட்டை மக்களின் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றி வந்தது. இதன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியின் (selection grade panjayath) பேரூராட்சியின் அலட்சியப் போக்கால் சீரழிந்து சின்னாபின்னமாகி சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டு விட்டது. இதற்க்கு மிக முக்கிய காரணம் அக்குளத்தில் உள்ள ஓரங்களில் அமைந்துள்ள கடைகள் யாவும் தங்களுடைய கழிவுநீர்களை மேற்படி குளத்திலே விடுகிறார்கள். மேலும் இந்த குளக்கரையில் குடியிருப்பவர்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை பார்க்கும் போது மிக வேதனையான ஒரு விசயமாக இருக்கின்றது. இந்த விஷயம் குறித்து பலமுறை முத்துப்பேட்டை பேரூராட்சிக்கும், பொது பணித்துரைக்கும் தகவல் தெருவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 1 ஆண்டுக்கு முன்பு இந்த குளத்தை முறையாக தூறு வாரியும், சுத்தம் செய்தும் தர வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் பொது பணித்துரையால் முத்துப்பேட்டை பஞ்சாயத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரைக்கும் எந்த பணிகளும் தொடங்கவில்லை என்றும் இந்த பணிக்ககாக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போனது என்று முத்துப்பேட்டை மக்களின் மத்தியில் ஒரு கேள்விக்குறியாகத்தான் இன்றுவரையும் இருந்து வருகிறது. மேலும் முத்துப்பேட்டை மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருவாரூர் மாவட்ட நிர்வாகம் இதனை தூர்வாரி, சுத்தம் செய்து மேலும் ஆக்கிரமிப்புகளை நீக்கி மீண்டும் மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே முத்துப்பேட்டை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. பொறுத்திருந்து பாப்போம் இவர்கள் பொது மக்களை மதிப்பார்களா என்று?
source from muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்,அபு மர்வா


நன்றி - EK .அப்துல் அஜீஸ்

முத்துப்பேட்டையில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை..








முத்துப்பேட்டை,அக்டோபர் 26 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மிக சிறப்பாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டன. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் மக்களிடம் சென்று இது குறித்து கேட்டார். பின்னர் பதிலளித்த அவர்கள், அம்மாவாசை என்பதால் இன்று அனைவரும் காலை 5 மணியளவில் எழுந்து என்னை தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, மங்களம் வாத்தியம் பாடி, பட்டாசுகளை வெடித்து, பலகாரம் இனிப்புகளை சாமிக்கு படைத்தது அனைத்து உறவினர்களுக்கும் பறுமாரிய சம்பவம் மிக சிறப்பாக இருந்தது என்றும், மேலும் இன்று தீபாவளி மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர்கள் தெருவித்தார்கள். மேலும் முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து மக்களுக்கும் மற்றும் வெளி நாடுகளில் வசிக்கும் முத்துப்பேட்டை நண்பர்களுக்கும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் மூலம் தங்களுடைய தீபாவளி நல்வாத்துக்களை தெருவித்துக்கொண்டார்கள். இதில் சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்,பெண், ஆகிய ஆனைவரும் தங்களுடைய குடுபத்தோடு பட்டாசுகளை வெடித்து சிறப்பாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். மேலும் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு முத்துப்பேட்டையில் அதிகமாக பட்டாசுகள் விற்பனை செய்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெருவித்தார்கள்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், AKL .அப்துல் ரஹ்மான்,ASNS.அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்.

முத்துப்பேட்டை:பேரூராட்சி தேர்தலில் பணம் பலம்தான் வெற்றிபெற்றது! SDPI தகவல்!




முத்துப்பேட்டை,அக்டோபர் 24 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க கட்சி பணம் பலத்தைக் கொண்டு வெற்றிபெற்றுள்ளது என்று SDPI - யின் மாநில செயலாளரும், வேட்பாலருமாகிய சித்திக் மச்சன் என்கிற திரு. அபூபக்கர் சித்திக் அவர்கள் இதனைத் தெருவித்தார்.

இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், முத்துப்பேட்டையில் நடைபெற்ற பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எனக்கு 1927 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு உயர்த்தி தந்த அனைத்து முத்துப்பேட்டை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெருவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெருவித்தார். மேலும் இத்தனை வாக்குகளை பெறுவது என்பது ஒரு சாதாரண விசயம்மல்ல என்றும், இந்த வெற்றிக்காக உழைத்த அனைத்து சமுதாய மக்கள்களுக்கும், வெளிநாட்டுவாழ் நண்பர்களுக்கும் எனது மணமார்ந்த நன்றியையும் சலாத்தையும் தெருவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெருவித்தார். 

இந்த தேர்தலில் மக்களின் ஒரு மித்த கருத்தை ஏற்படுத்துவதற்கு SDPI கட்சியானது பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொள்ளப்பட்டது என்றும், அவற்றில் சிலவற்றை நான் இங்கு நினைவு படுத்த கடமைப்பட்டுள்ளேன் என்றும், அதில் சாதாரண பெட்டிக் கடை வைத்திருப்பவர்களிலிருந்து, பெரிய மளிகை கடை வைத்திருப்பவர்கள் வரை, அனைத்து பால் வியாபாரிகளும், டீக்கடை வைத்திருப்பவர்களிலிருந்து பெரிய ஹோட்டல் வைத்திருப்பவர்கள் வரை, எல்லா வற்றிருக்கும் மேலாக வெளி நாட்டில் வாழக்கூடிய அனைத்து மக்களும் ஒரு முறை இரு முறை அல்ல சுமார் 15 முதல் 20 முறைகளுக்கு மேலாக தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர், நண்பர்களுக்கும் தொடர்ந்து முயற்ச்சி செய்தது ஒருமித்த கருத்தை எட்ட வைத்துள்ளார்கள். 

அதாவது இந்துக்கள், முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள், தலித்கள், மேலும் ஆட்டோ ஒட்டுனர்களிளிருந்து கார், வேன் ஓட்டுனர்கள் வரை SDPI - யின் வேட்பாளர்தான் வெற்றி பெற வேண்டும் என்று உழைத்தார்கள். ஆனால் தனது வெற்றிக்கு இறைவனின் நாட்டம் இல்லை என்று தான் சொல்லவேண்டும் மேலும், இந்த தோல்வியில் கூட நமக்கு இறைவன் மிகப் பெரிய வெற்றியை வைத்துள்ளான் என்று அவர் தெருவித்தார். மனிதன் என்ற அடிப்படையில் பார்க்கும்போது ஆசைகளும், அவசரமும் இருக்கத்தான் செய்யும், ஆனால் நமக்கு இறைவன் நன்மையையே நாடுவான் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் இரண்டு விசயங்களை மக்கள் மத்தியில் சமர்பிக்க கடமைப்பட்டுள்ளேன். 

அவற்றில் முதலாவது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து நம்முடைய வேகம் அனைத்தும் அரசியல் கட்சிகளையும் விஞ்சி சென்று கொண்டிருந்த போதுதான், நக்கீரனின் நச்சு கருத்து போஸ்டர்கள் ஓட்டப்படுகிறது என்றும் ஃபாசிசத்திருக்கு எதிராக தன்னுடைய பத்திரிக்கையை நடத்தி வரக்கூடிய நக்கீரன் கோபால் அவர்களின் பத்திரிகையில் ஃபாசிசத்தின் பிராமணர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதை அறியாத வண்ணம் "முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் தேர்தல்" இந்துவா? முஸ்லிமா? என்ற நச்சு கருத்தை விதித்துள்ளார்கள் என்றும், இவற்றை அனைத்து மக்களும் சித்திக்க வேண்டும் என்றும் அவர் தெருவித்தார். இந்த போஸ்டர்கள் எப்பொழுதாவது நாக்கீரன் மூலம் ஒட்டப்பட்டுள்ளதா என்று பாத்தால் இல்லை என்றும் இது ஒரு திட்டமிட்ட சதிதான் என்றும் அவர் தெருவித்தார்.

இரண்டாவதாக தேர்தலில் தோர்க்க போகிறோம் என்ற நிலையை நன்கு அறிந்திருந்தும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களையும், சொந்தகாரவர்களையும் நிர்பந்தத்திற்கு உட்படுத்தி வறட்டு கவுரவத்தாலும், அலட்சியத்தாலும் முஸ்லிம்களுடைய ஓட்டுகளை பிரித்தது நம்முடைய பின்னடைவுக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும், அவர் தெருவித்தார். ஏனெனில் சுயேச்சை வேட்பாளர்களாக 4 பேர் முஸ்லிம்கள் வேட்பாளராக நிறுத்தப் பட்டனர். 4 சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் பெற்ற வாக்குகள் 775 மேலும் முஸ்லிம் லீக், ம.ம.க. போன்ற கட்சிகள் பெற்ற வாக்குகள் 172 + 396 = 568 இது போன்ற நமது வாக்குகள் சுமார் 1343 (இதில் விடுதலை சிறுத்தையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை) வாக்குகளை நாம் வீணாக்கி உள்ளோம் என்பதை வரும் காலங்களில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெருவித்தார். 

அதே போல் முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு தே.மு.தி.க. கட்சி சார்பாக திரு.பத்மநாதன் அவர்கள் போட்டியிட்டார்கள், அவர் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 115 ஆகும் என்றும், 39 MLA க்கள் தங்கள் வசம் இருந்தாலும் கூட்டுசதியில் பங்கெடுத்துல்லதை அனைத்து தரப்பு மக்களும் உணர வேண்டும் என்றும் அவர் தெருவித்த்வர். இந்த தேர்தலில் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக திருந்துவார்கள் என நான் நம்புகிறேன் தோல்வியுற்றது வெற்றியின் முதல் படிதான் என்றும், ஏனெனில் 1927 வாக்குகளை கொடுத்த மக்களுக்கு நாம் ஒரு ருபாய் கூட பணம் கொடுக்கவில்லை என்றும் இதுவே மிகப்பெரிய வெற்றிதான் என்றும் அவர் தெருவித்தார்.

2328 வாக்குகள் பெற்றிருக்கக்கூடிய அ.தி.மு.க. வாக இருக்கட்டும், இன்ன பிற கட்சிகளாக இருக்கட்டும் 90 சதவீதம் பணம் கொடுத்து பெற்றதுதான் உண்மை என்பதை அவர்களும் உணர்வார்கள், என்றும் அவர் தெருவித்தார். மேலும், இனி நமது மக்கள் களப்பணியின் வேகத்தால் பணம் கொடுத்து ஓட்டு பெறுவதை உடைத்தெறிந்து உண்மையான ஜனநாயகத்தை நிலை நாட்ட உறுதி பூண்டுள்ளோம் என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்த நாம் கடமை பட்டுள்ளோம் என்றும் அவர் தெருவித்தார். அதே போல் தேர்தல் களத்தில் SDPI க்கு ஒத்துழைப்பு அளித்தது போல் இனிவரும் காலங்களில் நாம் முன்னெடுத்து செல்லும் மக்கள் நல போராட்டங்களுக்கும் ஆதரவை அன்போடு எதிர்பார்கிறேன் என்றும் அப்போது அவர் தெருவித்தார்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

முத்துப்பேட்டையில் தொடர்ந்து இரண்டு நாள் மழை!



முத்துப்பேட்டை, அக்டோபர் 24 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்துள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் தமிழ் நாடு வானிலை ஆராய்ச்சியின் இயக்குநர் திரு.ரமணனிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கேட்டதற்கு பதிலளித்த அவர், வடமேற்கு பருவமழை தற்பொழுது ஆரம்பித்துள்ளது என்றும், இதனால் தமிழகத்தில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெருவித்தார். மேலும் இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் விவசாயம் செய்யக் கூடிய மக்களிடம் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்கள். எங்களால் தற்போது விவசாயம் செய்ய முடியாது என்றும் அவ்வாறு செய்தால் நஷ்டம் எங்களை சூழ்ந்து கொள்ளும் என்றும் அவர்கள் கூறினார்கள். மேலும் விவசாயம் செய்யக் கூடிய மக்களுக்கு அறிவுரையாக மழைகாலங்களில் கரும்பு விவசாம் செய்தால் மிக நன்றாக இருக்கும் என்றும் அப்போது அவர்கள் தெருவித்தார்கள்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)